குழந்தைகள் தினவிழா...

>> Sunday, November 13, 2011


Thank you googleஅம்மா கேளாய்...! அம்மா கேளாய்..!
இது என் தாலாட்டு- உன்னை
உறங்கவைப்பதற்கு அல்ல!
மரத்து போன உன் உணர்வுகளை
உசுப்பியெழுப்ப கேளாய்....!

குழந்தைகள் யாவரும்'
"கற்க கசடற" என்பது
வள்ளுவர் வாக்கு,
நானதை தூக்கியெறிந்து விட்டு
பின்னலாடை தொழிலகத்தில்
பிசிறு வெட்டியே...!
பின்னலாகிப்போனேன்!

பல விதமான உடைகள்
உலவுமிடத்தில் வேலை...!
எனக்கு மட்டும் ஏன் கந்தலாடை?
நெய்பவனுக்கு கோமணம்!
என்பது சீருடையல்ல...
அவனின் வறுமை...வறுமை...

"கந்தலானாலும் கசக்கிகட்டு"
எங்கே கசக்குவது?முடியவில்லை
தண்ணீரும் விலை கொடுத்து
வாங்கும் கேவலம்!
நம் நாட்டில் மட்டும் உண்டு
அப்படியே கசக்கினாலும்
என் உடை வேஸ்ட்க்கும்
போகாது...போகாது...

தந்தையின் வருமானம்
தமிழகத்தின் அவமானம்
மதுக்கடைக்கு...
அம்மாவின் சொற்பம்
கந்துவட்டிக்கு...
என் பற்று சோற்றுக்கு...
பிறகு என்ன புத்தாடை
அது வெறும் நிராசை...
ஆகவே...அம்மாக்களே
குழந்தைகளை படிக்க
வையுங்கள்...

------------------------------------------------------------------------------------------------------------
இந்த குழல் ஊதும் கண்ணனையும் ரசியுங்கள்
7 comments:

சம்பத்குமார் 8:16:00 PM  

அருமை நண்பரே

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

நன்றி
சம்பத்குமார்

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) 12:24:00 AM  

கவிதையாகப் படித்தாலும் நன்றாக இருக்கிறது. இசை சேர்த்து பாடலாகப் படித்தால் இன்னும் அருமையாக உள்ளது...குழந்தைகள் நாள் நல் வாழ்த்துகள்!

ராஜா MVS 8:44:00 AM  

கவிதை அருமை...

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்... நண்பா...

சி.பி.செந்தில்குமார் 8:56:00 AM  

குழந்தைகள் தினம் அதுவுமா நல்ல கவிதையை பகிர்ந்துக்கிட்டீங்க.

Unknown 12:06:00 PM  

கவிதை நல்லா இருக்கு மாப்ள!

விச்சு 3:10:00 PM  

வறுமை நிலையை குழந்தையின் பார்வையில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

நிரூபன் 11:19:00 PM  

வணக்கம் நண்பா,

குழந்தைகள் நாளில் எம்மூரில் குழந்தைகளின் அவல நிலையினை அருமையான கவிதையூடாகத் தந்திருக்கிறீங்க.

நன்றி நண்பா.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP