மாசி சீட்டு நுனியில ஊசி!

>> Friday, March 16, 2012

நம்ம அண்ணன் கோவை மணி ரொம்ம நாளைக்குப் அப்புறம் தயாரிச்சு, கிச்சாங்கற டைரக்டர் இயக்கிய படம் மாசி! ஆக்சன் கிங் ரசிகர்களுக்கும் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு விருந்து! விருந்து ஓக்கே வேட்டு சத்தம்தான் கொஞ்சம் ஓவர். தெலுங்கு வில்லன்ஸ், வில்லிஸ் ஆல் பேரும் படத்தில ஆஜர் !படத்தோட கதை ரொம்ம சிம்பிள் கொஞ்சூண்டு வேட்டையாடு விளையாடு, கொஞ்சூண்டு காக்க...காக்க.....என மிக்ஸ் செய்த காக்கா கக்கா போன கதை...



நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் (ஆரம்பிச்சிட்டாங்க) நம்ம என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் அர்ஜுன், அவருடைய ஜோடி (மனைவி) ஆன்ட்டிய?! சுட்டு கொல்றாங்க.....கோவம் வந்த  அர்ஜுன், ரவுடிகளை சும்மா இடைவேளை வரைக்கும் குருவி சுடற மாதிரி பொட்டு..பொட்டு என்று ரவுடிகளை சுட்டுகிட்டே இருக்காருங்க....அப்பாலிக்கா மும்பையில் இருந்து கொண்டு இங்கே சென்னையில் ரவுடியிசம் செய்யும் நாகாவாக கஜினி வில்லன் ஒரு கேங், சென்னை காசி மேட்டுல இருந்து கொண்டு ரவுடியிசம் செய்யும் பொன்னம்பலம், அவருக்கு உதவும் ஹோம் மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ், என் இரண்டு குரூப் இவிங்க சண்டை நடக்கின்ற போதே குறுக்க அர்ஜுன் புகுந்து துவம்சம் பண்ணுகிறார் நம்மளையும் சேர்த்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா........முடியலை!

இந்த ஆன்ட்டிதான் முதல் ஜோடி....

எதிர்பாராத சதியில  அர்ஜுன், கைது செய்யப்படுகிறார், நாகா அவரை விடுதலை செய்ய உதவுகிறார், அம்மாம் நேர்மையான போலீஸ் டக்கென்று ரவுடிகளுக்கு வேலை செய்கிறார், பொன்னம்பலம் குரூப்பை அடியோடு காலி செய்கிறார், பொன்னம்பலத்தை மட்டும் உயிரோட விடுகிறார், பொன்னம்பலத்தை கொல்ல வரும் நாகா தம்பி பொன்னம்பலத்தை கொன்றவுடன், நம்ம அர்ஜுன் அவனையும், ஹோம் மினிஸ்டரையும் கொல்லறார். ஆத்திரம் அடைந்த நாகா சென்னை வருகிறார் லபக்கென்று தமிழ்நாடு போலீஸ் புடிச்சிக்குது.....ஏன் தமிழ்நாடு போலீஸ் மும்பை போய் புடிக்க முடியாதா? அப்படியெல்லாம் கேட்கப்படாது!

அப்புறம்  அர்ஜுனை துப்பாக்கியில சுட்டுவிடுகிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்  அர்ஜுன் அவரோட  ஜுனியர் உதவியால... நாகா கதைய முடிக்கிறார் கதை புரிஞ்சுதா....? புரியலையினா விடுங்க! எனக்கும் புரியலை!

இரண்டாவதா வர்ற ஆன்ட்டி!
கோவாலு அழுத இடங்கள்

முதல் ஜோடி ஒரு ஆன்ட்டி கில்மாவா வருது ஒரு ரீலில் கொன்னுடுறாங்க நான் கூட கதைநாயகின்னு நெனைச்சு தேம்பி..தேம்பி....அழுதேன்

இரண்டாவதா ஒரு ஜோடி(ஜிகிடி அல்ல) பாப்பாவும் ஆன்ட்டிதான் அப்ப அப்ப வருது. ஒரு டூயட் வேற....!அந்த பாட்டு போட்டப்ப தியேட்டரில் நான் மட்டும் தான் இருந்தேன் (திருப்பூர்ல தியேட்டர் உள்ள சிகரட் விற்பனை கிடையாது) அதை நெனைச்சு குமுறி குமுறி அழுதேன்...

வீட்டுக்கு வந்தும் அழுதேன்...ஏன் தெரியுமா டொமார்..டொமார்....துப்பாக்கி சத்தம் படம் முழுவதும் கேட்டுகிட்டுடே இருந்தா காது வலிக்காதா? காதுக்குள்ள கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்

நல்லெண்ணைய  பூண்டு போட்டு நல்லா காய்ச்சி கொஞ்சம் காதுக்குள்ள விட்டுட்டுப் படுத்தேன் இப்ப தேவலாம்....படம் பார்த்திட்டு வந்ததும் நக்கீரன் போன் போட்டாரு எங்க போனே என்று கேட்டார் "மாசி" படத்திக்கு போனேன் என்று சொன்னேன் என்னமோ சொன்னாரு என்னனு சத்தியமா கேட்கலைங்க.....

20 comments:

CS. Mohan Kumar 4:29:00 AM  

:)))

Sema comedy. Particularly last part.

Unga kashtam. Engalukku jolly.

நாய் நக்ஸ் 4:32:00 AM  

ஒழுங்கா இல்லேனா...இப்படிதான்...

100 dvd தேய தேய இந்த படம் பார்க்க கடவுது....

test 5:01:00 AM  

முதல் ஆன்டி ரெண்டாவது ஆன்டிக்கு எவ்வளவோ பரவால்ல இல்ல?
ஆனாலும் பாஸ்...சீட் நுனில ஊசிய வச்சிருக்கீங்க என்னா கொலவெறி!

Anonymous,  3:01:00 PM  

ஓசில கூப்புட்டாலும் நோ மாசி!!

Unknown 4:26:00 PM  

யோவ் மாசிக்கு முன்னாடி நீரெல்லாம் தூசி தூசி தூசி...எக்கோ!

Unknown 7:19:00 PM  

@மோகன் குமார் என்னை நினைச்சா...எனக்கே காமடியா இருக்கு உங்களுக்குமா...

Unknown 7:20:00 PM  

@NAAI-NAKKS அய்யா..மவராசா.....நீ...நல்ல..இருய்யா...

Unknown 7:21:00 PM  

@ஜீ... ஹிஹி! கொலைவெறி.......!ஆமாங்க....படம் பாருங்க புரியும்....

Unknown 7:22:00 PM  

@! சிவகுமார் ! அதுவும் சரி!!

Unknown 7:23:00 PM  

@விக்கியுலகம்

ஏற்கனவே காது வலிக்குது நீங்க வேற எக்கோவா.......போங்கங்கோ!

முத்தரசு 4:04:00 AM  

அண்ணே ஆண்டியை எல்லாம் எங்கே இருந்து புடிச்சிங்க

முத்தரசு 4:06:00 AM  

சித்தப்பு (சிபி) அளவுக்கு இன்னும் வளரனும்.

Unknown 6:39:00 PM  

@FOOD NELLAI ஆமாங்க உண்மைங்க....

Unknown 6:40:00 PM  

@மனசாட்சி இது அந்த டைரடக்டரை கேட்கவேண்டிய கேள்வி...!வேறெங்க கூகுல்கிட்டதான்...

Unknown 6:41:00 PM  

@மனசாட்சி வேணாங்க....நமக்கு இதுதான் பெட்டர்.....!

aalunga 7:59:00 AM  

மெய்யாலுமே கதை புரியல!!

பி.கு:
நீங்கள் அறிவுறுத்திய படி தமிழ்மணத்தில் இணைந்து விட்டேன்!

...αηαη∂.... 6:53:00 AM  

இதுக்கு தான் இப்புடி மொக்க படமா தேடி போக கூடாது... :)

ராஜி 2:26:00 AM  

உங்க விமர்சனம் சிரிக்க வைத்தது. சிபி சார் உங்க ஃப்ரெண்ட்தானே?1 அவரை கேட்டுக்கிட்டு படத்துக்கு போய் இருக்கலாம். 100 ரூபாய் மிச்சமாகும்.

Yaathoramani.blogspot.com 7:30:00 AM  

நிச்சயம் அந்தப் படம் நடக்கும் தெருவுக்குக் கூட
போகமாட்டேன்
ஏன்னா சில நாளா ஏற்கெனவே காது மக்கர் பண்ணுது
சுவாரஸ்யமான விமர்சனம்
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP