அட்ரா சக்க சிபி செந்தில்குமார் பற்றிய உண்மைகள்!

>> Tuesday, January 10, 2012


தீராத எழுத்தாசை...
இயல்பிலே நகைச்சுவை...
வசனங்கள் விளையாடும்
சினிமா விமர்சனத்தின் துல்லியம்...
டுவிடர் பறவையின் தூதுவன்...
அரசியல் நையாண்டிகள் மற்றும்
ஜோக்குகள் இவர் மனதை விட
விரல்களில் பிறக்கிறதோ என்றொரு ஐயம்
அனைவருக்கும் இருக்கிறது....


இவர் மையம் கொண்டது
பதிவுலகின் பக்கம்!
சிறிய காலத்தில்

ஆயிரம் பக்கங்கள்...!!
சிறிய சாதனையல்ல!
சீரிய சாதனை...
அதற்க்கு செலவிட்ட காலம்,வியர்வை
இதற்கெல்லாம் விலை கிடையாது
ஆனால் விரைவில் கிடைக்கும்.


விமர்சனங்கள் பலர் இவர்மேல்
வைத்தாலும் எதிர் கொள்ளும் மேன்மை!
சிறியோன் என்றாலும்
திருத்தங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை!
இவர் தமிழ்மணத்தின் நட்சத்திரமென்பது
தின்மையான உழைப்பில்...
இவரை உயர்த்தியதென்பது உண்மை


ஆயிரம் பதிவுகளை கண்ட
அவர் மேலும் பல
சாதனைகள் படைக்கவும்
சோதனைகள் கடக்கவும்
இறைவனை பிராத்திக்கின்றோம்!

இவன்


வீடு வலைதள நண்பர்கள்....
மற்றும் அனைத்து நண்பர்களும்


20 comments:

Unknown 9:47:00 PM  

வாழ்த்துக்கள் திரு சிபி அவர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும்!

சி.பி.செந்தில்குமார் 12:17:00 AM  

நன்றிகள்

கூலிங்க் கிளாஸ் போடாமல் வரைந்த ஓவியத்தை வன்மையாக கண்டிக்கிறேன் :)) ஹி ஹி

Admin 12:43:00 AM  

1000 பதிவை எட்டிய சி.பி க்கு வாழ்த்துகள்..உங்களுக்கு நன்றி..

திராவிட தீபம் தோன்றியது

தமிழ்வாசி பிரகாஷ் 12:53:00 AM  

சிபிக்கு வாழ்த்துக் கவி...

பகிர்ந்த வீட்டுக்கு நன்றி...

MaduraiGovindaraj 1:12:00 AM  

சி.பி.செந்தில்குமார் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் எழுதி வாழ்க பல்லாண்டுகள்
கீழே உள்ளது என் கருத்துதான்
நன்றி

சி.பி.செந்தில்குமார் said...
நன்றிகள்

கூலிங்க் கிளாஸ் போடாமல் வரைந்த ஓவியத்தை வன்மையாக கண்டிக்கிறேன் :)) ஹி ஹி

MaduraiGovindaraj 1:25:00 AM  

சி.பி.செந்தில்குமார் கூலிங்க் கிளாஸ் போட்ட ஓவியத்தை வரைந்து வெளியிடவும் "நேயர் விருப்பம்"

கவிதை வீதி... // சௌந்தர் // 1:30:00 AM  

பார்ரா....

கலக்குற சந்துரு...

கவிதை வீதி... // சௌந்தர் // 1:31:00 AM  

//////
சி.பி.செந்தில்குமார் said...

நன்றிகள்

கூலிங்க் கிளாஸ் போடாமல் வரைந்த ஓவியத்தை வன்மையாக கண்டிக்கிறேன் :)) ஹி ஹி
///////

யோவ்.. நீங்க கண்ணாடி எங்க போட்டுஇருக்கியோ அங்கதான்யா கண்ணாடியிருக்க நல்லா பாருயா...

நிரூபன் 1:55:00 AM  

வணக்கம் நண்பா,

பதிவுலக நகைச்சுவைப் புயல், அட்ராசக்க அமர்க்கள நாயகனின் அருமை, பெருமைகளைச் சொல்லும் அழகு தமிழ் கவியைக் கொடுத்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி.

நிரூபன் 1:56:00 AM  

சிபி சித்தப்பூவின் பணி தொடர மீண்டும் இங்கே வாழ்த்துகிறேன்.

ம.தி.சுதா 2:01:00 AM  

தங்கள் பாமாலையில் என் வாழ்த்தும் சேரட்டும் சகோ...

Thenammai Lakshmanan 2:19:00 AM  

வாழ்த்துக்கள் சிபி..:)

ஆமினா 3:49:00 AM  

மனமார்ந்த வாழ்த்துக்கள் சிபி

ஓவியம் கலக்கல்

rajamelaiyur 5:58:00 AM  

சிபி என்றும் நம்ம தலைதான்

சென்னை பித்தன் 7:02:00 AM  

உங்களுடன் சேர்ந்து சிபிக்கு வாழ்த்துகள்.

காட்டான் 9:49:00 AM  

பதிவுலகின் முடிசூடா மன்னனுக்கு உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் சிபி!!

Anonymous,  12:41:00 AM  

/// நண்பா!உங்க விமர்சனத்தை வேறு தளத்தில் படித்து விட்டு வருகிறேன் சிறிய மாற்றத்தில்...என்னய்யா நடக்குது இங்க...
நான் கூட தவறா நினைச்சுட்டேன்! மோகன்குமார் அண்ணன் கமெண்ட் படிச்சுத்தான் தெரிஞ்சுகிட்டேன்....நீங்க..சிங்கம்தாம்ல..///

விடுங்க சுரேஷ், சின்னப்பசங்களா இருக்கப்போகுது. ஏதோ ஆர்வத்துல அப்படியே காப்பியடிச்சிருக்கான். நானும் அவன் வெப்சைட்டைப் பார்த்தேன். நம்ம ஊர்க்காரனா போயிட்டான். ப்ளாக் ஆரம்பிச்சி ஒரு மாதம் கூட இருக்காதுன்னு நினைக்கிறேன். நான் போன வருடம் சிறுத்தை படத்தின் விமர்சனம் போட்டிருந்த போது அதனை இன்று தமிழ்மண வரிசையில் முதல் 5 இடத்திற்குள் உள்ள ஒரு பதிவர் காப்பியடித்து போட்டிருந்தார். அதை ஏன் என்று கேட்டால் உங்கள் எழுத்து நடை நல்லாயிருந்தது என்றார். அப்பவே கண்டுக்காம விட்டவன். இவன் ஏதோ சின்னப்பையன்.

ராஜி 8:55:00 AM  

சிபி சார் காசு விஷயத்துல படு கறார்ன்னு கேள்விப்பட்டேன். அக்கவுண்ட்ல சிபி சார் பணம் போட்டுட்டாரான்ன்னு பாருங்க.

cheena (சீனா) 12:47:00 AM  

அன்பின் சுரேஷ் குமார் - சிபியினைப் பற்றிய பதுவு அருமை - நல்வாழ்த்துகள் _ நட்புடன் சீனா

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP