Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

விஸ்வரூபம்

>> Thursday, February 7, 2013


விஸ்வரூபம் பல சர்ச்சைகளுக்கிடையே சில ஆடியோவை  'MUTE'  செய்து, கொஞ்சம் 'சீனை'க் 'CUTE' செய்து, ஒரு வழியாக அதிகச் சேதாரமில்லாமல் தமிழகத்தில் வெளியாகி தன்னுடைய ரூபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

திருப்பூர், கோவையில் தினம் ஐந்து காட்சிகளாக அரங்கம் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது,கமல் விளம்பரதாரர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை! கமல் மகிழ்ச்சியை ஒரு ஆம்பூர் பீப் பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிக் கொள்ளலாம்.

பாலக்காடு டப்பா தியேட்டரில் ரசிகர்களின் கூச்சலுக்கிடையில் பார்த்ததால் நிறைய வசனங்கள் சுத்தமாக புரியவில்லை. இன்று திருப்பூரில் பார்த்தபோதுதான் புரிந்தது இந்த படத்தில் சர்வதேச மொழிகள் அரபி, உருது, ஆங்கிலம் என்று படம் முழுவதும் வியாப்பித்துள்ளது.

பூஜாகுமாரின் 13 வருட வன வாசத்திற்கு பிறகு விஸ்வரூபத்தில் திறந்த மார்பும், அய்யங்கார் பாஷை பேசும் மூடாத வாயும் சில இடங்களில் எரிச்சலையும், எச்சிலையும் உருவாக்குகின்றது.

ஆன்டிரியா பாடகர் அனிருத் உதட்டை கவ்வி இழுத்த காட்சியை யுடுயூப்பில் பார்த்து புளங்கிதம் அடைந்த வாலிப, வயோதிக அன்பர்களே கமல் படத்தில் என்றவுடன் குதூகலமடைந்திருப்பிங்க....அப்படியே மனசை ஒரு போர்வை போட்டு மூடி வைத்துவிடுங்கள் இருவருக்கும் கைகுலுக்கும் காட்சி கூட இல்லை.

சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆப்கன் செட்கள் வயசுக்கு வந்த அத்தை பொண்ணுக்கு கட்டிய குச்சு போல ஆங்காங்கே ஏராளமான ஓட்டைகள். குகை செட்டில் சாக்கு துணி அப்பட்டமாக தெரிக்கின்றது. அதை தவிர்த்துப் பார்த்தால் படம் ஒரு பக்கா ஆங்கிலப்படம். ஒரு சில சினிமாட்டிக் காட்சிகள் மட்டுமே நீ பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமா என்று நியாபகப் படுத்துகின்றது அதை பின்னால் பார்ப்போம்.

எத்தனையோ நடிகர்கள் ஸ்திரீபாட் என்கின்ற பெண் வேடத்தில் நடித்தாலும் கமலின் நளினம் கடுகளவும் வராது. கமலின் Perfect Performance யாருக்கும் வராது நான் இந்திய அளவில் சொல்லுகின்றேன், (நீங்க ஜிம்கேரிய சொல்லுவீங்கன்னு தெரியும்) கதக் கலைஞராக நளினத்துடன் அவர் நடனம் ஆடும் போதும், சாதாரணமாக நடக்கும் போதும், அவர் பேசும் அய்யங்கார் பாஷையும் சான்சே கிடையாது. தான் பிறவிக் கலைஞன் என்பதை அடிக்கடி நிருபிக்கின்றார்.

கமல் உமரின் ஆப்கன் தீவிரவாதப்படையில் சேர்ந்ததும் ரன்வேயில் ஓடி முடித்த விமானம் ஜிவ்வென்று மேலேழும்புவதைப் போல வேகமெடுக்கின்றது. நோட்டோ படையின் தாக்குதல், பின்லேடன் வருகை, துரோகத்திற்காக தூக்கிலிடுதல். தூக்கிட்டு முடித்ததும் கால்களை தடவிப்பார்த்து திரவம் வெளியாகியு்ள்ளதா என சோதித்தல். என நுட்பமான சில காட்சிகள். நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. (தூக்கிலிடப் பட்டவர்கள் எந்த விதமான கழுத்து எழும்பு முறிவில்லாமல் மூச்சுக்குழாய் நசுங்கி இறக்கும் போதுதான் சிறிது மலம், சிறுநீர், விந்து, வெளியாகும் அப்படி திரவம் வெளியானால் மட்டுமே முறையான மரணம் என்று அர்த்தம்)

I am not child என்று ஒரு சிறுவன் ஓடுகின்றான் ஊஞ்சலில் ஆடாமல், அவனை விட மூத்தவனான அண்ணன் ஊஞ்சலில் ஆடுகின்றான். அடுத்த நாள் மனிதவெடி குண்டாக நோட்டோ படையின் வாகனத்தை சிதறடித்து மரித்துப் போகின்றான். அடிப்படைவாதிகள் குழந்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது இந்த காட்சி.

அமெரிக்க FBI இந்திய உளவாளியின் உதவியினால் நகரத்தில் நிகழக்கூடிய ஒரு குண்டு வெடிப்பை தடுக்கின்றது என்பது லாஜிக் இல்லாதது என்றாலும் சில இந்திய வழக்குகள், தமிழக காவல் துறையின் வழக்குகள் குறிப்பிட்ட நாடுகளில் காவல்துறையின் துப்பறியும் பிரிவுக்கு பாடமாக உள்ளது எனும் போது சாத்தியமே என்றும் கூடக் கூறலாம்.

நிறைய நியூக்கிளியர் பாம் பற்றி பல அறிவியல் வார்த்தைகள் சராசரி ரசிகனான எனக்கு புரியாத போதும். இன்னமும் சிகப்பு டேப் சுற்றப்பட்ட டைப்பீசை பாம் என்று காட்டினால் கெக்கபிக்கே என்று சின்ன குழந்தை கூட சிரித்து விடக் கூடிய அபாயமும் இருக்கின்றது.

ஆரம்ப காட்சியில் கை கட்டி வைத்துள்ள கமல் இறந்தவனுக்காக தொழுகின்றேன் என்று கேட்டு தொழுதபின் எடுக்கும் விஸ்வரூபம்

கடைசியில் அமெரிக்க ராணுவ வீரன் கேட்கும் கேள்விக்கு நமக்காக தொழுகின்றார் என FBI அதிகாரியே கூறுவது போன்ற சில இடங்கள் சினிமாட்டிக்காக இருப்பது என்று ஒரு சில குறைகளும் உள்ளது என்றாலும் விஸ்வரூபம் நிறைய விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படம் இஸ்லாமியர்களை சிறுமைப் படுத்துகின்றதா? என்றால் நான் இஸ்லாமியனாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும்…! நான் இஸ்லாமியன் இல்லை அதை எப்படி உணர்வது? ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

இந்த படத்தின் அடுத்த பாகம் இருக்கின்றது என்று கமல் இன்னோரு "பொக்ரானை"ப் போடுகின்றார் பார்க்கலாம். அது எப்படி வெடிக்கின்றது என்று…!

Read more...

நான் தேடும் வெளிச்சங்கள்...ஜோஸபின் பாபா/புத்தக விமர்சனம்

>> Friday, October 19, 2012



தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நகைச்சுவையூட்டக்கூடிய நிகழ்வுகளையோ….அல்லது மிகவும் மனது வேதனையுண்டாக்கியத் துயர நிகழ்வுகளையோ நம் மனது நினைவில் வைத்திருக்கும்! பெரும்பாலான எழுத்தாளர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் கற்பனைக் கூட்டி ஒரு சிறுகதையான வடிவோ, சுயசொறிதலாக கலந்து எழுதுவார்கள் இதுதான் எழுத்துலகின் எழுதப்படாத மரபு.


ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது. அதில் என் மனம் கவர்ந்தச் சில விடயங்களைப் பார்க்கலாம்….!

ஒற்றை மரத்தில் நாம் சிறு வயதில் தன் பெற்றோரை விட்டு வேறொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும் போது. அங்கு நமக்கு நடக்கும் அவமாணங்கள் ஆறாத வடுக்களாய் மறையும் வரை மனதின் மூலையில் துருத்திக் கொண்டிருக்கும்.நம் பெற்றோர் மீது இருக்கும் வன்மத்தைக் குழந்தைகளிடம் காட்டுவது வேதனையான விசயம், இன்று பல குடும்பங்களில் கணவன் மீதுள்ள வன்மத்தை மனைவி குழந்தைகளிடமும், மனைவி மீதுள்ள வன்மத்தைத் தன் குழந்தைகளிடமும் மாறி..மாறி…குற்றம் செய்யாக் குற்றவாளிகளாய்ப் பல குழந்தைகள் சிலுவையில் அறையப்படுகின்றன. காரணமில்லாமல் தன் மீது காட்டும் கோபமும் சுடுச் சொற்களும் பிஞ்சு மனதில் எத்தகைய வேதனையை உண்டாக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை என்பதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம் என்பது போல “மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்ததை விட……அம்மா அடிச்சது முதன் முறையாக வலித்தது…” என்கின்ற வரிகளில் சொல்லலாம். 

பால்யக் காலத்தில் பிடித்த ஆசிரியர், உறவினர், தோழி, தோழன் ஒரு சிலர் மனதில் இருப்பார்கள்….அவர்களை ஒரு சிலரைத் தவிர யாரும் தேடிப் போய்ப் சந்தித்துவிட்டு வருவதில்லை அதுவும் பெண்கள் தன் வகுப்புத் தோழனைச் சந்திப்பது மிக அரிது! என் உயிர் தோழனில் தன் கணவனுடன் சென்று அவரின் கடைக்குச் சென்று சந்தித்துப் பால்யக் கதைகளை பேசி வர எத்தனை பேரால் இயலும்…. 

சூத்திரம் போன சுப்பனில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றச் சுப்பனின் பிறப்புறுப்பை அறுத்தெரிகின்றாள் ஓர் அப்பாவிப் பெண். அந்த சுப்பன் மருத்துவ சிகிச்சை முடிந்துத் தேயிலைத் தோட்டதிற்கு பணிக்கு வருகிறான் ,அனைவரிடமும் அந்த இடத்தில் உயிர் இல்லை என்பதை கண்டுபிடிக்க மருத்துவ உலகிற்கு உதவியாக இருந்தேன் என கூறிக் கொண்டிருந்தானாம் வேடிக்கை மனிதர்கள். 

பெண்ணிற்கு மட்டும் பிறந்த வீடு என்பது விருந்துக்கு வந்த விருந்தாளி வீடு போல்தான் என்று வீட்டில் அங்கலாய்க்கின்றார்! அதே போல் சொந்த வீட்டில் வாடகை வீட்டில் படும் துன்பங்களே சொந்த வீடு கட்டத் தூண்டும் காரணியாகிப் போகின்றது என்று கூறுகின்றார். அவர் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வர்ணம் பூசப் பணப் பற்றாக்குறையேற்பட பிறந்த வீட்டுக்கு பேருந்தில் பயணிக்கின்றார், நாமும் கூடவே பயணிக்கின்றோம் ஏனெனில் நம்மில் பலர் சொந்த வீட்டின் ஆசையில்தான் இருக்கின்றோம். 

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள் பூச்செடி விற்பனை வீட்டில் தொடங்க ஒரு வழியாக அதை விற்கப் பட்டச் சிரமங்களை நுணுக்கமாக சொல்லியிருக்கின்றார். பச்சை தாழ்வாரம் என்கின்ற தன் பூந்தோட்டப் பெயர்ப் பலகையை ரிக்கி நாயின் வீட்டுக்குக் குட்டிக் கூரையாக்கிவிட்டு மந்திரப் பெட்டியில் பொழுதைப் போக்கிக் கொண்டு இன்று புத்தகம் போடுமளவுக்கு வந்து விட்டது. 

சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறதில் சேலத்துக் குடும்பத்தின் கத்திப் பேசும் பழக்கம் மொத்தத் தமிழர்களையே கத்திப் பேசுகின்றவர்கள் என்கின்ற எண்ணத்தை மலையாளிகளிடம் உண்டாக்கிவிட்டது, உண்மைதான் தமிழர்கள் கொஞ்சம் கத்திதான் பேசுகின்றார்கள்…..! அதேபோல் மூக்குடைந்த கல் சிலையை சிமண்டு வைத்து மூக்கு வைத்து ஒரு கலையை கற்பழிக்கும் கொலையை பல கோவில்களில் பார்க்கலாம்! இங்கும் அவ்வாறே...!அரண்மனையை நாமும் சுற்றிப் பார்க்கின்றோம்.

என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம் ஓர் உயரதிகாரிப் பெண் "தான்" என்கின்ற அகந்தையில் எப்படி அழிந்துப் போகின்றாள் என விவரிக்கின்றது…எனக்குத் தெரிந்து வட்டாச்சியராக இருந்த ஒரு பெண் இப்படித்தான் இருந்தார். அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் முகத்தில் அடித்தமாதிரிப் பேசியும், குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் ,உறவாடாமல் தனக்கு என்று வட்டம் போட்டு வாழ்ந்த அவரின் கணவருக்கு திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட போது யாரும் உதவிக்கு இல்லாமல் திண்டாடித் தன் கணவரை இழந்தார். அந்த சம்பவம்தான் நினைவில் வந்தது. 

நினைவுகளில் சக்தி ஒரு பழைய சைக்கிள் வாங்க வந்த ஏழைப் பெண்ணைப் பற்றியது, கடைசியில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் அது தெரிந்து தந்தையே மகளை கொன்று விட்டதாகவும் நேரடியாக கூறாமல் பூடகமாக கூறியிருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மனதைப் பாதித்தவள் சக்தி என்றே விளங்குகின்றது. 

நான் ஒரு சில கதைகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கின்றேன் இதைப் போல் ஆங்காங்கே மனதை மெல்லிய மயிலிறகால் வருடியும், கீரியும் நம்மை அவர் உலகத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகின்றார் கன்னி முயற்சி என்றாலும் மிகச் சிறந்த ஒரு தொகுப்பு எனவே கூறலாம் அதைப் படைத்த அவருக்கு வாழ்த்தையும் பாராட்டையும் கூறுகின்றேன்.


புத்தக விலை 75 ரூபாய். 
J.P Josephine Mary, 
Indian Bank, M.S University Branch, 
A/C No : 854576367, IFSC code : IDIB000A107 என்ற விலாசத்தில் D/D எடுத்தும் அல்லது அவர் முகவரியில் M/O அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.

J.P Josephine Baba,
18, Vijayakrishna Nagar,
N.G.O A Colony,
Tirunelveli.
Pin Code 627007 


Read more...

பில்லா அஜித் மட்டும் விளையாடும் ஒரு வீடியோ கேம்!

>> Monday, July 16, 2012


ஒரு இலங்கை அகதிகள் முகாமிலிருந்து ஒரு இந்திய டானாக உருவாகி இண்டர்நேசனல் டானாக மாறும் கதை. சாதாரணமாக ஹோட்டல் தொழில் நடத்திக் கொண்டே கள்ளக்கடத்தல், வைரக்கடத்தலில் ஈடுபடும் இளவரசுவின் கேரக்டரை செதுக்கிய இயக்குனர், பின்னர் வரும் அப்பாசி, டிவிட்ரி கேரக்டர்களை வழக்கமான வில்லன்கள், போல் இல்லாமல் நேர்த்தியாக செதுக்கியிருந்தால் ஒரு ஹாலிவுட் பட அளவில் பேசப்படும் சிறந்த படமாக பில்லா இருந்திருக்கும்.

Read more...

சகுனி-திரை விமர்சனம்

>> Friday, June 22, 2012


சங்கர்தயாள் இயக்கத்தில் கார்த்தி, பிரணிதா, சந்தானம், மனோபாலா, சித்ராலட்சுமணன், நாசர், ரோஜா, கிரன், பிரகாஸ்ராஜ், கோட்டாசீனிவாசராவ், ஒரு சில காட்சிகளில் அனுஸ்கா அன்ட் ஆன்ட்ரியா போன்ற பல பழம் தின்று கொட்டை, புளுக்கை போட்டவர்களை வைத்து அரசியல், மற்றும் சாமியார்களை வைத்து ஆடிய சதுரங்க ஆட்டம்தான் சகுனி! போங்கு ஆட்டமில்லை சுவாரஸ்யமா இருக்கு.

Read more...

கலகலப்பு-சக்கரை பொங்கலுக்கு வடைகறி!

>> Sunday, May 13, 2012


அஞ்சலி குட்டி நடிச்ச படம் மட்டுமல்ல! கண்ணா! இரண்டு லட்டு திங்க ஆசையா? என சுந்தர்.சி களவாணி ஓவியாவையும் களமிறக்கி "சின்ன தலைவி அன்ட் பெரிய தலைவி" என அடடடடா! ஒரு பாடலில் காட்டு காட்டுவென காட்ட வைத்திருக்கிறார் தமிழ் மக்கள் மேன்மக்கள் மேன்மக்களே! சுந்தர்.சி நீவிர் வாழ்க....! குஸ்பு அக்கா நீவிரும் வாழ்க...!


Read more...

வழக்கு எண் 18/9 திரைப்படம் விமர்சனம்!

>> Friday, May 4, 2012



காதல் திரைப்படத்தை, மற்றும் பல படங்களை இயக்கிய பாலாஜிசக்திவேல் இயக்கிய மற்றுமொரு படைப்பு வழக்கு எண் 18/9.பெரும்பாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இயக்கும் இயக்குனர் இதிலும் அதே முறையை பின்பற்றியுள்ளார்.

Read more...

"மை" திரைப்படம் வலிக்காமல் ஒரு சாட்டையடி...!

>> Sunday, April 22, 2012



Read more...

ஒரு கல் ஒரு கண்ணாடி....முன்னாடி பின்னாடி

>> Monday, April 16, 2012


Read more...

மாசி சீட்டு நுனியில ஊசி!

>> Friday, March 16, 2012

நம்ம அண்ணன் கோவை மணி ரொம்ம நாளைக்குப் அப்புறம் தயாரிச்சு, கிச்சாங்கற டைரக்டர் இயக்கிய படம் மாசி! ஆக்சன் கிங் ரசிகர்களுக்கும் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு விருந்து! விருந்து ஓக்கே வேட்டு சத்தம்தான் கொஞ்சம் ஓவர். தெலுங்கு வில்லன்ஸ், வில்லிஸ் ஆல் பேரும் படத்தில ஆஜர் !படத்தோட கதை ரொம்ம சிம்பிள் கொஞ்சூண்டு வேட்டையாடு விளையாடு, கொஞ்சூண்டு காக்க...காக்க.....என மிக்ஸ் செய்த காக்கா கக்கா போன கதை...



நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் (ஆரம்பிச்சிட்டாங்க) நம்ம என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் அர்ஜுன், அவருடைய ஜோடி (மனைவி) ஆன்ட்டிய?! சுட்டு கொல்றாங்க.....கோவம் வந்த  அர்ஜுன், ரவுடிகளை சும்மா இடைவேளை வரைக்கும் குருவி சுடற மாதிரி பொட்டு..பொட்டு என்று ரவுடிகளை சுட்டுகிட்டே இருக்காருங்க....அப்பாலிக்கா மும்பையில் இருந்து கொண்டு இங்கே சென்னையில் ரவுடியிசம் செய்யும் நாகாவாக கஜினி வில்லன் ஒரு கேங், சென்னை காசி மேட்டுல இருந்து கொண்டு ரவுடியிசம் செய்யும் பொன்னம்பலம், அவருக்கு உதவும் ஹோம் மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ், என் இரண்டு குரூப் இவிங்க சண்டை நடக்கின்ற போதே குறுக்க அர்ஜுன் புகுந்து துவம்சம் பண்ணுகிறார் நம்மளையும் சேர்த்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா........முடியலை!

இந்த ஆன்ட்டிதான் முதல் ஜோடி....

எதிர்பாராத சதியில  அர்ஜுன், கைது செய்யப்படுகிறார், நாகா அவரை விடுதலை செய்ய உதவுகிறார், அம்மாம் நேர்மையான போலீஸ் டக்கென்று ரவுடிகளுக்கு வேலை செய்கிறார், பொன்னம்பலம் குரூப்பை அடியோடு காலி செய்கிறார், பொன்னம்பலத்தை மட்டும் உயிரோட விடுகிறார், பொன்னம்பலத்தை கொல்ல வரும் நாகா தம்பி பொன்னம்பலத்தை கொன்றவுடன், நம்ம அர்ஜுன் அவனையும், ஹோம் மினிஸ்டரையும் கொல்லறார். ஆத்திரம் அடைந்த நாகா சென்னை வருகிறார் லபக்கென்று தமிழ்நாடு போலீஸ் புடிச்சிக்குது.....ஏன் தமிழ்நாடு போலீஸ் மும்பை போய் புடிக்க முடியாதா? அப்படியெல்லாம் கேட்கப்படாது!

அப்புறம்  அர்ஜுனை துப்பாக்கியில சுட்டுவிடுகிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்  அர்ஜுன் அவரோட  ஜுனியர் உதவியால... நாகா கதைய முடிக்கிறார் கதை புரிஞ்சுதா....? புரியலையினா விடுங்க! எனக்கும் புரியலை!

இரண்டாவதா வர்ற ஆன்ட்டி!
கோவாலு அழுத இடங்கள்

முதல் ஜோடி ஒரு ஆன்ட்டி கில்மாவா வருது ஒரு ரீலில் கொன்னுடுறாங்க நான் கூட கதைநாயகின்னு நெனைச்சு தேம்பி..தேம்பி....அழுதேன்

இரண்டாவதா ஒரு ஜோடி(ஜிகிடி அல்ல) பாப்பாவும் ஆன்ட்டிதான் அப்ப அப்ப வருது. ஒரு டூயட் வேற....!அந்த பாட்டு போட்டப்ப தியேட்டரில் நான் மட்டும் தான் இருந்தேன் (திருப்பூர்ல தியேட்டர் உள்ள சிகரட் விற்பனை கிடையாது) அதை நெனைச்சு குமுறி குமுறி அழுதேன்...

வீட்டுக்கு வந்தும் அழுதேன்...ஏன் தெரியுமா டொமார்..டொமார்....துப்பாக்கி சத்தம் படம் முழுவதும் கேட்டுகிட்டுடே இருந்தா காது வலிக்காதா? காதுக்குள்ள கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்

நல்லெண்ணைய  பூண்டு போட்டு நல்லா காய்ச்சி கொஞ்சம் காதுக்குள்ள விட்டுட்டுப் படுத்தேன் இப்ப தேவலாம்....படம் பார்த்திட்டு வந்ததும் நக்கீரன் போன் போட்டாரு எங்க போனே என்று கேட்டார் "மாசி" படத்திக்கு போனேன் என்று சொன்னேன் என்னமோ சொன்னாரு என்னனு சத்தியமா கேட்கலைங்க.....

Read more...

அண்டர்வோல்டு 4 திரை விமர்சனம்

>> Friday, January 20, 2012



இந்திய ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படங்களில் Underworld தனித்த இடம் பிடிக்கும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? என்றால் இல்லை! என்றே சொல்வீர்கள் என்று நம்புகிறேன்,மனித இனத்திக்கும் டிராகுலா இனத்திக்கும் பிறந்த ஒரு புதிய இனம் லைகன்ஸ் (ஓநாய்) முந்தைய படத்தில் லைகன்ஸ் எளிதில் வேட்டையாடக்கூடிய வகையில் வேட்டையர்களுக்கு இருந்தது பாகம் நான்கில் அ

Read more...

நண்பனாயாணம்…

>> Thursday, January 12, 2012




இன்றைக்கு காலையில நம்ம ஆபிஸ் பையன் காலையிலையே பொங்கல் லீவுங்கறதால வேலையெல்லாம் முடிச்சிட்டு பிரியா இருப்பதால் பயபுள்ள நண்பன் படம் பார்த்துட்டு வந்தது, வந்ததில் இருந்து இருக்கானா இடுப்பு இருக்கானா பாட்டை முணுமுணுத்துட்டே இருந்தான், நல்லா பீப்பாய் மாதிரி இருக்கிற பெண் கஸ்டமர் வந்தது பயபுள்ள இந்த பாட்டையா பாடனும் குமட்டுல ஒன்னு விட்டதிலிருந்து அஸ்கு புஸ்க்குன்ட்டு இருக்கு..பாட்டு இல்லை வலியில கத்துது பயபுள்ள!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP