Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts
காணி நிலம்-சிறுகதை
>> Monday, June 25, 2012
ராமசாமி வரப்பு வழியாக நடந்தார், செருப்பு இல்லாத கால்களில் மூன்று நாள் முன் பெய்த மழையில் துளிர்த்து இருந்த அருகம்புல் குளிர்ச்சியாய் வருடியது, அந்த குளிர்ச்சியை ரசிக்கும் மனோபாவத்தில் இல்லை அவரின் மனது, ஓரத்தில் இருந்த தன் பாட்டனின் சமாதியில் வந்து உக்கார்ந்தார், மாடத்தில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, தோட்டம் ஒரு நாலு ஏக்கர் இருக்கும், பரம்பரையாக கட்டிக்காத்த பூமி. ராமசாமியின் தகப்பனார் தன் தந்தையின் ஆசைப்படியே அவர் வாழ்ந்த பூமியில் தன்னை புதைக்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றியிருந்தார்...ஒரு கோவில் மாதிரி அதைக் கட்டியிருந்தார், யாராவது ஒருவர் மாடத்தில் தினம் விளக்கு வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள், பரந்து விரிந்த தோட்டத்தில் வெயிலில் வருபவர்களும், பண்ணையாட்களும் இளைப்பாறுவது அந்த சமாதி திண்டில்தான்.
நான் கொங்கர்பாளையத்தான்...
>> Saturday, February 18, 2012
(சங்கவி சதீஸ் அவர்களின் நானும் எனது ஊரும் தொடர் பதிவைத் தொடர்ந்து)
நம்ம ஊர் கோபிசெட்டிபாளையத்தில இருந்து பச்சைப் பசேல் வயல் களுக்கு நடுவே கருப்பு பாம்பு மாதிரி வளைந்து வளைந்து செல்லும்பாதையில சுமார் பத்து பதினைஞ்சு கிலோ மீட்டர் போனா வருது...ஒத்தை பேருந்துதான்! அதை விட்டா வாணிபுத்தூர்ல இருந்து ஒரு கிலோ மீட்டர் நடக்கோனுங்க, ஆனா நடக்கிறதும் சுகம்தான்.. ரோட்டுக்கு இரண்டு புறமும் அழகான பச்சை பசேல்ங்க குளுகுளு மலைக்காத்துங்க, அதுவுமில்லாம ரோட்டுக்கு இருபுறமும் புளியமரங்கள்... பள்ளிக்கோடத்தில இருந்து போகும்போது புளியங்காய் அடிச்சி தின்னுட்டே போனா ஊர் வர்றது தெரியாதுங்க...
Labels:
ஈரோடு,
ஊர்,
கட்டுரைகள்,
கிராமம்,
கொங்கர்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்
கோமகனே....நீயெங்கே....
>> Friday, December 2, 2011
முத்தான முத்தழகே...
கருப்பான கட்டழகே...
என் குலசாமி நீதானே...
"அந்தியூர்" சந்தையில
கால் கொஞ்சம் ஊன'முன்னு
கழிச்சி விட்ட உன்னை
மலிவு விலையில
வாங்கி வந்த ரத்தினமே...
கருவறையில்லாத
எனக்கு மகனா
நெஞ்சறையில இருந்தவனே
என் சொக்கத் தங்கமே...
புல்லும்,புண்ணாக்கும்
வைக்க ஒரு நேரம்
தவறிவிட்டாக் கூட
அம்மா...அம்மான்னு
அழுவியே...
என் கூப்பாடு கேட்டா
வாய்க்கால் வரப்புல
துள்ளிக் குதித்து
வருவாயே என் வைரமே...
யார்! யாரோ!? ஆறுதல்
சொன்னாலும்...
"சொக்கன்" உன்னை
எடுத்துகிட்டாலும்
உன்னைத் தேடி
வருவேன்...
"கைலாயன்" வாகனமா
நீ..மாறிருந்தாலும்
நியாயமா? "பரமனே"
எனக்கேட்பேன்
தங்கமே.....
Subscribe to:
Posts (Atom)