நான் கொங்கர்பாளையத்தான்...

>> Saturday, February 18, 2012


(சங்கவி சதீஸ் அவர்களின் நானும் எனது ஊரும் தொடர் பதிவைத் தொடர்ந்து)
ம்ம ஊர் கோபிசெட்டிபாளையத்தில இருந்து பச்சைப் பசேல் வயல் களுக்கு நடுவே கருப்பு பாம்பு மாதிரி வளைந்து வளைந்து செல்லும்பாதையில சுமார் பத்து பதினைஞ்சு கிலோ மீட்டர் போனா வருது...ஒத்தை பேருந்துதான்! அதை விட்டா வாணிபுத்தூர்ல இருந்து ஒரு கிலோ மீட்டர் நடக்கோனுங்க, ஆனா நடக்கிறதும் சுகம்தான்.. ரோட்டுக்கு இரண்டு புறமும் அழகான பச்சை பசேல்ங்க குளுகுளு மலைக்காத்துங்க, அதுவுமில்லாம ரோட்டுக்கு இருபுறமும் புளியமரங்கள்... பள்ளிக்கோடத்தில இருந்து போகும்போது புளியங்காய் அடிச்சி தின்னுட்டே போனா ஊர் வர்றது தெரியாதுங்க...நம்ம பள்ளிக்கூடம் மாதிரி எந்த ஊர்லையும் பார்த்திருக்க மாட்டிங்க! பின்னாடி வாய்க்கால் ஓடுங்க, முன்னாடி அழகா சரஸ்வதி சிலை, இருபுறமும் அசோக மரம் பெரிய மைதானம், ஏராளமான மரம் அதுல குரங்கு, என அமர்க்களமான பங்களாபுதூர் அரசுமேல்நிலைப்பள்ளிங்க....,குளுகுளுன்னு காத்து இப்ப நெனைச்சாலும் ஏக்கமா இருக்குதுங்க. தமிழ்நாட்டிலேயே பெரிய விலங்குகள் அரசுமருத்துவமணை பள்ளிக்கு பக்கத்தில இருக்குதுங்க உலகத்துல உள்ள அனைத்து வகை மாடுகளும், எருதுகளும், இங்கே இருக்குதுங்க, பொழுது போகலைன்னா அங்க போயிருவம்ங்க.ஒரு ஊர்ல ஆறு இருக்கும், இல்லைன்னா குளம் இருக்கும். ஆனா எங்க ஊரே ஒரு தண்ணீர் தேசமுங்க,மத்தாள கொம்பு ஊத்து தண்ணீய குளமா வெட்டி வைச்சு புள்ளாரு சாமி வெச்சிருக்காங்க, மத்தாளகொம்பு புள்ளாரு சக்தி வாய்ந்தவர்ங்க, குளத்து நீர் கண்ணாடி மாதிரிங்க,பெரும்பள்ளம்,சிறும்பள்ளம் என்கிற சிறு ஓடை, பவானி ஆறு, ஆற்றில இருந்து பிரியற மூலவாய்க்கால், குன்டேரிப்பள்ளம் அணை, வீட்டுக்குவீடு கிணறு, தோட்டக்கிணறு நம்மூர்க்காரங்க மீன் குஞ்சுக மாதிரி, வேடை காலமெல்லாம் தண்ணிக்குள்ள இருக்கிற தண்ணி பாம்புக நாங்க, 

அதுமட்டுமில்லாம பெரும் வனப்பகுதி கொக்கு, நாரை, முயல், யானை, மான், கேழையாடு,காட்டெருமை,நரி,உடும்பு,புலி,சிறுத்தை,என பெரிய வனச்சரணாலம் நம்மூருங்க, 

ஒரம்பரை வந்தா ஒரு சொம்பு தண்ணி குடுத்த கையில நாட்டுக்கோழிய அடிச்சு குழம்பு வெச்சு கவனிச்சுதான் அனுப்பறது எங்க ஊர் வழக்கம்ங்க, துணி துவைப்பதற்காக நாங்க ஒரு கோஷ்டியா போவம்முங்க போகும்போதே மிளகாத்தூள்,உப்பு எடுத்துட்டு போவம்ங்க துவைச்சு முடிச்சிட்டு,தூண்டி போட்டு மீன் பிடிச்சு சுட்டு தின்பங்க, தண்ணி பாம்பை அடிச்சு ஒத்தையடி பாதையில சுருட்டி நாகபாம்பு மாதிரி படம் எடுக்கிற மாதிரி செட்டப் செய்து வைச்சிட்டு வேப்பமரத்தில ஏறி உக்காந்துக்குவங்க அந்த பக்கமா வர்ர ஊருக்குள்ள வீராதிவீரர்ன்னு சொல்லிட்டு திரியர ஆளுக தண்ணி பாம்பை பார்த்து பயந்து ஓடுவாங்க....சிரியா...சிரிப்பம்ங்க...அப்பெல்லாம் கிரிக்கெட் எல்லாம் கிடையாது கில்லி,புட்பால்தான் எங்க விளையாட்டு,இல்லையென்றால் கபடி விளையாட்டுதான் முழுப்பரிச்சை லீவுல ஈரோடு,கோயம்புத்தூர்ல இருந்து வர்ற சொந்தக்கார பசங்க கிரிகெட்டைச் சொல்லி கொடுப்பாங்க,ஓவரு,விக்கெட்டுன்னு அவிங்க கொடுக்கிற பில்டப்பை இப்ப நெனைச்சாலும் சிரிப்பா இருக்கும்ங்க.


எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா சரியா சித்திரை மாசம் ஈரோடு மாரியம்மன் திருவிழா முடிஞ்சு போடுவாங்க,கம்மம் நட்டி சுத்தி மத்தாளம் அடிச்சு ஆடுவம்க,இதுக்காக சலங்கை கால்ல கட்ட ஒவ்வறு வீட்டிலையும் வெச்சிருப்பாங்க,பத்து நாள் கம்பத்தாட்டம் முடிஞ்சு கம்பத்தை கொண்டு போய் ஆத்தில போட்டிட்டு வந்து மஞ்சள் நீர் விளையாடுவம்க, இதுல ஒரு மருத்துவம் இருக்கிறதா எங்க தாத்தா சொல்லுவாருங்க, வெயில் காலங்களில் வரும் கொப்புளங்கள் இந்த மஞ்சள் நீர் விளையாட்டுக்கு பிறகு வராதுங்க.


அப்புறம் அழகான தேவாலயம் இருக்குங்க வெள்ளைக்காரன் கட்டியது, மாதம் ஒரு முறை சினிமா படம் காட்டுவாங்க, எங்க மாதிரி பசங்களையெல்லாம் கூட்டிட்டு போய் பாதர் டுயூசன் இலவசமா நடத்துவார், சாப்பிட ஆப்பிள், ஆரஞ்சுன்னு கொடுப்பார், கிருஸ்துமஸ்க்கு கேக் தருவார்.இப்ப இடிச்சு புதுமையா கட்டியிருக்காங்க, அழகா இருந்தாலும் பழைய கம்பீரம் இல்லை.

அப்புறம் வருடத்திக்கு ஒரு முறை சைக்கிள் ஓட்டுவாங்க, பத்து நாள் பதினைந்து நாள் என்று சைக்கிளை விட்டு இறங்காம ஓட்டுவாங்க, அவங்க செய்யற சாகசத்தை பார்க்கையில வியப்பா இருக்கும், பொம்பலாட்டம் நான் சின்ன பையனா இருக்கும் போது பார்த்தது, அப்புறம் சினிமா தியேட்டர், தூ.நா.பாளையம் ஸ்ரீதேவி தியேட்டர் எங்க பொழுது போக்கு களம், எங்க வீட்டு சுவத்துல போஸ்டர் ஒட்டறதால வாரம் ஒரு காட்சி இலவசம்! சைக்கிள்ல போய் படம் பார்த்துட்டு வருவோம்.

எங்க குலதொழில் நெசவை கத்துக்கலான்னு ஆசைப்பட்டேன், அது முடியலை அதனால ஓவியம் வரைய பழகியது இன்றைக்கு எனக்கு தொழிலாகவே போனது ஒரு ஆச்சர்யம்தான், மண்ணுக்குள் வைரம் படிப்பிடிப்புக்கு வந்த நடிகர் திலகம், எங்க ஊரை ரொம்ம ரசிச்சார், அழகான ஊர்யா...என்று கூறியது எனக்கு இன்னும் பசுமையா நினைவிருக்கு.பலசாதி மக்கள் கலந்து இருந்தாலும் சாதி ரீதியா இதுவரைக்கும் சண்டை வந்ததில்லைங்க, சோறு எங்க வீட்ல போட்டுட்டு பக்கத்து வூட்ல குழம்பு வாங்கி, இன்னோரு வீட்ல பொரியல் வாங்கி, மூன்று வேளை இராஜபோக உணவு சாப்பிடும் ஊர் எங்க ஊர்ங்க, தாய் மாதிரி எங்க ஊர்ங்க..! என்கூட படிச்ச நானும் என் நண்பர்களும் பல திசையில் பிரிந்து சென்றாலும், நாங்க எவ்வளவுதான் வளர்ந்தாலும் எங்க கிராமத்திக்கு நாங்க இன்னும் குழந்தைகள்தான்.

38 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி 5:00:00 AM  

அழகான கிராமிய வாழ்க்கை வாழ்ந்திருக்கீங்க, கொடுத்து வெச்சவரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி 5:01:00 AM  

////அப்பெல்லாம் கிரிக்கெட் எல்லாம் கிடையாது கில்லி,புட்பால்தான் எங்க விளையாட்டு,இல்லையென்றால் கபடி விளையாட்டுதான் /////

கிரிக்கெட்டெல்லாம் வர்ரதுக்கு முன்னாடின்னா, அண்ணன் வயசு எக்குத்தப்பா இருக்கும் போலயே?

பன்னிக்குட்டி ராம்சாமி 5:03:00 AM  

////ஒரம்பரை வந்தா ஒரு சொம்பு தண்ணி குடுத்த கையில நாட்டுக்கோழிய அடிச்சு குழம்பு வெச்சு கவனிச்சுதான் அனுப்பறது எங்க ஊர் வழக்கம்ங்க,/////

சரிங்கோ... நோட் பண்ணிக்கிறோங்கோ......

சி.பி.செந்தில்குமார் 5:04:00 AM  

>>எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா சரியா சித்திரை மாசம் ஈரோடு மாரியம்மன் திருவிழா முடிஞ்சு போடுவாங்க,கம்மம் நட்டி சுத்தி மத்தாளம் அடிச்சு ஆடுவம்க,இதுக்காக சலங்கை கால்ல கட்ட ஒவ்வறு வீட்டிலையும் வெச்சிருப்பாங்க,

ஹி ஹி ஹி

இராஜராஜேஸ்வரி 5:12:00 AM  

வருடத்திக்கு ஒரு முறை சைக்கிள் ஓட்டுவாங்க, பத்து நாள் பதினைந்து நாள் என்று சைக்கிளை விட்டு இறங்காம ஓட்டுவாங்க,

அப்போது விடிய விடிய சத்தமாகப் போடும் பாடல்கள் எரிச்சலைக்கிளப்பும்..

மண்ணுக்குள் வைரமாய் அழகாய் மின்னும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்....

Anonymous,  5:28:00 AM  

சுரேஷ் நீங்க கொங்கு மண்டலத்துக்காரரு என்பது நீங்க மரியாதையான வார்த்தைகளை போட்டு பதிவெழுதும் போதே தெரியுதுங்க. மரியாதைக்குரிய பகுதியிலிருந்து வந்தவர் நீங்க வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ 5:50:00 AM  

வணக்கம்!
உங்கள் ஊரின் மண்வாசனையோடு, கிராமிய வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவங்களையும் உங்களுக்கே உரிய நடையில் சுவையான பதிவு.

பால கணேஷ் 5:56:00 AM  

உங்கள் ஊரின் சிறப்புகளை அழகாகப் பகிர்ந்திருகு்கிறீர்கள். நிறையத் தெரிந்து கொண்டேன். நன்று!

Thava 6:30:00 AM  

அருமையான பகிர்வு..சிறப்பாக உள்ளது.என் நன்றிகள் சகோ.

Admin 7:26:00 AM  

ஏனுங்க சுரேச்சு எல்லாத்தையும் சொல்லிப்போட்டீங்க..அப்படியே கொடிவேரியப் பத்தி சொல்லியிருக்கலாமில்லீங்க..அப்பறம் என்னென்ன படம் அங்க சூட்டிங் நடந்துச்சுன்னு சொல்லியிருப்பீங்கன்னு நெனச்சேன்..சின்ன கோடம்பாக்கமில்லீங்க நம்ம கோபி.என்னோட கடைசி காலத்த கோபியிலதான் கழிக்கோனுமுன்னு எம்பட வூட்டுக்காரி சொன்னாளுன்னு கொடிவேரி பக்கத்துல அஞ்சு சென்டு நெலம் வாங்கி போடலாமுன்னு இருக்கிறனுங்கோவ்..

மகேந்திரன் 9:42:00 AM  

கோவையின் கொஞ்சு தமிழின் பால்
என் மனதை பறிகொடுத்திருக்கிறேன்...
இதோ தங்கள் பதிவில் மேலும் அங்கிருக்கும்
பசுமையை பார்த்து வைத்த கண் எடுக்கவில்லை.

அழகான மனமயக்கும் பதிவு...

Unknown 6:39:00 PM  

நகரத்தில் இருந்தாலும் நம்ம ஊர்தாங்க சொர்க்கம்!

Unknown 6:41:00 PM  

என்னங்க பெரிய வயசு உங்களைவிட 20 வயசு கம்மிதானுங்க...!ஹிஹி

Unknown 6:42:00 PM  

சரிங்கோ..!வாங்கங்கோ!பண்ணாரி பூமிக்கிற நோம்பியப்ப வாங்கோ!ஹே..ஹே...!

Unknown 6:43:00 PM  

ஹிஹிஹி

Unknown 6:44:00 PM  

ஆமாங்க நீங்க சொல்லுவதும் சரிதான்..ஆனால் இப்பொழுது அந்த கழைக்கூத்தாடிகள் எல்லாம் எங்கே?

Unknown 6:45:00 PM  

வாங்க..ஆ.மூ.செந்தில்கோ! ரொம்ம நன்றிங்கோ!

Unknown 6:46:00 PM  

மிக்க நன்றி நண்பர் தமிழ்இளங்கோ..

Unknown 6:46:00 PM  

வணக்கமுங்க..ரொம்ம நல்லதுங்க...

Unknown 6:47:00 PM  

நன்றி! சகோ! என் வணக்கங்கள்!

Unknown 6:51:00 PM  

வாங்க வாங்க...!கொடிவேரிய பற்றி நெறைய சொல்லிட்டனுங்க..ஹிஹி! அதனால வுட்டுபோச்சுங்க நீங்க தப்பா நினைச்சுக்காதிங்க...நீங்க இடம் வாங்குபோது சொல்லுங்க நானும் பக்கத்தால வாங்கிபோடறேனுங்க கடைசி காலத்தில கயித்துகட்டில்ல ஒக்காந்துட்டு நீங்க கவிதை சொல்லுங்க நான் கதை சொல்லுறனுங்க...ஹஹஹ

Unknown 6:54:00 PM  

மிக்க நன்றி மகேந்திரன் அவர்களுக்கு!நான் கூட நம்ம வட்டார வழக்கு புரியாதோ என்று பயந்தேன் உங்க கருத்துரை என்க்கு அந்த பயத்தை போக்கிருச்சு!

நாய் நக்ஸ் 9:07:00 PM  

இனிமையான நிகழ்வுகள்...

MANO நாஞ்சில் மனோ 10:29:00 PM  

எலேய் சொர்கமே என்றாலும் நம்மூர் போல வருமாலேய் மக்கா சூப்பர்ய்யா....!!!

MANO நாஞ்சில் மனோ 10:29:00 PM  

எலேய் சொர்கமே என்றாலும் நம்மூர் போல வருமாலேய் மக்கா சூப்பர்ய்யா....!!!

MANO நாஞ்சில் மனோ 10:30:00 PM  

இனிமை இனிமை மனதுக்கு இனிமை...!!!

SELECTED ME 7:55:00 AM  

பெருமூச்சுதான் விட முடியும் - வேறென்ன??

நிரூபன் 8:15:00 AM  

வணக்கம் நண்பா,
நல்லதோர் பதிவினைக் குடுத்திருக்கிறீங்க.
இன்றைக்கு நான்கு வருஷங்களுக்கு முன்னாடி சூரியன் எப்.எம் கோவையில சின்னத் தம்பி, பெரிய தம்பி நிகழ்ச்சியில் கோவிச் செட்டிப் பாளையம் வட்டார மொழி வழக்கினைக் கேட்டு ரசிச்சிருக்கேன். ஆனால் இன்று உங்கள் பதிவு மூலமா அந்த இனிய ஊர் பற்றி அறியக் கிடைத்ததையிட்டு அகம் மகிழ்கின்றேன்.

MaduraiGovindaraj 8:21:00 AM  

//பலசாதி மக்கள் கலந்து இருந்தாலும் சாதி ரீதியா இதுவரைக்கும் சண்டை வந்ததில்லைங்க, சோறு எங்க வீட்ல போட்டுட்டு பக்கத்து வூட்ல குழம்பு வாங்கி, இன்னோரு வீட்ல பொரியல் வாங்கி, மூன்று வேளை இராஜபோக உணவு சாப்பிடும் ஊர் எங்க ஊர்ங்க, தாய் மாதிரி எங்க ஊர்ங்க..!//

சொர்கமே என்றாலும் நம்ம ஊரை போலவருமா!

Unknown 5:47:00 PM  

நல்லா அனுபவிச்சி இருக்காருருருரு......மரியாதைக்கு நன்றி!

sathishsangkavi.blogspot.com 9:02:00 PM  

அழைப்பை ஏற்று கொங்கர் பாளையத்தைப்பற்றி அற்புதமான கட்டுரை எழுதியதற்கு மிக்க நன்றி...

இன்னும் நம்ம ஏரியா அழகை புகைப்படமாக எடுத்து பதிவி போட்டால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்....

Sivakumar 10:03:00 PM  

சாதிச்சண்டை இல்லாத ஊர். தண்ணீர் தேசம். பவானி ஆறு...என பல செய்திகளை உள்ளடக்கிய பதிவு. தேங்க் யூ(நன்றி டெம்ப்லேட்டாம்ல) லேட்டாம்ல . சீக்கிரம் அங்க ஒரு பதிவர் சந்திப்பு வைங்க. தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் ஸ்பான்சர் செய்ய ரெடியாம்!!

Sivakumar 10:06:00 PM  

//NAAI-NAKKSFeb 18, 2012 09:07 PM
இனிமையான நிகழ்வுகள்...//

சரி...அப்பறம்...

Sivakumar 10:07:00 PM  

/MANO நாஞ்சில் மனோFeb 18, 2012 10:29 PM
எலேய் சொர்கமே என்றாலும் நம்மூர் போல வருமாலேய் மக்கா சூப்பர்ய்யா....!!!//

எந்த ஊர் போலவும் இன்னொரு ஊர் வராது தலைவா. அப்பறம் மேப்ல ரெண்டு தமிழ்நாடு வந்துறப்போகுது. :)

தமிழ்வாசி பிரகாஷ் 1:02:00 AM  

கொங்கர் அண்ணே.....
நல்ல ஊரு... நல்ல ஊரு.....

சாதாரணமானவள் 9:26:00 PM  

நல்ல பதிவு. உங்களுக்காக ஒரு விருது இதோ.. http://sadharanamanaval.blogspot.in/2012/02/blog-post_20.html

anandh 7:10:00 PM  

அப்படியே,நம்ம திருப்பூர் பத்தியும் ஒரு பதிவு போடுங்க

anandh 7:16:00 PM  

கிராமங்களின் அடையாளங்கள் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.
விவசாயம் செழித்தால் மட்டுமே கிராமத்து வாழ்க்கை இனிமையாகும்.


http://mayaththirai.blogspot.in/2012/01/blog-post_15.html

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP