திருப்பூர் சாப்பாட்டுகடை டுவின்..டுவின்...

>> Wednesday, August 1, 2012


எச்சரிக்கை

இது ஒரு அருவருப்பான பதிவு தைரியம் உள்ளவர்கள் மட்டும் இந்த வரியை தாண்டவும் மீறி வந்தால் கம்பனி பொறுப்பில்லை......

வணக்கம் நண்பர்களே திருப்பூர் வரும் நண்பர்கள் இந்த பதிவை படித்துப் பார்த்து பயன் பெறுவதற்காக?! எழுதிய பதிவு. முக்கியமாக ஹோட்டல் காக்ரோச்! இது நவீன ஓட்டல்! பெயிண்டு அடிச்சு..!பாத்திரங்களைக் கழுவி பல மகாமமம் ஆச்சு!? தோசைக்கல்லை சொரண்டுனா ஒரு லாரி நிறைய அழுக்கு சேரும்! இட்லி பாத்திரத்தை பார்த்தா கல்யாணம் ஆகாத பொண்ணுக கூட வாந்தியெடுப்பாங்க...அவ்வளவு சுத்தம்! டம்ளர் எவர்சில்வர் டம்ளர் ஹோட்டல் முன்னாடி ஓடுற கால்வாயிலதான்  கழுவுவாங்க, அதனால பளிச்சுன்னு கருப்பா பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கும். இலையை இவங்க வேஸ்ட் செய்வதே இல்லை  கழுவி...கழுவி...போடுவாங்க வாரத்துக்கு ஒரு முறை கிழிஞ்ச இலையை மட்டும் மாற்றுவார்கள் அவ்வளவு நேர்த்தியான பராமரிப்பு.

இங்க ஸ்பெசல் ஐயிட்டமே காக்ரோச் சிக்கன்தான்..! சப்பாத்திக்கு நடுவில சிக்கன் வருவலை வைத்து அழகாக அதன் மேல் ஒரு காக்ரோச்சைப் பிடித்து அழகாக வைத்திருக்கிறார்கள்! நான் ஒரு முறை போனபோது கரப்பானை தூக்கி வீசினேன் பக்கத்து டேபிளில் இருந்தவர் தட்டில் விழுந்து விட்டது. அதை கவனித்த அவர் டேங்ஸ் என்றார்! நான் நோமென்சன் என்றேன்! இல்ல...இல்ல...போதும் நான் டயட்ல இருக்கிறேன் என்றார்! அந்த ஆளுக்கு இந்தி தெரியாது போல......


அடுத்தது எலிக்கறி & நாய்கறி பட்டர் டோஸ்ட்! அதுவும் எலிக்கறிக்கு தேவையான தூய....தெள்ளிய நீராக ஓடும் கூவத்தின் தம்பி நொய்யலாற்றுக் கரையில் பிடித்தது, நாய்கறி பல்லடம் ரோட்டில் வாகனங்களில் அடிபடும் நாய்களைக் கொண்டு வந்து சுத்தமான முறையில் தயார் செய்வது. அதனால் சுவை அதிகம் கூட்டம் அலை மோதும்! இங்கு ஒரு சிறப்பு என்னவென்றால் சாப்பிட்டு வாந்தி பேதியானவர்கள் வைத்தியம் பார்க்க பக்கத்தில் இந்த ஹோட்டல் நடத்துபவரின் தம்பியே மருத்துவமனை வைத்துள்ளார்.


இதுல பாருங்க இங்க ஸ்பெசலே பல்லிக்காப்தான்! ஒரு மாசத்துக்கு முன்னால் செத்த முழு கோழிய கிரில்ல வறுத்து அதுமேல ஒரு பல்லியை வைத்து அழகாக பரிமாறுவதுதான்! 1946ம் வருடம் ஒரு வெள்ளைக்காரன் இங்கு சாப்பிட வந்தான் இவர்கள் தயார் செய்து வைத்திருந்த கோழி மீது உத்தரத்திரத்தில் லவ்விக் கொண்டிருந்த ஒரு பல்லி கோழி மீது விழுந்து விட்டது, அதை சாப்பிட்ட வெள்ளைக்காரன்! டுவின்....டுவின்....என்றான் அதிலிருந்து இங்கு வியாபார விசயமாக வரும் அமெரிக்கர்கள் இதை விரும்பி சாப்பிட்டு பேதியாகி திருப்பூரே வரமாட்டார்கள்! அதனால்  மெயிலில் மட்டும் டிலீங் காட்டுவதால் சீக்கிரம் ஆர்டர் ஓகே ஆவதால் இந்த கடை ஓனர்க்கு பாராட்டு விழா கூட நடத்தினார்கள் சில தொழில்அதிபர்கள்.

அப்பவும் கொடைச்சல் கொடுக்கும் சில பையர்களை இந்த கடையில் சிக்கன் வாங்கி கொடுத்திருவேன் என்று மிரட்டியே காரியம் சாதிக்கின்றார்கள்,  இந்த கடை பெயரை கேட்டு நடுங்கி இவர்களுக்கு அடிபணிந்து போகிறான் வெள்ளைக்காரன்! இதனால் திருப்பூர் வரும் பதிவர்கள் இங்கு உணவு உண்டு குறைந்தது பத்து பதிவாவது போடலாம் நேரமிருந்தால் வாருங்கள்! அட வாங்க சார் ஏன் சார் ஓடறீங்க.....?????

46 comments:

கோவி 4:27:00 AM  

சாபிட்டதுக்கு அப்புறம் இருந்தாதானே பதிவு போட..

உலக சினிமா ரசிகன் 4:50:00 AM  

என்ன கொடுமை இது...

இனி திருப்பூர் வந்தா...இனி ஈரத்துணிதான்.என்னுடைய பேவரைட் படையப்பா மெஸ்ஸில் கூட சாப்பிட மேட்டேன்.

இருந்தாலும்...நம்ம ஊரை காட்டி கொடுக்கலாமா?

CS. Mohan Kumar 4:56:00 AM  

ஒரு வேளை நம்மளை எல்லாம் ஒட்டுரீன்களோ?

sathishsangkavi.blogspot.com 5:24:00 AM  

சாப்பிட தோணலீங்க.. ஓட தோணுது...

Unknown 5:30:00 AM  

மோகன் குமார் said...
ஒரு வேளை நம்மளை எல்லாம் ஒட்டுரீன்களோ?//

இன்னுமாங்க உங்களுக்கு சந்தேகம்?

Unknown 5:31:00 AM  

மாம்ஸ் பதிவு அருமை டிவைன் டிவைன்

Unknown 5:32:00 AM  

மாம்ஸ் லாஸ்ட் டைம் வெளங்காதவன் வந்தப்பகூட பல்லி சில்லி, பல்லி பக்கோடா சாப்பிட்டுட்டு டிவைன்னு சொல்லி வாந்தியெடுத்தானே அத ஏன் போடல?

கூடல் பாலா 6:09:00 AM  

அனேகமா இது டாஸ்மாக் பார்டிங்க சாப்பிடுற கடையா இருக்கும்ன்னு நினைக்கிறேன் (நிச்சயமா இந்த கமெண்ட்ல உள்குத்து இல்ல)

கோவை நேரம் 6:16:00 AM  

மாம்ஸ்...என்னை கலாய்க்க வில்லை தானே...

காட்டான் 6:34:00 AM  

யோ என்னையா இது,?இனி ஓட்டல் சாப்பாட்டில் கைவைக்கவே பயமா இருக்கும்..

வவ்வால் 7:18:00 AM  

அந்த டுவீன்..டுவீன் மட்டும் தான் லேசா புரியுது.

பின்குறிப்பு: சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் பிரபலப்பதிவரால் மண்டகப்படி வைபவம் டுவீன் ..டுவீன் எனக்கிடைப்பது நிச்சயம் :-))

sakthi 8:21:00 AM  

உவ்வ்வ்வவ்வ்வாவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்

திண்டுக்கல் தனபாலன் 8:31:00 AM  

ஹா.. ஹா.. நான் ஓடி விடுகிறேன்...

நன்றி…
(த.ம. 7)

”தளிர் சுரேஷ்” 8:37:00 AM  

நான் சுத்த சைவம் என்பதால் எஸ்கேப்!

Unknown 8:38:00 AM  

அண்ணே...ஒரு சில்லி பார்சல் சூடா கொடுங்க...இதா மாம்ஸ் நம்ம ஊரு...

ezhil 9:03:00 AM  

உண்மையா? இல்லை காமெடி பதிவா?
கடை பேர் என்னங்க?

ஹோட்டல் என்றாலே சுத்தம் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் நீங்க சொல்றதை பாத்தா இப்படி நடத்தணும்னு ஒரு முடிவோட கிளம்பியிருப்பாங்களோ?

MANO நாஞ்சில் மனோ 1:23:00 PM  

மாண்புமிகு அண்ணன், வியட்னாம் மன்னன் இன்னும் இதை படிக்கல போல....நாக்குல நீர் சொட்ட சொட்ட ஓடி வந்துருப்பானே...!

MANO நாஞ்சில் மனோ 1:25:00 PM  

@FOOD NELLAI

என்ன ஆபீசர், பெல்டை உருவி நாலு போடு போடுங்க.

MANO நாஞ்சில் மனோ 1:26:00 PM  

@koodal bala

புள்ள கண்டு பிடிச்சிட்டாருய்யா...!

Unknown 7:02:00 PM  

@கோவிசாபிட்டதுக்கு அப்புறம் இருந்தாதானே பதிவு போட..
/////////////////////
ஆவியா....வந்து போட்டாலும் போடுவாங்க....5ம் நெம்பர் சுடுகாட்டு கபாலம் டிவைன்....டிவைன்னு..!

Unknown 7:03:00 PM  

@உலக சினிமா ரசிகன்என்ன கொடுமை இது...

இனி திருப்பூர் வந்தா...இனி ஈரத்துணிதான்.என்னுடைய பேவரைட் படையப்பா மெஸ்ஸில் கூட சாப்பிட மேட்டேன்.

இருந்தாலும்...நம்ம ஊரை காட்டி கொடுக்கலாமா?
////////////////////////////
படையப்பாவிலியா சாப்பிடுறீங்க.....அப்ப சரி!

Unknown 7:04:00 PM  

@மோகன் குமார்ஒரு வேளை நம்மளை எல்லாம் ஒட்டுரீன்களோ?
///////////////////////
போங்க சார்...!உங்களை நான் ஓட்டுவனா...!

Unknown 7:06:00 PM  

@சங்கவிசாப்பிட தோணலீங்க.. ஓட தோணுது...
//////////////////
ஆமா! நீங்க திருப்பூர் வர்றீங்களாமே!

Unknown 7:16:00 PM  

@இரவு வானம்மோகன் குமார் said...
ஒரு வேளை நம்மளை எல்லாம் ஒட்டுரீன்களோ?//

இன்னுமாங்க உங்களுக்கு சந்தேகம்?
/////////////////////////
மாப்ள கோர்த்து வுடுறியே....!

Unknown 7:17:00 PM  

@இரவு வானம்மாம்ஸ் பதிவு அருமை டிவைன் டிவைன்
////////////////////
ஓகே மாப்பு டுவின்....டுவின்....!

Unknown 7:18:00 PM  

@இரவு வானம்மாம்ஸ் லாஸ்ட் டைம் வெளங்காதவன் வந்தப்பகூட பல்லி சில்லி, பல்லி பக்கோடா சாப்பிட்டுட்டு டிவைன்னு சொல்லி வாந்தியெடுத்தானே அத ஏன் போடல?
/////////////////////////
அவன் வாந்தியெடுத்தது உன்மேலதானே அதான் போடலை!

Unknown 7:19:00 PM  

@koodal balaஅனேகமா இது டாஸ்மாக் பார்டிங்க சாப்பிடுற கடையா இருக்கும்ன்னு நினைக்கிறேன் (நிச்சயமா இந்த கமெண்ட்ல உள்குத்து இல்ல)
//////////////////////////////
இல்ல...இல்ல.. பாலாங்குற பேர் இருக்கிறவங்களுக்கு 10% டிஸ்கவுணட் சார்!

Unknown 7:20:00 PM  

@கோவை நேரம்மாம்ஸ்...என்னை கலாய்க்க வில்லை தானே...
/////////////////////
போங்க மாப்ள இவ்வளவு டீசண்டாவா உங்களை கலாய்ப்போம்! அவ்வ்வ்வ்

Unknown 7:21:00 PM  

@காட்டான்யோ என்னையா இது,?இனி ஓட்டல் சாப்பாட்டில் கைவைக்கவே பயமா இருக்கும்..
////////////////////////
நீங்க வேற கால் வைக்கவே பயமா இருக்கு!

Unknown 7:22:00 PM  

@வவ்வால்அந்த டுவீன்..டுவீன் மட்டும் தான் லேசா புரியுது.

பின்குறிப்பு: சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் பிரபலப்பதிவரால் மண்டகப்படி வைபவம் டுவீன் ..டுவீன் எனக்கிடைப்பது நிச்சயம் :-))
////////////////////////
எனக்கு கேபிளை தெரியும்...!சொல்லி பூடுவேன்! பிகேர்புல்!

Unknown 7:23:00 PM  

@sakthiஉவ்வ்வ்வவ்வ்வாவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
//////////////////////
சக்தி இது எத்தனை மாசம்!

Unknown 7:24:00 PM  

@திண்டுக்கல் தனபாலன்ஹா.. ஹா.. நான் ஓடி விடுகிறேன்...
/////////////////////
லவூண்டு சாப்பிட்டு போங்க சார்!

Unknown 7:26:00 PM  

@s sureshநான் சுத்த சைவம் என்பதால் எஸ்கேப்!
///////////////////////
காக்ரோச்...சைவம்தானே சார்! இரத்தம் கிடையாது தாவரம் மாதிரி திரவம் மட்டும்தானே சார்!

Unknown 7:27:00 PM  

@tamil selvanஅண்ணே...ஒரு சில்லி பார்சல் சூடா கொடுங்க...இதா மாம்ஸ் நம்ம ஊரு...
///////////////////
ஆமா மாப்ள உடும்பும் பல்லி மாதிரிதானே இருக்கு!

Unknown 7:27:00 PM  

@ezhil
உண்மையா? இல்லை காமெடி பதிவா?
கடை பேர் என்னங்க?

ஹோட்டல் என்றாலே சுத்தம் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் நீங்க சொல்றதை பாத்தா இப்படி நடத்தணும்னு ஒரு முடிவோட கிளம்பியிருப்பாங்களோ?
///////////////////////
காமடி கலந்த உண்மை!

Unknown 7:28:00 PM  

@FOOD NELLAIஉவ்வே!
///////////////////////////////////
போங்க ஆபிசர் நீங்க ஈரோட்டோட போயிட்டிங்க........

Unknown 7:29:00 PM  

@MANO நாஞ்சில் மனோமாண்புமிகு அண்ணன், வியட்னாம் மன்னன் இன்னும் இதை படிக்கல போல....நாக்குல நீர் சொட்ட சொட்ட ஓடி வந்துருப்பானே...!
///////////////////////
ஹஹா.........!பாம்பு கறி திங்கிற ஊர்ல நடுத்துதுண்டு எனக்குன்னு எடுத்துக்கனும் மனோ...!

Unknown 7:31:00 PM  

@MANO நாஞ்சில் மனோஎன்ன ஆபீசர், பெல்டை உருவி நாலு போடு போடுங்க.
//////////////////
என்ன தெகிரியம் இருந்தா ஆபிசர பெல்ட்ட தளர்த்திக்கிட்டு சிக்கனை ஒரு புடிபுடிங்கன்னு சொல்லுவீங்க....அடுத்த தடவை வாங்க உங்களுக்கு மண்டகப்படிதான்!

Unknown 7:32:00 PM  

@MANO நாஞ்சில் மனோபுள்ள கண்டு பிடிச்சிட்டாருய்யா...!
////////////////////////
ஹஹா! அவ்வ்வ்வ்

சென்னை பித்தன் 8:34:00 PM  

உண்மையாகவே இப்படி ஒரு ஒட்டல் இருக்கா?சும்மா தமாஷா?இல்லை,ஏதேனும் உள்குத்தா?!

MARI The Great 5:02:00 AM  

///
சென்னை பித்தன் said...
உண்மையாகவே இப்படி ஒரு ஒட்டல் இருக்கா?சும்மா தமாஷா?இல்லை,ஏதேனும் உள்குத்தா?!
///

பித்தர் ஐயா என்னை மாதிரியே ரொம்ப நல்லவரா இருக்காரு அவ்வ்வ்வ்வ்வ்வ் :D

MARI The Great 5:04:00 AM  

///டம்ளர் எவர்சில்வர் டம்ளர் ஹோட்டல் முன்னாடி ஓடுற கால்வாயிலதான் கழுவுவாங்க, அதனால பளிச்சுன்னு கருப்பா பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கும்.///

இதெல்லாம் எப்பிடி..., தானாவே தோணுதே ஹி ஹி ஹி!

வவ்வால் 8:47:00 AM  

@வீடு சுரேஸ்குமார்

//எனக்கு கேபிளை தெரியும்...!சொல்லி பூடுவேன்! பிகேர்புல்!//

அலோவ் ...உங்களுக்கு கேபிள் மட்டும் தான் தெரியும் எனக்கு கேபிள் டீ.வி,டிஷ் ஆண்டெனா எல்லாம் தெரியும், சீ கேர்புல் :-))

யாருகிட்டே அந்த காலத்திலயே நிலாவுக்கு ராக்கெட் விட்டவுங்க நாங்க :-))

முத்தரசு 9:11:00 AM  

- thanks 4 your information.

முத்தரசு 9:13:00 AM  

I will be alert in future

Gobinath 9:15:00 AM  

யோவ் என்ற கொம்பியுட்டர் ஸ்கிறீன வந்து கழுவிக்குடுய்யா.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP