விருதுகள் எனும் ஊக்கமருந்து!

>> Monday, February 27, 2012




நான் பதிவெழுத வந்த பொழுது தமிழ்மணம் ஒரு போட்டி வைத்திருந்தது, என்னையும் ஒரு பதிவர் என்று மதித்து மெயில் அனுப்பியிருந்தார்கள், அப்பொழுது நான் எழுதியது ஒரு பத்து பதிவு இருக்கும், நான் என் படைப்புகளை அனுப்பவில்லை, ஏனெனில் அந்த பத்து பதிவுக்கும் கூடியே ஒரு நான்கு கமெண்ட் இருக்கும் ஓட்டு பூச்சியம்! எல்லாவற்றிலும் நான் கூட தமிழ்மணம் ஓட்டுபோடவில்லை நானே திரட்டியில் இணைக்கமாட்டேன் அதுவே இணைந்துவிடும் இல்லை எதாவது புண்ணியவான் நான் கிறுக்கியது பிடிச்சிருந்தால்! இணைத்துவிட்டு ஒரு ஓட்டையும் போட்டுவிட்டு போயிருப்பார்.


பிறகு..தமிழ்மணம் போட்டி முடிவை அறிவித்தது, பல பிரிவில விருது கொடுத்தாங்க...., எல்லாரும் விருதை தன் வலையின் நெற்றியில் மாட்டி வைத்திருந்தனர் அப்படியே ஒரு சுற்று எல்லாருடைய பதிவையும் வட்டமிட்ட போது 80% நண்பர்கள் விருது பெற்று இருந்தார்கள்.

தமிழ்மணம் கொடுத்த விருதை ஒரு படைப்பாளிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், அது சிறந்த ஊக்கமருந்து எனவும் நான் கருதினேன், நான் கலந்து கொள்ளாததை நினைத்து வருந்தினேன், நாம் அனைவரும் கொஞ்சம் பசங்க படத்தின் அன்புசெழியன் கேரக்டர் மாதிரிதானுங்க, 

நிறைய நண்பர்கள் ஒருவருக்கொருவர் விருது கொடுத்து மகிழ்ந்து கொண்டார்கள், ஒரு சிலர் தனக்குதானே கொடுத்துக் கொண்டார்கள், அதுவும் ஒரு வகையான மகிழ்ச்சியே! தன்னுடைய படைப்பை யாரும் அங்கீகரிக்காத கோபமே இதை செய்யத் தூண்டியது என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு முதன்முதலாக விருது கொடுத்தவர் நாஞ்சில்மனோ அவர்கள், அந்த விருதை வடிவமைத்ததே நான்தான்! நான் வடிவமைத்து அவருக்கு தரும் வரை எனக்கு தெரியாது, எனக்கும் தருவார் என்று, அவரின் பதிவினை படித்த பிறகுதான் தெரிந்தது! எனக்கு தர்மசங்கடமாக இருந்தது, நானே வடிவமைத்து நானே அதைபெற்றுக்கொள்வதா? என்கிற கூச்சம் காரணமாக முடிந்தவரை வேண்டாம் என்று கூறினேன்.

ஆனாலும் அவர் பிடிவாதமாக நான் அன்புடன் தருகிறேன் நீ..என் பதிவுக்கு தொடர்ந்து ஓட்டு போடவேண்டும் என்கிற காரணத்திக்காகவோ, மறுமொழி அதிகம் இடவேண்டும் என்கிற சுயநலத்தில் அல்ல....,நட்பு மற்றும் உன்னுடைய பதிவுக்கு, உன் உழைப்புக்கும் நான் கொடுக்கும் மரியாதை அவ்வளவே என்றார், ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உன் விருப்பம் என்றார். 

இதே விருதை விக்கியும் மறுத்தார் நீ விருது கொடுத்து என்னை திட்டமுடியாதபடி செய்கின்றாயா? என்று கேட்டார்! எலேய்! நீ என்னை இன்னும் நல்லா திட்டவேண்டும் என்பற்காக கொடுக்கிறேன், முறுக்கிக் கொண்டு இருந்த நாங்கள் இருவரும் அவரின் நட்புக்கும் அன்புக்கும் மரியாதை தரவேண்டும் என்பதனால் விருதை ஏற்றுக்கொண்டோம் இதில் எந்தவிதமான சுயநலமும் இல்லை!


அடுத்ததாக நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் மதுமதி அவர்கள், மற்றும் சகோதரி சாதாரணமானவள்  அவர்களும் Liebster Blog விருது கொடுத்திருக்கிறார்கள் இருவரும் கொங்குதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி, இந்த விருதை ஐந்து பதிவர்களுக்கு தரவேண்டும் என்கிற நடைமுறை இருப்பதால் நான் தேடிக் கண்டுபிடித்த முத்துகள்

1. கோழிப்பையன் 


“எங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே!” இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா?! என்று தன்னைபற்றி கூறும் நண்பரின் ஊர் “நாமக்கல்” அதுதான் முட்டைய பற்றி பேசுகிறார் பல நல்ல தகவல்களை தருகிறார் இவருக்கு இந்த விருது கொடுப்பதில் பெருமையடைகிறேன். இவரின் அனைத்து பதிவுகளும் சிறந்ததுதான் என்னை கவர்ந்தது ஓசோவின் சிறு கதைகள் என்கிற பதிவை அனைவரும் படிக்க வேண்டும். விருதுக்கான பதிவு இது!


2.அவிழ்மடல்


பல நல்ல தொழில்நுட்பங்களை எழுதி வருகிறார், பல்சுவை மற்றும் விழிப்புணர்வு பதிவுகளை எழுதிவருகிறார்,சில தவறான செய்திகளை மறுத்து இவர் பதிவிட்ட தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? என்கிற பதிவு விருதுக்கான பதிவு......

3.கொக்கரக்கோ


இவர் பல அரசியல் கட்டுரை எழுதுகின்றார் அதில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி.....நன்றி.....நன்றி.....மிகசிறப்பான கட்டுரை! அல்ல அல்ல கடிதம் என்று கூறலாம்! அம்மா படிச்சாங்களா! என்று தெரியவில்லை?விருதுக்கு காரணமான பதிவு.......


4.கோவைநேரம்


இவர் என்னை மாதிரியே சாப்பாட்டு பிரியர் போல....ஈமுகோழி கறி சாப்பிட்டு பார்க்கனும் என்று ரொம்ம நாளா நினைச்சிட்டு இருந்தேன்! இவர் பதிவை படிச்ச பிறகு அந்த ஆசையில மண் மட்டும் இல்லை, சிமெண்ட்டே போட்டு மூடி விட்டேன்!  ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு பதிவு விருதுக்கு காரணமான பதிவு.


5.தமிழன்


வா.கோவிந்தராஜன் அவர்கள் அவர்களுடைய கார்களுக்கும் இனி ஸ்டார் ரேட்டிங்:இந்திய எரிசக்தி சேமிப்பு ஏஜென்சி(பி.இ.இ) என்கிற பதிவு விருதுக்கான காரணமான பதிவு! பல அரசியல் பதிவுகளை எழுதிவரும் இவர் வைகோவின் அபிமானி, அரசியலை அலசும் ஒரு வலைப்பூ!

இவர்கள் ஐவருக்கும் விருது கொடுத்துள்ளேன், நீங்களும் இவர்களை வாழ்த்தி இவர்களின் தளத்திக்கு ஆதரவு நல்கி அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என விரும்புகிறேன் நானும் பல நல்ல பதிவுகளைத் தரவேண்டும், வாழ்வில் எல்லா வளமும் பெறவேண்டும் என வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி!

32 comments:

நாய் நக்ஸ் 5:05:00 AM  

வாழ்த்துக்கள்....
அனைவருக்கும்...

ஹாலிவுட்ரசிகன் 6:12:00 AM  

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களை ஊக்கப்படுத்தும் உங்கள் சேவை தொடரட்டும்.

சம்பத்குமார் 7:25:00 AM  

வாழ்த்துக்கள் சுரேஷ்

உங்களுக்கும் விருது பெற்ற உள்ளங்களுக்கும்

ராஜ் 9:02:00 AM  

விருது பற்றி அழகான் விளக்கத்தை குடுத்து உள்ளீர்கள். ஆனால் இந்த விளக்கம் தேவை இல்லாது என்பது என் கருத்து. உங்களை சிறிது காலம் தொடர்வதால் அப்படி சொன்னேன். நமக்கு பிடித்ததை நாம் நண்பர்களுடன் சேர்ந்து செய்வதற்கு தான் நம்ப ப்ளாக். அடுத்தவர்களை திருப்தி படுத்த இல்லை.
உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள்.
விருது என்பது இரு பதிவர்கள் இடையே இருக்கும் அழமான நட்பின் வெளிப்பாடே.
என்னை பொறுத்த வரை விருது தருவதில் பெறுவதில் தவறேதும் இல்லை என்றே சொல்வேன்.
மற்ற படி நீங்கள் விருது குடுத்த அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் :)

Thava 9:03:00 AM  

விருதுகளை வென்ற தங்களுக்கும் ஏனைய பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..தொடரட்டும் தங்கள் பணி.நன்றி.

aalunga 9:41:00 AM  

ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் வலைப்பூ ஒன்றைத் துவங்கி விட்டு, பல காலம் கழித்து, நண்பர்களின் ஊக்கத்தால் எழுதத் துவங்கியவன் நான்.

எனது முதல் சில பதிவுகளுக்கு என் நண்பர்கள் மட்டுமே வாசகர்கள். அதன் பின் வந்த வாசகர்களும் என் நண்பர்கள் ஆனார்கள்.

சில நேரங்களில் பதிவுகளில் மறுமொழிகள் இல்லாத போது, என் எழுத்தை நினைத்து நானே நொந்து கொண்டது உண்டு. ஆனால், இன்று தாங்கள் Liebster Blog விருது கொடுத்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்

எழுத வேண்டும் என்கிற வேட்கையைச் செம்மைப்படுத்தி,மேலும் எழுத ஊக்கம் பெற்றேன்.

எழுதத் துடிக்கும் என் போன்ற புதியவர்களுக்கு வாழ்த்துகளும், விருதுகளும் தான் உற்சாக பானங்கள்!

எனது பதிவைப் படித்து விருது கொடுத்ததற்கு கோடானு கோடி நன்றி!!

கோகுல் 9:44:00 AM  

தேடிப்பிடித்து தகுதியானவர்களுக்கு விருதளித்திருக்கிறீர்கள்.பாராட்டுகள்.விருது பெற்றோர்களுக்கு வாழ்த்துகள்.
இந்த அங்கீகாரம் நிச்சயம் அவர்கள் மேலும் எழுத ஊக்கமளிக்கும்.

விச்சு 3:29:00 PM  

அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.

Prem S 5:48:00 PM  

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

Unknown 5:59:00 PM  

//@NAAI-NAKKS said...
வாழ்த்துக்கள்....
அனைவருக்கும்...//

நன்றிகள் நக்கீரன் அவர்களே!

Unknown 6:00:00 PM  

@ஹாலிவுட்ரசிகன் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களை ஊக்கப்படுத்தும் உங்கள் சேவை தொடரட்டும்.///

மிக்க நன்றி!ஹாலிவுட்ரசிகன்!

Unknown 6:01:00 PM  

@சம்பத்குமார் said...
வாழ்த்துக்கள் சுரேஷ்

உங்களுக்கும் விருது பெற்ற உள்ளங்களுக்கும்//

நன்றி சம்பத்! மிக்க நன்றிகள்!

Unknown 6:05:00 PM  

@ராஜ் said...
விருது பற்றி அழகான் விளக்கத்தை குடுத்து உள்ளீர்கள். ஆனால் இந்த விளக்கம் தேவை இல்லாது என்பது என் கருத்து. உங்களை சிறிது காலம் தொடர்வதால் அப்படி சொன்னேன். நமக்கு பிடித்ததை நாம் நண்பர்களுடன் சேர்ந்து செய்வதற்கு தான் நம்ப ப்ளாக். அடுத்தவர்களை திருப்தி படுத்த இல்லை.
உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள்.
விருது என்பது இரு பதிவர்கள் இடையே இருக்கும் அழமான நட்பின் வெளிப்பாடே.
என்னை பொறுத்த வரை விருது தருவதில் பெறுவதில் தவறேதும் இல்லை என்றே சொல்வேன்.
மற்ற படி நீங்கள் விருது குடுத்த அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் :)//

ஏதோ..நம்மால் ஆன ஒரு முயற்சி இதில் தவறு இல்லை!விளக்கத்திக்கு காரணம் விருதை பற்றி சில விமர்சனங்கள் வருவதால்.....தர வேண்டியதாகிப் போயிற்று மற்றபடி ஒன்னுமில்லை நண்பர் ராஜ் உங்கள் அன்பிற்க்கு நன்றி!

Unknown 6:06:00 PM  

@Kumaran said...
விருதுகளை வென்ற தங்களுக்கும் ஏனைய பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..தொடரட்டும் தங்கள் பணி.நன்றி.//

கருத்துரைக்கு மிக்க நன்றி குமரன்!

Unknown 6:09:00 PM  

ஆளுங்க (AALUNGA) said...
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் வலைப்பூ ஒன்றைத் துவங்கி விட்டு, பல காலம் கழித்து, நண்பர்களின் ஊக்கத்தால் எழுதத் துவங்கியவன் நான்.

எனது முதல் சில பதிவுகளுக்கு என் நண்பர்கள் மட்டுமே வாசகர்கள். அதன் பின் வந்த வாசகர்களும் என் நண்பர்கள் ஆனார்கள்.

சில நேரங்களில் பதிவுகளில் மறுமொழிகள் இல்லாத போது, என் எழுத்தை நினைத்து நானே நொந்து கொண்டது உண்டு. ஆனால், //

உண்மைதான் இந்த அனுபவத்தினை பெறாத பதிவர்களே கிடையாது வாழத்துகள்! விருதை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள்...

Unknown 6:10:00 PM  

@கோகுல் said...
தேடிப்பிடித்து தகுதியானவர்களுக்கு விருதளித்திருக்கிறீர்கள்.பாராட்டுகள்.விருது பெற்றோர்களுக்கு வாழ்த்துகள்.
இந்த அங்கீகாரம் நிச்சயம் அவர்கள் மேலும் எழுத ஊக்கமளிக்கும்.//

நன்றிகள் கோகுல்!

Unknown 6:11:00 PM  

@விச்சு said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.//

விச்சு அவர்களுக்கு நன்றிகள் பல!

Unknown 6:12:00 PM  

@PREM.S said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...//

வாழ்த்துயமைக்கு மிக்க நன்றிகள் நண்பர்
அவர்களுக்கு...

மகேந்திரன் 6:14:00 PM  

விருது பெற்ற உங்களுக்கும்
உங்கள் கையால் விருது படைத்து
மகிழ்ந்த அனைவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Unknown 7:28:00 PM  

விளக்கம் சொல்லியே ஆயுசு முடிஞ்சிடும் போலயே மாப்ள!

Unknown 8:13:00 PM  

@மகேந்திரன் said...
விருது பெற்ற உங்களுக்கும்
உங்கள் கையால் விருது படைத்து
மகிழ்ந்த அனைவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி மகேந்திரன் அவுர்களுக்கு

Unknown 8:15:00 PM  

@விக்கியுலகம் said...
விளக்கம் சொல்லியே ஆயுசு முடிஞ்சிடும் போலயே மாப்ள!//

ஆமாம் மாம்! விளக்கம் கொடுக்கவில்லையென்றால் விருதுக்கு பெருமையில்லையே!

ராஜி 9:50:00 PM  

வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்களால் விருது பெற்றாவர்களுக்கும்

சி.பி.செந்தில்குமார் 2:23:00 AM  

வாழ்த்துக்கள். விருது பெற்றதற்கும், பகிர்ந்தமைக்கும்

கோவை நேரம் 5:48:00 AM  

அட...எனக்குமா....ரொம்ப நன்றிங்க....

MaduraiGovindaraj 8:04:00 AM  

நன்றி நன்றி

விருது வழங்கிய வீடு சுரேஷ் அவர்களுக்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றி!

தி.தமிழ் இளங்கோ 7:26:00 PM  

வணக்கம்! வாழ்த்துக்கள்!

aalunga 7:09:00 AM  

நண்பரே,
எனக்கு விருது அளித்ததற்கு மீண்டும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருது ஏற்புடைமை:
அவிழ்மடல் பெறும் முதல் விருது - லிபெஸ்டர் பிளாக் (Liebester Blog) - நண்பர்களுக்கு நன்றி!

Unknown 8:11:00 AM  

///ராஜி said...
வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்களால் விருது பெற்றாவர்களுக்கும்///

கருத்திட்டமைக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றி சகோ!

Unknown 6:32:00 PM  

@சி.பி.செந்தில்குமார்
@கோவை நேரம்
@வா.கோவிந்தராஜ்
@தி.தமிழ் இளங்கோ

அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

Anonymous,  10:25:00 AM  

Congrats Suresh!

Admin 9:26:00 PM  

ஒரு வார காலமாக இணையதளப் பக்கமே வரமுடியாமற்போனதால் இன்று தான் பதிவைக் காண வரமுடிந்தது தோழர்..மகிழ்ச்சி..நன்றி..

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP