எங்கேயும் எப்போதும் என்றவுடன் ஏதோ காதல் கதையாக இருக்கும் என்று நினைப்போம் காதல் கதைதான் ஆனால் யாரும் சொல்லாத கோணத்தில் திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் கெஞ்சம் பிசகினாலும் பிரச்சார படமாகக்கூடிய வாய்ப்பு இருக்கும் படத்தை கவனமாக செதுக்கியுள்ளார் புது இயக்குனர் சரவணன் இவர் கஜினி முருகதாஸ் அவர்களின் இனைஇயக்குனராக பணியாற்றியவர் தன் உதவிஇயக்குனருக்கு சங்கர் பாணியில் Fox Studios என்கின்ற ஹாலிவுட் நிறுவனமும் முருகதாசும் இணைந்து தொடங்கி வாய்ப்பளித்துள்ளனர்
வெயில் அங்காடித்தெரு தென்மேற்குபருவக்காற்று போன்ற படங்கள் பெரிய நடிகர்கள் ஏதும் இல்லாமல் எளிமையாக எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்று பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது அதுவும் அங்காடித்தெரு கேரளாவில் நன்றாக ஓடியது
குத்துபாட்டு துதிபாடல் 100 200 பேர்களை அடித்து துவைக்கும் ஹீரோ என இல்லாமல் எளிமையாக எடுக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெருகின்றது மக்களின் ரசனையும் மாறிக்கொண்டு வருகிறது
முருகதாஸ் படங்களில் டைட்டில் கார்டு வித்தியாசமாக இருக்கும் கஜினியில் மனிதமூளைக்குள் கேமரா செல்வது போன்று கிராபிக்ஸ் மிரட்டும் ஹிந்தி இயக்குனர்களையே புருவத்தை உயர்த்த வைத்தது
இதிலும் பஸ்சுக்குள் செல்லும் போது குலுங்கும் எபெக்ட்டை கொண்டு வந்திருக்கின்றார்கள் அருமை அருமை
படம் இரண்டு பேருந்து பயங்கரமாக நேருக்குநேர் மோதிக்கொள்வதிலிருந்து ஆரம்பிக்கின்றது முதல்காட்சியே நம்மை நிமிர்ந்து உக்காரவைக்கின்றது அனைனாவின் பிளாஸ்பேக் காதல் காட்சி அழகான கவிதை அனைனாவின் ஜோடி ஸ்ரவனந் இயல்பான நடிப்பால் கவர்கின்றார்
என்னங்க சென்னைல எல்லாரும் அட்ரச நீளமாத்தான் சொல்லுவாங்களா? என்று அனைனா கேட்க
அவங்க உங்களுக்கு சொன்னது வழி..! அட்ரஸ் இல்லை என்று ஸ்ரவனந் சொல்லும் காட்சி உண்மையை கூறுகின்றது
கோவிந்தா...கோவிந்தா... பாடலில் காட்சியமைப்பு சிறப்பு போனில் பேசிக் கொண்டுருக்கும் பெண்ணின் உள்ளாடை தெரிவதை சுட்டிக்காட்டுகிறார் அனைனா சரி செய்து கொண்ட பெண் வில்லேஜ் கேர்ள் என சொல்ல ஹலோ "ஜ ம் பி ஈ கம்ளீட்டெடு 92 பர்செண்ட்" சொல்லும் காட்சி கிராமத்தை சேர்ந்தவர்களை முட்டாளாக நினைப்பவர்களுக்கு ஒரு சூடு
பேருந்தில் அருகில் அமர்ந்திருக்கும் பெண் செல்லில் பேசிக்கொண்டு வருகிறாள் "டேய் போனை வை... அப்பா லைனில் வருகிறார்.. என்கிறார் கட் செய்து விட்டு வந்த காலினை எடுத்து இல்லடா அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் என்று அவனுடன் மொக்கை போடுகிறார் அந்த காட்சியில் அனைனா முழிப்பது சூப்பர்
அனைனா தன் அம்மாவிடம் நம்பமுடியவில்லை நம்பாமல் இருக்க முடியவில்லை என்று ஒரு கவிதை சொல்கின்றார் குழம்பிய அம்மா பூசாரியிடம் வேப்பிலை அடிப்பது காமடி கும்மி
அடுத்து அஞ்சலி ஜெய் பிளாஸ்பேக் அஞ்சலி வர வர நடிப்புல கலக்கறாங்க அம்மணி பீல்ட கலக்கபோகுதுன்னு நினைக்கிறேன்
டீச்சர் மாதிரி ஜெய்யை மிரட்டுவதும் ஓட்டுவதும் ஜெய் சின்ன பையன் மாதிரி அஞ்சலி சொல்ரதெல்லாம் கேட்பதும் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்கின்றது
அஞ்சலியின் அப்பாவை பார்க்கும் காட்சியும் துணிகடையில் கலாய்ப்பதும் கா.ஃபி ஷாப்பில் ஒரு காஃபி 80 ரூபாயா பீரே 65 ரூபாய்தான் என்று ஜெய் சொல்வதும் அப்ப நீ பீர் குடிப்ப என அஞ்சலி கேட்க ஜெய் சமாளிக்கும் காட்சியும் சிரிக்க வைக்கின்றது
ஜெய்யிடம் சொல்லாமல் ரத்தத்தை எடுத்து டெஸ்ட் செய்த நர்ஸ் அஞ்சலியிடம் என்னை கேட்காம hiv test எடுத்தீங்க என ஜெய் கேட்க
"நீ என் அத்தை பையனா? மாமன் பையனா? உண்னை பத்தி தெரிஞ்சுக்க இப்ப டெஸ்ட் சொல்லிருச்சு நீ.. நல்ல பையன்னு.. லவ் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் என்று சொல்கிற இடம் அதகளம்
சரி ஒகே ஜ லவ் யு என்று சாதரணமாய் அஞ்சலி சொல்லும் இடம் அப்பப்பா தியேட்டரே அதிர்கின்றது
பேருந்துக்குள் பிகரை கரைட் செய்யும் மாணவன் அவர்களுக்குள் காதல் மலர்வது அழகு அதுவும் காதலி பேனா கேட்க பின்னால் இருப்பவர் எடுத்து தர அவரிடம் கெஞ்சி வாங்கி தருகிறான்
ஹலோ என் போன் நம்பர் குறிச்சுக்குங்க என்று காதலன் வராத போனை காதில் வைத்து காதலிக்கு போன் நம்பர் தருவதும்
காதலியும் தன் போனை எடுத்து தன் நம்பரை சொல்ல புது முறைய இயக்குனர் காதலருக்கு சொல்லியிருக்கிறார்
பேருந்து விபத்தை முதல் காட்சியில் காட்டி விடுவதால் 5 வருடத்துக்கு பின் தன் ஆசை மகளை பார்க்க வரும் அப்பா, அம்மா, குழந்தை ஜாலியாக போகும் பயணம் விபத்து ஏற்படும் பதைபதைப்பை நமக்கு ஏற்படுத்தியுள்ளது விபத்து காட்சி final destinationஐ ஞாபகப் படுத்தினாலும் சிறப்பாக எடுத்துள்ளார்கள் படம் பார்க்கலாம் பார்க்க வேண்டிய படம் என்பதில் ஐயமில்லை
மொக்கை------------------ சுமார்------------------ பார்க்கலாம்------------------ சூப்பர்
Read more...