பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்......

>> Thursday, July 5, 2012



நாம வாழ்க்கையில சந்தித்த மனிதர்கள் சிலர் மட்டும் ஞாபகம் இருப்பார்கள், அவர்கள் பொரும்பாலும் நகைச்சுவையான நபர்களாக இருப்பார்கள். அப்படி நினைவு தெரிந்த காமடியன் ஒருவர் இருந்தார், அவர் பெயர் யாருக்கும் தெரியாது "கொன்னவாயன்"என்று ஒருவர். வாய் கொஞ்சம் கோனியிருப்பதால் அந்த பெயர் அவருக்கு, அவர் வெற்றிலை போட்டுக்கொண்டு பேசும் போது கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் இல்லையென்றால் “எச்சில் மழை பொழிகின்றதே...” என பாட்டுப்பாடிக் கொண்டே அம்மாவிடம் ரண்டு மொத்து வாங்கிக் கொண்டு சட்டையை துவைக்க வேண்டும், அவர் பெரும்பாலும் பெண்களிடம் தான் நக்கல் நையாண்டியாக பேசுவார், வயசுப் பெண்களிடம் எந்த கூச்சமும் இன்றி மாமனை கட்டிக்கிறியா என்பார்....! கிழவனுக்கு ஆசையப் பாரு என குமட்டில் குத்திவிட்டு போவார்கள், ஜாலியான ஒரு கிராமத்தான் அவர்.

அவர் ஒரு புல்லட் வாங்கினார் ஹைதர்அலியின் தாத்தா காலத்தியது. அவர் தன் தோட்டத்தில் இருக்கும் மோட்டார், டிரேக்டர்களை தானே பழுது பார்ப்பார், தனக்கு தெரிந்த அரைகுறை அறிவை வைத்துச் அவர் செய்யும் வேலைகள் போகும் வழியில் பாதியில் பழிவாங்கிவிடும் புல்லட்டில் எப்பொழுதும் ஒரு சாட்டை வைத்திருப்பார் புல்லட் ஆப் ஆனாலோ! எதாவது மக்கர் செய்தாலோ! சாட்டையில் புல்லட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பார் காக்காய் உக்கார பனம்பழம் விழுந்த மாதிரி ஸ்டார்ட் ஆயிரும்.

அப்படி ஸ்டார்ட் ஆகும் போது சைலன்ஸர் குழாயில் இருந்து கரும்புகையுடன் ஆயில் கலந்து ஊரே தீபற்றி எரிவது போல கக்கும், ஒரு நாள் நான் ஸ்கூல் லீவு என்பதால் சும்மா உக்காந்துட்டு இருந்தேன் அவர் புல்லட்டில் வந்து கொண்டிருந்தார், என்னை பார்த்ததும் மீன் புடிக்க போறேன் வர்ரிறாயா? என்றார், சரி சும்மாதானே உக்கார்ந்துட்டு இருக்கிறோம்ன்ட்டு அவர் கூட போயிட்டேன். 

ஆற்றுக்கு போகும் வழியில் குறுகலான இருபுறமும் செடிகளுடன் கூடிய பாதை அது போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் டாபர்மேன் வகையறா...! முரட்டுநாய் ஒன்று இந்த புல்லட்டின் கர்னகொடூரமான சத்ததை பார்த்து வெறியோடு தொரத்துது, கிராமத்தில் உள்ள நாய்கள் நகரத்து நாய்கள் போல் குலைத்து விட்டு ஓடிவிடாது நீண்ட தூரம் துரத்தி ஒரு அரைக்கிலோவ எடுத்துட்டுத்தான் விடும்.

நான் காலை  தூக்கி பில்லியன்ல குந்த வச்சு உக்காந்துட்டேன்! கொன்னவாயன் வெள்ளை வேட்டி கட்டியிருக்கார்.... அது காத்துல பறந்ததுல தொடை வரைக்கும் தெரியுது நாயும் அவர் தொடையை குறி வெச்சு காதை வெறைச்சுட்டு பயங்கரமான வேகத்துல வருது புல்லட்டை நல்லா முறுக்கி புடிக்கிறாரு என்பது கிலோ மீட்டர் வேகத்தில பறக்குது எனக்கு குலை நடுங்குது....சரியான நேரம் பார்த்து ஓட்டை புல்லட் ஆப் ஆயிருச்சு....!


எனக்கு உயிரே இல்லை அந்தாள யோவ் நான் சும்மா உக்கார்ந்திட்டு இருந்தேன் என்னையும் கூட்டிட்டு வந்து மாட்டி விட்டிட்டியே என கெட்டவார்த்தையில திட்டுர.....அவரு டேய் நான் பெரிய மனுசன்டா இப்படி திட்டாதே அப்படிங்கிறாரு! கொன்னவாயன் டக்குன்னு புல்லட்டை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டிட்டு ....ளி நாயே என ஒரு பெரிய கல்லை தூக்கி எரியறாரு...! அது லாவகமா விலகி வந்து அனை கட்டிருச்சு இரண்டு பேரையும் நகர விடல எனக்கு வேர்த்து ஊத்துது...நாங்களும் கத்துகிறோம் ஏனுங்கோ நாய்க்காரரு யாருங்கோ! என ஒரு பயலும் வரலை!யோசனை பண்ணிய கொன்னவாயன் புல்லட்டுல ஏறி நைசா உக்காந்தார்...நாய் உர்ர்ர்ர்.....அப்படிங்குது நீயும் மெதுவா ஏறி உக்காரு அப்படிங்கிறாரு...!நானும் பயந்து நடுங்கிட்டு உக்காந்தேன் மெதுவா கிக்கர உதைச்சு ஸ்டார்ட் பண்றாரு ஸ்டார்ட் ஆகவும் அந்த நாதாரி நாய் பக்கத்துல வந்து சைலண்சரை முகர்ந்து பார்த்திட்டு இருக்கவும் சரியா இருக்க கரும்புகை ஆயில் அதன் முகத்தில் அடிக்க புல்லட் சைலன்ஸரில் வருகிற காற்று ஆளையே தூக்கும்! நாய் எம்மாத்திரம் பத்தடி தூக்கி வீசிருச்சு! வீசியது மட்டுமில்லாம செம்மி நாய் கருப்பு நாயாகிருச்சு பயந்து போய் வாலை சுருட்டி பின்னங்காலுக்கு நடுவ வச்சிகிட்டு தலை தெரிக்க ஓடிப் போச்சு...! அதன் பிறகு எப்ப அந்த வழியா போனாலும் அந்த நாய் தூரத்துல இவர் புல்லட்டை பார்த்தா கீழ விழுந்து எழுந்து ஓடி போயி ஒரு நாலு ஏக்கரா தாண்டி போய் குலைக்கும்...

21 comments:

கேரளாக்காரன் 8:42:00 PM  

Ippo yaaru nonthakumaaran?

Neengala illa antha bullet drivera illa antha Dog ah?

Unknown 8:45:00 PM  

@மௌனகுருமௌனகுரு said...
Ippo yaaru nonthakumaaran?

Neengala illa antha bullet drivera illa antha Dog ah?
///////////////
படிக்கிற நீங்கதான்.......அவ்வ்வ்வ்....

Unknown 9:37:00 PM  

மாம்ஸ் தாங்கள் இதன்மூலம் சொல்லவருவது ?

Unknown 9:43:00 PM  

@இரவு வானம்
அடி வாங்கினாலும்..அலட்ர்டா இருக்கனும் மாப்ள...!

அஞ்சா சிங்கம் 10:04:00 PM  

அட போப்பா நானும் டைட்டில் பார்த்து பெரிய பஞ்சாயட்டுன்னு வந்தேன் ................

சரி எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க அந்த நாய் தானே நொந்த குமாரன் .........

Unknown 10:12:00 PM  

நல்ல புல்லட் புராணம்! நல்ல வேளை! நாயிடமிருந்து தப்பினீர்கள்
எழுத்து நடை நன்று!

புலவர் சா இராமாநுசம்

Unknown 10:21:00 PM  

@அஞ்சா சிங்கம்அட போப்பா நானும் டைட்டில் பார்த்து பெரிய பஞ்சாயட்டுன்னு வந்தேன் ................
////////////////////////
சொல்லுப்பா வேனா பஞ்சாயத்த கூட்டிடுவோம்....நீர் ஓகே சொன்னா போதும் பொங்கியெழுவான் இந்த மனோகரன்!
--------------------------------------------
சரி எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க அந்த நாய் தானே நொந்த குமாரன்
////////////////////

அப்படியும் வச்சிக்கலாம்....இப்படியும் வச்சிக்கலாம்.....?!

Unknown 10:22:00 PM  

@புலவர் சா இராமாநுசம் said...
நல்ல புல்லட் புராணம்! நல்ல வேளை! நாயிடமிருந்து தப்பினீர்கள்
எழுத்து நடை நன்று!

புலவர் சா இராமாநுசம்
////////////////////////////
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா!

முத்தரசு 11:58:00 PM  

தலைப்புக்கு எத்த கதையா இல்ல கதைக்கு வைத்த தலைப்பா என்னவோ போங்க

முத்தரசு 11:58:00 PM  

நல்லாத்தான் வைக்கிறீக தலைப்பு

முத்தரசு 11:59:00 PM  

அரைகிலோ கறி புடிங்கிடும்ன்னு தான் நினைத்தேன் தப்பித்து விட்டீர்களே

முத்தரசு 12:01:00 AM  

//கொன்னவாயன்"என்று ஒருவர். வாய் கொஞ்சம் கோனியிருப்பதால்//

ஹா ஹா ஹா

முத்தரசு 12:06:00 AM  

//வீடு சுரேஸ்குமார் said...

@அஞ்சா சிங்கம்அட போப்பா நானும் டைட்டில் பார்த்து பெரிய பஞ்சாயட்டுன்னு வந்தேன் ................
////////////////////////
சொல்லுப்பா வேனா பஞ்சாயத்த கூட்டிடுவோம்....நீர் ஓகே சொன்னா போதும் பொங்கியெழுவான் இந்த மனோகரன்!
--------------------------------------------
சரி எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க அந்த நாய் தானே நொந்த குமாரன்
////////////////////

அப்படியும் வச்சிக்கலாம்....இப்படியும் வச்சிக்கலாம்.....?!//

என்னது வச்சிக்கலாமா?? நாயை......எப்பூடீ

sakthi 12:22:00 AM  

ஐயா நானும் புல்லட் தான் வெச்சிருக்கேன்

நாய் நக்ஸ் 1:18:00 AM  

தலைப்பு அதே மாதிரி வச்சா...
நீங்களும் பெரிய ஆள் ஆகிடமுடியுமா???

சுரேஷுக்கு வீடு,,கார் ஆசை வந்துடுசிப்போய்.....

கும்மாச்சி 1:35:00 AM  

அப்போ நாய்க்கு அரை கிலோ கரி கிடைக்கலையா? அய்யோ பாவம், இதுக்காகவா இத்துணை தூரம் துரத்திச்சு.

”தளிர் சுரேஷ்” 5:03:00 AM  

நீண்ட நாளுக்கு பின் சிரிக்க வைத்த பதிவு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் 8:49:00 AM  

ஹா... ஹா... ரசித்தேன் சார் ! நன்றி !

ARASU 7:56:00 AM  

sama sirippu ...mudiyala..

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP