பிரபல பதிவர் சூனாபானா பேட்டி....!

>> Sunday, July 8, 2012


இந்த கதையில் வரும் சம்பங்கள் பெயர்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல



அண்ணே..! வணக்கம்ண்ணே! எம் பேரு சூனாபானா என் வலைதளம் பேரும் அதுதாண்ணே...! நான் நிறையப் பதிவு எழுதியிருக்கேன்...! எனக்கு செவ்வா கெரகத்தில இருந்தெல்லாம் மெயில் வரும்! நல்லா எழுதுவேன் என் பதிவ படிச்சா உங்களுக்கு அறிவு பெருகும் ஒம்பதாம் கிளாஸ் பாடபுத்தகத்தில் என்னுடைய கவிதைய போடலாமின்னு கவருமெண்ட்டு இருந்துண்ணே! ஆனா பாருங்க அந்த கவிதைய யாரோ வைரமுத்துவாம் காப்பியடிச்சு சினிமாவுல போட்டுட்டாராமில்ல....எதுக்கு இந்த வேலை அந்தாளுக்கு...? சரி போனா போவுது .....த்தா நம்ம கவிதைய வச்சு ஒருத்தன் பொழைக்கிறான்னு விட்டுட்டேன்.


முந்தாநாளு ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு இருந்தேன், காசு கொடுக்காம தின்னுட்டு நைசா எப்படி ஓடலாம்மின்னு ரோசனை பண்ணிட்டு இருந்தேன், நான் எப்பவும் இப்படித்தான் எவனாவது என் ரசிகன் கிடைச்சா அவன் தலையில கட்டிட்டிடுவேன், எவனும் கிடைக்கிலைன்னா... நைசா கை கழுவிட்டு வெளிய வருவேன்...யாரும் கவனிக்காத போது காசு கொடுக்காம ஓடிடுவேன்.

இப்படி ரோசனை பண்ணிட்டு இருக்கும் போது ஒரு கை என் தோளை தட்டுது! ஆர்ராது...? அப்படின்னு பாக்குறேன் நெட்டையா ஒரு பையன் கூலிங்கிளாஸ் போட்டிட்டு நிற்குது, ஆராவது ஊசி போடுற ஆபிசரா இருக்குமோன்னு ஒரு பயம் என் மனசுக்குள்ள....இருந்தாலும் தெகிரியமா...


என்ன...? அப்படின்னு தலையாட்டுறேன்...! சார் நீங்கதானே சூனாபானா அப்படிங்கிறாரு....


ஆமா...! நான்தான் சூனாபானா...!அப்படிங்கிறேன்!


சார்! உங்க கைய கொடுங்க சார்...!அப்படின்னு சிங்காரவேலன்ல குசுப்பு ஆர்மோனியம் வாசிக்கிறவனுக்கு முத்தம் கொடுக்குமே...!அந்த மாதிரி கொடுக்குது அந்த பையன்...! அட பராவாயில்லையே....நம்ம எழுத்தை இந்த அளவு ரசிக்கிறாரே இந்த பையன் அப்படின்னு மெய் சிலித்துப் போச்சு! அப்புறம் அந்த பையனும் ஏதோ பதிவு எழுதறாப்படின்னு சொன்னாப்டி என்ன பேரு...ஞாபகம் வரலியே....... ஆ...வந்திருச்சு அட்ராசக்கையாம் பேரு சிபி செந்தில்குமாராம் பையன் நல்ல மருவாதையான பையன் நீங்களும் அந்த பையன் பதிவ படிச்சு ஆதரவு கொடுங்க....பாவம் வளர்ர புள்ள.....


நல்லபையன்...! ஆனா ஒன்னு நான் சாப்பிட்ட பதினாறு இட்லிக்கு காசு கொடுத்திட்டு போய்யான்னே...! அட போண்ணே...! நானே எழுமிச்சை பழச் சாதம் கட்டுசோறு வூட்ல கட்டிட்டு வந்து சாப்பிட்டு இருக்கிறேன் காசாம்...காசு...! அப்படின்னாப்டி என்னை விட தில்லாங்கடி போல.......


இப்படி எனக்கு ரசிகர்கள் அதிகம் அதனால எப்பவும் ஹெல்மெட்டோட தானே இருப்பேன்...!ஆனா என்னைப் பிடிக்காத நாதாரிக மட்டம் மத்தியாணம் நான் வந்திட்டு இருந்தப்ப என் சொட்டை மண்டை வெளிச்சம் காரணமா கண் கூசி பஸ் ஆக்ஸிடென்ட் ஆனதா புரளிய கிளப்பி விட்டுட்டாங்க அதை நீங்க நம்பாதிங்க....


நான் ஒருக்கா சென்னை போனேன்...நல்ல பசி சரி சாப்பிடுவோம் அப்படின்னு ஒரு சின்ன ஹோட்டல் தாஜ்கொரமண்டல் போனேன், அது பைவ் ஸ்டாராமாண்ணே! நான் பெரும்பாலும் டென் ஸ்டார் ஓட்டல்தாண்ணே! போவேன், சென்னையில...இல்லையாமே! சரி பசி ருசி அறியாது அப்படின்னு அங்க போய் சாப்பிட்டு இருந்தேண்ணே! அப்ப குண்டா அமுல் பேபி மாதிரி ஒருத்தரு பிரியாணிக்கு கெட்டிசட்னி கேட்டு பேரர் கிட்ட சண்டை போட்டிட்டு இருந்தாருண்ணே...! அவர எங்கியோ பார்த்த மாதிரி இருக்குன்னு பார்த்தேன்! அவரு என்னைப் பார்த்தாரு சார் அப்படின்னு ஸ்லோமெஷன்ல ஓடி வர்ராரு......ஹோட்டல் அதிர்ந்து பூகம்பம் வந்திருச்சோன்னு எல்லாரும் பயந்தாங்க.....ஆனா அசம்பாவிதம் எதுவும் நடக்கலை...!


பக்கத்துல வந்து சார் நீங்க சூனா பானாதானே அப்படின்னாரு....! 


ஆமா.....நீங்க...அப்படின்னேன்!


என்னை விடுங்க சார்...! நீங்க எழுதின அவதார் விமர்சனத்துக்கு ஜேம்ஸ்கேம்ரூன் கமெண்ட் போட்டிக்கார் சார்...! நீங்க ஜீனியஸ் சார் அப்படின்னாரு...!


(ஹஹ அது என் போல்க் ஐடி நானே கமெண்ட் போட்டது நெசம்ன்னு நம்பிட்டாரே...!) ஆமா....ஆமா...!


அப்புறம் அவர் வாங்கிய பிரியாணி பொட்டலத்தில் என் கையெழுத்த ஆட்டோகிராப் மாதிரி வாங்கிட்டாரு...! நல்ல மனுசன் போறப்ப ரண்டு உளுந்து வடை வாங்கி ஊட்டி வேற விட்டாரு...! பாசக்கார மனுசன் அவர் பேரு கூட என்னவோ கேபிள்ன்னு வரும் கேபிள் சுதாகரா என்னவோ பேரு சொன்னாரு...!


இப்படி தீவிர ரசிகரை கொண்ட என் எழுத்து பணிக்கு ஒரு சோதனை சார்.....அண்ணே! அந்த சம்பவத்துக்கு பிறகு நான் எந்த ரசிகர்களையும் சந்திப்பதில்லை அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்....அந்த சம்பவம்!




செரியா நைட் 12.00மணிக்கு ஒரு போன் யாருன்னு எடுத்துப் பாத்தேன் புது நெம்பர் ஆரா இருக்குன்னு ரோசிக்கிறேன் தெரில்ல...!


ஆருப்பா...நீ..?!


அண்ணே நா...உங் ரசிகங்கன்னா...! அப்பிடிங்கிரான் எவனோ...!


தம்பி ராங் நெம்பர்!


ந்னா! நீங்க சூனாபானாதானே அப்படிங்கிறான்...!


ஆமாய்யா...! நாந்தான் ஒரு வேளை நம்ம பிரண்ட் வெளையாடுகிறானுகளோ...! அப்படின்னு நெனைச்சுட்டு பேச்சை கொடுக்கிறேன்.....


அண்ணா என்க்கு வாழ்க்கையே புடிக்கலண்ணே...!நான் தூக்கு மாட்டி சாவப்போறேன் அதுக்கு முன்னாடி ஓங்கோட பேசனும்!


எலேய்! ஏண்டா இப்பிடி சனியன கொண்டு வந்து விடுறே! என் கூட கடைசியா பேசிட்டு செத்தீன்னா என்னை வந்து ரிவிட் அடிப்பானுகடா....வேண்டாம்டா பிக்காளிப் பயலே அப்படிங்கிறேன்!


இல்லைண்ணே! சாகறதுக்கு முன்னாடி பேஸ்புக்ல நான் சாவப்போறேன் அப்படின்னு ஸ்டேட்டஸ் போட்டிட்டு இருந்தண்ணே...! அப்ப யாரோ உங்க சைட்ட சேர் பண்ணிருந்தாங்கண்ணே..! சும்மா கைதவறி கிளிக் பண்ண ஓப்பன் ஆயிருச்சுண்ணே...! படிச்சேண்ணே! அதனால சாவறதுக்கு முன்னாடி உங்க கிட்ட பேசனும்ன்னு ஆசைப் பட்டேண்ணே! இப்ப நாம மீட் பண்ணலாமாண்ணே.....!


அட எடுபட்ட பிக்காளிப் பயலே...!மணி என்ன ஆவுது பார்த்தியாடா..!ராத்திரி 12 மணி இன்னிக்கு நான்தான் கிடைச்சனா...!டேய் விட்ரா மீ.... பாவம்!


பாவமாவது புண்ணியமாவது நான் உன்னை பார்க்கனும்....அவ்வளவுதான் இல்லை என் சாவுக்கு நீதேன் காரணம்ன்னு எழுதி வைச்சுட்டு செத்து போயிடுவேன்!


அட டேய் தம்பி...! வேண்டாம்டா இதோ இப்ப வரேன் அப்படின்னு பைக்க எடுத்துட்டு போறேன்...அவன் சொன்ன இடத்தில போய் நின்னேன்!


நல்ல பல்க்கா இருந்தாண்ணே! வந்தான்...நீதானா அது அப்படின்னா...


ஆமாம்! அப்படித்தாண்ணே...! சொன்னேன்! 
குனிய வச்சு குமுறு..குமுறுன்னு குமுறிட்டண்ணே!
என்னா அடி....! ங்கொய்யால......! 


போகும் போது சொன்னாண்ணே! உன் பதிவ படிச்சிட்டு இத்தனை பேரு உயிரோடு இருக்கும் போது...!நான் மட்டும் ஏன் சாவனும் @$#$%$ அப்படின்னு கெட்ட வார்த்தையில திட்டிபுட்டு போயிட்டான்னே! ரொம்ம மன்சுக்கு கஸ்டமா இருக்குண்ணே...! 


டிஸ்கி: பல்க் ஆசாமி என்னை குமுறியதில் மேல் உள்ள புகைப்படத்தில் இருப்பதைப் போல் நான் நடப்பதால் என் ரசிகர்கள் எனக்கு மருத்துவ உதவித் தொகை அனுப்பும் போது பணக் கட்டில் நாமம் போட்டு அனுப்பவும் புலிபாணி சோசியர் சொல்லியிருக்கிறார்.....ஆங்!
---------------------------------------------------------------------------------------------------------------------
சூனாபானா அடிவாங்கியபோது கதறியதை மொபைலில் பதிந்து எனக்கு மெயில் அனுப்பியுள்ளார் பல்க் ரசிகர்....நீங்களும் கேட்டு ரசிங்க....ச்சீசீ...அழுங்கய்யா......அழுங்க......

சூனா பானவுக்காக உங்கள்
வீடு சுரேஸ்குமார்...

38 comments:

Unknown 7:07:00 PM  

என்னவே பய புள்ளயோட துண்ட(!) உருவிட்ட...இரு இரு...2000 பேர் வந்து உம்ம கும்ம போறாய்ங்க!

Unknown 7:27:00 PM  

@விக்கியுலகம்என்னவே பய புள்ளயோட துண்ட(!) உருவிட்ட...இரு இரு...2000 பேர் வந்து உம்ம கும்ம போறாய்ங்க!
////////////////////
ஹஹா! மாம்ஸ் எனக்கு ஆதரவா என் ஆப்பிரிக்கா ரசிகர்கள் இருக்கிறார்கள்........

முத்தரசு 8:34:00 PM  

தக்காளி சட்னியா இருக்கே

முத்தரசு 8:34:00 PM  

உகாண்டா ரசிகர்களே எங்கேப்பா போனீங்க வாங்க

Unknown 8:44:00 PM  

@மனசாட்சி™தக்காளி சட்னியா இருக்கே
//////////////////
தோசைக்கு தொட்டுக்கத்தான்....
--------------------------------

உகாண்டா ரசிகர்களே எங்கேப்பா போனீங்க வாங்க
////////////////////////////
ஜிகர்தண்டா சாப்பிட போயிருக்காங்க...மாம்ஸ்!

நாய் நக்ஸ் 8:50:00 PM  

இனி உலகத்தில எங்க எது நடந்தாலும்....
எனக்கு போன் பண்ணிட்டுதான் நடக்கும்.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

நாய் நக்ஸ் 8:53:00 PM  

அது இன்னாயா ஆடியோ....
சரியா இல்லையே.....
இப்படி இருக்கணும்.....

டேய்...டேய்...."அத" பிடிக்காதடா...
வலிக்குதுடா.....

டேய்...டேய்...
பிதுக்காதடா.....
உசிர் போயடும்டா.....

நாய் நக்ஸ் 9:06:00 PM  

அது எப்படியா...???
எதுவுமே நடக்காதபோது....
நடந்த மாதிரியே புனைவு பதிவு(கதை)எழுதுறீங்க....?????

Unknown 9:08:00 PM  

@NAAI-NAKKSஇனி உலகத்தில எங்க எது நடந்தாலும்....
எனக்கு போன் பண்ணிட்டுதான் நடக்கும்.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
/////////////////
ஒபாமாவுக்கே அகிடியா கொடுக்கும்
எங்கள் பிராப்ல பதிவர் நீர்!

Unknown 9:09:00 PM  

@NAAI-NAKKSஅது இன்னாயா ஆடியோ....
சரியா இல்லையே.....
இப்படி இருக்கணும்.....

டேய்...டேய்...."அத" பிடிக்காதடா...
வலிக்குதுடா.....

டேய்...டேய்...
பிதுக்காதடா.....
உசிர் போயடும்டா.....
/////////////////////////////
அதில்ல இது...!அய்யோ...!அய்யோ!

Unknown 9:13:00 PM  

@NAAI-NAKKSஅது எப்படியா...???
எதுவுமே நடக்காதபோது....
நடந்த மாதிரியே புனைவு பதிவு(கதை)எழுதுறீங்க....?????
/////////////////////
ராஸ்கல் யாருகிட்ட என்ன பேசுற
பிளடி பூல் பிச்சுபுடுவேன் பிச்சு...!
அவன்னவன் அடிவாங்கிட்டு அழுவறது
உனக்கு விளையாட்டா.....

போங்கப்பு...எதாவது வேலையிருந்தா பாருங்க...சூனா பானா டென்சன்ல இருக்கறன் எதாவது ஏடாகூடமாயிரும்...

வெளங்காதவன்™ 9:22:00 PM  

என்ன ஆச்சு சார்?

ஒண்ணியும் வெளங்கலியே!!

Unknown 9:52:00 PM  

@வெளங்காதவன்™என்ன ஆச்சு சார்?

ஒண்ணியும் வெளங்கலியே!!
////////////////
ஒரு டம்ளர் வௌக்கெண்ணை குடிங்க தம்பி வௌங்கிரும்...!
டேய் சூனா பானா அலர்ட்டா இருந்துக்க....பயபுள்ள நம்மகிட்டியே போட்டு வாங்குது....!

அஞ்சா சிங்கம் 9:56:00 PM  

ரைட்டு சைத்தான் சைக்கிள்ள போகுது ...................

சங்கம் ரொம்ப பெருசாகிகிட்டு போகுது .........

அஞ்சா சிங்கம் 9:59:00 PM  

இதைவிட அதி பயங்கர ஆடியோ நம்ம பிரபா கிட்ட இருக்கு புல்லா ஒரிஜினல் . தக்காளி அத மட்டும் எவனாவது கேட்டான் சேகர் செத்திருவான் ....................

கேரளாக்காரன் 10:00:00 PM  

Super


Appo bus accident aanathukku ithuthaan reason - ah?

கேரளாக்காரன் 10:02:00 PM  

Audio enga? Mobile la theriyamaattudhu :(

Unknown 10:02:00 PM  

மாம்ஸ் அந்த சூனாபானா வெளங்காதவந்தான?

rajamelaiyur 10:07:00 PM  

சூனா பானா க்கு சூனியம் வச்சிட்டிங்க

முத்தரசு 10:11:00 PM  

//இரவு வானம் said...

மாம்ஸ் அந்த சூனாபானா வெளங்காதவந்தான?//

மாப்ளே, க்கும் வெளங்கிரும் - வெளங்காதவன் அதுக்கெல்லாம் சரி பட்டு வராது.

Unknown 10:13:00 PM  

@அஞ்சா சிங்கம்ரைட்டு சைத்தான் சைக்கிள்ள போகுது ...................

சங்கம் ரொம்ப பெருசாகிகிட்டு போகுது .........
////////////////////
தம்பி நாங்க ஏரோபிளேனையே அருனாகயிறுல கட்டி வைக்கிறவங்க...
சைத்தானுக்கே டெரர் காட்டிடுவோம்....!சின்னபுள்ளத்தனமா பேசிக்கிட்டு...!

Unknown 10:16:00 PM  

@அஞ்சா சிங்கம்இதைவிட அதி பயங்கர ஆடியோ நம்ம பிரபா கிட்ட இருக்கு புல்லா ஒரிஜினல் . தக்காளி அத மட்டும் எவனாவது கேட்டான் சேகர் செத்திருவான் ....................
///////////////////
அப்படியா...கொடுங்கய்யா அடுத்த பதிவுல போட்டிடுவோம்...கலகலன்னு இருக்குமல்ல....

Unknown 10:18:00 PM  

@மௌனகுரு
மௌனகுரு said...
Super


Appo bus accident aanathukku ithuthaan reason - ah?
////////////////////
புரளிகள் என் கால் தூசிக்கு சமம் தம்பி..!பிகேர்புல்! அதையெல்லாம் நம்பாதிங்க...!

Unknown 10:20:00 PM  

@மௌனகுருமௌனகுரு said...
Audio enga? Mobile la theriyamaattudhu :(
//////////////
அட போங்க தம்பி! எனக்கு தொழில்நுட்பம் தெரியாது...கமெண்ட் மாடுரேசன் வக்கக்கூடத் தெரியாது!

Unknown 10:30:00 PM  

@இரவு வானம்மாம்ஸ் அந்த சூனாபானா வெளங்காதவந்தான?
/////////////////
தம்பி...!என்ன லந்தா...!ரத்தக்களரியாயிடும்...பீகேர்புல்!

Unknown 10:32:00 PM  

@"என் ராஜபாட்டை"- ராஜாசூனா பானா க்கு சூனியம் வச்சிட்டிங்க
/////////////////
வாத்தி தம்பி...!சூனியம் எடுக்கிரதுதான் எங்க வேலை! வெக்கரது இல்லை...! பாவம் யார் பெத்த புள்ளையோ..!அட்ரஸை தொலைச்சுட்டு அல்லாடுது..!

Unknown 10:34:00 PM  

@மனசாட்சி™மனசாட்சி™ said...
//இரவு வானம் said...

மாம்ஸ் அந்த சூனாபானா வெளங்காதவந்தான?//

மாப்ளே, க்கும் வெளங்கிரும் - வெளங்காதவன் அதுக்கெல்லாம் சரி பட்டு வராது.
//////////////////
வௌங்காதவன் சர்பத் குடிக்கிறத பார்த்திருக்கும் பயபுள்ள...!

காட்டான் 12:06:00 AM  

பயபுள்ள உலகம்பூரா ரசிகர்கள் வைத்திருக்கிறது உண்டியல் குலுக்கதான்போல.? என்னமோ போய்யா இது யாருக்கோ போட்ட உள்குத்துபோல இருக்கே...  இப்ப அகில உலக சூனாபானா  ரசிகர்கள எப்பிடியப்பா சமாளிக்கப்போற.?

Athisaya 12:12:00 AM  

ஏன் இந்த கொல வெறி..புழைக்க வந்த இடத்துல அந்தாளு பெருமைகளை பேசி ஏம்பா அவ பகுழைப்ப கெடுக்கிறீங்க..அந்தப் பிள்ளை பூச்சிட பாவம் சும்மா விடாதுலே....

MARI The Great 2:31:00 AM  

சிங்கம்.. களம் இறங்கிருச்சு டோய் :D :D

MANO நாஞ்சில் மனோ 3:22:00 AM  

அந்த ஹோட்டல்ல பூகம்பம் வந்து கிடு கிடுன்னு ஆடுனதா பேப்பர் நியூஸ் வந்துச்சே...?!

Unknown 6:01:00 AM  

@காட்டான்பயபுள்ள உலகம்பூரா ரசிகர்கள் வைத்திருக்கிறது உண்டியல் குலுக்கதான்போல.? என்னமோ போய்யா இது யாருக்கோ போட்ட உள்குத்துபோல இருக்கே... இப்ப அகில உலக சூனாபானா ரசிகர்கள எப்பிடியப்பா சமாளிக்கப்போற.?
//////////////////
தப்புண்ணே....!ஒலகம் பூரா இல்லை செவ்வா கெரகம், வெயாழன், இதிலெல்லாம் ரசிகர் இருக்காங்க....

Unknown 6:03:00 AM  

@Athisayaஏன் இந்த கொல வெறி..புழைக்க வந்த இடத்துல அந்தாளு பெருமைகளை பேசி ஏம்பா அவ பகுழைப்ப கெடுக்கிறீங்க..அந்தப் பிள்ளை பூச்சிட பாவம் சும்மா விடாதுலே....
//////////////
எது புள்ளப் பூச்சியா டைனேசர்....இதெல்லாம் ஒரு பொழப்பா...சூனா பானாவுக்கு..ஹிஹி!

Unknown 6:04:00 AM  

@வரலாற்று சுவடுகள்சிங்கம்.. களம் இறங்கிருச்சு டோய் :D :D
////////////////
சிங்கம் என்னிக்கும் சிங்கிளாத்தான் வரும்.....

Unknown 6:05:00 AM  

@MANO நாஞ்சில் மனோஅந்த ஹோட்டல்ல பூகம்பம் வந்து கிடு கிடுன்னு ஆடுனதா பேப்பர் நியூஸ் வந்துச்சே...?!
////////////////////
ஆமா....!தினத்தந்தியில வந்தது....!

”தளிர் சுரேஷ்” 9:12:00 AM  

சூப்பர் பேட்டி! கங்கிராட்ஸ்! அடிவாங்கியதுக்கு அல்ல!

Unknown 8:57:00 PM  

@s sureshசூப்பர் பேட்டி! கங்கிராட்ஸ்! அடிவாங்கியதுக்கு அல்ல!
///////////////
நன்றி சார்..!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP