கண்ணை விற்று சித்திரம்! மரங்களை வெட்டி நாகரிகம்!
>> Wednesday, May 30, 2012
இயற்கை காவலர் யோகநாதன் அவர்களின் உரை தொடர்ச்சி.....
யோகநாதன் அவர்களின் முந்தைய உரையை படிக்க :
யோகநாதன் அவர்களின் முந்தைய உரையை படிக்க :
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒரு கப்பல் மூலம் பழைய கழிவுகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவிற்கு வந்தது. கழிவ எல்லாம் எங்க கொட்ட தெரியுமா? பவானி ஆற்று கரையில் கொட்ட... நான் வழக்கு தொடர்ந்தேன் அதனால் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுப்பதாக என் மீது இருபது பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதலோடு வந்தது...அப்பொழுது சக்கரவர்த்தி என்கிற போலீஸ் கமிஷனர் என்னைக் காப்பாற்றினார். இன்றும் நான் ஒம்பது மணிக்கு மேல் போகும் போது திரும்பி...திரும்பி பார்த்ததுட்டுதான் போவேன்.
எதிர்ப்பு பல இடங்களில் பலமாக இருந்தாலும் எல்லாம் தாங்கக்கூடிய சக்தியை இறைவன் எனக்கு கொடுத்து இருக்கிறான். அதனால் மரம் மாதிரி ஆகிவிட்டேன்,“மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதில்லை” என்பது போல நான் பாட்டுக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டு இருப்பபேன்...அங்க மரம் வெட்டுறாங்க வாங்க... அப்படின்னு கூப்பிடுவாங்க உடனே போயிருவேன். ஏதோ பஸ்ல நான் பிரியா போறதால தப்பிச்சிட்டேன் இல்லையென்றால் என்னால் இயங்க முடியாது! எதாவது பிராஞ்ச் கேண்டீனல ஒன்னேகால் ரூபாய்க்கு சாப்பாடு போடுவான், சாப்பிட்டு என் பெட்டிய தூக்கிட்டு எதாவது பள்ளியில ஸ்லைடு ஷோ காட்ட போயிருவேன்.
எனக்கு NGAMஜெயராம் என்பவர் கேரளாவில் இருந்து விதையெடுத்து அனுப்புகிறார், அதுபோக விதைகள் மாணவர்கள் நிறைய சேகரித்து அனுப்புகிறார்கள், கோவை மத்திய சிறைச்சாலையில் ஒரு பெரிய நர்சரி இருக்கின்றது, ஆயுள் கைதிகள் நிறைய மரம் வளர்த்து நர்சரி நடத்துகிறார்கள்,அது போக வீட்டில் எப்பவும் நூறு மரக்கன்றுகள் இருக்கும்..நேற்றைக்கு நீங்க வீட்டுக்கு வரும்போது கூட என் மனைவி சொல்லிட்டு இருந்தாங்க... வீட்டுக்காரங்களுக்கு இப்படி மரக்கன்று வைத்திருப்பது பிடிக்கவில்லை..! மரக்கன்றுவை எடுத்து விடுங்கள், இல்லை! வேற வீடு பாருங்க அப்படிங்கறாங்க... என்று. அது மட்டும் காரணம் அல்ல போலீஸ் அடிக்கடி வீட்டுக்கு வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை!
நல்லது செய்பவர்களுக்கு இங்க அங்கீகாரம் கிடைக்காது! கெட்டது செய்பவனை தலையில் வைத்து ஆடுவார்கள்! நாம் வாழக்கூடிய காலங்களில் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைக்கிறேன், எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க “பிச்சையெடுத்து பொழச்சாலும் பொய் சொல்லக்கூடாது” என்று நான் அதை கடைப்பிடிக்கிறேன்!
நீங்க நீலகிரி மாவட்டம் கேத்தகிரி போனால் அங்கே லாங்வுட் சோலை என்று இருக்கும், சுமார் 180 ஏக்கர் இருக்கும், அது முன்னால் மூன்று ஊர் கழிப்பறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது மட்டுமில்லாமல் சீட்டு விளையாடுபவன், தண்ணி போடுபவன், மத்த எல்லா விசயமும் நடக்கக்கூடிய சமூகவிரோதிகளின் பிடியில் இருந்தது, நான், மற்றும் என் நண்பர்கள் இணைந்து ஒரு குழு அமைத்து அதை மீட்டு சுத்தம் செய்து இன்றைக்கு ஆறு ஊர்களுக்கு குடிநீர் வழங்கிக் கொண்டுள்ளது, இன்று மிகப்பெரிய அழகிய அடர்ந்த வனமாக உருமாற்றமடைந்து மான் மற்றும் பல விலங்குகளின் வசிப்பிடமாக இருக்கின்றது, பிளாக்கர் யாராவது போனீர்கள் என்றால் கண்டிப்பாக போய்ப் பாருங்கள் படம் எடுங்கள் உங்கள் பதிவுகளில் போடுங்கள்.
வனத்துறை தன் கடமையைச் சரியாக நேர்மையாக செய்யும் பட்சத்தில் எனக்கு வேலையே கிடையாது. ஆனால் நடப்பது என்ன? கோயமுத்தூர் பெரிய அறிவாளிக இருக்கிற ஊர்தான் கணிசமான கல்லூரிகள் இருக்கின்றது, இருந்து என்ன பயன்! ஆஸிட் ஊற்றி மரத்தை கொலை செய்பவனை கேள்வி கேட்க ஆள் இல்லை கேட்டா..! அவங்க அந்த கூட்டம்! அவங்க அந்த ஜாதி! பெரிய ஆளுக அவன் ஜாதிக்காரங்க கூட்டமா வந்து பிரச்சனை பண்ணுவாங்க என்கின்ற எண்ணம்தான்! அனைவர் மனதிலும் ஐயா! மரம் இல்லையினா குடிக்க தண்ணி கிடைக்காது சுவாசிக்க காற்று கிடைக்காது.
நொய்யல் ஆறு செத்துப்போச்சு! கிரேக்கர்கள் வரலாற்றில் “என் தாத்தனும் முப்பாட்டனும் நொய்யல் ஆற்றில் வணிகம் செய்தார்கள்”என்று படிக்கிறார்கள், இன்று கிரேக்க மாணவர்கள் இங்கே வந்து நொய்யலைப் பார்க்கிறார்கள் பக்கத்துல போக முடியுமா? சாக்கடையா இருக்கு! லண்டன்ல தேம்ஸ்நதி கட்டிட ஆக்கிரமிப்பால சுகாதரக் கேடு ஆனது லண்டன் வாசிகள் கொதித்து எழுந்து திரண்டு வந்து ஆற்றை சுத்தம் செய்தார்கள், இதுவரை மக்களை மீறி ஆற்றில் எதுவும் செய்யமுடியாது! நதியை காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.ஆறு மாதம் கழித்து தேம்ஸ் நதியில் ஸ்கவுட் என்கிற மீன் அந்த ஆற்றில் வாழத்தொடங்கியது அதற்கு விழா எடுத்து கொண்டாடினார்கள்,அவனுக்கு அந்த நாட்டின் மீது, தேசத்தின் மீது அக்கரையும், உணர்வும் இருக்கு நமக்கு?!
நொய்யல்ஆறு, வைகைஆறு, எப்படி இருக்கு? தாமிரபரணியாற்றை ஆய்வு மேற்க் கொள்ள மனோன்மணியம் பல்கலைக்கழக எச்.ஓ.டி முருகேசன் அவர்களும் நானும் போகிறோம் அங்கு நாங்கள் கண்ட காட்சி மிகக் கொடுமையானது?! சொரிமுத்துஅய்யனார் கோவில் திருவிழாவின் போது கூடும் ஐந்து இலட்சம் நபர்களும் ஆற்றை கழிவறையாக பயன்படுத்துகிறார்கள்...அந்த ஆறு என்ன ஆவது? கொடுமை!
நாங்கள் சொரிமுத்து ஜமீனைச் சந்தித்து விளக்கி கழிவரை கட்டிவிடலாம் எனக்கூறினோம். ஒரு ஆளுக்கு ஒரு ரூபாய் என்றாலும் தினம் ஐந்து இலட்சம் வருமாணம் கிடைக்கும் எனவும் கூறினோம் அவரும் தன் இடத்தை தருவதாக கூறினார், சரி கழிவறை கட்டிவிடலாம் என்றால் அதற்கு வனத்துறை அனுமதி வேண்டும், ஆனால் வனத்துறை என்ன சொன்னது தெரியுமா?
(((( இன்னும் முகத்திரை கிழியும் ))))
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஐயா யோகநாதன் சேவையை குறிப்பிட்ட தி இந்து பத்திரிக்கைச் செய்தி
---------------------------------------------------------------------------------------------------------
14 comments:
வணக்கம் நண்பரே,
கோத்தகிரியில் தங்களின் பணி அபாரமானது.
நிச்சயம் அங்கே சென்றால் கண்குளிர காண்கிறேன்.
நல்லது செய்வதே இப்போது யாருக்கும் பிடிக்காது
என்கிற பொது அது செய்பவனை எங்கே பிடிக்கப் போகிறது.
சரியாச் சொன்னீங்க, ஆளுக்கொரு கட்சிக் கோடியை
வாகனத்தில் கட்டிக்கொண்டு, கட்சி அடையாளத்துடனும்
சாதி அடையாளத்துடனும் செய்யும் கொடுமைகள்
களையப்பட வேண்டும்..
பாராட்டுக்குரிய பணி செய்யும் அவரையும் அதைப் பலரும் அறியப்
பதிவிட்ட தங்களையும் என் உளங்கனிய வாழ்த்துகிறேன்
புலவர் சா இராமாநுசம்
பாராட்டுக்குரிய பணி செய்யும் அவரையும் அதைப் பலரும் அறியப்
பதிவிட்ட தங்களையும் என் உளங்கனிய வாழ்த்துகிறேன்
புலவர் சா இராமாநுசம்
நெஞ்சை தொட்டு சொல்கிறேன் .. நாங்கள் போடுவதெல்லாம் பதிவில்லை .. நீங்கள் இப்போது போடுவதுதான் உண்மையான பதிவு . மிக்க நன்றி . ஒரு நல்லவரை இன்னும் பலர் அறிய செய்கின்றேர்கள் .. நன்றி நண்பா
சிறுவயதில் முழங்கால் அளவு தண்ணீரில் விளையாண்டது, காணும் பொங்கல் விழா ஆற்றின் கரைகளில் கொண்டாடியது இன்றும் நொய்யலின் நினைவுகள் பசுமையாக என்னுள்ளே. தினமும் ஆற்றினை பாலம் வழியாக கடந்து செல்லும் போது எனது இதயம் மிகவும் வருந்துகிறது. பேரூர் புது பாலம் கட்டப்படும் போது என்னென்னவோ உறுதி அளித்தார்கள் எல்லாம் ...நீர் எழுத்துகள்... உண்மைகளை புட்டு புட்டு வைக்கும் தங்களின் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. தொடருட்டும் உங்கள் பணி.
நன்றி, கலாகுமரன்( http://eniyavaikooral.blogspot.com)
குட் போஸ்ட்....
யோகநாதன் போன்ற சமூக சிந்தனையாளர்களை ஊக்குவித்தலே தமிழகம் மேம்பட வழிவகுக்கும்.
தொடர்கிறேன்.
சுரேஷ் உங்களைப் பற்றி சொன்னார். நிச்சயம் உங்களை சந்திக்க வேண்டும்.
பதிவர் சந்திப்பில் உங்களையெல்லாம் சந்த்தித்தது மிக்க மகிழ்ச்சி.
உங்கள் சீரீய தலைமையில் நெல்லிக்கனிகளை...
அரவணைத்து செல்வீர்கள் என்பது...
மிக்க நம்பிக்கையையும்...
மகிழ்ச்சியையும் தருகிறது.
இனி அடிக்கடி சந்த்திப்போம்.
நல்லதுன்னா கண்டிப்பா கெட்டதுதான் பண்ணுவாங்க போல
vanakkam thiru yoganaadham avargale thangaludaiya pani ennai negizhavaiththuvittadhu vaazhga emmaan
valarga
nandri
surendran
surendranath1973@gmail.com
ஒரு மரத்தை வெட்டுவது, பத்து மனிதர்களை கொலை செய்வதற்கு சமம்.
படிக்க படிக்க கோபம் தலைக்கேறுகிறது!!
யோகநாதன் பல தடைகள் கடந்து போராடுவது போல நாம் போராடாவிட்டாலும் குறைந்த பட்சம் ஒரு ஐந்து மரக்கன்றுகளாவது நடனும். கட்டாயம் ஐந்து மரங்களாவது நடுவேன். பகிர்விற்கு நன்றி.
Post a Comment