பதிவர்சந்திப்பில் பச்சைக்குதிரை தாண்டிய பதிவர்!
>> Monday, August 27, 2012
டிஸ்கி : நான் பதிவர் சந்திப்புக்கு போகலைங்கறது எல்லாருக்கும் தெரியும்..! சில காரணங்களுக்காக நான் போகமுடியாத சூழல் ஏற்பட்டாலும் எனக்கு ரன்னிங் கமெண்ட்ரியா ஒரு பிரபல பதிவர் கம் அலக்ஸா ரேங் கம் பிகாஸோ என ரவுண்டு கட்டியடிக்கும் நாய்-நக்ஸ் எனக்கு அவருடைய வாக்கி டாக்-கி யில் சொல்லிக் கொண்டே வந்தார் அது............
நான் இப்போ இரயில்வே ஸ்டேசன்ல இருக்கிறேன் டிக்கட் வாங்கப் போறேன் அங்கே நடந்த சம்பாஷனைகள்
''சென்னைக்கு முதல் வகுப்பு இருக்கா..?''
''இல்லை…!''
''இரண்டாம் வகுப்பு இருக்கா…?''
''இல்லை..!''
''வித்தவுட் இருக்கா…? ''
''ஙே… ''
''சரி…!சரி….!முறைக்காதே அன் ரிசர்வ் ஒன்னு கொடு…! ''
டிக்கெட்டை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியே வந்து சில்லுன்னு ஒரு ''பீர்'' அடித்துக்கொண்டு நாலு மசாலா தோசைய சாப்பிட்டு வண்டிக்கு வந்தேன், வண்டி கிளம்பியது.
சென்னை வந்து ''எழும்பூர்'' இரயில் நிலையத்தில் இருந்து அண்ணன் ''ஆயிரத்தில் ஒருவன் மணி'' என்னைக் கூட்டிக்கிட்டு போனார், அண்ணே..! நீங்க ''எம்.ஜி.ஆர்'' மாதிரியே இருக்கீங்க என்றேன், இடுப்பில் வைத்திருந்த சாம்பார் கரண்டியால் ''பொய் சொன்னே போஜனம் கிடைக்காது...!'' என்று, மொடோர்…!மொடோர்…!என்று என் மண்டையில் வைத்தார், தலையை தடவி முடிக்கும் நேரத்தில் ஹோட்டல் ரோகினி வந்தது. ''ஏண்ணே…! இந்த ஹோட்டலா..? தாஜ்ல போடலையான்னேன்..?'' மறுபடியும் அவர் கை கரண்டிக்கு போக குண்ட்ரு..! குண்ட்ரு..! என்று ஹோட்டலுக்குள் ஓடிவிட்டேன்.
எனக்கான அறையில் ஈரோட்டு வக்கீல் நண்டுநொரண்டு இருந்தார்…! அவரிடம் போன் நெம்பர் வாங்கி அங்கியே போன் போட்டு பேசினேன். டென்சனான அவர் ''உன் மேல கேஸ் போட்டிடுவேன் ராஸ்கோல்'' என்றார்…ஹிஹி…! பழக்க தோசம் சார் என்றேன்.
ஆருர்மூனாவுக்கு போன் போட்டேன்….''என்னய்யா பதிவர் சந்திப்புன்னு போட்டாலே சைட்டிஸ்க்கு கருவாடு வறுத்துட்டு வர்ற ஆளுக நாங்க... நீ…சரக்கே கிடைக்கும்ன்னு போஸ்ட் போட்டுட்டு இன்னும் வரலை..!'' என்றேன் அதுக்கு அவர் ''நக்கீரர் இருய்யா வருகிறேன்'' என்றார்.
நாலு பாட்டில் பிசிலரி பாட்டிலோடு வந்தார் ஆருர்மூனா. எங்கியா சரக்கு என்றேன்..! ''யோவ் நக்கீரரே உம் சிவந்த கண்ணை நன்றாக திறந்து நன்றாக பாரும் அத்தனையும் பாகார்டியா ஒயிட் ரம்,''என்றார் இரண்டு அடி துள்ளிக் குதித்த நான் தீர்த்த சாந்தியில் இறங்கினேன். முடிந்த பிறகு அப்படியே தூங்கிவிட்டேன்.
நடிகை சரோஜாதேவி இரண்டு இன்ச் மேக்கப்போடு கோ…..பால்…….எழுந்திருங்கள்..!கோ………..பால் என்று கையில் வைத்திருந்த பன்னீர் குப்பியில் இருந்த பன்னீரை என் முகத்தில் தெளித்தார்…..இன்னுமொரு குவளையில் இருந்த சந்தனத்தை முகத்தில் பூச…….அடச்சே.....! அத்தனையும் கனவு!
மெட்ராஸ் பவன் சிவா பாட்டில் தண்ணீரை முகத்தில் புளிச்….புளிக்சென்ற அடித்தபடி நக்கி மாமா…நக்கி மாமா எழுந்திரி நக்கி மாமா என்றார். கனவை கலச்சிட்டாங்களே அப்படின்னு சிரமப் பட்டுக்கிட்டே எழுந்து ரின் சோப்பு போட்டு குளித்து விட்டு பிளீச்சிங் பவுடர் போட்டுக் கொண்டு பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்தை நோக்கி பொடி நடையாகப் போனேன்.
மண்டபத்தின் வாசலில் அஞ்சா சிங்கம் நின்று கொண்டு ரோட்டில் போகும் ஆட்களை எல்லாம் நிறுத்தி சார்….நீங்க வவ்வாலா….? சார் நீங்க வவ்வாலா…?என்று கேட்டுக் கொண்டிருந்தார்(வவ்வால் நோட்ஸ் திஸ் பாயிண்ட்) அவர்கள் டெரராகி நாங்க மனுசங்க..என்றபடி பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடினார்கள். என்னைக் கண்டதும் ''வாய்யா…..!வாய்யா….!தனியா உள்ள போக ஒரு மாதிரியா இருந்தது அதான் வவ்வால் அண்ணாச்சியா இருந்தா கம்பனிக்கு ஆள் சரியா இருக்குன்னு பார்த்தேன்….அவரு வரலை நீ வா…''என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.
மேடையில் என்னுடைய சிஸ்யர்கள் சிபி, கேபிள், ஜாக்கி உக்கார்ந்து ஒவ்வொரு பதிவராக அழைத்து அறிமுக உரையாற்ற உதவிக் கொண்டிருந்தார்கள்..! என் பெயரும் வந்தது, என்னை மிஸ்டுகால் நக்கீரன் என்று பெருமையாக கூறினார்கள், நான் மேடைக்கு சென்றபோது என் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தில் கோபாலபுரத்தில் டுவிட்டுக் கொண்டிருந்த தலைவரே ஜெர்க் ஆனதாக உளவுத்துறை தெரிவிக்கின்றது.
மதுமதி எனக்கு சர்ச்சை பதிவு புகழ் ஆசிக்கை அறிமுகப் படுத்தினார் ''ஆள் பல்கா இருந்தார் நானும் கொஞ்சம் ஜெர்க்கானேன்..!'' ஆனாலும் கமல் மாதிரி கட்டிப்புடி வைத்தியம் செய்து இருவரும் நண்பேன்டா ஆயிட்டோம்...!
கேபிள் வந்து என்னை ஒரு கவிதை படிக்குமாரு அழைத்தார் வீனாக கொலைப்பழி விழும்மென்று தவிர்த்து விட்டேன்.மதியம் திவ்யமான சைவ உணவு. ஆனாலும் நமக்கு சைவம் சாப்பிட்டு பழக்கமில்லாததால்...! பாக்கெட்டில் வைத்திருந்த ''நெத்தலி கருவாடை'' சாம்பாரில் போட்டு நான் மட்டும் அசைவம் சாப்பிட்டேன் என இங்கே கூறிக் கொள்கிறேன். முடிந்தால் மெரினாபீச்சில் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் ஒரு கல்வெட்டில் பொறித்து வைக்கவும், வரலாறு தெரிந்து கொள்ளட்டும் என்று பிலாசபியிடம் கூறினேன்! சங்ககால இலக்கிய வார்த்தையொன்றை என்னை புகழ்ந்து கூறினார்.(கருவாடு கொடுக்கலைன்னு பொறாமை)
மயிலன் கவிதை வாசித்தார் கவிதை அனைவரையும் கவர்ந்தது, நான் போய். அவரை டாக்டர் பேசிட்டு மட்டும் வந்துட்டிங்க கவிதை எங்க? என கலாய்த்தேன்..!அவர் பத்து ரூபாய் எடுத்து கீழே போட்டார், நான் எதார்த்தமாக குனிந்து எடுக்க, என்னை பச்சகுதிரை தாண்டி விட்டு ஓடிவிட்டார். சரி பத்து ரூபாய் மிச்சம் என்று வைத்துக் கொண்டேன், பிறகுதான் தெரிந்தது அது செல்லாத நோட்டு என்று வடை போச்சே..! என்று நானே சொல்லிக் கொண்டேன். அடுத்தது கேபிள் கவிதை வாசிப்பதாக சொன்னார்கள், எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ரென்று சுற்ற, மணமகன் அறையில் போய் படுத்துக் கொண்டேன், நான் போதையில் படுத்திருப்பதாக புரளியை கிளப்பி விட்டார்கள்.
மயிலன் கவிதை வாசித்தார் கவிதை அனைவரையும் கவர்ந்தது, நான் போய். அவரை டாக்டர் பேசிட்டு மட்டும் வந்துட்டிங்க கவிதை எங்க? என கலாய்த்தேன்..!அவர் பத்து ரூபாய் எடுத்து கீழே போட்டார், நான் எதார்த்தமாக குனிந்து எடுக்க, என்னை பச்சகுதிரை தாண்டி விட்டு ஓடிவிட்டார். சரி பத்து ரூபாய் மிச்சம் என்று வைத்துக் கொண்டேன், பிறகுதான் தெரிந்தது அது செல்லாத நோட்டு என்று வடை போச்சே..! என்று நானே சொல்லிக் கொண்டேன். அடுத்தது கேபிள் கவிதை வாசிப்பதாக சொன்னார்கள், எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ரென்று சுற்ற, மணமகன் அறையில் போய் படுத்துக் கொண்டேன், நான் போதையில் படுத்திருப்பதாக புரளியை கிளப்பி விட்டார்கள்.
பட்டுக்கோட்டை பிரபாகர் உரையாற்றினார். தனிமனித தாக்குதல் கூடாது என்றார், நல்ல விசயம், அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கிவிட்டு…சார் உங்க கதையில் வருகிற நந்தகுமாரன் கூழாங்கல்லுல இருந்து மின்சாரம் கண்டுபிடிச்சா சொல்லுங்க சார்….! எங்க ஊர்ல கரண்டு அடிக்கடி போயிடுது என்றேன். சொல்றேன்….!சொல்றேன்….!என்றபடி போய் விட்டார். அவரிடம் யாரோ என்னைப் பத்தி சொல்லிட்டாங்க போல, போன் நெம்பர் கொடுக்காம போயிட்டார்.