வெள்ளை புறா ஒன்று......ஏங்குது கையில் வராமலே...
>> Tuesday, November 29, 2011
நான் செல்வியை பார்த்தது எப்போது நினைவுபடுத்திபார்த்தேன் திரும்பி பார்க்கின்றது, என் மனம் என் தங்கையின் திருமணத்தின் பொருட்டு மாப்பிள்ளை பார்க்க போன போது மாப்பிளையின் தங்கையாக அறிமுகமானவள் மாநிறம்தான்...!என்றாலும் அழகாக இருந்தாள்! அவள் முகம் அடிக்கடி என் நினைவில் வந்தது, அவளைப்பற்றி யாரிடம் கேட்பது திருமணம் ஆகாதவள் என்றாள் யாரிடமாவது கேட்கலாம்! திருமணம் ஆனவள் போல் இருக்கிறாளே...எப்படி கேட்பது...தயக்கம்...
ஆனால்..! புரோக்கர் தானே அவளைப்பற்றி கூறியதும் அவள் மேல் பரிதாபம் வந்தது, சந்தோசமாகவும் இருந்தது,காரணம்! அவளுடைய கணவன் பெங்களூருவில் பைனான்ஸ் வைத்திருந்த போது அளவுக்கு அதிகமாக குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டான், சிறிய வயதிலேயே விதவையானாள் செல்வி, அவளுக்கு மூன்று வயதில் குழந்தையொன்றும் உள்ளது, என் மேல் எனக்கே கோபம் வந்தது மைத்துனரின் தங்கை நாம் ஏதாவது தவறாக நடக்க தன் தங்கையின் வாழ்வே பாதிக்குமே....
ஆனாலும் மனம் ஒரு குரங்கு எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கின்றோமோ..! அது நம் முன் நிழலாடுவது மனித இயல்பு, செல்வியின் நினைவு வந்து பலநாள் தூக்கத்தை கெடுத்தது.... திருமணத்தின் போது நிறைய பேச சந்தர்ப்பம் கிடைத்தது பல விசயங்களைப்பேசினோம் எங்களை யாரும் தவறாக நினைக்கவில்லை...
இரண்டு மூன்று நாள் பழக்கத்தில் செல்வியுடன் உரையாடியதில் அவள் தனிமையை வெறுக்கிறாள் உறவை நாடுகிறாள் என அறிந்தது கொண்டேன் என் ஆண் என்கின்ற மிருகம் விழித்துக்கொண்டது நான் ஆசையை என் தங்கையின் திருமணம் முடிவதற்க்குள் கூறிவிட்டேன் சுருக்கமாக... உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று.
அவளும் எதிர் பார்த்திருப்பாள் போல் எதுவும் சொல்லவில்லை சிரித்துக்கொண்டே அதற்க்கென்ன செய்துட்டா போச்சு என்று சாதாரணமாக கூறிவிட்டாள்.. என்றாலும் பிடிகொடுக்கவில்லை.... ஒரு மாதம் ஓடியது தெரியவில்லை நான் அவ்வப்போது என் தங்கையைப் பார்க்க போகும் போது அவளைக் கேட்பேன் நான் சொன்னது என்ன ஆச்சு? என்று சிரித்துக்கொண்டே போய்விடுவாள்...
ஒரு நாள் வெளியூரில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்வீட்டார் அவள்வீட்டார் அனைவரும் சென்று விட்டனர், அவளை மட்டும் விட்டுவிட்டு ஏனெனில் மாடு,கறவை நிறைய இருப்பதால் தண்ணீர் கொடுக்கவேண்டும், கடலை செடி நல்லா புடுங்கற நிலையில இருக்கு மாடு,கன்னு நுளைந்தால் உழைப்பெல்லாம் வீணாகிவிடும் நானும் இதே காரணத்திற்காக இருந்து விட்டேன்...
செல்வி என் செல்பேசியில் அழைத்தாள், பையனுக்கு உடம்பு சுடுது மருத்துவமனைக்கு போகனும் வருகிறீர்களா? என்றாள் நானும் போனேன்... நெருப்பாக கொதித்துக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம், குழந்தைக்கு ஒரு ஊசியைப்போட்டு விட்டு ஒன்றும் பயப்படவேண்டாம் குளிர்ஜுரம்தான்... உங்கவீட்டுக்காரரைப்போய் மருந்து எழுதி தரேன் வாங்கிட்டு வரச்சொல்லுங்க என்றார் என்னைக் கைகாட்டி அந்த நேரத்திலும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்....
மருந்து,மாத்திரை எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம்... சரி! நான் கிளம்புகிறேன் என்றேன், இரவாயிருச்சு... இருந்துட்டு காலையில போங்க... என்றாள் பரவாயில்லை நான் போகின்றேன் என்றேன் இருங்க நிறைய பேசனும் உங்ககிட்ட... என்றாள் செல்வி
இரவு தோசை சுட்டுப்போட்டாள், ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக செய்யும் தொட்டுக்க தக்காளியும் கத்திரிக்காயை நன்றாக சுட்டு கடைந்து செய்வார்கள், அதைத்தான் அவளும் செய்திருந்தாள், தேங்காய் சட்னியும் அதுவும் தேவார்தமாய் இருக்கும் விரும்பி உண்ணும் நான் அன்று என்ன பேசப்போறாளோ என்றைய சிந்தனையில் உணவில் மனம் ஒட்டவில்லை.
