பெறாந்து...பெறாந்து...

>> Saturday, August 27, 2011


பெறாந்து...பெறாந்து...


கோழி வளர்ப்பது,


சிலருக்கு தொழில்,


சிலருக்கு ஜீவனம்


சிலருக்கு பொழுது போக்கு.....


ஆயம்மாளுக்கு?


எல்லாம்....!


கோழியுடன் பேசுவாள்....


கொஞ்சுவாள்....


கெஞ்சுவாள்....


கணவன் இறந்த பிறகு


அவைதான் இவள் உலகம்,


பருந்து வானத்தில் வட்டமிடும் போது


பெறாந்து.....பெறாந்து.....


என்று கத்துவாள்


தாய்க்கோழி தன் குஞ்சுகளை


மறைவான இடத்திற்க்கு


ஓட்டிச்செல்லும்.
கோழி வளர்ப்பது


ஆடு வளர்ப்பது போல்


தன் மகளை வளர்த்தாள்


அதைப்போல் அவளையும்


தன் அண்ணன் மகனுக்கு


மனம் செய்து வைத்தாள்


குடி, குட்டி என


ராசய்யாவுக்கு


தெரியாத கெட்ட பழக்கம்


ஏதுமில்லை


ஊரில் பெண் குடுப்பார் யாருமில்லை....


வறுமையின் கொடுமை


மான் - புலிக்கு


என எழுதபடாத விதி....


மகள் மாசமாக..


இருக்கிறாள்


வயத்துபுள்ளதாச்சிக்கு


வாய்க்குருசியா ஏதாவது


வாங்கிக் கொண்டு போலாம்


கையில காசு இல்லை


ஒரு சேவல்


இருந்தது


நேந்து விட்ட கிடா மாதிரி...


கருப்பனன் மகன்


சேவ சண்டைக்கு போற மைனர்


ஆயம்மா சேவலை குடுத்துரு


எவ்வளவு பணம் வேணாலும் தரேன்னு


சொன்னான் தரல


இப்ப மகளுக்காக


சேவலை விற்க்க கட்டி வைத்திருந்தாள்


ஒரு பருந்து


வானத்தில் வட்டமிட்டது


பெறாந்து....பெறாந்து....


என கூவினாள்


தூரத்தில்


மருமகன் ராசய்யா வந்து


கொண்டிருந்தான்


பெறாந்து....பெறாந்து....


மறுபடியும் கூவினாள்...


வந்தவன்


வியர்த்திருந்தான்


உடை கசங்கியிருந்தான்


சாராய நெடி


கொண்டிருந்தான்


யத்தே..... என் சேவலை


அடிச்சிட்டானுங்க..


கெட்ட வார்த்தை யொன்றை


உதிர்த்தான்,
ஆயம்மாளின் அனுமதி பெறாமலே


சேவலை அவிழ்த்து


எடுத்துக்கொண்டு 


வேகமாக சென்றான்.....
ஆயம்மாள்


வானத்தில் பருந்து பறக்காமலே


தன்னையும் அறியாமல்


கூவினாள்


பெறாந்து....பெறாந்து....


---------------------------------------------------------------------------------------------------------------------------


எழுத்து பிழை ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டவும் நண்பர்களே..

4 comments:

அம்பாளடியாள் 10:55:00 PM  

அருமை அருமை அப்பப் பறந்தது பெறாந்து கடைசியிலவந்ததும் ஒருவகையானா பெறாந்து ரெண்டும்
ஒண்டுதான் குணத்தில் என்று சொல்லாமல் சொன்ன கவிதை அருமை அருமை அருமை சகோ .வாழ்த்துக்கள் தொடந்து எழுத உங்களுக்கு மேலும் ஒரு பின்தொடர்வோர் பரிசாகிறது .ஓட்டும்
போட்டாச்சு

Unknown 11:15:00 PM  

அம்பாளடியாள் கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி....

cheena (சீனா) 11:22:00 PM  

அன்பின் சுரேஷ் குமார் - பெறாந்து போன்ற மனிதர்கள் - ஆயம்மாளின் நிலை நன்கு விளக்க்ப் பட்டிருக்கிறது - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP