பதிவுலகம் செல்லும் பாதை சரிதானா?விலகும் நல்ல பதிவர்கள்!
>> Tuesday, January 24, 2012
நாம் போகும் பாதை சரிதானா? இங்கு பதிவிட வரும் அனைவரும் கற்களையும் முட்களையும் கடந்து வந்து இருப்போம், நட்பாய் பழகியிருப்போம்....பதிவுலகம் என்பது நம் கவலைகளை இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல்லாகவும், சிலருக்கு தினம் எழுதும் டைரியினைப் போலவும்...சிலருக்கு இதுதான் வாழ்வு போலவும்...இருக்கிறது, மதுபோதை,சீட்டாட்டம் போல் அல்லவா மாறிவிட்டது, ஹிட்ஸ் எனும் மாயைக்குள் மூழ்கி திளைத்து வெற்றி பெறலாம் என நினைக்கும் நீங்கள் தொலைப்பது உங்களுடைய சுயத்தை...உங்களிடம் இருக்கும் தனித்தன்மையை.....
யாரும் அறியாத சுற்றுலா தளங்கள்
>> Monday, January 23, 2012
Labels:
கட்டுரை,
சத்தியமங்கலம்,
சுற்றுலா
அழிந்து வரும் அழகான கலை தஞ்சை ஓவியம்
>> Saturday, January 21, 2012
தமிழகத்தில் நெற்களஞ்சியம் தஞ்சை...இந்த ஊர் எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்று கூறப்படுகிறது அழகான கட்டிட கலைகளை கொண்டுள்ள இந்த ஊர் தமிழகத்தின் கலைகளின் தேசம் எனக் குறிப்பிடலாம், இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது தஞ்சை ஓவியம்....மிக சிறப்பான நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டது, இந்த ஓவியங்கள்,வீடுகள்,அலுவலகங்களில் அழகுக்காக மாட்டப்படும்.
இந்த ஓவியங்களின் பிறப்பிடம் இராஜஸ்தானியம் என்றே நினைக்கிறேன்... ஏன் என்றால் இராஜதானிய ஓவியங்களை போல இருப்பதே,மேலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மற்றும் கலை நுணுக்கமுடைய தஞ்சாவூர் தட்டுகள் மிக பிரசித்த பெற்றமையாகும், அப்படி பெருமையுடைய கலையை கற்று கொள்ளவும், அழகுக்காக வீட்டில் மாட்டிவைக்க விருப்ப படும் கலாரசிகர்களுகளும், தொடர்பு கொண்டு கலையை வளர்க்கலாம்.
ஓவியம் தேவைப்படுவர்களும்,இக் கலையை கற்றுக்கொள்ள விரும்புகின்ற நண்பர்களும் தொடர்பு கொள்ளவும்
ஓவியர் தர்மராஜ்
செல் : 9843072211
-----------------------------------------------------------------
நண்பன் ALL IS WELL பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்தது
எங்க வாரிசுவின் சேட்டைய பார்திங்களா?
விஜய் இந்த இரண்டு மாத குழந்தைய கவர்ந்திட்டாரே! மாஸ்..மாஸ்..தான்.
-------------------------------------------------------------------------
திருப்பூர் புத்தக கண்காட்சி 25-01-2012 தொடங்க உள்ளது, வரவிருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
----------------------------------------
Labels:
கட்டுரை,
கலைகள்,
தஞ்சாவூர்,
தஞ்சை ஓவியம்,
விழிப்புணர்வு
அண்டர்வோல்டு 4 திரை விமர்சனம்
>> Friday, January 20, 2012
இந்திய ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படங்களில் Underworld தனித்த இடம் பிடிக்கும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? என்றால் இல்லை! என்றே சொல்வீர்கள் என்று நம்புகிறேன்,மனித இனத்திக்கும் டிராகுலா இனத்திக்கும் பிறந்த ஒரு புதிய இனம் லைகன்ஸ் (ஓநாய்) முந்தைய படத்தில் லைகன்ஸ் எளிதில் வேட்டையாடக்கூடிய வகையில் வேட்டையர்களுக்கு இருந்தது பாகம் நான்கில் அ
Labels:
அண்டர்வோல்டு4,
திரைமணம்,
விமர்சனம்,
ஹாலிவுட்
கோவா போன கோவாலு......
>> Thursday, January 19, 2012
கோவா....வின் தலை நகரம் பானாஜி,இந்தியாவிலே குட்டியூன்டு மாநிலம்,மக்கள் தொகையும் குறைவு, வடக்க மஹாராஸ்டிர சேட்ஜியும்,கிழக்க நம்ம முன்னாள் பங்காளி கர்நாடகமும்,தெற்கே அரபிக் கடலையும் கொண்டது, இங்க பேசுற மொழி கொங்கனி.
பிகருக எல்லாம் லைட்டா நம்ம சேச்சிக சாயல்ல இருக்க காரணம் போர்த்கீசு மாமா..! கேரளாவுல மற்றும் கோவாவுல இருந்ததுதான் காரணம்! வரலாறு தெரிந்த பெரியவர்கள் நமுட்டு சிரிப்பு சிரிக்காதிங்க....
பானாஜிதான் தலை நகரமா இருந்தாலும் வாஸ்கோடகாமாதான் பெரிய நகரம்.இங்க ஆணும் பெண்ணும் ஆடல் பாடல் என ஜாலியா லைப்ப என்ஜாய் பண்றாங்க....லைட்டா வோட்காவ குடிச்சிட்டு பிகருக ஆடுற கெட்ட ஆட்டம் யப்பா....தாங்காதுய்யா கலாச்சார காவலர்களுக்கு இது உகந்த இடம் அல்ல.
அரிசி சாதம் மீன் குழம்புதான் இங்க கிடைக்கும், நான் சைவம் அப்படிங்கறவங்க அப்பீட்டு....அதுவும் கொங்கனி குஜிலீஸ் கையால சாப்பிட நம்மாளுக கிறங்கி கிடக்கிறாங்க எங்கெங்கு கானிலும் கிங்பிஷர் தான் கோக் மாதிரி குடிக்கிறாங்க மக்கா... "யோவ் மல்லையா நீர் எப்படி பெரிய ஆளாகினது இப்பத்தான்யா தெரியுது..."எல்லாம் எம்மூட்டு பணம்..
ஒத்த பதிவில் முக்காடு போடுவது எப்படி?
>> Wednesday, January 18, 2012
![]() |
ஹிஹி... |
வணக்கம்யா...நிரூபன்
வணக்கம்..! அய்யா!
நான்தான்யா...பாப்பையா...
ஹே...ஹே...சொல்லுங்கய்யா உங்களை தெரியாத தமிழரா அய்யா
"அவனியாபுரம்" சென்ற பதிவர்’ஸ்(மாட்டை அடக்க!!!!!!?????????)
>> Sunday, January 15, 2012
வணக்கம் மக்காஸ்; "அவனியாபுரம்" ஜல்லிகட்டு நிகழ்ச்சியை பற்றி பதிவிடப் போகிறேன்! என்னோடு நீங்களும் வரனும்,(பயம்)எனக்கு நீங்கள் கூட இருந்தால் எனக்கு சிறிது உதவியாக இருக்கும்,
தமிழ்வாசி பிரகாஷ்.
நண்பனாயாணம்…
>> Thursday, January 12, 2012
இன்றைக்கு காலையில நம்ம ஆபிஸ் பையன் காலையிலையே பொங்கல் லீவுங்கறதால வேலையெல்லாம் முடிச்சிட்டு பிரியா இருப்பதால் பயபுள்ள நண்பன் படம் பார்த்துட்டு வந்தது, வந்ததில் இருந்து இருக்கானா இடுப்பு இருக்கானா பாட்டை முணுமுணுத்துட்டே இருந்தான், நல்லா பீப்பாய் மாதிரி இருக்கிற பெண் கஸ்டமர் வந்தது பயபுள்ள இந்த பாட்டையா பாடனும் குமட்டுல ஒன்னு விட்டதிலிருந்து அஸ்கு புஸ்க்குன்ட்டு இருக்கு..பாட்டு இல்லை வலியில கத்துது பயபுள்ள!
அட்ரா சக்க சிபி செந்தில்குமார் பற்றிய உண்மைகள்!
>> Tuesday, January 10, 2012
தீராத எழுத்தாசை...
இயல்பிலே நகைச்சுவை...
வசனங்கள் விளையாடும்
சினிமா விமர்சனத்தின் துல்லியம்...
டுவிடர் பறவையின் தூதுவன்...
அரசியல் நையாண்டிகள் மற்றும்
ஜோக்குகள் இவர் மனதை விட
விரல்களில் பிறக்கிறதோ என்றொரு ஐயம்
அனைவருக்கும் இருக்கிறது....
இவர் மையம் கொண்டது
பதிவுலகின் பக்கம்!
சிறிய காலத்தில்
இயல்பிலே நகைச்சுவை...
வசனங்கள் விளையாடும்
சினிமா விமர்சனத்தின் துல்லியம்...
டுவிடர் பறவையின் தூதுவன்...
அரசியல் நையாண்டிகள் மற்றும்
ஜோக்குகள் இவர் மனதை விட
விரல்களில் பிறக்கிறதோ என்றொரு ஐயம்
அனைவருக்கும் இருக்கிறது....
இவர் மையம் கொண்டது
பதிவுலகின் பக்கம்!
சிறிய காலத்தில்
Labels:
அட்ரா சக்க,
கவிதை,
கில்மா,
சிபி,
சினிமா,
செந்தில்குமார்,
ஹஹஹ
பாக்தாத் போருக்கு பின்னால்...!
>> Monday, January 9, 2012
போர் ஒரு நாட்டையும்,இனத்தையும் எவ்வாறு புரட்டி போடுகிறது.... பாக்தாத்தில் அமெரிக்க கூட்டுபடையின் சமையல்க்காரரான வீடுவின் வாசகரான அவர்...உயிர் போராட்டத்தின் மத்தியில் தாய்நாடு திரும்பியதும் பல படங்களை எனக்கு அனுப்பினார் அவரின் அனுமதியுடன்........
![]() |
சதாமின் அரியாசனம் |
Labels:
கட்டுரை,
சதாம்உசேன்,
படங்கள்,
பாக்தாத்,
போர்
நண்பன் வெற்றிபெறுமா? ஒரு அலசல்!
>> Sunday, January 8, 2012
இந்திய இந்தி நடிகர்கள் விறைப்பாக வசனம் பேசி வந்த காலத்தில் யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர் அமீர்கான், இவர் ஒரு சிறந்த நடிகர் என்பதுக்கு சினிமாவை நேசிக்கும் நம் வலையுக நண்பர்களுக்கு விளக்க வேண்டியது இல்லை!..அவர் நடித்த திரீ இடியட் படம், இயல்பான நகைச்சுவையோடு, படித்த மேதாவிகளை லேசாக நையாண்டியும் செய்திருப்பார் இயக்குனர், அமீர்கானின் வயது கண்டிப்பாக படம் பார்க்கும் போது தெரியாது அவ்வளவு இளமையாக இருப்பார் அமீர்கான்.
கோடிஸ்வரன் நிகழ்ச்சியும்..தமிழர்களின் கோமணத்தை உருவும் தந்திரமும்...
>> Friday, January 6, 2012
அவர்கள் கேட்க்கும் கேள்விகளைப் பாருங்கள் :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே -----------
நாம் என்ன முட்டாள்களா? சிந்தியுங்கள் தமிழர்களே....ஏழாம் அறிவில் உள்ள வசனத்தை சூர்யா புரிந்துதான் பேசினாரா?
Thanks...For..
Thanks & Regards,
Jayshri Vijayakanthi.
Labels:
கட்டுரை,
கோடிஸ்வரன்,
விழிப்புணர்வு
அபாயம்! இணையஇணைப்பு!! இங்கே உள்ளது!!!
>> Thursday, January 5, 2012
வணக்கம் நண்பர்களே!
உங்களுடைய குழந்தைகள் பருவவயதில் உள்ள குழந்தைகளா?
உங்கள் வீட்டில் இணைய இணைப்பு உள்ளதா?
உங்கள் குழந்தைகளுக்கு தனியாக மடிக்கணினி உள்ளதா?
அதில் இணைய இணைப்பு உள்ளதா? ஆம் எனில் படியுங்கள்! மற்றவர்களும் வாருங்கள்!
நண்பர் ஒருவரின் செல்லமகள் வயது பதினான்கு, தோழிகளுடன் விளையாட்டாகவும் படிப்பு சம்மதமாகவும் பிரவுசிங் சென்டருக்கு சென்றவர்,தோழிகளின் உதவியால் மெயில் ஐடி உருவாக்கினாள் சரியான தொழில்நுட்பம் தெரியாததால் மெயிலினை Stay singned in டிக் செய்து விட்டார்,History யும் நீக்கவில்லை,
பின்னால் வந்த ஒருவன் மெயிலை பார்த்து, அந்த பெண்ணின் ஐடியில் நுழைந்து Send Mail இருந்த உறவினருக்கு அனுப்பிய வாழ்த்து மெயிலில் போன் எண் இருந்தது வசதியாக போக, பலருக்கு தான் விபச்சார பெண் எனவும் ரேட் எல்லாம் போட்டு அனுப்பிவிட்டான்.
போன் எண்னையும் கொடுத்து விட்டான், பிறகு ஒரே ஆபாச போனாக வர, பயந்து தன் தந்தையிடம் கூற, அவர் ஒவ்வருவனாய் திட்டிதிட்டி கடைசியில் போனை அனைத்து வைத்துவிட்டு…காவல் துறையில் இருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து விசயத்தைச் சொல்ல, காவல் துறை நண்பர் விபச்சார புரோக்கர் மாதிரி பேசியதில், போன் செய்தவன் தனக்கு மெயில் வந்ததாக கூறினான்.
இவ்வாறு மெயில் வந்த விசயத்தைக் கூறவும்,அந்த பெண்ணின் மெயில் ஐடியை திறந்து பார்த்ததில் உண்மை புரிந்தது! அந்த மெயில் ஐடியை நீக்கியதுடன் போன் செய்த அனைவரையும் எச்சரிக்கை செய்தார் காவல் துறை நண்பர்.
அதனால் பெற்றோர்களே
மகன்,மகள் மெயில் ஐடி பாஸ்வேர்டு உங்களுக்கு தெரியுமா?
மகன்,மகள் மெயிலில் என்ன வகையான மெயில் வருகிறது கண்காணிக்றீர்களா?
இந்த இரு கேள்விகளுக்கும் இல்லை என்று உங்களுடைய பதிலாக இருந்தால் அதை உடனே சரி செய்யுங்கள்.
பெரிய பெரிய தொழில் நிறுவனங்களில் இருக்கும் சில கண்காணிப்பு சாப்ட்வேர்களை உங்கள் மகன்,மகள் கணினியில் நிறுவுங்கள்,அதை கணினியை வாங்கும் போதே நிறுவுங்கள்,அதன் மூலம் உங்கள் குழந்தைகளின் கணினியை நீங்கள் உங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம்.
வெளியே பிரவுசிங் சென்டரில் இணைய பயன்பாடுகளின் போது வேலை முடிந்த பிறகு History யை நீக்கவும். உங்கள் மெயில் ஐடி, பயோடேட்டா போன்றவற்றை வெளியிடத்தில் சேமித்து வைக்காதிர்கள்,போன்ற தகவல்களை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்.
உங்கள் கணினியில் பாலியல் ரீதியான தளங்களை தடை செய்யும் முறைகளை நிறுவும்படி உங்கள் கணினி சர்வீஸ் நபர்களிடம் கூறுங்கள்.
அடுத்த்தாக சேட்டிங் இது மிக்கொடுமையான ஒரு விசயம்! இணையத்தில் சேட் மூலம் உரையாடுவது, சில நல்ல நண்பர்களை தரும், வேண்டத்தகாத உறவுகளைத்தரும், ஆண்கள் சிலர் பெண்களை சேட் மூலம் ஏமாற்றி சீரழித்த கதைகள் ஏராளம்! இப்பொழுது புதிதாக கிளம்பியிருக்கும் பிரச்சனை! ஒருபால் உறவின் பால் ஈர்ப்பு கொண்டவர்களால், ஒரு பூதம் கிளம்பியுள்ளது.இவர்கள் அரவானிகளும் கிடையாது! இரண்டுக்கு இடைப்பட்டவர்கள் (Homosexuality Activty) உள்ளவர்கள் இவர்கள் அன்பொழுக ஆண்களிடம் சேட்டில் பேசுகிறர்கள், பிறகு சந்திக்க விரும்புவார்கள், என் நண்பன் ஒருவரின் அனுபவம் மிகக் கொடுமையானது, சேட் மூலம் நட்பான நண்பர் ஒருவனை சந்திக்க சென்றான், நாள் முழுவதும் சினிமா,சரக்கு என ஜாலியாக ஊரைச் சுற்றிவிட்டு அவனுடைய அறையில் இருவரும் படுத்து உறங்கியிருக்கிறார்கள், நடுஇரவில் அவனுடைய கை இவன் மேல் ஊர்ந்திருக்கிறது, திடுக்கிட்டு விழித்த நண்பனை, செக்ஸ் தொல்லை கொடுக்க... அவன் மூக்கினை பதம் பார்த்து விட்டு வந்தான் நண்பன்.அதிலிருந்து சேட் பக்கமே போவதில்லை பயபுள்ள.
அதனால் நண்பர்களே இணையத்தில் ஏற்படும் முகம் தெரியாத நட்பு வீணான பிரச்சனைகளை உண்டு பண்ணக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது மட்டமில்லாது உங்கள் குழந்தைகளை மனித குலத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாத உறவுகளுக்கு அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது, அதை எந்த தொல்லையும் இல்லாமல் கடப்போம். நன்றி
கண்டிப்பாக இந்த வீடியோவைப் பாருங்கள் :
Why this கொலைவெறி......?!
>> Wednesday, January 4, 2012
தனுஸ் பாடி நாம கொலைவெறி ஆனமோ இல்லையோ..?கேர்ள்ஸ் ரொம்பவே....கொலைவெறியா இருக்காங்க....அதுவும் இசை தெரிந்த கேர்ள்ஸ் ரொம்பவே அப்செட் ஆயிட்டாங்க... அதோட விட்டாங்களா....இங்க பாருங்க பதில் கொலை வெறி!!!
அப்புறம் இன்னும் ஒன்னு சிம்பு மாதிரி ரொம்ம சீன் போடக்கூடாது...அதனால நாம மட்டும் இல்லை சுத்தி இருக்கிறவங்க பாதிக்கப்படுவாங்க.....அப்புறம் நிலம ரொம்ம மோசமாயிடும்
இதுமாதிரி
பார்த்ததும் கேட்டதும் படித்ததும்............................................................................................
--------------------------------------------------------------------------------------------
தியேட்டர்ல....
ஏண்டா...ராஸ்கல் என் காலை நோண்டுற...
ஓ...சாரி மேடம் உங்க பொண்ணு கால்ன்னு நினைச்சுட்டேன்
------------------------------------------------------------------------------------------------
மாமாகிட்ட..! விக்கியிடம் இல்ல...!போலிஸ் மாமாகிட்ட!
தம்பி மனசுல என்னப்பா நினைச்சுட்டு இருக்கிற போலிஸ்ன்னு மரியாதையில்லாம மாமாங்கற...
சார்......நீங்க தானே போட்டிருக்கிங்க.....காவல் துறை உங்க நண்பன்னு
ஓ...அப்படியா! மச்சி...நீ...NO PARKING இடத்தில வண்டி நிறுத்திட்ட....கோர்ட் சித்தப்புகிட்ட இரண்டாயிரம் கட்டுறியா?இல்ல மாமாகிட்ட இருநூறு கட்டிறியா எப்படி வசதி....
---------------------------------------------------------------------------------------------------------
வகுப்பு.
தம்பி கம்பராமாயணத்தில அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் நடத்தினேனே....எதாவது சந்தேகம் இருக்கா?
ஐயா...உங்க பொண்ணு வசந்தி தினமும் என்னை நோக்குது அதுக்கு என்ன காரணம் ஐயா...?
------------------------------------------------------------------------------------------------------------
அஜித் ரசிகர்கள்...
பொங்கலுக்கு "நண்பன்" ரிலீஸ்டா மாப்ளே
அப்ப மறுபடியும் "தானே" வரப்போகுதுன்னு சொல்லு.....
---------------------------------------------------------------------------------------------------------
விஜய் ரசிகர்கள்
மங்காத்தாவிற்குவிற்கு பிறகு அஜித் ரம்மி,வெட்டு, என்று படப்பெயர் வைக்க வேண்டும் சீட்டாட்ட பிரியர்கள் கோரிக்கை
அடுத்தது படம் வந்தா பார்க்கலாம்!
-----------------------------------------------------------------------------------------------------------
பார்த்தது...சிரிச்சது...
அப்புறம் இன்னும் ஒன்னு சிம்பு மாதிரி ரொம்ம சீன் போடக்கூடாது...அதனால நாம மட்டும் இல்லை சுத்தி இருக்கிறவங்க பாதிக்கப்படுவாங்க.....அப்புறம் நிலம ரொம்ம மோசமாயிடும்
இதுமாதிரி
பார்த்ததும் கேட்டதும் படித்ததும்............................................................................................
--------------------------------------------------------------------------------------------
தியேட்டர்ல....
ஏண்டா...ராஸ்கல் என் காலை நோண்டுற...
ஓ...சாரி மேடம் உங்க பொண்ணு கால்ன்னு நினைச்சுட்டேன்
------------------------------------------------------------------------------------------------
மாமாகிட்ட..! விக்கியிடம் இல்ல...!போலிஸ் மாமாகிட்ட!
தம்பி மனசுல என்னப்பா நினைச்சுட்டு இருக்கிற போலிஸ்ன்னு மரியாதையில்லாம மாமாங்கற...
சார்......நீங்க தானே போட்டிருக்கிங்க.....காவல் துறை உங்க நண்பன்னு
ஓ...அப்படியா! மச்சி...நீ...NO PARKING இடத்தில வண்டி நிறுத்திட்ட....கோர்ட் சித்தப்புகிட்ட இரண்டாயிரம் கட்டுறியா?இல்ல மாமாகிட்ட இருநூறு கட்டிறியா எப்படி வசதி....
---------------------------------------------------------------------------------------------------------
வகுப்பு.
தம்பி கம்பராமாயணத்தில அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் நடத்தினேனே....எதாவது சந்தேகம் இருக்கா?
ஐயா...உங்க பொண்ணு வசந்தி தினமும் என்னை நோக்குது அதுக்கு என்ன காரணம் ஐயா...?
------------------------------------------------------------------------------------------------------------
அஜித் ரசிகர்கள்...
பொங்கலுக்கு "நண்பன்" ரிலீஸ்டா மாப்ளே
அப்ப மறுபடியும் "தானே" வரப்போகுதுன்னு சொல்லு.....
---------------------------------------------------------------------------------------------------------
விஜய் ரசிகர்கள்
மங்காத்தாவிற்குவிற்கு பிறகு அஜித் ரம்மி,வெட்டு, என்று படப்பெயர் வைக்க வேண்டும் சீட்டாட்ட பிரியர்கள் கோரிக்கை
அடுத்தது படம் வந்தா பார்க்கலாம்!
-----------------------------------------------------------------------------------------------------------
பார்த்தது...சிரிச்சது...
"பதினெட்டாம்குடி எல்லை ஆரம்பம்" சிங்கம் புலி காமடி செம.....ஆனா ஓவர் இரைச்சல் கத்து..கத்துன்னு கத்தறாங்க....படம் பார்க்க தியேட்டருக்கு போறிங்களா....?இணையத்தில படம் ரிலீஸ்க்கு முன்னடியே வந்திருச்சு....எனக்குதான் 80ரூபாய் வெஸ்ட்....!ஆனால் சிங்கம் புலி அண்ணனுக்காக பார்க்கலாம் வயிற்றுவலி மாத்திரை வாங்கிட்டு போயிருங்க.
-------------------------------------------------------------------------------------------------------PASSWORD
>> Tuesday, January 3, 2012
01.01.2062

01.02.2062
என்னை என் மனைவி பாஸ்வேர்டு அடிக்கடி மறப்பதால் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துவிட்டு டைவர்ஸ் ஸ்லிப் கொடுத்து விட்டு சென்று விட்டாள்….தன்னிடம் இருக்கும் சிறிய கம்யூட்டர் மெஷினில் டைப் செய்து மெயில் அனுப்பினால் போதும் அரசாங்கத்திக்கு…ரிப்ளே மெயில் வந்தால் போதும் நம்மிடம் இருந்து விடுதலை பெற்று விடலாம் மிக சுலபமான முறையாகிப்போனது.
01.03.2062

01.05.2062
இப்பொழுது புதிதாக ஒரு மனைவி எனக்கு கிடைத்து விட்டாள்.அவள் பெயர் ABZ2032! ஆம் அவள் பெயர் அதுதான்…அவளை விட இவள் பொருமைசாலி..அன்பாக இருக்கிறாள்.வாழ்க்கை இன்பமாக போய்க்கொண்டு இருந்த வேளையில் புதிய பிரச்சனை தோன்றியது…எனக்கு…என்னால் கண்ணின் முன் உள்ள பாஸ்வேர்டு எண்கள் மறந்து விடுகிறது...ஒன்றா, இரண்டா என்று எண்களை புரிந்து கொள்ள முடியவில்லை…இவளும் என்னை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு டைவர்ஸ் வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்...என்ன கொடுமை சார் இது...?
01.10.2062

01.08.2062
நான் கண்விழித்துப் பார்த்தபோது நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தேன்...வெள்ளை நிற உடையனிந்த ஒருவர் என் அருகில் வந்தார் மிஸ்டர் APZ 2035 உங்கள் நினைவுதிறன் முற்றிலும் அழிந்து போனால் உங்களால் உயிர் வாழமுடியாது….அதனால் அரசு உங்களை கருனை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளது….உங்களுடைய உறுப்புகள் பலருக்கு பயன்படும்…மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.என் கண்ணில் நீர் வழிந்தது…நான் இப்படியே இருக்கிறேனே..என்னை விட்டுவிடுங்கள் என்றேன்...எப்படி வாழமுடியும்? உணவு உண்பதற்கு பாஸ்வெர்டு வேண்டும்,பெட்ரோல் அடிக்க,பொருள் வாங்க,வீட்டு கதவு திறக்க,அலுவலகத்தில் பணிபுரிய எல்லாவற்றிக்கும்…உங்களை வைத்து வைத்தியம் செய்தாலும் அரசுக்கு வீன் செலவு ஒத்துழைப்புத் தாருங்கள்..என்றார் அவர்….
என்னால் எதுவும் கூற முடியவில்லை…..ஆம் பாஸ்வேர்டு இல்லையென்றால் எதுவும் செய்யமுடியாது...பசியால் மரணமடைவதைவிட இறப்பதே மேல் என்று முடிவெடுத்து சரி என்றேன்….
01.01.2063
என் "பிளாக்கில்" ஒரு பதிவு இட்டு விடுகிறேன் அதுவே என் கடைசி ஆசை என்றேன்….
அப்படியா என்ற அவர் வாய்ஸ் டைப்பிங் கம்யூட்டரை கொடுத்தார், நான் சொன்னேன்
HAPPY NEW YEAR 2063
அதுவே டைப் செய்தது ..பப்ளிஸ் செய்து விட்டு கண்ணை மூடிக்கொண்டேன் ஒரு ரோபர்ட் கை என்னுள் விசஊசியை சொருகியது..மெல்ல…மெல்ல…..நினைவு இழந்த கொண்டிருந்த போதும் ஞாபகம் வந்த்து அடடா திரட்டியில் இணைக்கவில்லையே என்று……....
Labels:
Blogger,
the time story,
காலம்,
சிறுகதை
Subscribe to:
Posts (Atom)