வழக்கு எண் 18/9 திரைப்படம் விமர்சனம்!
>> Friday, May 4, 2012
காதல் திரைப்படத்தை, மற்றும் பல படங்களை இயக்கிய பாலாஜிசக்திவேல் இயக்கிய மற்றுமொரு படைப்பு வழக்கு எண் 18/9.பெரும்பாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இயக்கும் இயக்குனர் இதிலும் அதே முறையை பின்பற்றியுள்ளார்.
காதலி தன் காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தாடி வைத்துக்கொண்டு சரக்கு போட்டுக்கொண்டு மட்டையாகி விழுந்த காலம் எல்லாம் சென்று ஆஸிட் வீசும் கலாச்சாரம் முதன்முதலில் தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கியது, அதன் பிறகு பல சம்பவங்கள் நடந்தேரியது வருத்தத்துக்குறிய செய்தி. அதை கதையின் கருவாக கொண்டு விருமாண்டி ஸ்டைலில் இருகோணப் பார்வையில் பார்வையாளர்களை குழப்பாமல் நேர்த்தியான திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் பாலாஜிசக்திவேல்.
இன்று மாணவர்களிடையே இருக்கும் மிக மோசமான குற்றம் செல்போனில் சகமாணவிகளை, தோழிகளை ஆபாசமாக படம் பிடிப்பது, அதை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, உறவுக்கு அழைப்பது போன்ற செயல்கள், அதன் விளைவுகளை சிந்திக்காத பருவ வயதில் செய்யும் தவறுகளால் அடுத்தவர் வாழ்க்கையும் கெடுத்து, இளம் குற்றவாளிகளாக ஏராளமான பதினெட்டு இருபது வயதிலுள்ளவர்கள் சிறையில் இருப்பது நாடு என்ன நிலையில் இருக்கின்றது என்பதற்கான சாட்சி.
இந்த மாதிரி குற்றங்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டிய காவல்துறையின் கரங்கள் பணம் பிளஸ் அரசியல் மூலம் கட்டப் படுகின்றன,உதாரணமாக நாவரசு கொலை வழக்கு. காவல் துறையினர் பணக்கார குற்றவாளிகளை காக்க அப்பாவி யாருமற்ற அனாதையின் மீது வழக்கு சுமத்தி தண்டனை பெற்று கொடுப்பது இன்றும் நடந்துகொண்டுதான் உள்ளது. சிலர் பணத்திக்காக குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த வகையான மூன்று குற்றங்கள் பெருகி வரும் சூழலில் இதை வைத்து ஒரு களம் அமைத்து இயக்கிய படம்தான் வழக்கு எண் 18/9.
படத்தின் கதை தாய்தந்தையை இழந்த அனாதையான வேலு ஒரு நடைவண்டி கடையில் வேலை பார்க்கிறான். அவனுடைய நண்பனாக சின்னசாமி என்கிற சிறுவன் (கூத்துப்பட்டரை கலைஞன்) வேலை பார்க்கிறான், அதே ஏரியாவில் வீட்டு வேலை செய்யும் பெண்ணான ஜோதியை ஒரு தலையாக காதலிக்கிறான். ஜோதி வேலை செய்யும் வீட்டில் இருக்கும் மனிசாவின் தனிமையை பயன்படுத்தி ஒருவன் அவளுடன் நட்பாகிறான், அவளை ஆபாசமாக படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறான், அதை தெரிந்து கொண்ட மனிசா அவனை விட்டு விலகுகிறான், ஆத்திரமடைந்த அவன் அவள் மீது ஆஸிட் ஊற்ற முயற்சிக்கும் போது தவறுதலாக வேலைக்காரி ஜோதியின் மீது ஊற்ற அவள் பாதிக்கப்படுகிறாள்.
சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் செல்லும் வேலுவை நயவஞ்சகமாக பேசி குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைத்து, பணக்கார இளைஞனை காப்பாற்றுகிறது காவல்துறை,ஜோதிக்கு மருத்துவம் செய்து முகத்தை சீரமைத்து தருவதாக கூறியதால்தான் வேலு குற்றத்தை ஏற்றுக்கொள்கிறான், இதை அறிந்து ஜோதி காவல்துறை அதிகாரிக்கு என்ன வகையான தண்டனை கொடுக்கிறாள் என்பதே கதையின் முக்கியமான திருப்பம் அதை திரையில் கண்டு கொள்வது நல்லது.
படத்தில் அனைவரும் அறிமுகம்! அசத்தலான நடிப்பு! நாயகனான ஸ்ரீ இயல்பான நடிப்பால் அனைவரிடமும் பரிதாபத்தை வரவழைக்கிறார் (யப்பா தளவதி, அசித், சூரியாபூர்யா கொஞ்சம் ஸ்ரீ கிட்ட நடிப்பை கத்துகங்க.......). நாயகனின் நண்பனாக வரும் சின்னச்சாமி என்கிற கூத்து பட்டரை கலைஞன் சிறுவனாக இருந்தாலும் நல்ல நடிப்பு..அதுவும் சூட்டிங் எடுக்கும் இடத்தில் வசனம் பேச பெண் குரலில் தடுமாறும் ஹீரோவை நக்கலடிப்பது செம....செம....இந்த சிறுவன் நிறைய இடத்தில் கிளாப்ஸ் வாங்குகிறான்.அதுவும் ஒரு இடத்தில் 'அவன்தா கஞ்சா விக்கிறவன்...' 'எப்படிடா கண்டுபிடிச்ச!' என்று ஸ்ரீ கேட்க..அங்கபாரு போலீஸ் அவன்கிட்ட மாமூல் வாங்கிட்டு இருக்கிறான் "கருவாடு இருக்கிற இடத்திலதான் பூனை இருக்கும்" என்கிற காட்சியில் தியேட்டர் அலறுகிறது
நாயகி ஜோதியாக வரும் மலையாள குயில் ஊர்மிளா, பேசாமல் ஒரு இறுக்கமான முகத்துடன் ஏழை பெண்களின் இயலாமை போன்றவற்றை காட்டுகிறார், நடந்து செல்லும் பாடிலாங்வேஜ் கூட பொருந்திப்போகின்றது. கிளைமாக்ஸ்ஸில் காட்டும் கோபம் ஆக்ரோசத்திலும் வெளுத்து வாங்குகிறார்.பணக்கார பெண்ணாக வரும் மனிசா! பருவ பெண்களுக்குறிய ஆர்வம்,ஆசை, தன் உடல் அழகை கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போன்ற காட்சிகளில் மற்றும் இளைஞனுடன் காஃபி பாரில் பேசும் காட்சிகளில், தேர்ந்த நடிகையைப் போல நடித்திருக்கிறார், தமிழ் கூறும் நல்லுலகத்திக்கு ஒரு கில்மா நாயகி தயார்! கடல்கரையில் குளிப்பது ரூம் போடுவது விதி திரைப்படத்தை ஞாபகப்படுத்துகின்றது அந்த காட்சியை வேறு மாதிரி எடுத்திருக்கலாம்.
காவல் துறை அதிகாரியாக வரும் குமாரவேல் இயல்பான நயவஞ்சக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரை தமிழ் திரையுலகம் வில்லனாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமுள்ளது.
காவல் துறை அதிகாரியாக வரும் குமாரவேல் இயல்பான நயவஞ்சக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரை தமிழ் திரையுலகம் வில்லனாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமுள்ளது.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் தன் வழக்கமான பாணியில் இல்லாமல் இரண்டு கோணங்களில் ஒரு வழக்கு எப்படி விசாரிக்கப்படுகிறது என்பதை காட்டியிருக்கிறார். சிறந்த ஸ்கிரிப்ட் இல்லாமல் இந்த அளவு திரைப்படத்தை நேர்த்தியாக செதுக்க முடியாது. குறைகள் ஒரு சிலவே ஆனால் நிறைவான ஒரு திரைப்படம் என்பதில் ஐயமில்லை பருவ வயதில் ஆண்,பெண் உள்ள பெற்றோர்கள் எதற்கும் ஒரு முறை இந்த படத்தை பார்த்துவிடுங்கள்!
38 comments:
இன்னிக்கு படம் பாக்க போறோம்.
படத்தின் இறுதியையும் கோடிட்டு காட்டீட்டீங்க. அதை மட்டும் தவிர்த்திருக்கலாம்
விமர்சனம் நல்ல இருக்குய்யா...மொக்கத்தனமா சொல்லாம இன்ட்ரஸ்டிங்கா சொல்லி இருக்க...கீப் இட் அப்!
@மோகன் குமார்
இன்னிக்கு படம் பாக்க போறோம்.
படத்தின் இறுதியையும் கோடிட்டு காட்டீட்டீங்க. அதை மட்டும் தவிர்த்திருக்கலாம்
///////////////////////////////
நான் இறுதி காட்சிய விரிவா சொல்லல சும்மா..ஒன் லைன் மட்டும்தான் சொல்லியிருகேன்னு நினைக்கிறேன்...
@விக்கியுலகம்
விமர்சனம் நல்ல இருக்குய்யா...மொக்கத்தனமா சொல்லாம இன்ட்ரஸ்டிங்கா சொல்லி இருக்க...கீப் இட் அப்!
///////////////////////////
நன்றி மாம்ஸ்!
விமர்சனம் அருமை...பாத்துடுறோம் ...
இம்புட்டு தூரம் சொல்றீக... சரி பார்க்கிறோம்
அருமையான விமர்சனம்.. அழகான அலசல்
நட்புடன்
கவிதை காதலன்
போற்றப்படவேண்டிய இயக்குனர் பாலாஜி சக்திவேல்..... தலைவா விமர்சனத்துல கதயோட டீட்டெய்லிங் கொஞ்ஜம் கொரச்சுக்கலாம்னு நெனக்கறேன்.... டெக்னிக்கல்லா டீட்டைலிங் அதிகமாக்குங்க
வருண் ப்ரகாஷ்
ரைட்டு இன்னைக்கே எந்த கடையிலயாவது CD கிடைக்குதான்னு பார்ப்போம்.., அட நான் இருக்கிற நாட்டுல தியேட்டரில் தமிழ் படம் அதிகம் திரையிட மாட்டாங்கப்பா ...!
எல்லா விமர்சனமும் படத்தை ஓகே ரகமா சொல்லுது..
பார்த்துறலாம்.....
தெளிவான விமர்சனத்திற்கு நன்றி
@வரலாற்று சுவடுகள்
ஹா ஹா இங்கேயும் இப்படித்தான்யா..
நல்லதோர் விமர்சனப்பார்வை...!!!
சிறப்பான விமர்சனம் தோழர்..நன்று.
இன்னும் படம் பார்க்கலை..
பார்த்த பின் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!
மன்னிக்கவும் , நான் விமர்சனம் படிக்கவில்லை .. இந்த படத்தை கதையை பற்றி தெரிந்து கொள்ளாமல் பார்க்க வேண்டும் என எண்ணுகின்றேன் , அதனால் ஓட்டு மட்டும்
இன்று
கண்டபடி E-Mail அனுப்பி தொல்லை செய்பவர்களை தடுப்பது எப்படி ?
நடுநிலையான நல்ல விமர்சனம். பாலாஜி சக்திவேல்கிட்ட பிடிச்சதே பெரிய நடிகர்கள் இல்லாமல் கதையை மட்டும் நம்புவது.
படம் பார்க்கணும் போலவே இருக்கு உங்கள் விமர்சனம் படித்ததில் இருந்து அண்ணா :))
அருமையான விமர்சனம்
// நாயகனான ஸ்ரீ இயல்பான நடிப்பால் அனைவரிடமும் பரிதாபத்தை வரவழைக்கிறார் (யப்பா தளவதி, அசித், சூரியாபூர்யா கொஞ்சம் ஸ்ரீ கிட்ட நடிப்பை கத்துகங்க.......). ///
இது டூ மச்... டூ டூ மச்...
நிறைய இடங்களில் ரசித்தேன்... நாயகிகள் பற்றிய கருத்துகளை முற்றிலும் ஆமோதிக்கிறேன்...
@கோவை நேரம்
விமர்சனம் அருமை...பாத்துடுறோம் ...
///////////////////////
நன்றி சார்!
@மனசாட்சி™
இம்புட்டு தூரம் சொல்றீக... சரி பார்க்கிறோம்
////////////////////////
படத்தை நல்லா பாருங்க தல!
@கவிதை காதலன் - மணிகண்டவேல்
அருமையான விமர்சனம்.. அழகான அலசல்
/////////////////////////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@Anonymous
போற்றப்படவேண்டிய இயக்குனர் பாலாஜி சக்திவேல்..... தலைவா விமர்சனத்துல கதயோட டீட்டெய்லிங் கொஞ்ஜம் கொரச்சுக்கலாம்னு நெனக்கறேன்.... டெக்னிக்கல்லா டீட்டைலிங் அதிகமாக்குங்க
////////////////////////////////
ஓகே! வரும் நான் கதைய எப்பவும் சொல்ல மாட்டேன்! இதுல கொஞ்சம் தான் சொல்லியிருக்கேன்!
@வரலாற்று சுவடுகள்
ரைட்டு இன்னைக்கே எந்த கடையிலயாவது CD கிடைக்குதான்னு பார்ப்போம்.., அட நான் இருக்கிற நாட்டுல தியேட்டரில் தமிழ் படம் அதிகம் திரையிட மாட்டாங்கப்பா ...!
///////////////
ஓகே ரைட்டு பாருங்க........... நன்றி! பாஸ்!
@தமிழ்வாசி பிரகாஷ்
எல்லா விமர்சனமும் படத்தை ஓகே ரகமா சொல்லுது..
பார்த்துறலாம்.....
தெளிவான விமர்சனத்திற்கு நன்றி
////////////////////////
நன்றி மக்கா!
@காட்டான்
நல்லதோர் விமர்சனப்பார்வை...!!!
///////////////////////////
நன்றிங்ணா..............
@மதுமதி
சிறப்பான விமர்சனம் தோழர்..நன்று.
////////////////////////
வணக்கம்! வருகைக்கு நன்றி!
@ஆளுங்க (AALUNGA)
இன்னும் படம் பார்க்கலை..
பார்த்த பின் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!
/////////////////
பாருங்க....நல்ல படம்தான்!
@"என் ராஜபாட்டை"- ராஜா
மன்னிக்கவும் , நான் விமர்சனம் படிக்கவில்லை .. இந்த படத்தை கதையை பற்றி தெரிந்து கொள்ளாமல் பார்க்க வேண்டும் என எண்ணுகின்றேன் , அதனால் ஓட்டு மட்டும்
////////////////////////////////
ஓகே! சார்! நன்றிகள்!
@விச்சு
நடுநிலையான நல்ல விமர்சனம். பாலாஜி சக்திவேல்கிட்ட பிடிச்சதே பெரிய நடிகர்கள் இல்லாமல் கதையை மட்டும் நம்புவது.
////////////////////////////
நன்றிகள் விச்சு! அப்படி இல்லை பெரிய நடிகர்களை வைத்து ஒரு படம் எடுத்தார் கைய சுட்டுக்கிட்டார்...
@துஷ்யந்தன்
படம் பார்க்கணும் போலவே இருக்கு உங்கள் விமர்சனம் படித்ததில் இருந்து அண்ணா :))
அருமையான விமர்சனம்
///////////////////
வருகைக்கு நன்றி துசி!
@Philosophy Prabhakaran
// நாயகனான ஸ்ரீ இயல்பான நடிப்பால் அனைவரிடமும் பரிதாபத்தை வரவழைக்கிறார் (யப்பா தளவதி, அசித், சூரியாபூர்யா கொஞ்சம் ஸ்ரீ கிட்ட நடிப்பை கத்துகங்க.......). ///
இது டூ மச்... டூ டூ மச்...
///////////////////////
கடுப்பாதிங்க......அவங்களுக்கு இந்த சின்ன பசங்க மேல்!
@Philosophy Prabhakaran
நிறைய இடங்களில் ரசித்தேன்... நாயகிகள் பற்றிய கருத்துகளை முற்றிலும் ஆமோதிக்கிறேன்...
///////////////////////
மிக்க நன்றி பிரபா! வருகைக்கு நன்றி!
நல்ல விமர்சனம்.வாழ்த்துக்கள்.யதார்த்த இயக்குனர்களின் வரிசையில் பாலாஜி சக்திவேலும் நல்ல படங்களை தருவார்.நன்றி.வணக்கம்/
நடுநிலையான விமர்சனம்...
உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்
பொதுவாக படத்தைப்பற்றி நல்ல அபிப்ராயம் நிலவுகிறது.
இந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு நேற்றுதான் கிடைத்தது.... கடவுள் ஏன் கண்களை படைத்தான் என்பதன் காரணம் உனர்ந்தேன்..... இதப்ப்டத்தை ப்ரமோட் செய்ய உதவிய ஒவ்வொருவருக்கும் தமிழ் சினிமா கடமைப்பட்டுள்ளது :)
மௌனகுரு
Post a Comment