இந்நாட்டின் சுதந்திர அடிமைகள்!
>> Monday, August 6, 2012
ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம், தேவை! சொந்த வீடு இருப்பவர்களுக்குக் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் திருப்பூர், கோவை, சென்னை, போன்ற தொழில் நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை செய்து தனக்கானப் பிழைப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.
சாமீய்! வாங்க சாமீய்! சாப்பிட்டு போலாம் வாங்க சாமீய்! |
இங்கு இவர்கள் வாடகை வீட்டில் சந்திக்கும் பலப் பிரச்சனைகள் வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு உள்ளது, வருடத்திற்கு ஒரு முறை வாடகை ஏற்றுவது, அநியாய கரண்டு பில் வசூல் செய்வது, மட்டுமில்லாமல் அதைச் செய், இதைச் செய், அங்க போகாதே! இங்கப் போகாதே! குழந்தைகள் சத்தம் போடாமல் இருக்க வேண்டும், விளையாடக் கூடாது, உறவினர்கள் வந்தால் ஒரு நாளுக்கு மேல் தங்கக் கூடாது! டிவிச் சத்தம் அதிகமாக வைக்கக் கூடாது என் பல சில கண்டிசன்களோடு ஒரு மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியதாக உள்ளது.
இந்த மாதிரி நகரங்களில் முக்கியமாக திருப்பூர்க்கு இடம் பெயரும்….வெளியூர் மக்களை மண்டைக் குடைச்சல் கொடுக்கும் விசயம் வாடகை வீடு! கிராமத்தில் பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கூட எளிமையாக….கர்வம் இல்லாமல் இருப்பான்! ஆனால் நகரத்தில் கோமணம் மாதிரி இடம் வைத்திருப்பவன் பண்ணுகின்ற அலம்பலும், அலப்பரையும் தாங்க முடிவதில்லை.
உதாரணத்திற்கு எனக்கு நடந்த ஒரு சம்பவம்! ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த போது புதிதாக பைக் வாங்கினேன், நூறு ரூபாய் வாடகை ஏறிவிட்டது. வேலைக்கு போயிட்டு இருந்த நான் சுயமாக தொழில் தொடங்கினேன், இருநூறு வாடகை ஏறிவிட்டது. கார் வாங்கினேன் வாடகை கணிசமாக ஏறியதில்லாமல்…வசையும் வேறு! வெளியூர்காரன் இங்கு முன்னேறக் கூடாது "போடா நீயும் உன் வீடும்" என்று காலி செய்து வந்துவிட்டேன்! இதுவே வெளியூர்காரன் தன் சாதியை சேர்ந்தவன் என்றால் இந்த தொந்தரவுகள் கிடையாது, வீடு விடும்போதே நம் சாதியை கண்டுபிடிக்க பல கேள்விகளை கேட்பார்கள்! நான் ஒரு முறை சிந்திப்பது உண்டு நாம் தலித் என்றால் வீடு கொடுப்பார்களா என்று? அதற்கான விடை ஒரு நண்பர் மூலம் கிடைத்தது!
ஊசி..பாசி...வித்தாலும் யார் காசுக்கும் ஆசைப்படமாட்டோம் சாமீய்! |
என் நண்பர் ஒருவர் தலித் பெண்ணை காதலித்து திருமணம் முடித்தார், அவர் இங்கு திருப்பூரில் நல்ல பணியில் இருந்தார், அவர் ஒரு உயர் சாதியினரின் வீட்டில் குடியிருந்தார், எப்படியோ வீட்டு சொந்தக்காரருக்கு இந்த உண்மை தெரிய வந்த போது வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டார், அவரே காலி செய்துவிட்டு ஓடும்படி அவர்களின் செயல்கள் இருந்தது. இவர்களைப் போன்றவர்களிடம் வெளியூர்காரர்களும், பிறசாதியினரும் இருப்பது நரகத்தில் இருப்பதுக்குச் சமம்!
நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்த போது, பேருந்து பழுதடைந்து நின்று விட்டது, நின்று கொண்டிருந்தோம். சாலையோரத்தில் ஒரு டென்ட் அடித்து நரிக்குறவக் குடும்பங்கள் சில இருந்தது, அதில் ஒரு டென்ட்டை கவனித்த போது சுவாரஸ்யமாக இருந்தது, ஒரு நரிக்குறவன் அந்த டென்ட்டுக்குள் அழுக்கு மூட்டையின் மீது தலை வைத்து அருகில் ஒரு டிரான்ஸ்சிஸ்டரில் மிக சத்தமாக எம்.ஜி.ஆரின் காதல் பாடலை கண்ணை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தான், ஓரத்தில் அவன் விற்பனை செய்யும் ஊசி, பாசிகள் கிடந்தன, ஒரு சிறிய டிவியும், பேட்டரியும் இருந்தது.
நம்ம பேமிலி போட்டா சாமீய்! |
வெளியே அவன் மனைவி மூன்று கல்லைக் கூட்டி காடையோ, கவுதாரியோ, கறிக்குழம்பு வேகவைத்துக் கொண்டிருந்தாள், சில சமயம் காகமாகக் கூட இருக்கலாம்!? அவன் போட்டிருந்த பச்சை நிற டிராயரின் பாக்கெட்டில் ஒரு மதுப்புட்டி தலைகாட்டியபடி இருந்தது!
கொஞ்சம் நிதானமில்லாமல் தூக்கத்தில் விழித்து எழுந்து நின்று விட்டால் அவன் மொத்தக் குடிசையும் கலைந்து விடும் மண்டியிட்டபடிதான் அவன் அரண்மனைக்குள் நுழைய முடியும் அப்படிப்பட்ட இடத்தில் அவன் தன் சுதந்திரத்தை எவ்வளவு அழகாக அனுபவிக்கிறான். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கின்றது, நாலாயிரம், ஐயாயிரம் என வாடகை கொடுத்து நாம் வாழ்ந்தாலும் சுதந்திர அடிமைகள் நாம் என்பது உண்மைதானே…!
26 comments:
சரியா சொல்லி இருக்கீங்க...வீடு வாங்கி அதுல குடுத்தனம் விடுவோரில் பலருக்கு தாங்கள் ராசாதி ராசான்னு நெனப்பு...இதுக்கு பேசாமா கடைசில சொன்னாப்ல இருந்தாலே...ஆகாய சந்தோசம் கிடைக்கும் போல...!
எப்படி மச்சி, இப்படியெல்லாம்..
எல்லா வாடகை வீட்டில் வசிப்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான்.. நான் உட்பட...
விடுகதையா இந்த வாழ்க்கை ? விடை தருவார் யாரோ ?
உண்மைய சொல்லி இருக்கீங்க... ஆனால் இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை...
வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளர்கள்ல் தான் சொந்த வீடு கட்டி போய்விடலாம் என்று எல்லோரும் நினைத்ததால் தான் ரியல் எஸ்டேட் இந்த அளவிற்கு போனதற்கு காரணம்...
வீடால ரொம்ப கஷ்டப் பட்டிருக்கீங்க..."வீடு" ங்கிறதோட அர்த்தம் இப்பதான் புரியுது...
சுரேஷ்...நாட்டு நிலவரம் முன்னேறி விட்டது.
கருத்தை திருத்தி கொள்ளவும்.என் வீட்டு உரிமையாளர் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏற்றுகிறார்.
என்னைப்பொறுத்த வரை அவர் ரொம்ப நல்லவராக தெரிகிறார்.
பெட்ரோல் விலை ஏறும் போதெல்லாம் ஏற்றுவேன் எனச்சொல்லாமல் இருக்கிறாரே!
சிதம்பரம் வேறு நிதியமைச்சர் ஆகி விட்டார்...
தினமும் தங்க விலை மாதிரி பெட்ரோல் விலையை ஏற்றிக்கொள்ளலாம் என அறிவித்தாலும் அறிவிப்பார் ‘வட்டிக்கடைசெட்டி நாட்டு சீமான்’.
பரிதாபத்துக்கு உரியவர்கள்தான் இந்த வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்.. வர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது
வாடகை ,கரண்ட் பில் ,தண்ணி பில் இன்னும் எக்ஸ்ட்ரா எக்ஸ்சட்ரா பில்கள் , இவை சமாளித்து குடும்பத்தையும் சமாளித்து அப்பப்பா ரொம்ப கஷ்டம் தான் மாம்ஸ் சொல்லுவது போல்..... கிராமத்தில் பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கூட எளிமையாக….கர்வம் இல்லாமல் இருப்பான்! ஆனால் நகரத்தில் கோமணம் மாதிரி இடம் வைத்திருப்பவன் பண்ணுகின்ற அலம்பலும், அலப்பரையும் தாங்க முடிவதில்லை..... நிஜமாகவே முடிவதில்லை போதாகுறைக்கு ஜாதியை கேட்டுதான் வீடு கொடுப்பது போதும்டா சாமி வாழ்க்கையே வெறுத்துடும் மாம்ஸ் ரொம்ப அனுபவித்து எழுதி இருப்பார் போல் .. ##(பி.கு . மாம்ஸ் நீங்க திருப்பூர் மற்றும் இதர பகுதிகளில் உங்கள் பினாமி இரவு வானம் பெயரில் நிறய காலை மனைகள் வாங்கி போட்டிருப்பதாக கேள்வி பட்டேன் அதி ஒன்றில் சொந்த வீடு கட்டி கொள்ளலாமே )
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
சுதந்திர அடிமைகள் தலைப்பும் சொன்ன விதமும் நறுக்...
அனுபவங்களை அழகாய் பகிர்ந்து சமூக சிந்தனனைகளை முன்வைத்தமை அருமை! இந்த ஜாதி எப்போத்தான் ஒழியுமோ :(
இத்தகைய சூழலில் இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும்
மன சந்தோசம் நமக்கு இருப்பதில்லை என்பது நிதர்சனம்..
எதிர்பார்ப்புகள் மிக குறைவாய் இருந்தால்
மனமும் நிறைவடையும்...
நாம் சுதந்திர அடிமைகள் என்பது சாலச்சிறந்த சொல்...
வாடகை வீட்டு முதலாளிகள் எப்படியோ உங்களை சொந்த வீட்டுக்காரர்கள் ஆக்காமல் ஓயமாட்டார்கள்போலும்.
உண்மை தான்... இருப்பதை கொண்டு திருப்தியாக வாழ பலருக்கு தெரிவதில்லை...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 7)
கரெக்டா சொன்னீங்க சாமியோவ்... டெண்டுனாலும் சுதந்திரம் முக்கியம்.. அருமை..
இந் நாட்டின்
நாலைந்து நாட்களாக மனம் சார்ந்த விசயங்களை யோசித்துக் கொண்டிருப்பதன் அடி நாத விசயங்களை தொட்டு எழுதியிருக்கீங்க
எலி வளையானாலும் தனிவளை வேணும் -நு இப்படி அனுபவிச்சவங்கதான் எழுதியிருப்பாங்களோ?. எங்களுக்கும் இப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்கள்தான் வீடு கட்ட தூண்டுதலாக இருந்தது.
வாடகை வீட்டின் அசவுகர்யங்களை சிறப்பாக சொல்லி அலசியுள்ளீர்கள்! சிறப்பு!
இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html
//நாம் தலித் என்றால் வீடு கொடுப்பார்களா என்று? //
கண்டிப்பா தர மாட்டானுவ... காவளிப்பயலுவ
//நாலாயிரம், ஐயாயிரம் என வாடகை கொடுத்து நாம் வாழ்ந்தாலும் சுதந்திர அடிமைகள் நாம் என்பது உண்மைதானே…!//
இருக்கரவனுக்கு ஒரு வீடு நமக்கு பல வீடு..... பீ ஹேப்பீ பிரதர்
வீடு சுரேஷ்,
ரொம்ப அனுபிச்சு இருக்கீங்க :-))
என் கதை இன்னும் கொடுமை, எங்களுக்கு சொந்த ஊரில் ரெண்டு வீடு இருக்கு,அதில் ஒன்றை வாடகைக்கும் விட்டு இருக்கோம், நல்ல பெரிய ,தனி வீடு,நாங்க ஒரு தொந்தரவும் செய்வதில்லை,வாடகை கூட அவங்களா கொடுக்கிற தேதி தான்.
ஆனால் இங்கே சென்னையில நான் வாடகைக்கு வந்து நான் பட்ட பாடுக்கு ,சொந்த ஊருக்கே ஓடிப்போயிடலாமான்னு ஆச்சு மாம்ஸ்.
ஒரு தடவை வீட்டுக்காரன் கிட்டே ரோஷம் வந்து ஊருல எனக்கும் ரெண்டு வீடு இருக்கு சார், ஆனால் இப்படிலாம் நாங்க செய்ய மாட்டோம்னு சொல்லிட்டேன் , அப்போ உன் ஊருக்கே போக வேண்டியது தானேனு மூக்கை உடைச்சுட்டான்.
அன்னிக்கு காணாமல் போன இந்த மானஸ்தன் இன்னும் திரும்பவரவேயில்லை.
சென்னையில ஊருக்கு ஒதுக்கு புறமா கூட ஒரு சென்ட் இடம் 10 லட்சம் சொல்றான் , எங்க ஊருல அதுக்கு ஒரு ஏக்கர் வாங்கலாம்,அதான் பெரு நகர லேண்ட் லார்ட் எல்லாம் ஆடுறாங்க. ஊர்ப்பெருமை எல்லாம் ஊரோட வச்சிக்கணும் :-))
கரக்டா சொல்லி இருக்க மாம்ஸ்...இங்க நான் இருந்த வீட்டுலயும் அப்படிதான்...கார் வாங்கின உடனே காலி பண்ற மாதிரி ஆயிடுச்சு,,,ஒரு டயலாக் சொன்னாங்க அந்த வீடு ஓனர்..ஜீவா இந்த வீட்டுக்கு வந்து தான் பைக் வாங்கினான், டிவி , பிரிட்ஜ், வாங்கினான்,கார் வாங்கினான்,அப்படின்னு..நான் சொன்னேன்...உங்க வீட்டுக்கு பிச்சை காரனா வந்தா காலம் புல்லா பிச்சகாரனா வே இருக்கணுமா..அப்படின்னு...அடுத்த மாதமே காலி தான்,,,,அப்புறம் வேற வீட்டுக்கு போய் அங்கயும் தகராறு...இப்போதான் அமெரிக்காவுல செட்டில் ஆயிட்ட ஒருத்தர் வீட்டுல இருக்கேன்.வீட்டுக்காரன் பக்கத்துல குடி இருந்தானா ஒரே தொல்லை.எதாவது ஒன்னை சொல்லிக்கிட்டு நை..நை..அப்படின்னு..அதனால் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்..எப்பவாவது வீடு கட்டி வாடகைக்கு விடும் போது ரொம்ப கண்டிசன் போடாம..இருக்கிறவங்க மனம் கோணமா நடந்துக்கணும் அப்படின்னு ..முக்கியமா பேச்சலர் பசங்களுக்கு வீடு தரனும்..
வணக்கம் நண்பா,
இலங்கையிலும் இந் நிலமை இருக்கிறது.
வீடு வாடகைக்கு கொடுத்து விட்டு, ஒருவனின் தனிமனித உரிமைக்குள்ளும் தலையிடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
இந் நிலை மனிதனை மனிதனாக, சக மனிதனாக மதிக்கின்ற நிலமை பிறக்கும் போது தான் இல்லாது போகும்.
பல மக்களின் வயிற்றில் அடித்து தான் சில வாடகை குடியிருப்பாளர்கள் தம் குடியை நிலை நிறுத்துகிறார்கள்.
கஷ்டம்...
பெரும்பாலான house owner பிற தொழில் ஏதும் செய்வதில்லை...(நான் கடந்துவந்த வரை...) அவர்கள் வீட்டில் இருக்கும் tenant யாரேனும் உழைத்து தொழில் பல செய்து முன்னேறி சொந்த வீடு கட்டி குடி பெயர முனைந்தால் அதை அவர்களால் ஏற்க முடிவதில்லை... முதலாளித்துவம் நிறைந்து போன மனங்கள்...
இன்றும் கல்லூரிக்கு செல்லும் தன் மகனிடமோ மகளிடமோ தலித் இன மாணவர்களுடன் சேராதே என எச்சரிக்கும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
@கோவை நேரம்
ஜீவா,
//எப்பவாவது வீடு கட்டி வாடகைக்கு விடும் போது ரொம்ப கண்டிசன் போடாம..இருக்கிறவங்க மனம் கோணமா நடந்துக்கணும் அப்படின்னு ..முக்கியமா பேச்சலர் பசங்களுக்கு வீடு தரனும்..//
நல்ல எண்ணம்,ஆனால் நாம அப்படி நினைக்கிறோம் வர்ரவங்க வேற மாதிரி இருக்காங்க, நான் தான் கஷ்டப்பட்டேன்னு ஊரில் வாடகைக்கு இருப்பவர்களை ஃப்ரியா விட்டு வச்சோம், ஓவரா அட்டகாசம் பண்ணிட்டாங்க, எனக்கு எதுவுமே தெரியாது , ஒரு முறைப்போனப்போ பக்கத்து வீட்டுக்காரங்க தான் சொல்றாங்க உங்க பேரண்ட்சையே மிரட்டுரான் குடியிருக்கவன்னு, அப்புறமா ஒரு காட்டு காட்டினேன் , இந்த வாடகை என் வீக் என்ட் சரக்குக்கு கூட காணாது, எங்க பேரண்ட்ஸ் ஒரு டைப் நான் வேற டைப்புன்னு.
சென்னையில நாம பயப்படுறோம் ஊரில நம்மையே பயமுறுத்துறாங்க சிலர். அதே நாதாரி சென்னைக்கு வந்தா அடக்க ஒடுக்கமா இருக்கும் :-))
Post a Comment