”அஞ்சரைக்குள்ள வண்டி”- திரைவிமர்சனம்(A)
>> Wednesday, March 28, 2012
வணக்கம் நணபர்களே! இந்த படம் எங்காவது
ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..! பார்த்தது "கோபி சாந்தி தியேட்டர்" (இப்ப அநியாயமா இடிச்சிட்டாங்க) "கில்மா" படத்துக்கென்றே நேர்ந்து
விட்டது இந்த தியேட்டர்.
அதுலதான் கணேசன் என்கிற என் நண்பனுடன் பார்த்த்தேன். கணேசன் ஒரு சரித்திரம் முக்கியத்துவம்
வாய்ந்த பொறம்போக்கு, பல கில்மா படங்களை தலையில் துண்டைப்போட்டுக் கொண்டு பார்ப்பதில்
கில்லாடி! சிறிது கால் ஊனமுற்றவன் அதனால் ஆசிரியர்கள் யாரும் அவனை அடிக்க மாட்டார்கள்
ஆனால் சின்னச்சாமி ஆசிரியரோ அவனை கதறகதற பின்னி எடுத்துவிடுவார், ஆட்டோபக்ஸ் மாதிரி
லாவகமாக அடியில் இருந்து தப்பிப்பான் அதனால் தன் இரண்டு கால் இடுக்கிலும் அவனை இடுக்கிக்
கொண்டு குமுறுகுமுறுன்னு குமுறுவாறு! இவ்வாறு குமுறிக்கொண்டிருந்த வேளையில் அவர் தொடையை
கடித்து விட்டான் அவர் அய்யோ….அய்யோ என்க் கதறினார்.
துணியே இல்லாம யானை இப்படிபட்ட செக்ஸியான காட்சிகள் நிறைந்த படம் |
கடுப்பான தலைமை ஆசிரியர் டிசி கொடுத்து
அவனை துரத்திவிட்டார், தன் தந்தையின் "ரேடியோ ரிப்பேர்" கடையில் ஐக்கியமாகிவிட்டான் சின்னசின்ன
கோளாறுடன் வரும் "ரேடியோ" சுத்தமாக அவுட் ஆக்கும் விஞ்ஞானியாகி விட்டான். பொதுமக்களிடமும்
மாத்து வாங்கிக்கொண்டு இருந்த சரித்திர புகழ் வாய்ந்த நண்பன் கணேசன்தான் எனக்கு இந்த
படத்தை அறிமுகப்படுத்தினான் இருவரும் படத்திக்கு போனோம். துண்டுடன்…… இனி விமர்சனம்.
எழுத்து போட்டார்கள் ஜிலேபிய பிச்சு
போட்டமாதிரி ஒன்னும் புரியலை(நீங்கள் வெண்ணை விமர்சனத்திக்கு வாடா என்பது எனக்கு புரிகிறது)
அந்த ஊர்ல கில்மாவான பிகர் "ஷகிலா" கல்யாணம் ஆயிருச்சு, புருசன் வேலைக்கு ஆவுல... அதனால அம்மணி
வேற ஒரு பர்னாலிட்டியான "சுரேஸ்கோபி" மாதிரி ஆள கரைக்ட் பண்ணுது அவரும் புருசன் இல்லாதப்ப
வந்து கில்மாவா இருந்துட்டு போயிடுறாரு…, இரண்டு பேரும் ஈருடல் ஓருயிரா
ஆயிடறாங்க ஊருக்கு வருகிற ஒரே பஸ் சரியா மாலை 5.30க்கு வருது அதுல ஓடிப்போகத் திட்டமிடுறாங்க, ஓடிப்போகும் போது புருசன் கிட்ட மாட்டிக்கிறாங்க. புருசன் கள்ளக்காதலுனுடன் சண்டை போட்டு
மனைவியை மீட்டு வந்து அவன் பெண்களை விபச்சாரத்திக்கு விற்கும் புரோக்கர் என்கிற உண்மையை
கூறி மனைவியை திருத்துகிறார் இருவரும் அணைத்துக் கொள்கிறார்கள்
படம் சுபம்!
பொன்னர் சங்கருக்கு இது தேவலாம் |
மனம் மகிழ்ந்த படத்தின்
வசனங்கள்
1.தம்பி ஊருக்குள்ள புதுசா யாருப்பா நீ?
கோழி
புடிக்க வந்தம்ங்க...
அடுத்தமுறை அதே பெரியவர் தம்பி கோழி புடிச்சிட்டியா..?
கோழி புடிச்சிட்டேன் ஆனா வெடக்கோழிதான் கிடைச்சது
2.ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ...... ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ......
ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ..... ம்ம்ம்ம்மாமா......ஸ்ஆஆஆஆஆஆஆஆ
3. உன் கண்ணும் உதடும்தான் அழகு!
வேற எதுவும் அழகு இல்லையா?
வேற.......
காந்த கண்ணழகி! |
இயக்குனரிடம் சில பாலான கேள்விகள்
1.படம் நார்மலா போயிட்டு இருக்கு சீன் வரும் போது மட்டும் சவுண்ட்
அதிகமாகிவிடுகிறது ஏன்.....? பிளீஸ் டெல் மீ.......?
2.அப்புறம் படக்காட்சியெல்லாம் தெளிவா இருக்கு கில்மா வரும்போது மட்டும் கீறல் அதிகமா இருக்கு ஏன்....?
3.படத்தில கில்மா முடியாமலையே அடுத்த காட்சிக்கு போயிடுறீங்க எடிட்டிங் மிஸ்டேக்....? இல்ல ஆபரேட்டர் மிஸ்டேக்!
4.ஆமா உங்களுக்கு ஷகிலாவை தவிர வேற நடிகையே கிடைப்பதில்லையா?
5.படத்தில் ஷகிலாவைத் தவிர எல்லாரும் உம்மணாம் மூஞ்சியாவே இருக்காங்க ஏன்?
இந்த படத்தை குழந்தைகள் கூட பார்க்கலாம், இப்ப வருகிற தமிழ் படத்தை விட கில்மா
குறைவுதான்....
ஆனந்த விகடன் மார்க் : 5.30
குமுதம் ரேன்ங் : சுமார்! பிட்டே இல்லை!
என்னுடைய கருத்து : வீட்டுல மாட்டியதுதான் மிச்சம்! அடி வாங்கியதுதான் பலன்! இந்தப் படம் பார்த்த காசுக்கு சரோஜாதேவி புத்தகம் வாங்கியிருக்கலாம்....!
நீ நனைந்ததில் எனக்கு வெப்பமாக இருக்கிறது |