மெட்ராஸ சுத்திபார்க்கப்போறேன்...டுயாலோ...டுயாலோ...
>> Sunday, March 25, 2012
நம்ம ஆளு நாட்டாமை முன்னாடி போய் நிக்கறாரு!
அய்யா...!
என்னடா பசுபதி! எதையோ தொலைச்ச மாதிரி நிக்கிற...
ஆங்! ஒன்மில்லிங்கய்யா...சென்னை போலாமின்னு இருக்கிறேன்!
என்னது சென்னையா எதுக்கு?
ஒரு கிடார் வாங்கோனுங்க!
எடே! என்னடா பசுபதி...! நீ இங்க வீட்டுலியே ஊருப்பட்ட ஆடு இருக்க கிடா வாங்க சென்னை போகோனுமா?
அய்.......யா கிடா இல்லிங்கோ! கிதாருங்கோ! மியூசிக் பொட்டிங்க...
என்னடா பசுபதி வீட்டுல ஒரு கருப்புபொட்டிய வெச்சி இருபத்திநாலு மணி நேரமும் நோண்டிக்கிட்டு இருக்கிறது பத்தாதா....காதுல மைக்க மாட்டிக்கிட்டு திருவாத்தானாட்ட சிரிக்கிறது என்னடா நினைச்சிட்டு இருக்கிற ராசுக்கோலு!
அய்.....யா எனக் இல்லீங்! என்ற பையனுக்குங்!
அப்புடியா! என்ற பேரனுக்கா.....பெரிய எளையராசாவா வருவானாக்கும் என் பேரன்! போயிட்டு வா பசுபதி என்ற வண்டிய எடுத்துட்டு போ!
இல்லிங்கய்யா நான் ரயில்ல போயிட்டு வந்திடறனுங்க...
சென்னை வந்தார்....நம்ம ஆளு!
போனை எடுத்தார் டயலினார்...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹலோ யாரது? எதிர் முனையில
ஹஹஹஹஹ! நான் தான் ............சென்னை வந்துட்டமில்ல...உன்னைத்தான் பார்க்க வந்துட்டு இருக்கிறேன்!
அய்யொ! தலை நான் திருப்பதியில இருக்கிறேன்!
யோவ்! என்ன கதை வுடுறியா நீதான் பெரியார் பேரனாச்சே! திருப்பதியில வுனக்கு இன்னா.... வேலை?
நான் கோயிலுக்கு வரலை இங்க ஒரு வேலையா வந்தேன்!
என்ன வெளையாடுறியா ங்கொய்யால.... மலையில சரக்கு கடை லேது என்கிட்டியே டக்கால்டியா!
அட நம்புயா! திருப்பதியில ஒரு வேலை டிஸ்டர்ப் பண்ணாதியா...
நான் வித்துவான் ஆகுறது இந்த தத்துவத்துக்கு புடிக்கலை....அடுத்து ஆங் அவரேதான்...
அடுத்து போன் செய்தது...ஆ....மூ....க்கு ஆனா விவரமா போன் போட்டார் நம்ம ஆளு!
ஹலோ! நாங்க இரயில்வேயிலிருந்து பேசுகிறோம் உங்களுக்கு இரயில் கண்டெக்டர் வேலை கொடுத்திருக்கோம் உடனே வெளியூர் பஸ் ஸ்டேன்டுக்கு வாங்க...அப்பாயின்மெண்ட் ஆர்டர் இருக்கு ஒரு ஆப்பாயில் வாங்கிட்டு நேரா வாங்க வாங்கிக்கலாம்.....
யோவ்! டுபுக்கு உன் எருமைக்குரல் எனக்கு தெரியாதா? என்னையே காலாய்க்கிறியா இரு வருகிறேன்...என்றார் ஆ...மூ...
வாய்யா..வாய்யா..!
சிறிது நேரத்தில் வருகிறார் ஆ..மூ...,அவருடன் ஹோட்டல் பவனும் வருகிறார்,இவரை பார்த்ததும் ஹோட்டல் பவன் ஓடப் பார்த்தார்..! ஆ...மூ...வின் பல்க் பிடியை விட்டு தப்பிக்க முடியாமல் மாட்டிக்கிட்டார்...மூவரும் தம்பூரா வாங்க....சீசீ கிதார் வாங்க கடைக்கு போனார்கள் டொயிங்...டொயிங்....
Music Instrument விற்கிற கடைக்குள் நுளைந்தார்கள்..
வாங்க சார் என்ன வேணும்? என்ற கடைப்பையனிடம் ஆ..மூ...தம்பூரா வேணும் என்றதை கேட்ட கடைப்பையன் ஜெர்க் ஆனான்!
யோவ்! தம்புரா இல்லையா கிடார்! என்றார் நம்ம ஆள்!
அதாங்க...! சரஸ்வதி வெச்சிருக்குமே அதுதானே! இது பவன்!
மைக்கேல் ஜாக்சன் வெச்சிருப்பார்ய்யா.......
அது மைக்குதானே! என்றார் ஆ..மூ...
அய்யோ ஆண்டவா இந்த ஞானசூனியங்கள் கிட்ட என்னை மாட்டி விட்டுட்டியே!
ஆமா...! இவுரு பெரிய தியாராஜபாகவதரு....
அதற்குள் கடைப்பையன் கிதாரை கொண்டு வந்து கொடுக்கிறான்...ஆ..மூ...உற்சாகம் அடைந்து எங்கேயும்..எப்போதும்.....டுரிடுரியோரியோயோயோ...எசப்பாட்டு பாடிக்கொண்டே டுயிங்..டுயிங்..என்று கிதாரை வாசித்துப்பார்க்கிறார்! பவன் அவரை சமாதனப்படுத்தி ஒரு இசைக்கச்சேரியை தடுத்து விடுகிறார்.
அடுத்து கீபோர்டு...! காட்டுங்க என்கிறார் நம்ம ஆளு!
டென்சன் ஆன ஆ..மூ..யோவ் ஆர்மோனியப்பெட்டின்னு சொல்லுயா...என்கிறார்!
யப்பா! சாமீ! முடியலை...! எதையோ ஒன்னு நம்ம ஆளு அதைவிட டென்சன் ஆகிறார்...!
கீபோர்டு வர அதையும் வாங்கிக்கொண்டு மீண்டும் இரயில் நிலையத்தில் வழியனுப்ப வருகிறார்கள்! அங்கே இரயில் வரும்வரை சும்மா இருப்பானே என்று மூவரும் கச்சேரியை ஆரம்பிக்க....
மக்கள் பீதியுடன் இவர்களை பார்க்க...
இரயிலும் வந்து மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைக்கின்றது
கிதாரையும் கீபோர்டையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு
நம்ம ஆளு இசைக்கனவுடன் தூங்க....இரயில் சிதம்பரத்தை நோக்கி சிக்புக்சிக்புக்.................
டிஸ்கி : விரைவில் ஒரு இசைப்பதிவு வரலாம் எல்லாரும் பிளாக்க விட்டே ஓடிப்போயிருங்க...
25 comments:
போனது பஸ் வந்தது ட்ரைன்...ஹாஹா அய்யோஅய்யோ!
@விக்கியுலகம்
நாங்க எதுல போனாலும்...என்ன? சாதித்தது என்ன அதப்பாருங்க....அய்யோ...அய்யோ!
ரைட்டு...
சென்னை வந்து இவ்வளவு கூத்து நடந்திருக்கா...
தம்பி விரைவில் இசை பதிவா... செய்யுங்க...
எப்படியோ போன காரியத்துல கண்ணும் கருத்துமா இருந்து சாதிச்சி புட்டீகே.
3 படம் 3.... ம்...ஹிம்.
இப்பல்லாம் 3 ரொம்ப பேமஸ். (யோவ் நான் படத்தை சொன்னேன்)
Ie...ie...
Katha nalla irukke...
/// NAAI-NAKKS said...
Ie...ie...
Katha nalla irukke... ///
ஏனுங் கதை நல்லாயிருக்குங், ஆனா மாட்டிக்கிட்டவன் பாடு தான் திண்டாட்டங்.
அருணா பாரில் சைட் டிஷ்சை பார்சல் செய்துகொண்டு பணம் தராமல் எஸ்கேப் ஆன மர்ம நபர்..யார்? போலீஸ் வலை வீச்சோ வீச்சு..
@FOOD NELLAI கிடாய வெட்டித்தான் பதிவே போட்டிருக்கம்ஙக...
@FOOD NELLAI ஹஹஹ...! இருக்கலாம்
@FOOD NELLAI அப்ப தலைவர் இசை மேதையா.....? நம்க்கு தெரியலையே!
@FOOD NELLAI பப்ளிக்...!பப்ளிக்!
@FOOD NELLAI அவ்வளவு மட்டையாவுல...!சிதம்பரத்திலதான் இறங்குனார்...ஆனா நேரா வீட்டுக்கு போகலை!
@கவிதை வீதி... // சௌந்தர் // செய்யரம்ங்க நீங்க பத்திரமா இருந்துக்கங்க...!
@மனசாட்சி™ ஆமாமில்ல அப்பு ஒரு பதிவரும் சென்னையில இல்லை...!
@மனசாட்சி™ நாங்களும் படந்தான்னு நம்பிட்டோம்! நாங்க வெள்ளந்திங்கோ!
@FOOD NELLAI ஆபிசர் சீ..சீ...சிபி நல்ல புள்ள! ஹிஹி
@NAAI-NAKKS
ஒரு ஆடே
என்னை வெட்டு
வெட்டு என்கிறதே
அடடேடே..!ஆச்சர்யக்குறி!
@ஆரூர் மூனா செந்தில் இங்க பாருய்யா...பச்சபுள்ள பாரு பயந்து கிடக்கு!
உம்மை யாருய்யா சென்னையில இருக்க சொன்னது!
@! சிவகுமார் ! இது மட்டும் இல்ல ஒரு கோட்டரையும் சுட்டுட்டு வந்திட்டாராம் நம்ம தானைதலைவர்!
கச்சேரி கேட்கத்தயார்!
@சென்னை பித்தன்
சென்னை பித்தன் said...
கச்சேரி கேட்கத்தயார்!/////
அய்யா! வீனா ரிஸ்க் எடுக்காதிங்க....!
அத்து கெடக்கட்டும்.. நடுவுல மூணு பீசு குந்திகினுக்கீதே...அந்த்த மேட்டரு இன்னாப்பா?
ஆஹா... என்னைத்தான் கலாய்க்குறீங்கன்னு புரியாமையே படிச்சிட்டு இருந்தேன் தல...
அது எப்படி பார்க்காம, பேசாம பிசிராந்தையார் மாதிரி என்னை கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க...
Post a Comment