வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா!
>> Monday, April 30, 2012
ஒரு மழைக்காலத்தில் என் வீட்டு
முற்றத்தில் ஒதுங்கிய தாவனிக் குயிலே
உனைக் கண்ட நாள் முதல்..
சுற்றம்,சுகம் மறந்து
உன் வட்ட முகம் மட்டும்தானடி
எப்பொழுதும் என் மனதில்
முத்தமிழாய் இருப்பவளே!
ஆற்றில் நீரெடுக்க நீ
வரும் போது அச்சம்
ஏதுமின்றி என் காதலை
உரைத்தேன்...
பணம், பவுசு எல்லாம்
விட்டு விட்டு என்னோடு நீ
வரமுடியுமா? என வினவினாய்!
வறுமை பிடியில் நீயிருந்தாலும்
உன் தரம் தாழாத...குணம் கண்டு
வியந்துதான் போனேனடி!
உறவுகளா? உயிரான நீயா? என்று
இருதலைக் கொள்ளி எறும்பு போல்
நான் துடித்ததில் உறவுகளே
என்னை தின்றதடி...!
என்னுடல் மட்டுமே அங்கே
சென்றதடி!
மறுபடியும் பார்க்க மாட்டோமா....?
என ஏங்கிய எனக்கு!
உன்னைக் காணும் வாய்ப்பு வந்தது
ஓடோடி வந்தேன் கண்மணியே!
உன் வீடு தேடி விரைந்தேன்!
அடிப்பாவி மகளே!
மங்காத தங்கமே!
உனக்கு நானில்லை என அறிந்ததும்
உன்னை அழித்துக் கொண்டாயா?
ஐய்யோ! உன்னுடல் தின்ற
சாம்பலும் என்னைத் தூற்றுமே!
அழியாத நம் காதலும்...
ஆரத்தழுவிய அக்கணமும்...
மட்டுமே என் நினைவில் நிழலாக...
இப்பொழுதும் மிச்சம் இருக்கின்றதடி...!
மிச்சம் இருக்கின்றதடி...! கண்மணியே!
*********************************************************************************
சகோதரன் துஷ்யந்தன் அவர்களுடைய தொடராக வந்த "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா!" நாற்று குழுமத்தில் மின்நூலாக வெளியிடப்பட்டது கதையை படித்தவுடன் ஒரு கனத்த சோகம் மனதில் ஏற்படுகிறது, சோகத்தில் எழுதிய கிறுக்கல்தான் இது
*********************************************************************************"வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா" தொடரின் மின்நூலை தரவிறக்க
கிளிக் செய்யவும்/ இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் கிளிக் செய்யவும்.
*********************************************************************************
நிகழ்வில் கலந்து கொண்ட, கொள்ளாத அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள்!
37 comments:
//ஒதுங்கிய தாவனிக் குயிலே//
அப்பறம்
@மனசாட்சி™
சார் டவுன்லோடு செய்து படிச்சு பாருங்க சார்! உங்க கருத்த சொல்லுங்க.....
படம் ம்ம் ம் ஹும்
சந்தோசமா.....முடிவுல... முடியல...காவ்ய காதல்
படிக்கிறேன்
அது என்ன மோர்?????
@மனசாட்சி™
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பாபா! கவர்ச்சிப் படம் போடனுமோ? நீ இன்னும் ஒர்த் ஆகனுன்டா வீடு!
கவிதை சூப்பர்ன்னு சொல்ல முடியாட்டாலும் (அது ஒன்னுமில்லை பொறாமை ஹி ஹி) நல்லாத்தான் இருக்கு ..!
kavithi nuch...
download panni patichuttu varen
கவிதை அருமை! தொடர்ந்து எழுதலாமே சா இராமாநுசம்
காதல் என்றாலே சாதல் தானோ...???? தினம்... தினம்.... நடக்கும் மோதலைவிட சாதலே சிறந்தது என்று நினைத்திருப்பார்களோ????
சும்மா பொய் சொல்லாதீங்க பாஸ். உண்மையிலயே உங்க சொந்த அனுபவம்தானே
@Gobinath
சும்மா பொய் சொல்லாதீங்க பாஸ். உண்மையிலயே உங்க சொந்த அனுபவம்தானே/////
நானே துஷிகிட்ட கேட்கனும் என்று நினைத்தேன் .....நீங்க கேட்டுட்டிங்க........துஷி எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்!
@Vijayan K.R
காதல் என்றாலே சாதல் தானோ...???? தினம்... தினம்.... நடக்கும் மோதலைவிட சாதலே சிறந்தது என்று நினைத்திருப்பார்களோ????/////////////
வாழ்ந்தவர்களை விட சாய்ந்தவர்களே சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள்!
@சம்பத்குமார்
சம்பத்குமார் said...
kavithi nuch...
download panni patichuttu varen
//////////////
படித்ததில் பிடித்தவையாக கண்டிப்பாக இருக்கும் சம்பத்!
@வரலாற்று சுவடுகள்
கவிதை சூப்பர்ன்னு சொல்ல முடியாட்டாலும் (அது ஒன்னுமில்லை பொறாமை ஹி ஹி) நல்லாத்தான் இருக்கு ..!///////////////////////////
கவிதைய விடுங்க சார்! கதை படிங்க....மனசுல ஒரு ஓரமா வலிக்கும்!
@புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை! தொடர்ந்து எழுதலாமே சா இராமாநுசம்
///////////////////
மிகுந்த பணி காரணமாக எழுத முடிவதில்லை! முயற்சிக்கிறேன் ஐய்யா!
கவிதை மிக அருமை தொடருங்கள் அண்ணா
சார்... இதுக்குத்தேன் சார் உன்னோட பிளாக் பக்கமே வாறதில்ல...
பின்ன என்ன சார்?
கவிதைன்னு எழுதுனா, நாலஞ்சு கில்மா படம் போடா வேணாம்?
#யோவ்... நான் படிக்கவே இல்லையா....சத்தியமா!!
@Esther sabi
கவிதை மிக அருமை தொடருங்கள் அண்ணா/////////////////
நன்றிகள் சகோதரி!
@வெளங்காதவன்™
சார்... இதுக்குத்தேன் சார் உன்னோட பிளாக் பக்கமே வாறதில்ல...
பின்ன என்ன சார்?
கவிதைன்னு எழுதுனா, நாலஞ்சு கில்மா படம் போடா வேணாம்?
#யோவ்... நான் படிக்கவே இல்லையா....சத்தியமா!!
//////////////////////////
மாடு படம் இணையத்தில் கிடைக்கவில்லை அன்பரே!
நல்ல மாடு படம் கிடைத்தவுடன் வெளியிடுகிறேன்! நண்பர் அவர்களே! நீங்கள் அதுவரை மாடு என் நினைத்து பொள்ளாச்சி சந்தையில் வாங்கிவந்த கழுதையை மேய்த்துக்கொண்டிருங்கள்.........இந்த கவிதையை அதனிடம் படித்துக்காட்டுங்கள் அப்படியே உங்களுக்கு ஒன்று கொடுக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.....உம்மாதான்! ஹேஹே!
கிறுக்கியதே அருமையாக இருக்கே .. அப்ப நல்ல மூட்ல எழுதுனா ?
நான் விளங்காதவனை வழிமொழிகிறேன்.....
ஹி...ஹி...ஹி...ஹி..
வணக்கம் சுரேஷ்!
நன்றி ;-)
வணக்கம் சுரேஷ் அண்ணா. எப்படி இருக்கீங்க.....
இன்றுதான் முதல் முதல் உங்கள் தளம் வாறேன்....
நான் இணையத்தில் செலவழிக்கும் நேரம் என்பது ரெம்ப குறைவு..... இதற்க்கு அதிக வேலைப்பளுதான் காரணம்... அதனால்தான் பதிவுலகிலும் என் நட்பு என்பது நிருபன்,மது, கந்து, மணி,காட்டான், அம்பலத்தார், ஹேமா என்று சிறு வட்டத்துடன் சுருங்கி விட்டது :( இதனால்தான் இவ்ளோ நாளும் உங்களையும் மிஸ் பண்ணிவிட்டேன் :( நேற்றே நாற்று நிகழ்வில் உங்கள் ப்ளாக் லிங்கை எடுத்து வைத்தேன்... உங்கள் ப்ளாக் படிக்கோணும் என்று ..... அதற்குள் நீங்களே என் தொடர் பற்றி பதிவு போட்டு என்னை சந்தோஷமாக வரவளைத்துவிட்டீர்கள். தேங்க்ஸ் அண்ணா..
நீங்கள் எல்லாம் பதிவுலகில் பெயர் சொல்லும் ஆக்கள்..... பதிவுலகில் ஓரத்தில் இருக்கும் என்னை எல்லாம் பாராட்டி பதிவு போடவும் ஒரு மனசு வேணும்.... ரியலி கிரேட் அண்ணா நீங்கள். தேங்க்ஸ்...
உண்மையில் நேற்று நாற்றில் நடந்த "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா" வெளியீட்டு நிகழ்வை விட அதிகமான சந்தோஷத்தை உங்களின் இந்த பதிவு எனக்கு தந்து இருக்கிறது... ரெம்ப சந்தோஷமா இருக்கு.... சந்தோஷத்தில் ரெம்ப உளறுறேன் என்று நினைக்கிறேன்...... :))) ஹீ ஹீ..... தம்பிதான சோ கண்டுக்காதீங்க அண்ணா :)))
மறுபடியும் ஒரு தேங்க்ஸ் அண்ணா
கவிதை செம கலக்கல் அண்ணா... கவிதைக்கான புகைப்படம் இன்னும் கலக்கல்... எனக்கு "சுலக்ஷிகாவை" நேரில் பார்ப்பது போலவே இருக்கு... புகைப்பட தெரிவே நீங்கள் தொடரை எவ்ளோ ரசித்து படித்து "சுலக்ஷிகா" கதாபாத்திரத்தை உள் வாங்கி இருக்கிறீர்கள் என்று காட்டிக்கொடுக்குது... தேங்க்ஸ் அண்ணா.
கவிதையில் கடைசி பந்தி மிக மிக அருமை... தொடரின் முடிவை விட உங்கள் கவிதையின் கடைசி பந்தி மிக வலிமையாக வலி உணர்த்துது அண்ணா...
தொடர்ந்து கவிதை எழுதுங்கோ அண்ணா.... அழகாய் உங்களுக்கு கவிதை வருது...
மீண்டும் சிந்திப்போம்.
என்னது என் சொந்தக்கதையா...... ??? ஆவ்வ்.......
ஓய் திஸ் கொலை வெறி அண்ணா..
நான் இன்னும் ஊருக்கே போகல்ல அண்ணா :)))) ரெம்ப சின்ன வயசுல பிரான்ஸ் வந்தேன் இன்னும் இலங்கை போகல்ல... இந்த வருஷம் தான் போகும் ஜடியாள இருக்கேன். சோ இது என் கதை இல்லைத்தானே.... ஹா ஹா....
அப்புறம் சுரேஷ் அண்ணா, உங்களுக்கு மட்டும் இந்த தொடர் பற்றி ஒரு ரகசியம் சொல்லவா....
தொடரின் நாயகியை அதான் "சுலக்ஷிகா" கதாபாத்திரத்தை என் ஆள் "ஜெஸி" யை மனதில் வைத்துத்தான் உருவாக்கினேன்.... சூழ் நிலை இருவருக்கும் ஒன்று போல் இல்லைத்தான் ஆனால் சுலக்ஷிகாவை வர்ணிக்கும் போதெல்லாம் என் கண் முன் ஜெஸிதான் நின்றாள்... இன்னொரு உண்மை தெரியுமா தொடர் எழுத தொடங்கும் போது எனக்கும் ஜெஸிக்கும் திருமணம் முற்றாக வில்லை... ஜெஸி என் மாமா பொண்ணு.... :))))))))))))
mmmmmmmmm........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வணக்கம் நண்பரே..
தம்பி துஷியின்
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மாவை
அப்படியே உணர்ச்சி குன்றாமல்
கவியாக்கியமை மனதை கவர்கிறது..
அதிலும் நாயகியின் வரைவு சாயல்..
சிக்கென்று மனதில் ஒட்டிக்கொண்டது..
@மகேந்திரன் கதையின் முகப்பில் உங்கள் கவிதை அசத்தல்!
நன்றிகள் நண்பர் பாலா...
சுரேஷ்.. கவிதை சூப்பரா இருக்கு.. இப்படியான கவிதைகளை தொடர்ந்து எழுதலாமே.. ஐ மீன் லவ் கவிதை
நல்லாயிருக்கு சுரேஷ்..
"நான் துடித்ததில்
உறவுகளே என்னைத் தின்றதடி..
உடல் மட்டும்
அங்கே சென்றதடி"
ரசித்தேன்...
கவிஞன் சொன்னா சர்தான்
கிறுக்கல்கள் நல்லா இருக்கு. அடுத்த டைம் ஒழுங்கா எழுதுங்க சகோ
kavithai good
கவிதை அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள் நண்பரே!
எதார்த்த நடையில் ஒரு காவிய காதல் ................வரிகளில் வடிகிறது உணர்வுகள் வாழ்த்துக்கள்
Post a Comment