நான் சாப்பிட்டு விட்டு கைகழுவி விட்டு கையை துடைத்துக் கொண்டு சமையறைக்குள் நுழைந்தேன், தோசை சுட்டுக்கொண்டு இருந்தாள், அவள் முதுகில் திட்டுதிட்டான வியர்வை படிந்திருந்தது அவளின் அழகு என்னை என்னவோ செய்தது, என்னையறியாமல் பின்னால் கட்டிபிடித்து விட்டேன், அவள் அதிர்ந்து போனாள் அப்படியே அவள் உதட்டில் முத்தமிட்டேன் சிறிது திமிரிய அவள் என் உறுதியான விவசாயம் செய்யும் உடலின் அனைப்பை விடுவிக்கமுடியவில்லை...
விடுவிடு இங்க வேண்டாம் என்றாள், நான் பிடியை விட்டேன் கருகிய தோசையை எடுத்து குப்பையில் போட்டாள், அடுப்பை அனைத்தாள் அவளின் படுக்கை அறைக்கு சென்றாள் அவள் உடையனைத்தும் களைந்தாள் சிற்பி செதுக்கிய நிர்வாண சிலையாக படுக்கையில் விழுந்தாள் வா....என்றாள் வானத்தில் உலவி வந்த சந்திரன் மேகங்களுக்கிடையில் மறைந்து கொண்டான்.. இரு உயிர்களின் சங்கமத்தினைப்பார்த்து வெக்கப்பட்டுக் கொண்டு, தூரத்தில் நரி ஊளையிட்டது, கிணற்றின் ஓரம்...இரண்டு பாம்புகள் புனர்ந்து கொண்டுருந்தது கணவன் இறந்து இரண்டு வருடம் பொத்திவைத்திருந்த காமம் தலைவிரித்து சாமியாடியது இரவு முழுவதும்....
அதற்க்கு பின் என்னால் செல்வியை மறக்கமுடியவில்லை... ஊரே எதிர்த்து நின்றாலும் அவளைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், செல்வியின் மகன் என்னோடு நன்றாக ஒட்டிக்கொண்டான், அப்பா! என்று கூட அழைக்க ஆரம்பித்து விட்டான் மெதுவாக என் பெற்றோரிடம் நான் செல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறினேன் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பிறகு ஒரே மகன் ஆசைப்படுகிறான் நம்ம பொண்ணு அங்க வாழ்ந்திட்டு இருக்கு என சமாதானமாகினர்... என் பெற்றோர் உறவினர் ஒருவரை அழைத்து விசயத்தைக்கூறி, பொண்ணு கேட்க கூறினார்கள் அவரும் போனார்...
செல்வியின் குடும்பம் இதைக் கேட்டதும் வானுக்கும்...பூமிக்கும்... குதித்தனர், என் தங்கையை அடித்து உதைத்து என் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள், எத்தனையோ பேர் எடுத்துக்கூறினார்கள்.. செல்வியின் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அவ.....அப்படி அவனை கல்யாணம் பண்றதா...இருந்தா பையனை விட்டுட்டு போகட்டும்.. என்றார் என்னடா இவன் முட்டாளா இருக்கிறானே பொண்ணின் வாழ்க்கை மீண்டும் தொடங்குவதை தடுக்கிறானே என்று குழம்பினார்கள், அதற்க்கான விடையை செல்வியின் உறவினர் கொண்டுவந்தார் இறந்து போன கணவன் வீட்டுக்கு ஒரே மகன், அவர்களுடைய ஏராளமான சொத்து செல்வி மணமுடித்தால் கிடைக்காது, கணவன் இறந்தபிறகு கணவன் வீட்டிலேயே இருந்த செல்வியை அவளுடைய அறுபது வயது மாமனார் தவறாக நடக்க முயற்சித்துள்ளார், அதனாலதான் செல்வி இங்கே வந்து இருக்கிறாள்...எங்கள் காதல் விவகாரம் அறிந்த, செல்வியின் மாமனார் செல்வியின் தந்தையிடம்.. உம் பொண்ணு வேற எவனாயாவது கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் எங்க சொந்தக்காரங்க யாருக்காவது எழுதிவைச்சிருவோம் என்று மிரட்டியிருக்கார்.. அதனால சொத்துக்கு ஆசை ப்பட்டு திருமணத்திற்கு மறுக்கிறார் என்று கூறிவிட்டு செல்வி ஒரு கடிதம் கொடுத்தாள் என்று கடிதத்தைக் கொடுத்தார்... அதை பிரித்து படித்தேன்...
அன்புள்ள
ஜெ.....நான் இப்ப எங்க மாமனார் வீட்டுல இருக்கின்றேன், செத்துபோகலாம் என்று நினைக்கின்றேன், என்னால் அதுகூட முடியவில்லை...,என் மகன் அனாதையாகிருவானே....என் புருசன் உயிரோடு இருந்தபோதும் நான் மகிழ்ச்சியா இருந்ததில்லை தினமும் குடிச்சிட்டு வந்து என் மேலேயே.... வாந்தி எடுப்பான், மது நாத்தம் குடலை புரட்டும் அவனோடு உறவை வைச்சிருக்கின்ற நிமிடம் நரகம், அவன் கூட உறவுக்கு மறுத்தா இரத்தம் வருகின்ற அளவுக்கு அடிப்பான்....செக்ஸ்ங்கரது நரகம்ன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு, உன் மழைச்சாரல் போன்ற தழுவல் என்னை மெய்மறக்க செய்தது வாழ்க்கையில் நான் சந்தேசமா இருந்தது நாம் உறவு கொண்ட நேரங்கள்தான் ஜெ...
அதைவிட கொடுமை ஒரு பெண்ணான நான் சொல்லக்கூடாது...சொல்லுகின்றேன் எங்க அப்பா என் மாமனாரிடம் கொண்டு வந்து விடும் போது, என் கிட்ட என்ன சொன்னார்.. தெரியுமா? உனக்கு உடம்பு சுகம் வேணுன்னா... உன் மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்துட்டு போங்கறான், அதுக்கு என்னை பஸ்ஸ்டேண்டுல நிறுத்தி விபச்சாரம் செய்யலாம்...
அப்பனே...எம் புள்ளைய அனுபவிச்சுக்கோன்னு சொன்னா...கிழவன் சும்மாயிருப்பானா.....வழுக்கட்டாயமா இரண்டுமுறை.....என்கொடுமை எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது நீ...நல்ல பெண்ணா பார்த்து திருமணம் முடிச்சிட்டு நல்லாயிரு சீக்கிரம் என்னை மறந்திரு அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது...
கடிதத்தைப் படித்தவுடன் எனக்கு ஆத்திரம் தலைக்கேற என் பைக்கை வேகமாக எடுத்து செல்வியின் வீட்டுக்கு போனேன் பதற்றத்திலும்,ஆத்திரத்திலும்... வேகமாக சென்ற எனக்கு வளைவு ஒன்றில் வந்த டிரேக்டரை கவனிக்க மறந்துவிட்டேன்...உறுதியான பம்பர் என தலையில் பட்டு தூக்கிஎறிந்தது என்னை நினைவு என்னை விட்டு மெல்ல மெல்ல மறந்தது....
நினைவு திரும்பியபோது, டெட்டால் வாசனையுடன் மருத்துவமனையில் இருந்தேன் தலைமேல் ஏதோ பாரத்தை வைத்தமாதிரி இருந்தது... சிகரெட் குடிக்கனும் போல இருக்குது, யாரும் தரமாட்டிங்கறாங்க... எங்க அம்மாகிட்ட கேட்டேன் அழுவுது எல்லா ஏன்? அழுவுறாங்க... நான் ஏன் அடிக்கடி ஜிங்கிடிஜிங்கான்னு... சொல்றேன் செல்வி நல்லாருக்கா... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க ஜிங்கிடிஜிங்கா....அண்ணே ஒரு பீடி இருந்தா கொடுங்கண்ணே....ஜிங்கிடுஜிங்கா.....வாத்தியார் பையன் சுரேசு எனக்கு பீடி வாங்கிக்கொடுத்தது... நாலு இட்லி சாப்பிட வாங்கிக் கொடுத்தது இரண்டுதான் சாப்பிட்டேன் இரண்டு செல்விக்கு வேணும்மல்ல செல்வி மகன்..இல்லை...இல்லை...என் மகன்.....சாக்லெட் வாங்கி கொடுக்கனும், இப்போதெல்லாம் இரண்டு பேரையும் பார்க்கவே முடியலை ஏன்? ஜிங்கிடிஜிங்கா....
..........................
என்னது என் கதையா? சொல்லறதா...கேட்டுக்க.... ஆனா..
சாயந்திரம் கோட்டர் வாங்கி கொடுப்பியா?
...........................
வாங்கி கொடுக்கிறியா சரி அப்ப சொல்லுகிறேன் கேட்டுக்க....
அந்த சந்திரன்,கெட்டதும் பெண்ணால.....அந்த இந்திரன் கெட்டதும்....பெண்ணால......
(தலையில் அடிபட்டு காதில் இரத்தம் வந்ததால் மனநோயாளியாகப் போனார் ஜெ....அவரே சொன்ன கதை அவர் பார்வையில்... வாத்தியார் பையன் சுரேசு நான்தான்)
(தலையில் அடிபட்டு காதில் இரத்தம் வந்ததால் மனநோயாளியாகப் போனார் ஜெ....அவரே சொன்ன கதை அவர் பார்வையில்... வாத்தியார் பையன் சுரேசு நான்தான்)
கதைகள் தொடரும்.....