கலகலப்பு-சக்கரை பொங்கலுக்கு வடைகறி!

>> Sunday, May 13, 2012


அஞ்சலி குட்டி நடிச்ச படம் மட்டுமல்ல! கண்ணா! இரண்டு லட்டு திங்க ஆசையா? என சுந்தர்.சி களவாணி ஓவியாவையும் களமிறக்கி "சின்ன தலைவி அன்ட் பெரிய தலைவி" என அடடடடா! ஒரு பாடலில் காட்டு காட்டுவென காட்ட வைத்திருக்கிறார் தமிழ் மக்கள் மேன்மக்கள் மேன்மக்களே! சுந்தர்.சி நீவிர் வாழ்க....! குஸ்பு அக்கா நீவிரும் வாழ்க...!




படத்தின் கதை ஜட்டாக் ஸ்கூட்டரில் இன்னும் வலம்வரும் இளைஞர் விமல், பாராம்பபரியமான தன் ஹோட்டலை நடத்த முடியாமல் தினறுகிறார், செய்யும் காரியம் ஒவ்வொன்றும் ஏழரை.... எட்டரையாகிவிடுகிறது... சோதனை செய்யவரும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலியை அவ்வளவு ரணகளத்திலும் கிளுகிளுப்பாக லவ்வுகிறார் விமல்.

எம்.எல்.ஏ வீட்டில் லவட்டி மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு போன சிவா பரோலில் வருகிறார். கும்பகோணம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போடவேண்டும் என்பதால் அவருக்கும் அந்த ஹோட்டலில் பங்கு இருப்பதால் அங்கே தங்குகிறார்...சமையல்க்காரர் இராகவன் பேத்தியான ஓவியாவை லவ்வுகிறார்,ஜாலியா போயிட்டு இருக்கிற கதையில வலிய திணிக்கப்பட்ட வில்லன் பஞ்சு நகைக்கடை அதிபர், கோல்மால் வேலையெல்லாம் செய்து இருபது வைரத்தை லாஜிக்கே இல்லாமல் செல்போனில் வைத்து டொயிங்...டொயிங்....என திறந்து திறந்து காட்டுகிறார்...இருபது கோடி பெறுமானமுள்ள வைரத்தை ஈசியா எடுக்கிற மாதிரியா வைப்பாங்க...அந்த அசடு தன் மச்சான் அசடுகிட்ட கொடுத்து கும்பகோணத்தில லாட்ஜ்ல தங்க வைக்கிறார், கில்மா ஆசையில் ஐட்டத்தை கூட்டிவர அது செல்போனை லவட்டிகிட்டு போகுது...அது புரோக்கர்கிட்ட போகுது..புரோக்கர்கிட்ட இருந்து போலீஸ் கான்ஸ்டபிளிடம் வருது அவரிடம் இருந்து சிவாகிட்ட வருது,அதை ஆளுக்கு பத்து வைரமாக விமலும் சிவாவும் பிரித்து கொள்கிறார்கள்.


வில்லன் கும்பல் செல்போனைத் தேடிகிட்டு கும்பகோணம் வர...அஞ்சலிக்கு கல்யாணம் என்று தெரிய, கல்யாணத்தை நிறுத்த கிராமத்திக்கு போகிறார் விமல். அங்கே சந்தானம் மனோபாலா சேசிங் காமடி விலா நோக சிரிக்க வைச்சிட்டு திரும்ப கும்பகோணம் வருகிறார். சீட்டாட்ட பிரியரான சிவா சீட்டாட்டத்தில் ஹோட்டலையே அடகுவைக்க இன்ஸ்பெக்டர் ஜான் பத்து லட்சம் கேட்க தன பங்கு வைரத்தை கொடுத்து பத்திரத்தை மீட்கிறார். இனி வைரத்திக்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள கடைசி கிளைமாக்ஸ் வரை காமடியிலேயே படம் நகர்கிறது. சுந்தர்.சியின் அசட்டுத்தனமான கேரக்டர்கள் மூலம் சிரிக்க வைக்கும் பாணியில் முடிந்த அளவு சில இடங்களில் வயிறு வலிக்கும் அளவு நகைச்சுவை காட்சிகள் இருப்பதால் படம் போரடிக்கவில்லை...பார்க்கலாம்.


இளவரசு வட்டிக்கு பணம் கொடுப்பவராக வந்து இன்ஸ்பெக்டர் ஜானிடம் சிவா மாட்டிவிடும் காட்சியும் மாறுவேடத்தில் அலைவதும், வில்லன் கோஸ்டி முகத்தில் குத்து விட கழுத்து திரும்பியபடி நடிக்கும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். வில்லன் பஞ்சு வைரம் உள்ள செல்போனை பேக் பாக்கட்டில் வைத்துகொள்ள நாய் மொத்தமாக கவ்விவிட அந்த களோபரத்தில் சிவா அன்ட் விமல் தப்பிக்க இடுப்பு சுளுக்கிய விமல் இடுப்பை பிடித்துக் கொண்டு ஓடும் காட்சி செம ரகளை..!

சிவா பஞ்ச் டயலாக் பேசும் விதம் தமிழ்படத்தில் பார்த்து சலித்துவிட்டதால் எடுபடவில்லை, தனக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்து இருக்கிறார் ஓவியா, அஞ்சலி நடிப்புக்கெல்லாம் இங்க வேலையில்லை சும்மா வந்து போகிறார்கள், மனோபாலா ஓரிரு காட்சிகளில் தலை காட்டுகிறார், சந்தானம் இடைவேளைக்கு பிறகு வருகிறார் வழக்கமான வடிவேல் கோவிலில் அரைத்த மாவை சந்தானம் அரைத்துள்ளார்...சுமாரா இருக்கு, இன்ஸ்பெக்டராக வரும் ஜான் வழக்கம் போல இல்லாமல் காமடியாக முயற்சித்துள்ளார் ஓகே...ஓகே...


பாடல்கள் ஒரு பாடல் குத்து பாடல் ஒன்றும் ராக் பாடலும் ரசிக்கலாம். நீண்ட நாள் ரசனைக்கு ஏற்ற பாடலாக நம் கையிருப்பில் இருக்க வாய்ப்பில்லை சுமார்தான். கலகலப்பு @ மசாலா கபே சக்கரை பொங்கலுக்கு வடைகறி!காம்பினேசன்...

37 comments:

முத்தரசு 8:12:00 PM  

முதல் & கடைசி படத்துக்கு சுபெர்ம்மா

முத்தரசு 8:13:00 PM  

மொத நாலு வரியிலேயே உசுபேத்தி புட்டீரே ம் ம் முடியல

முத்தரசு 8:15:00 PM  

//அஞ்சலி நடிப்புக்கெல்லாம் இங்க வேலையில்லை சும்மா வந்து போகிறார்கள்,//

வன்மையாக கண்டிக்கிறோம்., அது தான்யா நடிப்பு

முத்தரசு 8:17:00 PM  

இப்ப என்ன சொல்றீக - பார்க்கலாமா வேணாமா

Unknown 8:19:00 PM  

யோவ்....கதைய புட்டு புட்டு வச்சிட்ட போல ஹெஹெ...!

MANO நாஞ்சில் மனோ 8:24:00 PM  

ஹி ஹி போட்டோக்கள் எல்லாம் அருமை...!!!

Unknown 8:26:00 PM  

@மனசாட்சி™
முதல் & கடைசி படத்துக்கு சுபெர்ம்மா
///////////////////////
தேங்யூ...!மச்சி!

Unknown 8:27:00 PM  

@மனசாட்சி™
மொத நாலு வரியிலேயே உசுபேத்தி புட்டீரே ம் ம் முடியல
////////////////////////////////
அய்யய்ய்யோ......!அப்பூடியா?

Unknown 8:28:00 PM  

@மனசாட்சி™
//அஞ்சலி நடிப்புக்கெல்லாம் இங்க வேலையில்லை சும்மா வந்து போகிறார்கள்,//

வன்மையாக கண்டிக்கிறோம்., அது தான்யா நடிப்பு
/////////////////
திறமைய காட்டுறோம் காட்டுறோம் அப்படிங்கறாங்களே அது இதுதானோ!?

Unknown 8:29:00 PM  

@மனசாட்சி™
இப்ப என்ன சொல்றீக - பார்க்கலாமா வேணாமா
/////////////////////////////
நல்லா சிரிக்கிலாம் மச்சி!

Unknown 8:30:00 PM  

@விக்கியுலகம்
யோவ்....கதைய புட்டு புட்டு வச்சிட்ட போல ஹெஹெ...!
///////////////////////////
கதைய நான் கண்டு பிடிச்சதே பெரிசு! மாம்!

Unknown 8:31:00 PM  

@MANO நாஞ்சில் மனோ
ஹி ஹி போட்டோக்கள் எல்லாம் அருமை...!!!
/////////////////////
நம்ம சங்கத்துக்கு ஒரு புது உறுப்பினர..சேர்த்துங்கங்கப்பா.....

முத்தரசு 8:37:00 PM  

//@மனசாட்சி™
இப்ப என்ன சொல்றீக - பார்க்கலாமா வேணாமா
/////////////////////////////
நல்லா சிரிக்கிலாம் மச்சி!//

பார்க்கலாம்னு மொத நாலு வரியில சொன்னீயலே....இப்ப இப்படி சொல்றீகளே.

Unknown 9:01:00 PM  

அஞ்சலி மிக சிறந்த நடிகை என்பது தமிழ் நாட்டிற்கே தெரியும். ஓவியாவும் சிறந்த நடிகைதான் ஆனாலும் அதற்கேற்ப படிவாய்ப்புகள் இன்னும் வரவில்லை மசாலா கபே ஒரு பொழுது போக்கிற்காக பார்க்கலாம்...

பொ.முருகன் 9:16:00 PM  

சந்தானம் சம்பந்தப்பட்ட காமெடி சூப்பர், அதிலும் அம்மாவ இப்படிதான் புடிச்சி தூக்குவீங்களா என்ற டயலாக்கில்,தியேட்டர் அதிர்ந்து அடங்க வெகுநேரம் ஆனது.

J.P Josephine Baba 9:21:00 PM  

அஞ்சலி போன்ற திறைமையான நடிகைகளுக்கு ஏற்ற உடை அலங்காரமா?

தமிழ்வாசி பிரகாஷ் 10:01:00 PM  

"சின்ன தலைவி அன்ட் பெரிய தலைவி" என அடடடடா! ஒரு பாடலில் காட்டு காட்டுவென காட்ட வைத்திருக்கிறார்/////

மக்கா, ரெண்டு தலைவியும் காட்டராங்களே......

மொத பாராவில காட்டறத பத்தி போட்டு நீங்க அத பாக்க தான் படத்துக்கு போனிங்கன்னு தெரிஞ்சு போச்சு....

தமிழ்வாசி பிரகாஷ் 10:02:00 PM  

சுந்தர்.சி நீவிர் வாழ்க....! குஸ்பு அக்கா நீவிரும் வாழ்க...!////////////

இங்க ஏன்யா குஷ்பு ஆண்ட்டி (அக்கா) வந்தாங்க?

அக்கா மேல இம்புட்டு பாசமா?

பாலா 10:02:00 PM  

இந்த படத்துக்கு பதிவுலகில் விமர்சனம் அவ்வளவாக எழுதவில்லை என்று நினைக்கிறேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த படம் நல்ல என்டர்டெயினர்தான். ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று எனக்கு தோன்றியது.

தமிழ்வாசி பிரகாஷ் 10:03:00 PM  

செல்போனில் வைத்து டொயிங்...டொயிங்....என திறந்து திறந்து காட்டுகிறார்..//////


செல்போனும் காட்டுதா?

தமிழ்வாசி பிரகாஷ் 10:05:00 PM  

ஓவியா, அஞ்சலி நடிப்புக்கெல்லாம் இங்க வேலையில்லை சும்மா வந்து போகிறார்கள்,////

என்னயா, மொத பாராவில காட்டு காட்டுனாங்கன்னு சொன்னிங்க, இப்போ சும்மா வந்து போறாங்கன்னு???????

தமிழ்வாசி பிரகாஷ் 10:06:00 PM  

கலகலப்பு @ மசாலா கபே சக்கரை பொங்கலுக்கு வடைகறி!காம்பினேசன்...////

ரைட்டு ரைட்டு.....

நாய் நக்ஸ் 10:31:00 PM  

ஹலோ...நாங்களும் டவுன் லோடு ..
பண்ணிட்டோம்.....

பார்துப்புட்டு ...விமர்சனம் போட்டாலும் போடுவோம்.....
ஆக்காங்.....

விச்சு 10:33:00 PM  

போட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம். முதல் நாலுவரியை அழகா ரசிச்சு எழுதியிருக்கீங்க.

MaduraiGovindaraj 11:34:00 PM  

முயற்சி திருவினையாக்கும்
ம்ம் நடத்துங்க அப்பு

MARI The Great 12:54:00 AM  

தெளிவான படத்தை போட்டுருந்தா கொஞ்சம் ஜொள்ளியிருக்கலாம் .., ஹி ஹி ஹி ..!

இருந்தாலும் கலக்கல் தான் தல ..!

அனுஷ்யா 2:09:00 AM  

அண்ணியோட அப்பா: சுரேஸு... அங்க என்னயா அஞ்சலி கிஞ்சலி சத்தம்...?

நம்ம அண்ணன்: பேசிகிட்டு இருக்கேன் மாமா....

ராஜி 2:55:00 AM  

அஞ்சலி குட்டி நடிச்ச படம் மட்டுமல்ல
>>
என்னது அஞ்சலி, குட்டியா?
உங்க வீட்டம்மாவுக்கு போன் போட்டு இந்த பதிவை படிக்க சொல்றேன்.

மாலதி 4:16:00 AM  

சிறந்த ஆக்கம் மனம் நிறைந்த பாராட்டுகள்

காட்டான் 5:15:00 AM  

என்னையா விமர்சனம் என்ற பேரில படங்கள போட்டு மனச அலை பாய வைக்கிற தம்பி இந்த பாவம் உன்னை சும்மா விடாது சொல்லிப்புட்டன். ;-)

”தளிர் சுரேஷ்” 6:18:00 AM  

சுந்தர் சி படம் என்றாலே லாஜிக் இருக்காது! காமெடி மாஜிக் தானே இருக்கும்!

Gobinath 6:54:00 AM  

அப்போ படம் பாக்கலாம்ன்னு சொல்றீங்க. பாத்திடுவோம்

ம.தி.சுதா 6:55:00 AM  

////ஓவியா, அஞ்சலி நடிப்புக்கெல்லாம் இங்க வேலையில்லை சும்மா வந்து போகிறார்கள்,////////

அதை போட்டிருக்கும் படங்களே சொல்கிறதே... ச’கோ

aalunga 7:12:00 AM  

எங்க... படம் பார்க்கவே நேரம் இல்ல (கம்பெனிக்கு ஆள் புடிக்கிறதுலேயே ஓடிறுது!!)

படம் பார்த்துட்டு சொல்றேன்!

Manimaran 6:33:00 AM  

விமர்சனம் செமையா இருக்கு சுரேஷ்...

Athisaya 6:24:00 AM  

ஆகா...'லவட்டி' 'லவ்வுற' என்னமா கண்டுபிடிப்பு???வாழ்க

நிரூபன் 10:15:00 PM  

வணக்கம் நண்பா...
விமர்சனப் பாணி சூப்பர்.

அஞ்சலி, ஓவியா நடனத்திற்காக படத்தை பார்க்கனும் போல இருக்கே...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP