எட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......!
>> Thursday, July 11, 2013
சில நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் எப்பொழுதும் இருக்கின்றது, “சரோஜா” வேறு தீப்பிடித்த காயங்களோடு கருகிய வாசனையுடன் வருகின்றாள் இது எதாவது பில்லி சூனியமா...? இவளுகளை இந்தாளு எப்படிய்யா சாமாளிக்குறாரு...என்கின்ற கேள்வி சில நாட்களாக என் மனதை குடைந்து கொண்டேயிருக்கின்றது.
பாலியல் கதைகளைப் பொறுத்தவரை விந்து வருவதற்கு முன்னிருந்தே ஒரு ஆணிற்கு அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பெரிசுகள் சிலேடையாகவும், அண்ணன்மார்கள் கிணறு, குட்டையில் உக்கார்ந்து உண்மையும், புனைவும் கலந்து கூறிவந்த கதைகள், ஒரு கிளர்ச்சியும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. வாமு கோமுவின் பல கதைகள் திருப்பூரின் மாவட்டத்தை சார்ந்த பாலியல் பிரச்சனைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன என்று நான் நினைக்கின்றேன். அதில் பல பாத்திரங்கள் நாம் கேள்விப்பட்டவைகளாகவும், பழகியவைகளாகவும் இருப்பதும், மிக நுட்பமான பார்வையில் படைப்புகளை படைக்கும் பாங்கும், கொங்கு வட்டார வழக்கை எந்த சமயத்திலும் அனாயசமாக எழுத்துகளில் புகுத்தும் நுட்பம் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றேன். அந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இரவுவானம் சுரேஷ்க்கு நீண்டநாட்களாக இருக்கின்றது.
அதனால் கிளம்பிப் போனோம் வாய்ப்பாடி கிராமத்தை நோக்கி விஜயமங்கலம் இரயில் நிலையம் ஒட்டியபடியே வீடு,நாவல்களில் வர்ணிப்பதைப் போன்ற ஒரு அழகான கிராமம்! கிராமத்து மனிதராக எங்களை அன்போட வரவேற்றார், பல விசயங்களைப் பேசினார் ஒரு மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை, நாங்கள் ஹென்றி ஷாரியர் எழுதிய 'பட்டாம்பூச்சி' பிரஞ்சு நாவல் தமிழ் மொழி பெயர்ப்பு ரா.கி.ரங்கராஜன் நர்மதா பதிப்பு வெளியிட்டிருந்தது அதை வாங்கிகொண்டு சென்றோம் இது குமுதத்தில் தொடராக வந்தது.அவருடைய “கள்ளி” கிடைக்கவில்லை அதனால் “மங்கலத்து தேவதைகள்” வாங்கினேன்! ஏற்கனவே வாங்கி நான் படிக்காமலே ஒரு நண்பன் வாங்கிச்சென்றது திரும்பி வரவில்லை அதனால் மீண்டும் வாங்கினேன். அன்போட என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் வார்த்தைகளில் மட்டுமல்ல.... கொங்கு மண்ணுக்குறிய அன்பு நிறைய அந்த மனிதரிடம் இருந்தது, பழகுவதற்கு இனிமையான நல்ல எளிமையான மனிதர்.
வாமு கோமுவின் வலைத்தளம் : http://vaamukomu.blogspot.in/
வாமு கோமுவின் முகநூல் : https://www.facebook.com/vaamukomu?fref=ts
5 comments:
அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள்....!
இனிமையான சந்திப்பு...
வாழ்த்துக்கள்...
என்னை விட்டு சென்றமைக்கு என் வன்மையான கண்டனங்கள் ;(
:-)
பகிர்வுக்கு நன்றி! சென்று பார்க்கிறேன்!
Post a Comment