பக்கி தக்காளி VS மக்கி மனோ+ பேய்!
>> Tuesday, March 27, 2012
பக்கி தக்காளி காலையில் ஆபிஸ்க்குள் நுழைஞ்சதும் தாய்லாந்து அசிஸ் டெண்ட் பிகரு பஞ்சு மிட்டாய் கலருல ஜிகுஜிகுன்னு சார்ட் ஸ்கர்ட்டு, லோடாப்புல (சிபி அண்ணே! ஜொள்ள துடைங்கோ) குட்மார்னிங் சார் என்றாள் குட்மார்னிங் என்றபடி தன் அறைக்குள் போனார் பக்கி. பக்கியின் எசமான் போன் அடித்தார்…
பக்கி.... யு.... கோ... டு ...தி... பஹ்ரைன்! மீட் தி அனிகாவ்ரோகியாகோ(என்ன எழவுபேருடா இது கொய்யால)
பக்கிக்கு ஒரே (இல்லை இரண்டு) சந்தோசம் ஒன்னு பஹ்ரைன் போனாமானோவ பார்கலாம்! இரண்டு சப்ப மூக்கு பாங்காங்காரியும், தாய் லாந்துக் காரியும் பார்த்து, பார்த்து, (பார்பதோடு மட்டும் கெய்ஸ் பக்கி ரொம்ம நல்லவருங்கோ!) சலிச்சு போன கண்ணுக்கு விளக்கெண்ணை ஊத்திகிட்ட மாதிரி குளுகுளுன்னு அமெரிக்காகாரி, மொராக்கோகாரின்னு, பார்க்கலாம்.
இந்த மனோ பய வேற எனக்கு நியூஸ்லாந்துகாரி தோழி இருக்காக ஜெர்மன்கார தோழி இருக்காக என்று கோவை சரளா ரேஞ்சுக்கு போஸ்ட்டா போட்டு கொல்லுது! என்னதான் அப்படி பயபுள்ள பண்ணுது பார்த்துட்டு வரலாமுன்னு குஷியா கிளம்பினாருங்க அதுதான் பக்கி செஞ்ச முத தப்பு…சரி பக்கி கூட நாமளும் பயனம் செய்யலாம் வாங்க….
சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்( மியூசிக்குங்கோ)
கெனாய்ல இருந்து பஹ்ரைன் ரொம்ம தூரம் பிளைட்டு பறக்குது பக்கி கண்ணைமூடி தூங்கினாப்புல மனோ போட்ட பதிவுல பேயை பத்தி இருந்தது ஞாபகம் வந்தது, அட எத்தனை வியட்நாம்காரிக மூஞ்ச பார்த்தும் பயப்படுல போயாவது ஒன்னாவது நாதாரி சேராத சரக்ககுடிச்சிட்டு பேயி நாயின்னுட்டு…நாயத் திங்கிற ஊர்ல இருக்கிற நமக்கு பேயாவது ஒன்னாவது
ங்கொய்யால….என் பலதை சிந்தித்தவாறு தூங்கிப்போனார் பக்கி.
பிளைட்டுல நல்லா தூங்கின பக்கியை அழகான அமெரிக்காகாரி எழுப்பினாள் பாலபட்டி வந்திருச்சா என்கிற மாதிரி பஹ்ரைன் வந்திருச்சா என்றவரை வினோதமாக பார்த்தாள் (எல்லா பிகரும் ஏங்க பக்கிய இப்படி பார்க்குது?) ஹிஹி என ஜொள்ளுவிட்டபடியே பக்கி இறங்கினார்(தக்காளிக்கு இன்னும் டவுன்பஸ் பழக்கம் போகலை நீர்மூழ்கி கப்பல்ல போனாலும் சீட்ல உக்காந்தா கொர்ர்ர்தான்…)
அனிகாவ்ரோகியாகோ (சத்தியமா இத காப்பி பேஸ்ட்தான் பண்ணினேன்) சப்ப மூக்குகாரனை சந்திச்சு ஆபிஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டு, ஒரு ஏழு மணியிருக்கும்..., ஒரு வாடகை டாக்ஸி புடிச்சிட்டு ஹோட்டல் போய் சேந்தாரு நம்ம ஆளு.
மனோவுக்கு ரொம்ம சந்தோசம் தொந்தி முட்ட இரண்டும் கட்டிக்கிச்சுக மனோ ஆலமரத்தை கட்டி பிடிச்ச மாதிரி பாதிதான் முடிஞ்சது…யேய் மக்கா வா நம்ம நண்பர்கள் கிட்ட அறிமுகப் படுத்துகிறேன் என்று ஹோட்டல் நண்பர்களை அறிமுகப்படுத்தினார்….பயபுள்ள எல்லாம் பாய்ஸ்....ஒரு கேர்ள்ஸ் கூட காட்டுல....(வாய திறந்து கேட்கவா முடியும்) அதுல அரபி ஒருத்தன் பக்கிய மேலையும் கீழையும் பார்க்குறான், அவன் யாருடா தக்காளி... முறைக்கிறா என்ற பக்கியிடம் அவன்தாண்டா முதலாளி என்றார் மனோ....கொய்யால சேக்குக்கு என்ன பர்த்தா எப்படி தெரியுதாம்...(ஆமா ஓனர்ன்னா பொளந்து வச்சிகிட்டு நடந்தா எப்படிங்கற சிவா பிளாக் ஏன் ஞாபகத்திக்கு வருது?)
அப்படி இப்படி என்று நண்பர்கள் இருவரும் பதிவுலம் பற்றி எல்லாம் கதைத்து முடிக்க மணி பத்து ஆச்சு லைட்டா….ஒரு ஸ்மால போட்டுட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு இருவரும் ரூமுக்கு போனார்கள்
பக்கி இன்னொருத்தருக்கு போன் செய்தார்...
ஹலோ டேய் கீமா ச்சே கில்மா நாயகா...
அடங்கோ...என்றா...எப்போ எதுக்கு போன் பண்ண...
இல்ல நான் மனோ கூட இருக்கேன்...
ஹிஹி அவன நம்பி போனியா...உன்னைய கவுக்க போறான் பாரு...என்னைய இங்க அப்படித்தான் கவுத்தான்...
ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல...பிகர்ஸ் எல்லாம் டாப்பு..
அப்போன்னா உனக்கு ஆப்பு...
போடங்கோ...(போன் துண்டிக்கப்பட்டது..!)
பக்கிக்கு மனசுல கீழ சாப்பிட்ட மீன் முள்ளு மாதிரி இருந்த விசயத்தை அப்பத்தான் துப்பினாரு மனா பேய் இருக்குன்னு போஸ்ட் போட்டையே அது எந்த ரூம் என்றார்...அப்படியே பிட்டையும் போட்டாரு நண்பியெல்லாம் எங்க மக்கா என்று
ஹ ஹ ஹ ஹ என்று சிரித்தார் மனோ(பய புள்ள எதுக்கு சிரிக்குதோ) காலையில அறிமுகப்படுத்துகிறேன் மக்கா என்றார்..மனோ(மனோவா கொக்கா)அப்புறம் போட்டாருங்க பாருங்க பிட்டு பக்கி கைகால் எல்லாம் லேசா நடுங்குச்சு.
அய் மக்கா கவலை படாதிங்க…பேய்க் களுதை அது பாட்டுக்கு வரும் போகும் பயப்படாதிங்க அது இந்த ரூம்தான் என்று கூறி மனசுல கிலி! எலி! புலி! எல்லாத்தையும் கிளப்பிட்டாரு…கொய்யால….பக்கி தைரியசாலிதான் ஆனா பேய்ன்னா பயம் இல்லைதான்…எம்மாம் பெரிய கொம்பனுக்கும் சுடுகாட்டை கடக்கும் போது லைட்டா ஒரு பயம் வரும்…..அங்கயே..பாய விரிச்சு படுக்கிற நிலமை வந்தா (யோவ் விடுங்கய்யா மீ பாவம்)
அப்படியே படுத்தாரு தூக்கம் வரல மனோ படுத்தவுடன் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…
அப்படியே படுத்துகிடந்தவரு நல்லா தூங்கிட்டவர் சரியா பண்ணிரன்டு மணி விழிச்சிட்டாரு தூரத்துல ஒரு நரி ப்பர்ர்ர்ர்ர்ன்னு ஊளையிட்டது ஆங் நரி ஊஊஊ…ன்னு தானே ஊளையிடும்?
இது ஒட்டகம்….அப்புறம் பார்த்தா மனோ குறட்டை விடுறாரு...இரண்டும் மிக்ஸ் ஆனதுல பக்கிக்கு பேதிய கிளப்பிருச்சு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா…..ஒரு நிமிசத்தில பயந்திட்டேன்…என்று மனசை தேத்திக்கிட்டு வாய் எல்லாம் வரண்டு போச்சு…தண்ணி குடிப்போம் என்றபடி ரூம் மூலையில் இருந்த வாட்டர் கேன்ல இரண்டு டம்ளர் தண்ணி குடிச்சிட்டு திரும்பியதும்... எதிர்ல பேபேபேபேய்ய்ய்ய்ய்ய்…என்று அலறிவிட்டார் பக்கி….
"அப்புறம் பார்த்தா மனோ"
எலேய் மக்கா நான்தான்லே….சரியான….பயந்தாங்கு ள்ளியா இருக்கியேலே….என்றவர் எனக்கும் தண்ணி தாகமா இருக்கு என்று இரண்டு மூன்று டம்ளரை குடித்தார்…
எனக்கு இனி தூக்கம் வராது…மூதேவி சத்தம் இல்லாம வந்து பின்னாடி நிக்குது…..ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு….டிவியாவது பார்க்கிறேன் என்று டிவிய ஆன் பண்ணினார்
நானே வருவேன்….என்கிற பேய் பாட்டு அட கொய்யால நமக்கு தகுந்த மாதிரி இதுவேற என்றபடி வேறு சேனலை மாற்றினார் அதுல ஏதோ இங்லீஸ் படம்100 பேய்க குழியிலிருந்து எழுந்து ஊஊஊஊஊ என் ஊளையிட்ட படி கைகள் இரண்டையும் விரித்த படி வருது கடுப்பான பக்கி டிவிய ஆப் பண்ணிட்டு படுத்தார் விடிய..விடிய பேயும் வரலை பக்கியும் தூங்கல…..(ஆனா மூனு வாட்டி பாத்ரூம் போனாருங்க)
காலையில எழுந்து வேகமா குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு கிளம்பினாரு பக்கி அட இருப்பா நியூஸ்லாந்து நண்பிய அறிமுகப்படுத்துகிறேன் என்றார் மனோ!
நீ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்…என்ன ஆள விடு என்று வியட்நாமை நோக்கி பறந்தது பக்கி.
டிஸ்கி1 : அந்த பேய் எதிர்பாராமல் தூக்கத்தில் மனோவை இருட்டில் கண்ணாடியுடன் பார்த்து பயந்து ஓடிவிட்டதாம்.
டிஸ்கி1 : பக்கிக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விட்டதாம், வியட்நாமில் மளையாள மாந்திரிகர் இல்லாததால், ஒரு சீன மந்திரவாதியை வைத்து மந்திரித்து தாயத்து கட்டியபிறகு இப்பொழுது ஓரளவு பரவாயில்லை என்று தகவல்!
12 comments:
இது ஒரு மீள் பதிவு ஆனா எங்க மீட்டியதுன்னு சொல்லமாட்டேன் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க...டொயிங்...டொயிங்!
ஃபோட்டோ எடிட் எல்லாம் பண்ணி செம்ம ரகளை பண்ணியிருக்கீங்க.
எங்கயிருந்து மீள்பதிவு பண்ணினீங்கன்னு தெரியலன்னே?
//தூரத்துல ஒரு நரி ப்பர்ர்ர்ர்ர்ன்னு ஊளையிட்டது//
மல்லிப்பூ வாசம், ஜன்னல் சத்தம் இதையெல்லாம் விட்டுட்டீங்களே?
@ஹாலிவுட்ரசிகன்
//தூரத்துல ஒரு நரி ப்பர்ர்ர்ர்ர்ன்னு ஊளையிட்டது//
மல்லிப்பூ வாசம், ஜன்னல் சத்தம் இதையெல்லாம் விட்டுட்டீங்களே?///
பக்ரைன்ல மல்லிகைப்பூ கிடைக்கிலீங்கோ!ஜன்னல் சத்தம் போட்டிருக்கலாம்..ஹிஹி!
யோவ் ஏன்யா உனக்கு இந்த கொலைவெறி!
பஹ்ரைன் பேய் என்ன எரிஞ்ச பேயா?
பாவமுங்க நம்ம பக்கி பய புள்ள,
மீள் பதிவு எங்கே இருந்துன்னு சொல்ல மாட்டேன்
பேய்க்கே பேய் பிடிக்க வைக்கும் மனோ வாழுக. வாழுக.
Mm
வீடு, அடுத்த பக்ரைன் ட்ரிப் நீங்கதானாமே.....
பார்த்து தூங்குயா......
கர்பூர்..கர்பூர்.... வந்துர போகுது.
//அந்த பேய் எதிர்பாராமல் தூக்கத்தில் மனோவை இருட்டில் கண்ணாடியுடன் பார்த்து பயந்து ஓடிவிட்டதாம்.
//
யார் கூட ஓடுச்சாம் ?
வணக்கம் சுரேஷ்!
உங்க பதிவுக்கு வருவது சிரமமா இருக்கு எனக்கு எத கிளிக் செய்யணும் ஏன்னு ஒரே குழப்பமா இருக்கு..!!
Post a Comment