மனிதம் மறந்த மனிதர்கள்....

>> Saturday, August 13, 2011


மனிதம் மறந்த மனிதர்கள்....ஈரோட்டை சேர்ந்த கோபால் வயது 24 துடிப்பான இளைஞன் திருவண்ணாமலையில் உள்ள சர்க்கரை ஆலையில் மெக்கானிக்காக பனிபுரிகிறார் விடுமுறையில் ஈரோட்டிற்க்கு வந்தவர் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டுள்ளார் அவருடைய நண்பர் ஏசி மெக்கானிக் பாலாஜி அங்கு வந்துள்ளார் நான் விஜயமங்கலத்தில் ஏசி ரிப்பேர் பார்க்க போகிறேன் நீயும் வருகிறாயா என கேட்டுள்ளார் சரி சும்மாதான் இருக்கின்றேன் போகலாம் என கூறியுள்ளார்

நண்பர்கள் இருவரும் விஜயமங்களம் செல்கின்றார்கள் 
நெடுஞ்சாலைத்துறை எனும் எமனின் மறுஉருவம் பெருந்துறை காவல் நிலையத்தின் அருகே ஜெ.சி.பி இயந்திரம் மூலம் சாலையின் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் வரை பெரிய குழி வெட்டி மண்ணைப்போட்டு மூடி இரண்டு அடி உயரத்திற்க்கு மதில் சுவர் போல் போட்டு விட்டு எந்த அறிவிப்பும் வைக்காமல் அலட்ச்சியமாக சென்று விட்டனர்

விஜயமங்களம் சென்று விட்டு மாலையில் திரும்பிய கோபால் பாலாஜி இருவரும் யுனிகான் டபுள் டிஸ்க் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளனர் 

பெருந்துறையில் இருந்து ஈரோடு வரை துடைத்து வைத்த மாதிரி இருக்கும் சாலையில் அனைவரும் வேகமாக வருவது இயல்பு திடீர் ஸ்பீடு பிரேக்கரை கண்ட கோபால் பிரேக் பிடிக்க சரிந்து 20 அடி தூரம் வரை இழுத்து சென்று சாலையின் நடுவே வைத்திருக்கும் சிமெண்ட் தடுப்பில் கோபாலின் தலை மோதி மூளைச்சாவு ஏற்பட்டது


அதே இடத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு விபத்து ஏற்பட்ட பின் சோம்பல் முழித்து மெதுவாக வந்த காவல்துறை நெடுஞ்சாலைத்துறையினரை வரவழைத்து சாலையை சரி செய்தனர்

மூளைச்சாவு ஏற்பட்ட கோபாலின் உறுப்புக்களை தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது

மருத்துவ நண்பரான கோவை ராமகிருஷ்ணா மருத்துவர் விஜய்குமார் அவர்களிடம் ஆலேசனை கேட்கப்பட்டது அவர் பெற்றோரின் சம்மதம் கேட்டபின் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் வரும் அதில் ஒரு மருத்துவக்குழு வருவார்கள் மூளைச்சாவு என்பதை உறுதி செய்தபின் சென்னை கொண்டு சென்று அங்கு ஒரு மருத்துவக்குழு உறுதி செய்தபின் பின்பு வேண்டியவர்களுக்கு உறுப்பை பெறுத்திய பின் உடலை நம் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்து விடுவார்கள் அனைத்து செலவும் இராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்தது எனக் கூறினார் 

கோபாலின் பெற்றோர் சம்மதித்தனர் ஆனால் கூடியிருந்த உறவினர்கள் அவர்களை பயமுறுத்தினர்

கொண்டு போய்ட்டு உடலை நம்ம செலவுல எடுத்துட்டு போகச்சொல்லுவாங்க என்கிறார் ஒருவர்

யாராவது இதற்க்கு பொறுப்பு எடுத்துக்குவாங்களா?

என பல கேள்வி கனை தொடுத்தனர் உறவினர்கள் ஏற்கனவே மகனை இழந்து துக்கத்தில் இருந்த அவர்களை குழப்பினர்

உடல் உறுப்பு தானத்திற்க்கு ஆதரவு தந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் வயதானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் சின்ன பசங்களுக்கு என்ன தெரியும் என ஏளனமாக கிண்டல் செய்தனர்

கடைசியில் வெற்றி பெற்றவர்கள் மனிதம் மறந்த மனிதர்கள் எத்தனையோ பேரின் உயிரை காக்ககூடிய உடல் உறுப்பை தீக்கு தின்னக்கொடுத்து விட்டு கனத்த இதயத்தோடு வீடு திரும்பினோம்

இதில் இன்னோரு கொடுமை விபத்து நடந்தபோது கோபாலின் செல்போன் பர்ஸில் இருந்த பணத்தையும் யாரோ புண்ணியவான் அபேஸ் பண்ணிட்டு போய்ட்டார் 


1 comments:

cheena (சீனா) 11:17:00 PM  

அன்பின் சுரேஷ் குமார் - மனிதம் மறந்த மனிதர்கள் மாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்து என்ன செய்வது - தீக்கு இரையாகும் உடல் உறுப்புகளைத் தேவையானவர்களுக்குத் தானமாகக் கொடுப்பது தவறல்லவே ! இருப்பினும் இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இரத்த தானமும் கண் தானமும் எளிதில் கிடைக்கின்றன. மற்ற உறுப்புகளின் தானமும் விரைவினில் துவங்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP