வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா!
>> Monday, April 30, 2012
ஒரு மழைக்காலத்தில் என் வீட்டு
முற்றத்தில் ஒதுங்கிய தாவனிக் குயிலே
உனைக் கண்ட நாள் முதல்..
சுற்றம்,சுகம் மறந்து
உன் வட்ட முகம் மட்டும்தானடி
எப்பொழுதும் என் மனதில்
முத்தமிழாய் இருப்பவளே!
ஆற்றில் நீரெடுக்க நீ
வரும் போது அச்சம்
ஏதுமின்றி என் காதலை
உரைத்தேன்...
பணம், பவுசு எல்லாம்
விட்டு விட்டு என்னோடு நீ
வரமுடியுமா? என வினவினாய்!
வறுமை பிடியில் நீயிருந்தாலும்
உன் தரம் தாழாத...குணம் கண்டு
வியந்துதான் போனேனடி!
உறவுகளா? உயிரான நீயா? என்று
இருதலைக் கொள்ளி எறும்பு போல்
நான் துடித்ததில் உறவுகளே
என்னை தின்றதடி...!
என்னுடல் மட்டுமே அங்கே
சென்றதடி!
மறுபடியும் பார்க்க மாட்டோமா....?
என ஏங்கிய எனக்கு!
உன்னைக் காணும் வாய்ப்பு வந்தது
ஓடோடி வந்தேன் கண்மணியே!
உன் வீடு தேடி விரைந்தேன்!
அடிப்பாவி மகளே!
மங்காத தங்கமே!
உனக்கு நானில்லை என அறிந்ததும்
உன்னை அழித்துக் கொண்டாயா?
ஐய்யோ! உன்னுடல் தின்ற
சாம்பலும் என்னைத் தூற்றுமே!
அழியாத நம் காதலும்...
ஆரத்தழுவிய அக்கணமும்...
மட்டுமே என் நினைவில் நிழலாக...
இப்பொழுதும் மிச்சம் இருக்கின்றதடி...!
மிச்சம் இருக்கின்றதடி...! கண்மணியே!
*********************************************************************************
சகோதரன் துஷ்யந்தன் அவர்களுடைய தொடராக வந்த "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா!" நாற்று குழுமத்தில் மின்நூலாக வெளியிடப்பட்டது கதையை படித்தவுடன் ஒரு கனத்த சோகம் மனதில் ஏற்படுகிறது, சோகத்தில் எழுதிய கிறுக்கல்தான் இது
*********************************************************************************"வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா" தொடரின் மின்நூலை தரவிறக்க
கிளிக் செய்யவும்/ இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் கிளிக் செய்யவும்.
*********************************************************************************
நிகழ்வில் கலந்து கொண்ட, கொள்ளாத அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள்!