"மை" திரைப்படம் வலிக்காமல் ஒரு சாட்டையடி...!

>> Sunday, April 22, 2012




ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்தான் இருப்பாள் என்கிற மையக்கருவை புரட்சிகரமாகவும் பின்பாதியில் விக்கிரமன் பாணியிலும் இயக்கியிருக்கும் படம். ஆனால் எடுத்துக்கொண்ட களம் புதிது வித்தியாசமானது அது அரசியல்.

அரசியல் அடிப்பொடியான சுனாமி சுப்பு என்கிற கதாநாயகன், அவருடைய தந்தையும் அடிப்பொடியாக இருந்து காணாமல் போனவர், அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பது, போஸ்டர் ஒட்டுவது என்று வரும் வருமாணத்தில் குடிப்பது கூத்தடிப்பது, பணம் இல்லாத பொழுதுகளில் அவர்கள் ஏரியாவில் இருக்கும் மெயின் இரும்புக் கதவு, மோட்டார், கேபிள் ஒயர், நாய்க்குட்டி முதல் இரவோடுஇரவாக திருடி சந்தையில் விற்பது குடிப்பது என்று பொறுப்பில்லாத ஒருவனாக திரிந்து கொண்டிருக்கும் சுப்புக்கு ஒரு பால்ய காதல், வளர்ந்து வாலிப வயதிலும் தொடர்கிறது.

தன் காதலை வெளிப்படுத்துமிடத்தில்...காதலி நீ ஊரே மெச்சும் ஒருவனாக வா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கூற சும்மா கிடந்த சங்க ஊதிவிட தான் வேலை செய்யும் கட்சியிலேயே கவுன்சிலர் சீட் கேட்கிறார். கட்சி மறுக்க சுயேட்ச்சையாக களம் இறங்குகிறார், லாஜிக்கே இல்லாமல் என்னை ஜெயிக்க வைங்க நான் மோட்டார், கதவு, நாய்குட்டி திருட மாட்டேன் என்று கூற..வெற்றி பெறுகிறார்.

மேயர் சீட்டுக்கு ஒரே ஒரு நபரின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் சுப்புவின் ஆதரவு நாடி வரும் தனக்கு சீட் கொடுக்காத கட்சிக்கு பணமெல்லாம் வேண்டாம், இரண்டரை வருசம் மேயர் பதவி எனக்கு கொடுங்க...இரண்டரை வருசம் நீங்க இருங்க என்று கன்டிசன் போடுகிறார். கட்சியும் ஒப்புக்கொள்ள வழக்கம் போல் நல்லது செய்கிறார்.

இது வரை பதவியில் இருந்த ஜெயப்பிராகாஷ் சும்மா இருப்பாரா...? வில்லன்னு ஒருத்தன் இருந்தா சில பல சதி வேலைய ஹீரோவுக்கு எதிரா செய்யனுமே! அந்த சதிவேலையை முறியடிக்கிறாரா? காதலியை கைப்பிடிக்கிறாரா என படத்தை பார்த்தது தெரிந்து கொள்ளுங்கள் அதை சொல்லிவிட்டா படம் பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது என்பதால்.இதோடு நிறுத்திக்கலாம்.

படத்தில் நிறைய சிந்திக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்...அதில் ஒன்று இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு வாக்காளருக்கு பணம் கொடுக்கிறார்கள், இருவருக்குமே ஓட்டு போடுவதாக வாக்கு கொடுக்கும் அவர் வேறு ஒருவருக்கு ஓட்டு போடுவதாக கூறுகிறார் மனைவி கணவனிடம் இது நியாயம் இல்லை என்கிறாள் "நம்ம பணத்தை கொள்ளையடிச்சு நமக்கே கொடுக்கிறாங்க.." அவங்ககிட்ட நியாயமா நடக்கலாமா? எனக் கேட்கும் வசனம் செம ஷார்ப்!

ஹிரோ விஷ்னுபிரியன், ஹீரோயின் ஸவேதாபாசு, ஜெயப்பிரகாஷ் மூவரும் அடிச்சு ஆடுற நடிப்பு விளையாட்டுல யாரையும் குறை சொல்லமுடியாது. ஹீரோ விமல் சாயல்ல இருக்கிறார் அது மைனஸா பிளஸ்சா என போகப்போகத் தெரியும். நாயகியின் அப்பா கேரக்டர் ஏனோ பதட்டத்துடன் நடிக்கிறார். இயல்பு வரவில்லை அவரை கொஞ்சம் தேற்றியிருக்கலாம். 

ஆரம்ப காட்சியொன்றில் சாலையில் திறந்து கிடக்கும் சாக்கடை மூடியை யாரும் கண்டுகொள்ளாமல் செல்லும் போது ஒரு ஊனமுற்றோர் அதை மூடிவிட்டு செல்லும் காட்சியில் இல்லாதவனுக்குதான் அதன் அருமை தெரியும் என்பதை சொல்லாமல் சொல்லும்.

மனநலம் குன்றியவரை தெருநாய்கள் கடித்து குதறுகிறது நாயகி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். அந்த மனநலம் குன்றியவர் இவர்களின் எதிரியை அழிக்கும் போது, அதிர்ச்சியில்லை.. எதிர்பார்த்ததுதான் நிறைய படத்தில் பார்த்துவிட்டோம்.

அரசியல்ல இருந்தும் தெரிஞ்சுக்காத விசயம், தேர்ந்தல்ல நான் நின்னப்ப தெரிஞ்சுகிட்டேன், ஒரு விரல்ல வைக்கிற "மை" ஒருவனுடைய வாழ்க்கையவே மாற்றியமைக்கும்ன்னு...என்று ஹீரோ சொல்லும் போது ஒருவனுடையதையல்ல ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கும் என்பதும் உண்மைதானே...?

சில மைனஸ் இருந்தாலும், பல பிளஸ்களை கொண்ட ஒரு விழிப்புணர்வு படம் என்பதை மறுக்க முடியாது. படத்தை பார்த்ததோம், ரசித்தோம் சிரித்தோம் என்று இல்லாமல் ஒரு கனம் சிந்தித்தபோது சிறுபான்மையான அரசியல்வாதிகளால் ஒரு பெருபான்மையான மாபெரும் மக்கள் சக்தியே ஏமாற்றப்படுகிறோம் என்பதை வலிக்காமல் சாட்டையடி கொடுத்த இயக்குனர் சே.ரா.கோபாலன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்! மை பார்க்கலாம்! அல்ல பார்க்கவேண்டிய படம். 


14 comments:

நாய் நக்ஸ் 7:22:00 PM  

Sari....
Sari...
Download.....
Panniduren.....
:)
:)
:)

தமிழ்வாசி பிரகாஷ் 7:23:00 PM  

ஓகே ஓகே... பார்த்துறலாம்

சி.பி.செந்தில்குமார் 8:39:00 PM  

உண்மை, ஆனா செகன்ட் ஆஃப்ல இருந்த விறுவிறுப்பு ஃபர்ஸ்ட் ஆஃப்ல இல்லை, மோசம் இல்ல பார்க்கலாம்

Unknown 8:40:00 PM  

சார் நீங்க சொன்னா சர்தான்...!

Prabu Krishna 11:35:00 PM  

பாடல்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? கேட்கும் போது அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தன.

Unknown 12:06:00 AM  

@Prabu Krishna
வரான் வரான் பூச்சாண்டி மாட்டு வண்டியில..... பாட்டையும் ஒரு சில பாடல்களை தூசி தட்டி அதே மெட்டையும் அரைச்ச மாவையே அரைச்சிருக்கார் இசையமைப்பாளர் ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி நல்லாயிருக்கு....

வெளங்காதவன்™ 1:31:00 AM  

U r talking in british english.. I'm not come this "yevaaram"..

#Yov... naan idhap padikkave illa... sollitten.

வெளங்காதவன்™ 1:31:00 AM  

U r talking in british english.. I'm not come this "yevaaram"..

#Yov... naan idhap padikkave illa... sollitten.

முத்தரசு 2:06:00 AM  

இம்புட்டு தூரம் சொல்றீக பார்த்துடுவோம்

அனுஷ்யா 3:18:00 AM  

படம் கதையெல்லாம் பத்தி சொல்றீங்க... ஹீரோஇன் ஒன்னும் சிறப்பா இல்லையே... புள்ள தேறுமா?

Unknown 3:43:00 AM  

நான் இன்னும் படம் பார்க்கவில்லை நல்ல திரைப் படங்களுக்கு உங்களை மாதிரி நல்ல விமசகர்கள் கிடைத்தாலே போதும் சுரேஸ் அண்ணா

நிரூபன் 3:47:00 AM  

வணக்கம் நண்பா,
சமூகத்திற்கு அறிவுரை சொல்லும் அருமையான படத்தினை நீண்ட நாட்களின் பின்னர் தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.
வெகு விரைவில் இப் படத்தைப் பார்க்கனும் போல இருக்கே..
விமர்சனத்தை நகர்த்திய விதம் சூப்பர்.

J.P Josephine Baba 1:25:00 PM  

பார்க்க வேண்டும் என்ற ஆற்வம் தோன்றுகின்றது!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP