வெடி ஒரு சரவெடியா? ஊசி வெடியா?

>> Saturday, October 1, 2011



2008ல் சவுரியம் என்கின்ற தெலுங்கு ஆந்திரா ஆக்சன் திரைப்படம் காரம்,கரம் மசாலாவுடன் வெளியாகி ஆந்திரா பாபுகளை குஷி படுத்தி ஓடு....ஓடென்று..ஓடுச்சு கோபிசந்த்,அனுஸ்கா,பூனம்கவுர் அதில் நடித்து இருந்தார்கள் அதை நம்ப பங்காளி பிரபுதேவா விசாலின் அண்ணாச்சி விக்ரம் கிருஷ்ணா தயாரிப்புல இயக்கியிருக்கிறார்

நம்ம ஆளு எதற்க்கும் மெனக்கெடல அப்படியே ஈயடிச்சான் காப்பியடிச்சிருக்கிறார் என்ன ஒரிஜினல்ல ரத்தம் தெரிக்கும் இதுல கெஞ்சம் குறைச்சிட்டார் கதை பழைய அர்ஜுன் பட கதைதான் "ரவுடிஅப்பா"  இறந்தபின் சிறுகுழந்தைகளான விசால்,பூனத்தை ஊர் உதாசினப்படுத்துகின்றது! அனாதை ஆசிரமத்தில் பூனத்தை சேர்க்க தன் தங்கையே இல்லை என பொய் சொல்லுகின்றார்

விசால், அது தங்கையின் மனதில் ஆறாதவடுவை உண்டாக்குகின்றது, அதனால் அண்ணனை சந்திப்பதை தவிர்க்கிறார் தங்கை..

பெரியவன் ஆன அண்ணன் I.P.S. அதிகாரியாகின்றார்!தூத்துக்குடி ரவுடி "ஷியாசிஷிண்டே"வுடன் மோதுகின்றார் ஷியாஷியின் ஸ்டைலே தன்னை எதிர்க்கும் போலிஸ் அதிகாரிகளை அவர்களின் குடும்பத்தை வைத்து மிரட்டுகின்றார், ஆனால்! குடும்பம்குட்டியில்லாத விசாலை மிரட்டுவதற்க்கு முடியவில்லை அதனால் கைதாகின்றார்,

விசால் தன்தங்கையை தேடி கல்கத்தா செல்கின்றார் அதை தெரிந்து கொண்ட "ஷியாஷியும்" கல்கத்தா செல்கின்றார் அப்புறம் என்ன ஒரே ஆக்சன்தான்.......

விவேக் ஓரளவு சிரிக்க வைக்க முயலுகின்றார் ஆன நமக்குத்தான் முடியல.... ஒரு காட்சியில் படாதஇடத்தில் கிரிக்கெட் பால் பட்டிரும் விவேக் "அவன்இவன்" விசால் மாதிரி கரகரப்பான குரலில் பேட்டை உடைச்சிட்டியே....என்பார் நல்ல காமடி! ஆனா படம்பார்க்கும் ஏனையோருக்கு அது புரியல.. சரியா பண்ணியிருக்கலாம்

சமிரா...பெங்களுர் தக்காளி மாதிரி இருக்குது ஆனா "ஊறுகாய்" மாதிரி பயன்படுத்தியிருக்காங்க,சில காட்சிகளில் காரம்(கிளாமர்)அதிகமா... இருக்கு

"பூனம்" முகத்தில் பழைய களையில்லை விசாலின் தங்கையாக வருகிறார்

விஷால் நடிப்பு இயல்பா நடிக்கிற ஆர்வத்துல ஆக்சன குறைச்சது படத்திற்க்கு பெரிய மைனஸ், ஒரிஜனல்ல "கோபி" கலக்கியிருப்பாரு திமிரு விசால் மாதிரி, திமிரு சாயல் வரும் என்று நினைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்...!

படத்தின் பிளஸ் என்றால் "பாடலும்" பாடல் படமாக்கப்பட்ட விதமும் கிரேட் பிரபுதேவா, இசை "விஜய்ஆண்டனி" பின்னணி கலக்கியிருக்கிறார் முதல் பாடலில் "தேவிஸ்ரீபிரசாத்" ஆடவும் இசை யார்? என்கின்ற குழப்பம் நிலவுகின்றது..

சண்டைக்காட்சிகளில் அறிவாளில் வெட்டி இரத்தம் தெரிக்கும் காட்சியில் சட்டைக்கு உள்ளே வைத்து வெடிக்கும் "டைனமெட்டின்" கரும்புகை தெளிவாக தெரிகின்றது அதனால் கிளைமாக்ஸின் சண்டைக்காட்சி எடுபடவில்லை அனைவரின் உழைப்பு வீணாகிவிட்டது படம் ஆக்சன் பிரியர்களுக்கு டைம்பாஸ்.....

0 comments:

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP