காதல் ஒரு காதல் அது காமெடியீல...

>> Wednesday, July 11, 2012


காதலை சேர்த்தி வைப்பது சினிமாவில் வேனா பார்ப்பதுக்கும், கேட்பதுக்கும் ஜாலியா கிளுகிளுப்பா கலகலன்னு இருக்கும், ஆனால் நிஜவாழ்வில் அது ஒரு சோதனை, மற்றும் வேதனை, நான் பவானியில் இருந்த போது ஒரு நண்பன் இருந்தான் அவன் பேரு குமார், சலூன் கடை வெச்சிருந்தான் கட்டிங் வெட்டப் போன எனக்கு சாயங்காலம் கட்டிங் சேர்ந்து போடுற அளவுக்கு நண்பனாயிட்டான் ஆளு நல்ல துறுதுறுன்னு இருப்பான், "கொஞ்ச நாளாவே என்னை ஒரு பொண்ணு லுக்கு விடுது பாஸ்!" அப்படின்னு சொன்னான், யார்டா..அது? கேட்டேன் நான் ஒரு நாளைக்கு காட்டுகிறேன் அப்படின்னா..! சரின்னு நானும் விட்டிருந்தா பரவாயில்லை..."நீ பண்ணுடா நான் பார்த்துக்கிறேன்" அப்படின்னு சுதியில வீரமா அவன்கிட்ட சொல்லிட்டேன். 

ஒரு நாள் அவன் கடைக்கு போனேன்...பேசிக்கொண்டு இருந்தபோது, வாங்க என் ஆளை காட்டுகிறேன் என்றான். இருவரும் பஸ்ஸ்டேண்டுக்கு என்னுடைய பைக்கில் போனோம் லவ்வ சொல்லிட்டியா...? அப்படின்னு கேட்டேன் அதெல்லாம் சொல்லிட்டேன் அவளும் ஓகேன்னு சொல்லிட்டா அப்படின்னா..!பொண்ணு யாருன்னு சொல்லலை....ஓரமா நின்ன டவுன் பஸ்ல ஏறி ஒரு பொண்ணு பக்கத்துல உக்கார்ந்தான் இதுதான் அந்த பொண்ணு அப்படின்னா...! நான் அந்த பொண்ணைப் பார்த்தேன் எனக்கு திடுக்குன்னு போச்சு...!

அந்த பொண்ணு பேரு வீனா! அவிங்க அப்பன் பா.ம.க கட்சியில ஒரு பொறுப்புல இருக்கிறான், இவிங்க காதல் மேட்டர் தெரிஞ்சுது அவனை கும்பலா கும்மிருவாங்க...! எஸ்கேப் ஆனா இங்கிருக்கிறவனுகளை நோண்டி நொங்கெடுத்திருவானுக, இப்ப இவனுக்கு குளோஸ் பிரண்டு நான்தான்னு ஊருக்கே தெரியும்..! அடப்பாவி சனியனை கொண்டுவந்து என் சட்டைக்குள்ள விடுறானேன்னு யோசிச்சிட்டு இருக்கிறேன், நான் என்னவோ செந்தூரப்பூவே விசயகாந்து மாதிரி நீங்க தான் பாஸ் என் காதலை சேர்த்தி வைக்கனும் அப்படிங்கிறான். அந்த பொண்ணும் "ஆமாங்க அண்ணா" அப்படிங்குது! அடப்பாவி இரண்டு பேரும் எஸ்கேப் ஆனா கும்முற கும்முல குடிச்ச பீரெல்லாம் வெளிய வந்திருமே! 

மனசுக்குள்ள பயம் இருந்தாலும்....சரிடா அப்படின்னுட்டு ஓடிவந்திட்டேன், அதுக்கு பிறகு அவன் கடைக்கு அடிக்கடி நான் போறதில்லை..! அவனை கட் பண்ணிவிட்டாலும் வாங்க பாஸ் தண்ணியடிக்கலாம் சினிமாவுக்கு போகலாம் என்று போன் போடுவான் இல்லப்பா! கொஞ்சம் டைட் பணம் இல்லை அப்படின்னா வாங்க பாஸ் நான் இருக்கிறேன் அப்படியிம்பான், வேலை வெட்டியில்லாம காஞ்சு போய் கிடந்த நேரம் அது..! ஒரு பீருக்கு ஆசைப்பட்டு நம்ம மென்னியெழும்ப இழக்கப் போறோம்ன்னு மனசு சொல்லுது...! நடப்பது நடக்கட்டும் அப்படிங்கிற குருட்டு தைரியத்தில் நானும் அவனுடன் பழக ஆரம்பித்தேன்!
நான் பயந்த மாதிரியே நடந்து போச்சு.....!ஒரு நல்ல நாள் அதுவுமா பையன் புள்ளைய கூட்டிக்கிட்டு எஸ்கேப்! நைட் பத்து மணிக்கு வந்து கொத்தோட அள்ளிக்கிட்டு போயிட்டானுக பதினெட்டாம் குடி படத்தில் வருகிற மாதிரி ஒரு நாலு பிரண்டுகளை வேன்ல தூக்கி போட்டு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்திட்டாங்க....எஸ்.ஐ மிரட்டுகிறார் சொந்தக்காரன்ல இருந்து அல்லு சிண்டு பசங்க எல்லாம் எங்களை மிரட்டுகிறான், நமக்கு பாடி ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்குன்னு வடிவேல் காமடியப் பார்த்திட்டு பக்பக்குன்னு சிரிச்சிருக்கிறேன்! ஆனா எல்லாருக்கும் இந்த மாதிரி சமயத்தில் நமக்கும் அப்படித்தான்டான்னு நெனைச்சு நொந்திட்டேன்.

எஸ்ஐ சொல்றாரு சாயங்காலத்துக்குள்ள கிடைக்கிறாங்களான்னு பார்ப்போம்...! கிடைக்கல நைட் லாக்கப்ல விட்டு நொங்கினா இவனுக கிட்ட இருந்து உண்மை தானா வரும் அப்படிங்கிறாரு...! அப்பத்தான் காதலை சேர்த்தி வைக்கிறேன்னு சொன்ன செந்தூரப்பாண்டி! மாத்தியோசிச்சேன் "ஆண்டவா..! அந்த நாதாரிக இவங்க கிட்ட மாட்டிக்கனும்..."அப்படின்னு! 

இதுல செம காமடி என்னன்னா...!இவன் ரெகுலரா டீ குடிக்கிற டீ கடைக்காரரையும் தூக்கிட்டு வந்திட்டானுக அவர் புலம்பராரு "அவன் எனக்கு நூத்திஅம்பது ரூவா பாக்கி வைச்சதுமில்லாம....என்னையும் மாட்டி விட்டுட்டு போயிட்டானே..!" இப்படின்னு புலம்பிட்டு இருந்தாரு..! நான் அவர்கிட்ட "சம்பதமில்லாம உங்களை ஏன்னா தூக்கிட்டு வந்திருக்காங்க..?" அப்படின்னு கேட்டேன்...!

இப்ப புள்ளையோட அப்பனுக்கு உதவியா தேடுகிற அல்லக்கை கும்பலுக்கு எனக்கும் ஆகாது, அதுவில்லாம நான் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன் மருத்துவர் ரஜினிய பற்றி பேசினப்ப கண்டன போஸ்டர் அடிச்சு ஒட்டினேன் அப்ப இருந்தே இவிங்களுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு...சமயம் கிடைச்சதும் கோர்த்து விட்டுட்டானுக நான் அப்பாவி! என்ற அவரை பார்த்து பரிதாபமாக இருந்தது! நாம கூட அவன்கிட்ட பீரு வாங்கி குடிச்சிருக்கோம் இவரு கடனும் கொடுத்திட்டு...மாட்டிக்கிட்டாரே! என்று. பரிதாபமாக இருந்தது!

நல்லவேளை மாலைக்குள் அரச்சலூர்க்கு பக்கத்தில் ஒரு செங்கல் சூளையில் இருந்த காதல் ஜோடிகளை கூட்டி வந்து...பிரித்து அந்த புள்ளைய அப்பனுடன் அனுப்பிவிட்டார்கள், இரவோடு இரவாக வீனாவை ஒருவனுக்கு திருமணம் முடித்து விட்டார்கள் பையன் கொஞ்ச நாள் தாடியுடன் சுற்றிவிட்டு இப்பொழுது மலேசியா போயிட்டான்...போனவாரம் பவானி போயிருந்தேன் ஒரு பேக்கரியில் டீ குடிச்சிட்டு இருந்தேன், அப்ப வீனாவும் அவ புருசனும் இரண்டு குழந்தைகளுடன் பேக்கரிக்கு கேக் வாங்க வந்தாங்க.....பார்த்தேன் பேசலை! ஆனா நான் என்னவோ செந்தூரப்பூவே விசயகாந்து மாதிரி என்கிட்ட சொன்னாங்க பாருங்க அதை நெனைச்சு சிரிச்சுக்கிட்டேன்...!

32 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7:57:00 PM  

இதுவும் நல்லாத்தான் இருக்கு..

Unknown 8:03:00 PM  

அது அறியாத காலம் அப்பிடித்தான்...

கோவை நேரம் 8:46:00 PM  

செந்தூர பாண்டி கிட்ட என்ன சொன்னாங்க ...?

வெளங்காதவன்™ 9:28:00 PM  

அடப்பாவிகளா!

Unknown 9:37:00 PM  

மாம்ஸ் அடிவாங்குனத மட்டும் அப்படியே எடிட்டிடீங்களே? ஐ லைக் இட் மாம்ஸ் :-)

Gobinath 9:57:00 PM  

ரொம்ப நன்றி பாஸ். என்னையும் ஒருத்தன் உதவிக்கு கூப்பிடுறான். எனக்கு பில்டிங் கூட ஸ்ராங் இல்ல பாஸ். எப்புடியாவது எஸ்கேப் ஆயிடணும்.

CS. Mohan Kumar 9:59:00 PM  

அப்ப காதல் ஜோடியை பிரிசுட்டான்களா?

Yaathoramani.blogspot.com 10:10:00 PM  

இதுதான் நிஜக் காதல்
சொல்லிச் சென்ற விதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் 10:39:00 PM  

தப்பான ஆளுகிட்ட உதவி கேட்டிருக்கு பயபுள்ள ..........

ஊருக்குள்ள நம்மள பத்தி கேட்டுபாரு மாப்பு ............

எங்கயா போனானுக இந்த சிவாவும் பிரபாவும் .

முத்தரசு 11:11:00 PM  

ஹல்லோ எஸ் ஜூஸ் மீ - ஹெல்ப் மீ எங்க காதலையும் சேர்த்துவைக்கவும் செந்துரபாண்டி, இப்படி ஒருத்தரை தான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.
ப்ளீஸ் குவாட்டர் வாங்கி தாரேன் டீலா நோ டீலா

நோட்: பொண்ணோட அப்பா மாமா சித்தப்பு முன்னாள் இந்நாள் மந்திரிங்க

Unknown 11:18:00 PM  

@T.N.MURALIDHARAN நன்றி சார்....!

Unknown 11:19:00 PM  

@விக்கியுலகம்அது அறியாத காலம் அப்பிடித்தான்...
////////////////
அது ஒரு கனாக்காலம் மாம்ஸ்!

Unknown 11:19:00 PM  

@NAAI-NAKKSMmmmm....
///////////////////////
:)

Unknown 11:20:00 PM  

@கோவை நேரம்செந்தூர பாண்டி கிட்ட என்ன சொன்னாங்க ...?
/////////////////////
ரஸ்தாளிப் பழம் எட்டணான்னு சொன்னாங்க...!

Unknown 11:21:00 PM  

@வெளங்காதவன்™அடப்பாவிகளா!
//////////////////////
விடுங்க பங்காளி இதெல்லாம் களப்பணியில சகசம்!

Unknown 11:23:00 PM  

@இரவு வானம்மாம்ஸ் அடிவாங்குனத மட்டும் அப்படியே எடிட்டிடீங்களே? ஐ லைக் இட் மாம்ஸ் :-)
////////////////////
உள்ளதை உள்ளபடி போட்டும் எடிட்டுங்காறாங்களே! உன் மேல சத்தியமா அடிவாங்கலை மாப்ள!

Unknown 11:24:00 PM  

@Gobinathரொம்ப நன்றி பாஸ். என்னையும் ஒருத்தன் உதவிக்கு கூப்பிடுறான். எனக்கு பில்டிங் கூட ஸ்ராங் இல்ல பாஸ். எப்புடியாவது எஸ்கேப் ஆயிடணும்.
////////////////////
ஓடிருங்க....ஓடிருங்க....தமிழ் சினிமாவை நம்பி ஏமாந்திராதிங்க...!

Unknown 11:27:00 PM  

@மோகன் குமார்அப்ப காதல் ஜோடியை பிரிசுட்டான்களா?
///////////////////////////
ஆமாங்க சார்! பொண்ணுக்கு 17 வயசு..பயபுள்ள ஒரு வருசம் காத்திருக்க முடியலை.........

Unknown 11:28:00 PM  

@Ramaniஇதுதான் நிஜக் காதல்
சொல்லிச் சென்ற விதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
/////////////////////
சில காதல்கள் அவரத்தில் முடிந்து விடுகின்றன...

Unknown 11:29:00 PM  

@அஞ்சா சிங்கம்தப்பான ஆளுகிட்ட உதவி கேட்டிருக்கு பயபுள்ள ..........

ஊருக்குள்ள நம்மள பத்தி கேட்டுபாரு மாப்பு ............

எங்கயா போனானுக இந்த சிவாவும் பிரபாவும் .
////////////////////////
காதலர்களை சேர்த்து வைக்கும் அஞ்சா சிங்கமென யாம் அறிவோம்......

Unknown 11:30:00 PM  

@மனசாட்சி™ஹல்லோ எஸ் ஜூஸ் மீ - ஹெல்ப் மீ எங்க காதலையும் சேர்த்துவைக்கவும் செந்துரபாண்டி, இப்படி ஒருத்தரை தான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.
ப்ளீஸ் குவாட்டர் வாங்கி தாரேன் டீலா நோ டீலா

நோட்: பொண்ணோட அப்பா மாமா சித்தப்பு முன்னாள் இந்நாள் மந்திரிங்க
/////////////////
ஹலோ.......ஹலோ.......ஹலோ.......ஹலோ.......சிக்னல் கிடைக்கல.....

MARI The Great 11:32:00 PM  

நேத்து 'காதல்' படம் பார்த்தீங்களா..? எந்த டிவி-ல போட்டான் சொல்லியிருந்தா நானும் பார்த்திருப்பேன்ல ஹி ஹி ஹி ஹி.!

Unknown 11:35:00 PM  

@வரலாற்று சுவடுகள்நேத்து 'காதல்' படம் பார்த்தீங்களா..? எந்த டிவி-ல போட்டான் சொல்லியிருந்தா நானும் பார்த்திருப்பேன்ல ஹி ஹி ஹி ஹி.!
////////////////
எல் ஜி 22 இன்ச் டிவியில போட்டாங்க சார்...! நீங்களும் ஒரு டிவி வாங்கி பாருங்க சார்!

MARI The Great 11:36:00 PM  

////எல் ஜி 22 இன்ச் டிவியில போட்டாங்க சார்...! நீங்களும் ஒரு டிவி வாங்கி பாருங்க சார்!///

ஹா ஹா ஹா.... கலக்குங்க :)

கலைவிழி 1:08:00 AM  

ஹி....ஹி........ வீர வரலாற்றில இதெல்லாம் சகஜம் அண்ணா........ஐயோ கையோ

Anonymous,  5:14:00 AM  

அய்யா நீங்கள் வீரரய்யா, அடிச்சி கூட்டிட்டு போனாங்களா, கூட்டிட்டு போய் அடிச்சாங்களா?

”தளிர் சுரேஷ்” 6:57:00 AM  

அட்டகாசம்! என்கிட்டயும் இந்த மாதிரி ஒரு கதை இருக்கு! ஆனா வேறமாதிரி!

Prem S 8:24:00 PM  

உங்களுக்கு அடி எதுவும் விழலையா பாஸ்

மதுரை சரவணன் 1:49:00 PM  

super anubavam.. kadal kadalippavanai mattum alla kadalukku thunaipobavanaiyum nongu eduththidum..

Unknown 11:55:00 PM  

'சம்போ சிவ சம்போ' என்று ஓடிப் போய் சேர்த்து வச்சீங்களோ என்று நினைச்சேன்...
கடைசியில கவுத்துப்புட்டீங்களே!!

ஆனாலும், நல்ல அனுபவம்!

அ. வேல்முருகன் 6:47:00 AM  

நம்ம கதை வித்தியாசம், இரண்டு பேரும் அப்பா அம்மா சம்மதத்தோடதான் திருமணம் முடிவா இருந்தாங்க

அதுக்கு முன்ன கை வெட்டுவேன் கால வெட்டுவேன் செர்ன்னங்கதான். பொண்ணு பொறுமையா இருந்துச்சு.

பையன் வெளியூரு, ஒருநாள் அப்பா அம்மாவை கூப்பிட்டான், துணைக்கு நான் மட்டும்தான் பெண் கேட்டு சென்றோம் .

பெண்ணொட அப்பா கண்ணீர் விட்டார். அம்மா உண்ட வீட்டு இரண்டகம் பண்ணிடேன் என்றார்கள்,

இன்று, இரண்டு குழந்தைகளோடு இனிய இல்லறம் நடத்துகிறார்கள்

இவர்கள் வெற்றியை விடாபிடியா பிடித்தவர்கள்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP