யாராவது வருவார்களா?
>> Tuesday, October 25, 2011
யாராவது வருவார்களா?
அம்மா ஊட்டி விட்ட
இனிப்பை அவள்
மடியில் அமர்ந்து
சுவைக்க முடியவில்லை...
எங்கள் கை பிடித்து
பெரிய வெடி வெடிக்க
கற்றுக்கொடுக்க
அப்பா இல்லை...
புத்தாடையின் அழகை
காட்டி ரசிக்க
தாத்தா பாட்டி
யாருமில்லை...
ஏனெனில்
பட்டாசு இனிப்பு புத்தாடை தர
வருவார்கள் என.......
யாராவது வருவார்களா என
வாசலையே பார்த்துக்கொண்டிருக்கும்
அன்பு இல்லத்தின்
அநாதை குழந்தைகள் நாங்கள்!
அன்புள்ள நண்பர்களே இந்த கவிதை படிக்கும் போது உங்களுக்கு வலித்திருக்கும்
யாராவது ஏழை குழந்தைகளுக்கு சின்ன உதவியாவது செய்யுங்கள்
பொருள் அதிகம் உள்ளோர் அருகிலுள்ள அநாதை ஆசிரமங்களுக்கு சென்று பரிசு பொருள் தாருங்கள்
இனிப்பு தாருங்கள் மனசு நிம்மதியாக இருக்கும்..
அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
