நாய் பொழப்பு

>> Tuesday, August 30, 2011


 நாய் பொழப்பு சார்..” என்று கூறுபவர்களை பார்த்தால் இப்போது சார் ரொம்ப வசதியா இருக்கார் போல என நினைக்க வைத்தது ஒரு அனுபவம் என் நண்பர் எனக்கு ஒரு நாய் வாங்கிக்கொடு என்றார்

சரி ஏதாவது கிராமத்துல தேடி வாங்கிக்கலாம் என்றேன்

இல்லை நல்ல ஜாதி குட்டியா வேனும்

சரி யாராவது "பிராமின்ஸ்" கிட்ட நாய் இருந்தா வாங்கிக்கலாம்

அட விளையாடாத பக், ஜெர்மன் செப்பர்டு, அல்சேஷன், குட்டியா பார்க்கலாம் என்றார்

எனக்கு தெரிந்த வளர்ப்புபிரானி பிரியர் ஒருவர் இருந்தார் என் மொபைலை எடுத்து அவர் எண்ணுக்கு போன் செய்தேன் எடுத்தார் நாய் வேனும் என்றேன் பக் இருக்கு கோவையில இருக்கு என்று ஒரு எண்ணைக் கொடுத்தார்...

போன் செய்து முகவரி தேடி கோவை சென்றோம் 

50 நாள் குட்டி அதுவும் பெண் குட்டி 

விலை என்ன? என்று கேட்டோம்

அதிகமில்லை ஜென்டில்மேன் 18000 மட்டுமே என்றார் (அட கொய்யால......)

சரி விலையை கேட்டதுமே நண்பருக்கு வியர்த்துவிட்டது..

எங்களுக்கு ஆண் குட்டிதான் வேண்டும் என கேட்டோம் (நினைச்ச மாதிரியே) இல்லை என்றார்கள்

விடு ஜுட்.......!

வளர்ப்புபிரானி நண்பரை தொடர்புகொண்டு என்ன பாஸ் அநியாய விலை சொல்றாங்க என்றேன்

இல்லைப்பா அது பிறந்தது USA ல அப்பா அம்மா இரண்டுமே ஃபாரின்ல இருந்து இறக்குமதியானது விலை கூடத்தான் இருக்கும் அதுக்கு சான்றிதழ் இருக்கு (அது கிராஸ் இல்லை பக் நாய்தான் என்கின்ற மருத்துவ சான்றிதழ்) திருப்பூர்ல இந்தியாவில பிறந்த குட்டி இருக்கு விலை குறைவா இருக்கும் என்றார்

திரும்பி திருப்பூர் வந்தோம் அவர் சொன்ன முகவரியை தேடி வந்தோம்

நாய் இருக்குன்னு சொன்னாங்க...

மேலும் கீழூம் எங்களைப் பார்த்த அவர் நாய்ன்னு சொல்லாதிங்க பையன் இருக்கான்னு சொல்லுங்க

சரி பையனை காட்டுங்க என்றோம்(நேரம்....)

இரண்டு குட்டி காட்டினார் ஒன்று பெண் ஒன்று ஆண் 

அதில் ஆண் குட்டியை தேர்வு செய்தோம்

விலை 12000 ம் சொல்லி 11000 க்கு முடித்து எடுத்து வந்தோம்

வீட்டுக்கு வந்தவுடன் அது செய்த சேட்டையில் பணம் பெரிதாய் தெரியவில்லை  

50 நாள் கழித்து அதுக்கு தடுப்பூசி, குளிக்க சோப், பவுடர், டவல், விளையாட பந்து, கடிக்க எலும்பு, விசேசமான பெல்ட், வயிறுபூச்சி மருந்து ஒரு நோட்டு காலி!

யார் சார் சொன்னது நாய் பொழப்புன்னு ம்ம்ம்.........
அடுத்த பிறவியிலாவது நாயா பிறக்கனும்....


Read more...

பெறாந்து...பெறாந்து...

>> Saturday, August 27, 2011


பெறாந்து...பெறாந்து...






கோழி வளர்ப்பது,


சிலருக்கு தொழில்,


சிலருக்கு ஜீவனம்


சிலருக்கு பொழுது போக்கு.....


ஆயம்மாளுக்கு?


எல்லாம்....!


கோழியுடன் பேசுவாள்....


கொஞ்சுவாள்....


கெஞ்சுவாள்....


கணவன் இறந்த பிறகு


அவைதான் இவள் உலகம்,


பருந்து வானத்தில் வட்டமிடும் போது


பெறாந்து.....பெறாந்து.....


என்று கத்துவாள்


தாய்க்கோழி தன் குஞ்சுகளை


மறைவான இடத்திற்க்கு


ஓட்டிச்செல்லும்.




கோழி வளர்ப்பது


ஆடு வளர்ப்பது போல்


தன் மகளை வளர்த்தாள்


அதைப்போல் அவளையும்


தன் அண்ணன் மகனுக்கு


மனம் செய்து வைத்தாள்


குடி, குட்டி என


ராசய்யாவுக்கு


தெரியாத கெட்ட பழக்கம்


ஏதுமில்லை


ஊரில் பெண் குடுப்பார் யாருமில்லை....


வறுமையின் கொடுமை


மான் - புலிக்கு


என எழுதபடாத விதி....


மகள் மாசமாக..


இருக்கிறாள்


வயத்துபுள்ளதாச்சிக்கு


வாய்க்குருசியா ஏதாவது


வாங்கிக் கொண்டு போலாம்


கையில காசு இல்லை


ஒரு சேவல்


இருந்தது


நேந்து விட்ட கிடா மாதிரி...


கருப்பனன் மகன்


சேவ சண்டைக்கு போற மைனர்


ஆயம்மா சேவலை குடுத்துரு


எவ்வளவு பணம் வேணாலும் தரேன்னு


சொன்னான் தரல


இப்ப மகளுக்காக


சேவலை விற்க்க கட்டி வைத்திருந்தாள்


ஒரு பருந்து


வானத்தில் வட்டமிட்டது


பெறாந்து....பெறாந்து....


என கூவினாள்


தூரத்தில்


மருமகன் ராசய்யா வந்து


கொண்டிருந்தான்


பெறாந்து....பெறாந்து....


மறுபடியும் கூவினாள்...


வந்தவன்


வியர்த்திருந்தான்


உடை கசங்கியிருந்தான்


சாராய நெடி


கொண்டிருந்தான்


யத்தே..... என் சேவலை


அடிச்சிட்டானுங்க..


கெட்ட வார்த்தை யொன்றை


உதிர்த்தான்,




ஆயம்மாளின் அனுமதி பெறாமலே


சேவலை அவிழ்த்து


எடுத்துக்கொண்டு 


வேகமாக சென்றான்.....




ஆயம்மாள்


வானத்தில் பருந்து பறக்காமலே


தன்னையும் அறியாமல்


கூவினாள்


பெறாந்து....பெறாந்து....


---------------------------------------------------------------------------------------------------------------------------


எழுத்து பிழை ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டவும் நண்பர்களே..

Read more...

புது படம் வருது ...



பேஸ் புக் லொள்ளு கொஞ்சம் ஓவர்தான் 

Read more...

நான் ரசித்த தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள்

>> Wednesday, August 24, 2011


நான் ரசித்த தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள்

குண்டேரிப்பள்ளம் ஏரி





ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்லிருந்து கொங்கர்பாளையம் செல்லும் பேருந்து ஒரு பேருந்து மட்டும் செல்கின்றது அதனால் கார் அல்லது பைக் மூலம் செல்வது சிறந்தது குண்டேரிப்பள்ளம் ஏரி இங்கு கிடைக்கும் மீன் மிகவும் சுவையுள்ளது மருத்துவகுணம் கொண்டது மாலை நேரத்தில் யானைகள் தண்ணீர் குடிக்க வருவதை காணலாம்


(இந்த இடத்தில்தான் நேர்மையான அதிகாரியான சிதம்பரம் ரேஞ்சரை வீரப்பன் இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொன்றது அவர் இறந்த போது அவரது குழந்தை இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தது) 



தெங்குமராட்டா






சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயாரு தண்ணீர் கல்கண்டு சுவையுடையது குளிப்பது நலம் ஆனால் எச்சரிக்கை தேவை நண்ணீர் முதலைகள் இருப்பதாக தகவல் சுழல் அபாயமும் உண்டு எந்த போக்குவரத்து வசதியும் கிடையாது ஜீப் வகை வாகணத்தில் மட்டும் மட்டும் செல்ல முடியும் அட்வென்ஜர் பயணம் காட்டெருமை யானை அழகிய மான்களை காணலாம் செல்வதற்க்கு ஒருநாள் முன் சத்தியமங்கலம் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும்

புளியங்கோம்பை

சத்தியமங்கலத்தில் உள்ள அடர்ந்த வனத்தினில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது குளிக்கலாம் ஆனால் இரண்டு கிலோ மீட்டர் அடர்ந்த வனத்தில் நடக்க வேண்டும்

பரப்பலாறு டேம்





ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூர் சென்று அங்கிருந்து பரப்பலாறு டேம் உள்ளது அமைதியான இடம் பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் நமக்காக விட்டு சென்ற கொடை இந்த அனை முதலில் பிரச்சனை ஏதும் இல்லை இப்போது யானைகள் அதிகம் நடமாடுகிறது எச்சரிக்கை தேவை

எச்சரிக்கை இந்த தலங்கள் அனைத்தும் இந்திய அரசின் பாதுகாக்கப்பட்ட வனம் ஆகும் குழந்தைகள் வயதானோர் செல்ல கடினம் காடுகளை நேசிப்பவர்கள் செல்லலாம் கண்டிப்பாக முறையான அனுமதி வேண்டும்

Read more...

உயர்திரு420

>> Saturday, August 20, 2011


உயர்திரு420


நடிகர் : சினேகன்


நடிகை : மேக்னாராஜ்


ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், தயாரிப்பாளர்சந்திரசேகர், 


தீபக், பாஸ்கி, ரமேஸ்கண்ணா


இயக்கம் : பிரேம்நாத்


இசை : மணிசர்மா


பாடல்கள் : சினேகன், அறிவுமதி, வாலி, கிருதயா, சுந்தர்,


பாடியவர்கள் : ஹரிகரன், ராகுல்நம்பியார், முகேஷ், ரஞ்சித், ஸ்வேதாமோகன், கார்த்திக்


தயாரிப்பு : ரிச் இந்தியா டால்க்கிஸ்





பாரதிராஜாவிடம் பாடம் பயின்று சில விளம்பர படங்களை இயக்கிய பிரேம்நாத் முதன்முதலாக சந்திரசேகரின் தயாரிப்பில் 

இயக்குனராக களம் இறங்கியுள்ளார் நீண்ட இடைவெளிக்கு பின் வசீகரன் (கண்களால் கைது செய்) இன்னும் அதே இளமையுடன் நடித்திருக்கின்றார்

நெம்பர் ஒன் பிராடாக வரும் சினேகன் (அவர் பெயர் "தமிழ்" இயக்குனருக்கு தமிழ் பிடிக்காதோ) 

அது இது என சின்ன பிராடு வேலை செய்யும் சினேகன் வசீகரன் நடத்தும் ஹோட்டல் (நஸ்டத்தில் இயங்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல் லாஜிக் இல்லையே) GM போஸ்ட்க்கு இண்டர்வியுக்கு போகிறார் நினைச்ச மாதிரியே வர்றவங்க எல்லாரும் அட்டு கேள்விக்கு மொக்கையா பதில் சொல்றாங்க நம்ம நாயகன் (வழக்கம் போல) செலக்ட் ஆயிடுறார்ங்க

மேக்னாராஜ் ஆரம்ப கால நயன் மாதிரி சும்மா கும்முன்னு இருக்காங்க குளோஸ்அப் ஷாட்லதா கொஞ்சம் பயமா இருக்கு 
கார் ஷோரூம் சேல்ஸ் கேர்ளாக வரும் அம்மணியை சினேகன் ஒரு ஹோட்டலில் பிராடு பண்ணி பில் கட்டவைத்து விடுகிறார் பின்பு காதல் வருகிறது (பாடல் காட்சிகளுக்கு தியேட்டரில் ஒரு ஆள் கூட உள்ள இல்லை)

GM ஆன நம்ம நாயகன் அதிரடியா செய்த மாற்றத்தில் ஹோட்டல் வருமானம் உயர்கிறது இதனால் வசீகரனுக்கும் சினேகனுக்கும் நட்பு பலமாகிறது ஒரு நடிகையை காதலிக்கும் வசீகரன் ரகசியமாக திருமணம் செய்கின்றார் அவர்களின் முதலிரவு அறையில் கேமரா வைத்து ஜெயபிரகாஷ் நியூஸ் போடுகிறார் விபச்சாரம் செய்ததாக எதிர்பாராதவிதமாக வசீகரனை தூக்கில் போடுகிறார் சினேகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார் வசீகரன் 

ஜெயபிரகாஷ் மேல் வழக்கு தொடுத்து 64கோடி பணம் வாங்குகிறார் அதை எடுத்துக்கொண்டு மலேசியா போகிறார் சினேகன் வசீகரனின் கனவான அரண்மனையை வாங்குவதற்க்கு நினைவு மீன்ட வசீகரன் சினேகனை துரத்திக் கொண்டு மலேசியா 

செல்கிறார் பிறகு மீதி திரையில் காணுங்கள்


படத்தின் PLUS


1. கோ படத்திற்க்கு பிறகு சீட் நுனியில் உக்காரவைக்கும் படம்


2. ராமகிருஷ்ணன் அவர்களின் வசனம்


3. சினேகனின் புது முகம் 


4. சிறந்த ஒளி/ஒலிப்பதிவு







படத்தின் MINUS


1. பாடல்கள் எடுத்த விதம்(கேட்பதுக்கு நன்றாக உள்ளது)


2. சரியான பிண்ணணி இசை இல்லாதது


3. நிறைய இடங்களிள் லாஜிக் இல்லாதது


4. படத்தின் எடிட்டிங்கில் சரியான Fillter graphics இல்லாமல் இருப்பது சாதரண படங்களிலேயே கலக்குறாங்க Action movie யில் இருந்தால் இன்னும் சிறப்பு

வசனம்
-------------------------------------------------------------------------------------------------------------
பாஸ்கி : முடியுள்ளவனைத்தான் மூளையுள்ளவன்னு நினைச்சுக்குறாங்க

இன்னோருவர் : சாருக்கு ரண்டும் இல்லை
-------------------------------------------------------------------------------------------------------------
ராஜ்கபூர் : ஆண்டவன் நாக்கையும் இதயத்தையும் கல்லா இருக்கக்கூடாதுதான் எலும்பு இல்லாம படைச்சிருக்கான் உடம்புல இருக்கிற வேற ஒரு போன்லெஸ் பத்தி எழுதறத இதோட நிறுத்திக்குங்க
-------------------------------------------------------------------------------------------------------------
அவ உன்னை புரிஞ்சுக்காம போறா அவளுக்காக நீ தற்கொலை பண்ணிக்கலாமா

எனக்காக நீ ஏன் தற்கொலை பண்ணிக்கலைன்னு கேப்பா
-------------------------------------------------------------------------------------------------------------
உங்க பேரு
தமிழ்
நான் தெலுங்கு
GM ஆகுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா
கஷ்டம்ன்னு நினைக்கரதுனாலதான் நீங்க இன்னும் GM ஆகலயோ
-------------------------------------------------------------------------------------------------------------
காதலிக்கறவன் அதிர்ஷ்டசாலி காதலிக்காதவன் புத்திசாலி
-------------------------------------------------------------------------------------------------------------

Read more...

மனிதம் மறந்த மனிதர்கள்....

>> Saturday, August 13, 2011


மனிதம் மறந்த மனிதர்கள்....



ஈரோட்டை சேர்ந்த கோபால் வயது 24 துடிப்பான இளைஞன் திருவண்ணாமலையில் உள்ள சர்க்கரை ஆலையில் மெக்கானிக்காக பனிபுரிகிறார் விடுமுறையில் ஈரோட்டிற்க்கு வந்தவர் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டுள்ளார் அவருடைய நண்பர் ஏசி மெக்கானிக் பாலாஜி அங்கு வந்துள்ளார் நான் விஜயமங்கலத்தில் ஏசி ரிப்பேர் பார்க்க போகிறேன் நீயும் வருகிறாயா என கேட்டுள்ளார் சரி சும்மாதான் இருக்கின்றேன் போகலாம் என கூறியுள்ளார்

நண்பர்கள் இருவரும் விஜயமங்களம் செல்கின்றார்கள் 
நெடுஞ்சாலைத்துறை எனும் எமனின் மறுஉருவம் பெருந்துறை காவல் நிலையத்தின் அருகே ஜெ.சி.பி இயந்திரம் மூலம் சாலையின் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் வரை பெரிய குழி வெட்டி மண்ணைப்போட்டு மூடி இரண்டு அடி உயரத்திற்க்கு மதில் சுவர் போல் போட்டு விட்டு எந்த அறிவிப்பும் வைக்காமல் அலட்ச்சியமாக சென்று விட்டனர்

விஜயமங்களம் சென்று விட்டு மாலையில் திரும்பிய கோபால் பாலாஜி இருவரும் யுனிகான் டபுள் டிஸ்க் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளனர் 

பெருந்துறையில் இருந்து ஈரோடு வரை துடைத்து வைத்த மாதிரி இருக்கும் சாலையில் அனைவரும் வேகமாக வருவது இயல்பு திடீர் ஸ்பீடு பிரேக்கரை கண்ட கோபால் பிரேக் பிடிக்க சரிந்து 20 அடி தூரம் வரை இழுத்து சென்று சாலையின் நடுவே வைத்திருக்கும் சிமெண்ட் தடுப்பில் கோபாலின் தலை மோதி மூளைச்சாவு ஏற்பட்டது


அதே இடத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு விபத்து ஏற்பட்ட பின் சோம்பல் முழித்து மெதுவாக வந்த காவல்துறை நெடுஞ்சாலைத்துறையினரை வரவழைத்து சாலையை சரி செய்தனர்

மூளைச்சாவு ஏற்பட்ட கோபாலின் உறுப்புக்களை தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது

மருத்துவ நண்பரான கோவை ராமகிருஷ்ணா மருத்துவர் விஜய்குமார் அவர்களிடம் ஆலேசனை கேட்கப்பட்டது அவர் பெற்றோரின் சம்மதம் கேட்டபின் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் வரும் அதில் ஒரு மருத்துவக்குழு வருவார்கள் மூளைச்சாவு என்பதை உறுதி செய்தபின் சென்னை கொண்டு சென்று அங்கு ஒரு மருத்துவக்குழு உறுதி செய்தபின் பின்பு வேண்டியவர்களுக்கு உறுப்பை பெறுத்திய பின் உடலை நம் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்து விடுவார்கள் அனைத்து செலவும் இராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்தது எனக் கூறினார் 

கோபாலின் பெற்றோர் சம்மதித்தனர் ஆனால் கூடியிருந்த உறவினர்கள் அவர்களை பயமுறுத்தினர்

கொண்டு போய்ட்டு உடலை நம்ம செலவுல எடுத்துட்டு போகச்சொல்லுவாங்க என்கிறார் ஒருவர்

யாராவது இதற்க்கு பொறுப்பு எடுத்துக்குவாங்களா?

என பல கேள்வி கனை தொடுத்தனர் உறவினர்கள் ஏற்கனவே மகனை இழந்து துக்கத்தில் இருந்த அவர்களை குழப்பினர்

உடல் உறுப்பு தானத்திற்க்கு ஆதரவு தந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் வயதானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் சின்ன பசங்களுக்கு என்ன தெரியும் என ஏளனமாக கிண்டல் செய்தனர்

கடைசியில் வெற்றி பெற்றவர்கள் மனிதம் மறந்த மனிதர்கள் எத்தனையோ பேரின் உயிரை காக்ககூடிய உடல் உறுப்பை தீக்கு தின்னக்கொடுத்து விட்டு கனத்த இதயத்தோடு வீடு திரும்பினோம்

இதில் இன்னோரு கொடுமை விபத்து நடந்தபோது கோபாலின் செல்போன் பர்ஸில் இருந்த பணத்தையும் யாரோ புண்ணியவான் அபேஸ் பண்ணிட்டு போய்ட்டார் 


Read more...

கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறையில் மன்மோகன் சிங்

>> Wednesday, August 3, 2011

"கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறையில் மன்மோகன் சிங் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள்"

நேற்று காலை முதல்வர் அலுவலகத்திற்கு உம்மன் சாண்டி வந்து கொண்டு இருந்தார் அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முதல்வரின் அறையை ஒழுங்கு படுத்த நுழைந்தனர் முதல்வர் நாற்காலியில் ஒருவர் அமர்ந்து கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தார் 

யார் ? நீங்க இங்க உற்காந்து இருக்கீங்க? என விளித்த்தார் பாதுகாப்பு அதிகாரி

அதற்க்கு அவர் மை நேம் இஸ் மன்மோகன்சிங் பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா என கூறவும் பாதுகாப்பு அவரை மேலும் கீழுமாகப் பார்த்தது டர்பனும் இல்லை தாடி மீசையும் இல்லை "அட கொய்யால" என குண்டுகட்டாய் தூக்கி கொண்டு போய் விசாரித்ததில் அவர் ஒரு மன நோயாளி என்றும் மனநல காப்பகத்தில் சரியான வசதி இல்லை என மனு கொடுக்க வந்தவர் என தெரிந்துது அங்கே இங்கே  சுற்றி கொண்டு இருந்தவர் யாரும் பார்க்காத வேலையில் முதல்வர் அறையில் நுழைந்து இத்தனை கூத்து பண்ணிவிட்டார் 

அதிகாரிகள் உம்மன் சாண்டி இடம் தெரிவித்தனர் அவர் அவரிடம் மனுவை வாங்கிக் கொண்டு காப்பகத்தில் கொண்டு விட உத்தரவிட்டார் 

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP