கல..கல...கல்யாணம்!பதிவர்களின் அட்டகாசம்!
>> Thursday, April 26, 2012
ககபோ....! |
நக்கீரன் வந்து சிபிய பற்றி ஒரு லைவ் ரிப்போர்ட் சிபி போன் யாரிடமோ பேசிகிட்டு இருக்கிறார் கவனிங்க ....என்றார் "பாஸ்வேர்டு அதா ஆமா அந்த போஸ்ட்டுதான் பப்ளிஸ் பன்னிடுங்க..." என்று, சொல்லிக்கொண்டு இருந்தார், நைசாக அனைவரும் அமைதியாக சிபியை கவனித்தனர்.பதிவுலகமே தன்னை கவனிக்கிறது என்பதை அறியாத அப்பாவியாக...சிபி கிரிக்கெட் ஸ்கோர்க்கு ரசிகர்கள் துள்ளிகுதிப்பதைப் போல "ஐ சூப்பரு....! ஆ ஒரு ஓட்டு.... நாலு கமெண்ட்டு..." அவர் காட்டிய ரியாக்சனைப் பார்த்து சிரித்தனர்.
நக்கீரன் யோவ் உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? இன்னைக்கும் போஸ்ட் போடனுமா? என்று கேட்க சிபி அதை கேட்கும் மனநிலையில் இல்லை இன்னும் வேகமாக துள்ளி குதிக்க பயந்து போய்...எங்களிடமே வந்தார்.
பிரபலமும்...! பிராப்பலமும்..! |
சரி மதியம் மண்டபத்திற்கு வேண்டாம் இங்கயே சாப்பிடலாம் எனக்கூற...,இரவு தூங்கவில்லை அதுவும் சரிதான் என சாப்பாடு ஆர்டர் செய்யப்பட்டது, சுவையான உணவுகள் வர, அதுக்கு தேவையான மருந்தும் வரவழைக்கப்பட்டது, எங்களுக்கெல்லாம் சுதியேற ஆரம்பித்ததும், சிபியும் சௌந்தரும் நாங்க மண்டபத்திற்கு போகிறோம் என்று கூறி விட்டு சென்று விட்டனர்.
சம்பத், கருன். சிபி. சௌந்தர் |
இண்டர்காம் சத்தமிட நக்கீரன் ரிசிவரை எடுத்தார், ஹலோ நாங்க ஹோட்டல் நிர்வாகத்தில இருந்து பேசுகிறோம், இப்படி சத்தம் போட்டு பேசறது, டிரிங்ஸ் யூஸ் செய்யக்கூடாது, புகைபிடிக்க கூடாது, இது ஏசி ரூம் எங்க ஹோட்டல் ரூல்ஸ் இது, நீங்க ரூமை காலி பண்ணுங்க முதல்ல... என்று அதட்டலாக போன் செய்தனர், பயந்து போன அனைவரும் ரூமை சுத்தம் செய்து ஏசியை ஆப் செய்து விட்டு நல்ல பிள்ளைகள் போல் இருந்தோம்! ஐயய்யோ... ஆபிசருக்கு ஹோட்டல்காரனுக போன் போட்டு சொல்லிட்டா ஆபிசர் தவறா நினைப்பாரே என அனைவரும் புலம்ப...
கருன் நைசாக சிபி இருந்த அறைக்குச் சென்று பார்த்தார்...அங்கே சௌந்தர் மிமிகிக்ரி செய்து ஹோட்டல் மேனேஜர் மாதிரி பேசிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இருவருக்கும் ஒரு செல்ல பொதுமாத்து கவனிக்கப்பட்டது, அதோடு இருவரும் மண்டபத்திற்கு சென்று விட்டார்கள்.
பலே பிரபுவுடன் பல்க் பதிவர்கள் |
நாங்கள் நிம்மதியாக ஒரு தூக்கம் போட்டு விட்டு இரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றோம்.நாங்க ஒரு குழுமமாக அமர்ந்து அடித்த லூட்டிகளைப் பார்த்த ஒரு பெரியவர் எங்கள் அருகில் அமர்ந்து எங்களை வாட்ச் பண்ண ஆரம்பித்தார்,
மனோ போனை யாரிடமும் தரவில்லை.... அந்த ஆள் காட்டி குருவியை சிவா தீவிர தேடல்...! |
துபாய் ராஜா வந்தார் எல்லாரும் பிளாக்கர்ஸ்தானா என்றார்...ஆமாங்க என்றார்கள் கோரஸாக....எல்லாரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், மனோ தன் குடும்பத்தை அனைவருக்கும் அறிமுகப் படுத்தினார். மனோவின் பெண்ணிடம் சம்பத் "ஏம்மா உங்க அப்பா உங்களுக்காக மாங்காய் அரிந்து மிளகாய்ப் பொடியெல்லாம் போட்டுக்கொடுத்தாரா?" எனக் கேட்க "எங்க டாடியே எல்லாம் சாப்பிட்டுட்டாங்க...." என்று கூற மனோ இது என்ன இது? எனக் அனைவரும் கேட்க...அனைவரும் சிரித்து விட அந்த ஏரியாவே கலகலப்பானது,
மகிழ்சியான தருனத்தில்.... |
ஜோஸபின் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வந்திருந்தார்...அனைத்து பதிவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், தன் மொபைல் மூலம் அனைவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டார், ஒவ்வொருவரையும் தனிதனியாக விசாரித்தார்.கூடல் பாலாவை பார்க்கமுடியவில்லை... மதியம் வந்து சென்றுவிட்டாரா? தெரியவில்லை.
ஜோசபின் கதைக்கிறேன்...அவருடைய மகனுடன் |
விஜயன் படங்களாக சுட்டுக் கொண்டு இருந்தார், நான் சார் வணக்கம் என்றேன், வணக்கம் என்றார், நா யாருன்னு தெரியுமா? எதுக்கு வணக்கம் வைக்கிறீங்க என்றேன்..? கொஞ்சம் ஜெர்க் ஆனார், யார் வணக்கம் வெச்சாலும் வைக்கிறதா...? என்றேன் இந்த குசும்பு பிடிச்சவன் யாரு என கொஞ்சம் டென்சன் ஆக...! நான்தான் வீடுசுரேஸ் என்று சொல்ல ஒரு கொலைவெறி பார்வை பார்த்தார் "யோவ் உன்னைதான்யா தேடிகிட்டு இருக்கிறேன்...பேஸ்புக்குல காலாய்க்கிறது போதாதா நேரிலுமா" மனோ அருவா எங்க என்று கேட்க மீ எஸ்கேப்!
விஜயன் நான் படம் எடுக்க என்னை திருப்பி எடுத்து அலப்பரை! |
யானைகுட்டி ஞானேந்திரன் வந்திருந்தார் குடும்பத்துடன், அனைவரையும் உற்சாகமாக வரவேற்றார், தமிழ்வாசியும் சிபியும் மட்டும் பதிவுல இருக்கிற மாதிரி இருக்காங்க மற்ற எல்லாரையும் அடையாளம் கண்டபிடிக்க சிரமம் என்று அனைத்து பதிவர்களிடமும் கலகலப்பா உரையாடினார்,
ஞானக்குட்டியுடன் பூனைக்குட்டி! |
இரவு உணவு முடித்து விட்டு வந்தோம், அனைவரும் ஒரு சிறிய பரிசு பொருள் ஒன்று வாங்கி அன்பளிப்பு கொடுத்துவிட்டு வந்தோம், ஆபிசர் அனைத்து பதிவர்களையும் தன் மாப்பிள்ளையிடம் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் பதிவர்கள் சார்பாக சிறிய பரிசு...வழங்குகிறார் சிபி! |
ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்து இருந்தோம்...
KARAOKE இசைக் கச்சேரி ஆரம்பம் ஆனது, ஒரு அழகிய பெண் குத்தாட்ட பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியபடி பாட மணடபம் களை கட்டியது, எங்கேயோ பார்த்ததுக் கொண்டு இருந்த சிபியிடம் அங்க பாருங்க என்றவுடன் குஷியாகிட்டார், தன் கேமராவுல ஸ்டில் எடுக்க ஆரம்பித்தார், அவரை பார்த்த தமிழ்வாசியும் எடுக்க இருவரையும் சௌந்தர் எடுத்தார்.
KARAOKE பாடகி |
நிறைவு செய்த இசைக்கச்சேரியை சிபியின் விருப்பத்திற்காக மீண்டும் சல...சல....சலாசலா குத்து பாடல் பாடப்பட்டது...,அதில் பாடிய மாற்றுத்திறனாளி நண்பரை சிபி பாராட்டி கை கொடுத்தார் பாடகிக்கு கைகொடுத்தார் ஆனா அவிங்க கைகூப்பி வணக்கம் வைக்க....ஹே...என மக்கள் கத்தினார்கள்.
