யாராவது வருவார்களா?

>> Tuesday, October 25, 2011


யாராவது வருவார்களா?

அம்மா ஊட்டி விட்ட
இனிப்பை அவள்
மடியில் அமர்ந்து
சுவைக்க முடியவில்லை...


எங்கள் கை பிடித்து
பெரிய வெடி வெடிக்க
கற்றுக்கொடுக்க
அப்பா இல்லை...


புத்தாடையின் அழகை
காட்டி ரசிக்க
தாத்தா பாட்டி
யாருமில்லை...


ஏனெனில்


பட்டாசு இனிப்பு புத்தாடை தர
வருவார்கள் என.......
யாராவது வருவார்களா என
வாசலையே பார்த்துக்கொண்டிருக்கும்
அன்பு இல்லத்தின்
அநாதை குழந்தைகள் நாங்கள்!

அன்புள்ள நண்பர்களே இந்த கவிதை படிக்கும் போது உங்களுக்கு வலித்திருக்கும்
யாராவது ஏழை குழந்தைகளுக்கு சின்ன உதவியாவது செய்யுங்கள்
பொருள் அதிகம் உள்ளோர் அருகிலுள்ள அநாதை ஆசிரமங்களுக்கு சென்று பரிசு பொருள் தாருங்கள்
இனிப்பு தாருங்கள் மனசு நிம்மதியாக இருக்கும்..
அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

4 comments:

கோகுல் 10:51:00 AM  

கனத்த பதிவு.தீபாவளி வாழ்த்துகள்!

வலையுகம் 10:39:00 PM  

அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் 5:36:00 AM  

உங்கள் உணர்வைப் பாராட்டுகின்றேன் சகோ .வலிதரும் கவிதை வரிகள் அருமை !....உங்களுக்கும்
என் பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

நிரூபன் 12:40:00 AM  

வணக்கம் பாஸ்,
யாராவது வருவார்களா?
எனும் ஏக்கத்துடன் காத்திருக்கும் குழந்தைகளுக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்து,
அவர்களின் மன மகிழ்ச்சி மூலம் நாம் பண்டிகையினைக் கொண்டாடி மகிழ வேண்டும் எனும் உண்மையினை இந்தக் கவிதை சொல்லி நிற்கிறது.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP