எண்பதுகளின் தமிழ்சினிமா பிரம்மாக்கள்-பாரதிராஜா
>> Sunday, July 22, 2012
மண்வாசனை திரைப்படம் வெளியாகிருந்த சமயம், என்பதுகளில் ஒருதிரைப்படம் பெரும்நகரங்களில் திரையிடப்பட்டு, ஓடிமுடித்து சிறிய நகரங்களைத் தாண்டி கிராம டூரிங்டாக்கிஸ்க்கு வருவதற்குள் அந்த இயக்குனரின் அடுத்த படமே வெளியாகிவிடும். இன்று போன்று இணையம், தொலைக்காட்சி எதுவுமில்லாத சூழ்நிலையில் வாய்வழி விளம்பரங்கள் மூலமே ஒரு திரைப்படம் வெற்றிபெறும் காலக்கட்டம்! கூட்டம் கூட்டமாக மக்கள் இரவுகாட்சிக்கு சென்று கொண்டிருந்தார்கள் அதைப்பார்த்த நான் "என்ன படத்திற்கு போகிறீங்க?" என்று கேட்டேன் பதில் "பாரதிராசா படம் பார்க்க போகிறோம்...!" என்று வந்தது ஒரு இயக்குனருக்காக படம் பார்க்க செல்லும் தமிழ் சினிமா ரசிகர்களை உருவாக்கியதில் பாரதிராஜா முதன்மையானவர்! என்று அறிந்து கொண்டேன் அதனால் மண்வாசனை திரைப்படம் பார்க்க வேண்டும் என்கின்ற ஆவலை உண்டு பண்ணியது!
செட் மூலமாக எடுத்துக் கொண்டிருந்த திரைப்படத் துறையை புழுதி பறக்கும் கரிசல் மண்ணிற்கு அழைத்துச் சென்ற பெருமை பாரதிராஜாவையே சாரும்! ஆம்! வெளிப்புறப் படப்பிடிப்பு முறையைக் கொண்டு வந்தவர் இவர்தான். புது முகங்களை அறிமுகப் படுத்துவதை அதிக அளவில் கொண்டு வந்தவரும் இவர்தான், மண்வாசனையில் நடித்த அனைவரும் புதிய நடிகர்கள், பாண்டியன்,ரேவதி, போன்றவர்கள். பழம்பெரும் நடிகை காந்திமதி அவர்கள் கிழவி வேடத்தில் தொங்கும் லோலாக்கு காதுடன் பழமொழி பேசி மதுரை வட்டாரவழக்கைப் பேசும் கிழவியை கண் முன்னே நிறுத்தினார், தூய தமிழில் நாடகத்தன்மையாக இருந்த திரையுலகை வட்டார வழக்கின் பால் கொண்டு வந்தார், ரோஸ் நிற பவுடரை ஒரு இன்ச் அளவுக்கு மேக்கப் போட்டு உயர்த்திய கொண்டை போட்ட கதாநாயகிகளுக்கு பதிலாக வௌக்கெண்ணை வடியும் முகத்துடன் கதாநாயகி, நாயகன் பாண்டியன் ஏய் என்ன புள்ள..? என்று பேசும் மதுரை பாசையின் இயல்பான நடை என பாராதிராஜா புது வடிவத்தை கொண்டு வந்தார்.
முதல் படமான பதினாறு வயதினிலே படத்தின் கதை வசனம் ஒலிநாடா இல்லாத வீடே இருக்காது, டீக்கடை கோவில் விழாக்களில் இந்த வசனக் கேஸட்டைப் போட்டுவிடுவார்கள், எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத வசனம், சப்பாணியாக கமலும் வில்லன் பரட்டையாக ரஜினியும் சேர்ந்து நடித்திருப்பார்கள், கிராம முரட்டு உருவங்களின் உள்ளேயும் இருக்கும் ஈரத்தை வெகு சிறப்பாக எடுத்திருப்பார். நாயகி கண் சிமிட்டுவதையும் பட்டாம்பூச்சி சிறகடிப்பதையும் மாறிமாறிக் காட்டுவது, நாயகி கைகளால் முகத்தை மறைத்து வெட்கப்பட்டு சிரிப்பது போன்ற காட்சிகள் இவர் படங்களில் அதிகமாக இருக்கும். இப்பொழுது பார்க்கும் போது நாடகத்தன்மையாக தெரிந்தாலும் ஒரு அழகியல் ரசனையோடு இருப்பதை மறுக்க முடியாது.
இவர் எடுத்த கிழக்கே போகும் ரயிலைப் பார்த்து காதலித்து ஓடிப்போன ஜோடிகள் ஏராளம்! இவர் வெறும் கிராமிய பின்னணி கொண்ட திரைப்படங்களை எடுப்பவர் என்கிற விதியை சில படங்களில் உடைத்தார், சிகப்பு ரோஜாக்களில் கமலை வைத்து ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படத்தை எடுத்து சிறப்பாக ஓடி வெற்றி பெற்றது. பழிவாங்கும் ரிவேன்ச் வகைத் திரைப்படம் கைதியின் டைரி, மற்றும் கமல் சரிகா நடித்த டிக்...டிக்..டிக்...சிறப்பாக ஓடியது ஆனால் 90ற்கு மேல் எடுத்த கேப்டன் மகள், கண்களால் கைது செய் இரண்டு திரைப்படங்களும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக மிகச்சிறப்பான படமாக இருந்தும் வெற்றி பெறவில்லை!
சமூக இழிவுகளை சுட்டிக்காட்டி எடுத்த வேதம் புதிது திரைப்படம் பெரிய போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்தது.அந்த திரைப்படத்தில் பிராமணீயத்தின் தீண்டாமையையும், பகுத்தறிவாளராக இருந்தாலும் ஜாதி சாயத்தை விடாத பாலுதேவர் என்கிற கேரக்டரையும் உருவாக்கி ஜாதி வெறியர்களுக்கு சாட்டையடி கொடுத்தார். புதுமைபெண் என்கிற திரைப்படம் பெண் சமுதாயம் பெற வேண்டிய விழிப்புணர்ச்சி பாடமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.மேலும் வேலையில்லாதக் கொடுமைகளை சித்தரிக்கும் நிழல்கள் திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்துவின் திரையுலக பிரவேசமும் அதன் பின்னர் இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என்கிற மூவர் கூட்டணி என்றும் அழியாத பல காதல் கீதங்களை தமிழ் திரையுலகத்திற்கு அர்பணித்தது. அலைகள் ஓய்வதில்லை திரைப்பட பாடலான வாடி என் கப்பக்கிழங்கே பாடலைப் பாடி இளைஞர்கள் பெண்களை கிண்டல் செய்ததால், பொது இடத்தில்அந்த பாடலைப் பாட தடை விதிக்கப் பட்டதாக ஒரு செய்தி வந்தது அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை!
படிக்காத மூடனான சின்னப்பதாஸ் குடித்துவிட்டு ரகளை செய்து அடிக்கடி ஜெயிலுக்கு போகும் ஒருவன் கல்வி பெற்றதால் என் மாதிரி மாறிப் போகிறான் என்பதையும், ஒரு அழகான காதலையும்... சத்தியராஜ், ரேகா நடித்த கடலோரக் கவிதைகள் மிகச்சிறப்பான படம். நடிகர் திலகத்தை வைத்து எடுத்த முதல்மரியாதையில் மூக்கையாதேவனாக வாழந்த நடிகர்திலகம் அனைவரையும் கவர்ந்தார், மூக்கையாவுக்கு வாய்த்த வாயாடி மனைவியான வடிவுகரசியின் நடிப்பு மிக சிறப்பானது, ராதாவுக்கும் அவருக்குமான மெல்லிய இழையோடிய அன்பு காதலாக மாறுவதை மனிதர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள்தான் எவ்வயதிலும் என்பதை மிகச்சிறந்த திரைக்கதை மூலம் தமிழ் சினிமாவுக்கு அர்பணித்தார் பாரதிராஜா என்றே கூற வேண்டும்.
நாடோடித் தென்றல் என்கிற திரைப்படத்தில் நித்தி புகழ் ரஞசிதா அறிமுகம் நடந்தது ஆங்கிலேயர் காலத்தில் நடந்த ஒரு காதலை மையமாக வைத்து இயக்கப்பட்ட சிறந்த திரைப்படம் இந்த படத்தில் இருந்து இளையராஜாவுடன் விரிசல் ஏற்ப்பட்டது அப்பொழுது A.R.ரகுமான் இவருடன் இணைந்தார்.
அண்ணன் தங்கை பாசத்தையும் கிராமத்தான்களின் முரட்டுதனத்தையும் வைத்து எடுத்த கிழக்கு சீமையிலே பெரிய வெற்றி பெற்றது.
பெண்சிசுக் கொலை அதிகமாக தமிழகத்தில் தேனி, உசிலம்பட்டியில் நடந்த காலக்கட்டத்தில் அதை வைத்து கருத்தம்மா என்று தன் தாயாரின் பெயரை வைத்து எடுத்த திரைப்படம், பெண் சிசுக் கொலைக்கு எதிரான போராட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது! வாயோதிக வயதில் பணமில்லாத ஏழைகள் என்ன துன்பத்தைஅனுபவிக்கின்றார்கள் என எடுத்த அந்தி மந்தாரை வெற்றி பெறவில்லையென்றாலும் சிறந்த படம்.
இறுதியாக பொம்மலாட்டம் என்கிற திரைப்படம் வெளிவந்தது பெண்யில்புகளைக் கொண்ட ஆணை நாயகியாக வைத்து திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனரின் கதை அந்த திரைப்படத்தில் நானா படேகர் மிகச்சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து இருப்பார் எதிர்பார்த்த வெற்றியில்லை என்றாலும் சிறந்த படம். விரைவில் வர இருக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தை காண ஆவலுடன் ஒரு ரசிகனாக இருக்கின்றேன்.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நாயகிகள்
பாரதிராஜா பட்டரையில் உருவான இயக்குனர்கள்
பாக்கியராஜ்,பார்த்திபன்,மனோபாலா,மணிவண்ணன்,
35 comments:
What a Director !! Class !!
மிக அருமையான டைரக்டர். பார்த்த இவரது படங்களில் பிடிக்கவில்லை என்று எதையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு வெயிட்டிங்.
சிறந்த இயக்குனர். அவருடைய அழகான படத்தினை போட்டுள்ளீர்கள். அருமை.
நல்ல நினைவுகள்...பகிர்வுக்கு நன்றி....
மண் வாசத்தை மணக்க வைத்தவர்...மறக்க முடியுமா...நல்ல பகிர்வு..
ரெண்டு நாளைக்கு முன்னால தான் பாரதிராஜாவின் எல்லா படங்களையும் பத்தி ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன்,இந்த பதிவை பார்த்ததும் சந்தோசம்.
இவர் பார்க்காத கைதட்டுமில்லை
இவர் பார்க்காத விசிலுமில்லை
இவர் பட பாடலை முனு முனுக்காத தமிழனும் இல்லை...
அருமை...
கிராமத்து மண் வாசனையை மணக்க வைத்த கிராமத்துராஜா
சரி,, மலரும் நினைவுகள்.....
கிங்மேக்கர் பாரதிராஜா! :)
அருமையான பதிவு பாஸ்..வண்டிச்சோலை சின்ராசு,குருபார்வை போன்ற படங்களை இயக்கிய மனோஜ்குமாரும் இவரின் சீடர்தான்.அவரின் தங்கையைத்தான் பாரதிராஜா திருமணம் செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.
பாரதிராஜாவின் அசைக்க முடியாத சாதனை ஓன்று இருக்கிறது.தொடர்ந்து ஐந்து படங்கள் வெள்ளி விழா.....இந்த சாதனையை இந்தியாவில் வேறு எந்த இயக்குனரும் முறியடித்ததில்லை...
பாஸ்...'நிறம் மாறாத பூக்கள்'.....'புதிய வார்ப்புகள்' விட்டுட்டீங்களே..... இரண்டும் கிளாசிக் மூவிஸ்.
சிவாஜி நடித்த பசும்பொன்,ரஜினியின் கொடிபறக்குது,விஜயகாந்தின் தமிழ்ச்செல்வன்,முரளி நடித்த கடல் பூக்கள் ...இன்னும் ஒரு சில படங்கள் இருக்கு என்று நினைக்கிறேன்...
தி கிரேட் " ரதி " .......ரஞ்சனி கூட இவரின் அறிமுகம்தான்.....
இவர் படத்தில் ஒரு பாடலுக்கு எத்தனை வித விதமா காட்சிகள்.
கட் கட் செய்து ... ஆனாலும் அது கோர்வையாகவும், அழகாகவும் வரும்...
எடிட்டிங் செய்பவர் தான் பாவம்...
மண் வாசனை படம் இன்றும் நினைவிற்கு வருகிறது... அதில் ஒரு காட்சியில் பாண்டியனிடமிருந்து ரேவதிக்கு ஒரு கடிதம் வரும். அதை அவர் வாங்கிக் கொண்டு ஓடி வருவதாக ஒரு காட்சி... அந்தக் காட்சியில் முதலில் வரும் நிலம் இருக்கும். பிறகு நெல் நடுவு, கொஞ்சம் வளர்ச்சி.... இப்படியே முழுதாக நெற்பயிர் வளர்ந்ததை காண்பிப்பார்... அதாவது இவ்வளவு நாள் ஏங்கிய அவளின் மனம் எவ்வாறு மகிழ்ந்ததாக இருக்கும் என்பதாக இருக்கும்...
அவர் படங்களில் ஒவ்வொரு பிரேமும் கதை சொல்லும். கவிதையையும் சொல்லும்.
அவரின் படக் காட்சிகளை எழுத வேண்டுமென்றால் ஒரு பதிவு பத்தாது...
பகிர்வுக்கு நன்றி நண்பரே ! (த.ம. 6)
தாஜ்மகால் எனும் மொக்கை படத்தை ஏன் எடுத்தாரோ. கருத்தம்மா என்னை மிகவும் கவர்ந்த படைப்பு.
நம்ம ப்ரியாமணி விட்டு டிங்க...
எல்லாம் உங்ககாலத்து படமாவே சொன்னா எங்களுக்கு எப்படி புரியுமாம்?
பாரதிராசா அப்படியே எங்க மாம்ச வச்சும் ஒருபடம் எடுப்பா புண்ணியாமா போவும்.
மாம்சு சினிமா நடிகை ராதாவுக்கு லிங்க் கொடுக்காம கிருஷ்ணன் ராதாவுக்கு விக்கிபீடியாவுல லிங்கு கொடுத்திருக்கீங்களே உங்க குசும்புக்கு அளவே இல்லையா? அடுத்து என்ன நக்மாவா?
உண்மையிலேயே தமிழ் சினிமாவுக்கு ஒரு புது பரிமாணத்தை தந்தவர் பாரதிராஜாதான். குறிப்பாக அவரது படங்களில் தவழும் கிராமிய யதார்த்த வாழ்க்கையை வேறெங்கும் காணமுடியாது.
இவரது படங்கள் மண்வாசனை நிறைந்ததாக இருந்தாலும், எல்லாவற்றிலுமே உளவியல் ரீதியான விஷ்யங்கள் கையாளப்பட்டிருப்பது ஆச்சர்யமான உண்மை.
இவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் ஏராளம். தமிழில் ர வரிசையில் தொடங்கும் பெரும்பாலான நடிகைகள் இவர் அறிமுகப்படுத்தியவர்களே. சுகன்யா, மகேஸ்வரி(கருத்தம்மா) மற்றும் பிரியாமணி விதி விலக்கு.
பாரதிராஜா படம் என்றாலே அதில் ஒரு தனி ஈர்ப்பு வரும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இந்த பதிவை தொடருங்கள்
//நித்தி புகழ் ரஞசிதா//
இந்த பதிவிலேயே ஹை லைட் ஆனா விடயமே இது தான் - மாப்ள....யு ஆர் ரியல்லி கிரேட்
பாரதிராஜா இவர் ஒரு தமிழன் என்பதை இங்கே நினைவு கூறுகிறேன்
அருமையான இயக்குனரை அழகாக வெளிப்படுத்திய விதம் அருமை!
நல்ல அலசல்!தமிழக அரசியல் இரட்டை முக ம் சொன்ன என் உயிர்த் தோழன் படத்தையும் குறிப்பிட்டிருக்கலாம்.
நீங்க சொல்லியிருக்கும் லிஸ்ட் ல சொற்ப படங்களே நான் பார்த்திருக்கேன்... ஆனால் எல்லாமே நச்.. நீங்கள் சொல்வது போல அல்லாமல் இப்போது வரும் கிராமத்து படங்களை விட (ஆடுகளம் சுப்ரமணியபுரம் களவாணி தவிர்த்து..)இவர் படங்களில் நாடக தன்மை குறைவு என்பது என் எண்ணம்... குறிப்பா என்னால் சகிக்க முடியாத ஒரு எழவு பருத்திவீரன்..அப்புறம் மைனா... இது ரெண்டும் ஏனோ எல்லோருக்கும் புடிச்சுது...
மிக முக்கியமா ஒரு பெருங்குற்றம் உங்கள் பதிவில் இருக்கு...
பொம்மலாட்டம் படத்தில்தான் உலகத்தில் உள்ள பொம்மைகளே பொறாமைப்படும் என் அம்முக்குட்டியை அறிமுகம் செய்துவைத்தார்- ஸ்ரீ ஸ்ரீ காஜலானந்த சுவாமிகள்...
இந்து மகா ஸமுத்திரத்தை,
தம்ளரில் ஊற்றி தருகிறீர்களே...நியாயமா?
தொடராக எழுதுங்கள்.
The one n only "பா"...
அத்தனை கிராமிய படங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டவை...
அருமை +++...
மோகன் குமார்
ஹாலிவுட்ரசிகன்
விச்சு
நக்கீரன்
விக்கி மாம்ஸ்
கோகுல்
சங்கவி
கூடல் பாலா
சக்தி
மனசாட்சி மாம்ஸ்
வரலாற்று சுவடுகள்
மணிமாறன்
திண்டுக்கல் தனபாலன்
சிவகுமார்
கோவைநேரம்
இரவுவானம்
கோபிநாத்
பாலா
சுரேஷ்
ராஜ ராஜன்
மயிலன்
பாஸ்கரன் அண்ணன்
ரெவரி
அனைவருக்கும் நன்றிகள்!
இது ஒரு பெரிய பதிவு, பெரிய பதிவு யாரும் படிப்பதில்லை என்கிற காரணத்தினால் சுருக்கப்பட்டதில் சில படங்கள் விடுபட்டன..பிரிதொரு சமயத்தில் மீதியை பதிவிடுகிறேன் நன்றி!
ஹாலிவுட் படங்களின் உத்திகள் காட்சி அமைப்புகள் போன்றவற்றை இயல்பாகவே பெற்றிருந்தவர் பாரதிராஜா என்று சுஜாதா 'இந்த நூற்றண்டியின் இறுதியில்' என்ற நூலில் சொன்னதைப் படித்திருக்கிறேன்.
அவரது வேதம் புதிது எனக்கு பிடித்த படம்.
எண்பதுகளில் சினிமாவின் மொத்த உருவத்தையும்
மாற்றி அமைத்தவர் என்ற பெருமை திரு.பாரதிராஜாவுக்கு
பொருத்தம்...
சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தவர்..
காட்சிகளால் கதை சொன்ன திரு.மகேந்திரனும்
காவிராவினால் கதை சொன்ன திரு.பாலுமகேந்திராவும்
நடிப்பினால் கதை சொன்ன திரு.பாரதிராஜாவும்
எண்பதுகள் நமக்கு கொடுத்த வரம்..
பாரதிராஜா ஒரு சிறந்த இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அரங்கத்துக்குள் இருந்த சினிமாவை வெளிபுறதிற்கு முதலில் அழைத்து வந்தவர் இயக்குனர் ஸ்ரீதர். கல்யாணப் பரிசு, தேன் நிலவு, ஆலயமணி, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, இப்படி பல படங்கள். தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
வெளிப்புறப் படப்பிடிப்பு முறையைக் கொண்டு வந்தவர் இவர்தான். we should not give the wrong credit.
Post a Comment