"மனோ & மனோவின் சுட்டிக் குழந்தை" |
கடைசியில் பாடிய குத்துபாட்டிற்கு ஆபிசரின் உறவினர் பையன் அருமையாக நடனம் ஆடினார். ஒரு சிறுமியும் சேர்ந்து ஆட அனைவரும் ரசித்தனர் நம்ம கவிதை வீதி இரண்டு ஸ்டெப் ஆட ஆட்டம் களை கட்டியது ஏனோ ஓடிவந்து விட்டார்...
ரத்னவேல் ஐய்யா மற்றும் துணைவியாருடன் நம் பதிவர்கள் |
நிறைவாக ஆபிசரிடம் கூறிக்கொண்டு விடைபெற்றோம், அறையை காலி செய்து விட்டு இரயில் நிலையம் வந்து வண்டியேறி படுத்துக்கொண்டு நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது ஒரு நிறைவான குடும்பவிழாவில் கலந்து கொண்டு பிரியும் மனநிலையை தந்தது, எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்காத சில நினைவுகளில் இந்த பயணம் இருக்கும் என்பதை மறுக்கமுடியாது, ஆபிசரின் அன்பான உபச்சரிப்பும், நெல்லை பதிவர்களின் சந்திப்பும் இரண்டு விழா கொண்டாட்டங்களாக முடிந்ததில் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியான நிலையைக் கொடுத்தது, என்னையும் என் நினைவுகளையும் சுமந்து கொண்டு இரயில் கொங்கு நாட்டை நோக்கி தாளத்துடன் சென்றது காலத்தைப் போலவே....
புகைப்படங்கள் : தமிழ்வாசி பிரகாஷ்
18 comments:
என்ஜாய் பண்ணீங்க போல...சூப்பருய்யா!
போங்க...ரொம்ப பொறாமையா இருக்கு...எப்படியோ...நல்லா என்ஜாய் பண்ணி வந்து இருக்கிறீர்கள்
வணக்கம் நண்பா,
சூப்பரா கலக்கியிருக்கிறீங்க.
ஆப்பிசர் வீட்டு மணமக்களுக்கு இனிய இல்லற பந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
கவிதை வீதி ஆடின ஆட்டத்தை போட்டிருந்தா நாமளும் ரசித்திருப்போமில்லே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிபி சாரின் கண்ணாடிக்கு என்னாச்சு?
Enjoyed.......
Very much...
Mukkiyamaaga...
Officer....
Anbu....
No chance...
அருமை. உங்கள் Profile படத்துக்கும் நிஜ படத்துக்கும் ஆறு வித்யாசம் என்னென்ன? சொல்லுங்க
//ஞானக்குட்டியுடன் பூனைக்குட்டி!
//
யாருபா அந்த பூனைக்குட்டி அழகா , சூப்பர் ஹீரோ போல இருக்கார் .. கண்ணு பட்டுட போகுது அவர் வீட்டுல சொல்லி சுத்தி போடா சொல்லுங்க
சி .பி தனி பந்தில உட்காந்து புல் கட்டு கட்டுனாதை எத்தன போட்டோ எடுத்திங்க எங்கே அதெல்லாம் ?
கலக்கல் மக்கா...
தமிழ்வாசி அளவுக்கு மீறி பல்க் ஆகிட்டே போறாரு. என்ன லேக்கியம் சாப்புடறாரோ...
//KARAOKE பாடகி//
பெயர் என்ன என்று பிரபாகரன் கேட்க சொன்னார்.
\\\கூடல் பாலாவை பார்க்கமுடியவில்லை... மதியம் வந்து சென்றுவிட்டாரா? தெரியவில்லை.\\\ மதியம் 1.30 லிருந்து இரவு 7.30 வரை உங்கள் அனைவரையும் பார்க்கும் ஆவலில் திருமண மண்டபத்தில் காத்திருந்தேன் ஆனால் அவ்வேளையில் அனைவரும் பரணி ஹோட்டலில் .....................???தகவல் வந்தது .அதன் பின்னர் பேருந்துக்கு நேரமாகிவிட்டதால் சென்றுவிட்டேன்...
உங்கள் எழுத்தில் இருக்கும் கலகலப்பு எனக்கும் தொத்திக்கொண்டது
:)))))))))))))))))))))
இன்னும் நான் தான் போஸ்ட் போடலை...
கலக்கலான சந்திப்பாக இருந்ததோ ..?
சந்தோசம ஒரு குடும்ப விழாவில் கலந்துகொண்டு வந்துள்ளிர்கள் மணமக்கள் மற்றும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியான தருணங்கள்.
கலக்கல் ! மறக்க முடியாத தருணங்கள் !
Post a Comment