தில்லாலங்கடி பொண்ணு ஏமாந்த பையன்

>> Saturday, November 26, 2011


காதல் கதைகள்....

அன்புள்ள.. என் இனிய நண்பர்களே! இதில் வரும் கதைகள் கற்பனையல்ல நிஜம்!! நம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கலாம்! செய்திதாள்களில் படித்துஇருக்கலாம்! யாரோ கூறியதை கேட்டு இருக்கலாம்! இப்ப நாம பார்க்க போகின்ற கதை..' ஒரு சின்னபெண் உற்றார்,உறவினரை மட்டும் ஏமாற்றாமல்
மணமகனான தாய்மாமனை ஏமாற்றியது அவர் என் நண்பர்.

ராம் மிகவும் சிரமப்பட்டு சுயதொழில் மூலம் உழைத்து, வீட்டைகட்டி தங்கை திருமணத்தினை தனியொருவராக சிறப்பாக நடத்திமுடித்த பொறுப்பான எந்த கெட்டபழக்கம்இல்லாத ஒரு நல்ல பையன், அவருக்கு திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் ஏறாத கோவில் இல்லை, ஜோசியர் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை, எங்கேயும் பெண் அமையவில்லை, அதனால் அவர்கள் நெருங்கிய உறவினர், ராமின் அத்தையின் மகள் வினிதாவின் ஜாதகத்தினை பார்த்தபோது பொருந்திவர திருமண ஏற்பாடு நடந்தது.

வினிதா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார் திருமணம் உடனே வேண்டாம்! நான் கல்லூரியை முடித்துவிடுகிறேன் பிறகு வைத்துக்கொள்ளலாம் எனக்கூறவும், வீட்டாரும் சரியென்று ஏற்றுக் கொண்டார்கள்.

ராம் வினிதாவுக்கு மொபைல் ஒன்றைவாங்கிக்கொடுத்தார், இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினார்கள் போன் பில் ராம் வினிதாவுக்கு மட்டும் மூவாயிரம், நாலாயிரம், கட்டினார், சுடிதார் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேல்தான் வாங்கி கொடுத்தார், திருமணத்திற்க்காக மண்டபம் பார்த்தாகிவிட்டது பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்தாகிவிட்டது பட்டுபுடவை மட்டும் பதினைந்தாயிரத்திற்கு பொண்ணுக்காக ராம் தேடி தேடி ஒவ்வொன்றாய் காதலுடன் செய்தார்.

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தா பற்றிக்கொள்ளுமே அதுபோல எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சினிமா பார்த்துக்கொண்டு வருகையில் வண்டி பஞ்சராக ஒரு இரவு உறவினர் வீட்டில் தங்கியபோது உணர்ச்சி வசத்தில் இருவரும் உறவும்வைத்துக்கொண்டார்கள், இத்தனைக்கும் வலிய கட்டாயப்படுத்தி உறவுகொண்டது வினிதாதான், காதலுடன்,காமமும் கைகோர்த்துக்கொள்ள எப்படா திருமணம் நடக்கும் என ஏங்கினார் ராம்.

திருமணத்திற்கு ஆறு நாட்கள் இருக்கும் சூழ்நிலையில்... ராமின் செல்லுக்கு வினிதாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.. "ஸாரி ராம்" என்று எதற்க்காக இது என குழம்பிய ராம் வினிதாவின் செல்போனுக்கு போன் செய்தான் வினிதாவோ போனை எடுக்கவேயில்லை, என்ன பிரச்சனையோ? என்று வினிதாவின் வீட்டுக்கு சென்றான் அங்கு அனைவரும் அழுதுகொண்டு இருந்தனர்.

என்னாகியது? என்று தன்மாமாவிடம் வினவினான்

நம்மளையெல்லாம் ஏமாத்திட்டு போயிட்டாளுப்பா சண்டாளி என அழுதார்...
என்ன ஆச்சு விவரமா சொல்லுங்க....

மாப்பிளை அவ கல்லூரியில் ஒருவனை காதலித்து இருக்கிறாள், மூன்றாம் ஆண்டு முடிந்தவுடன் திருமணம் முடித்துக்கொள்ளலாம் என்று இருந்திருக்கின்றார்கள் அதற்க்குள் நிறைய வரன் தேடி வர எங்கே திருமணம்
முடித்துவிடுவார்கள்... என பயந்து உன்னை திருமணம் செய்வதாக சம்மதித்து படிப்பை முடித்து விடடாள், காவல் நிலையத்தில் இருந்து திருமணம் முடித்துக்கொண்டு எனக்கு போன் செய்கிறாள், நாங்க இப்பத்தான் சென்று தலைமுழுகிவிட்டு வருகிறொம் என்று அழுதார்.

ராம் நொந்து போனார் நம்மை ஒரு பெண் பகடைகாயாக பயன்படுத்திவிட்டாளே என அழுதார், அழுது என்ன பயன்? கவுரமான அந்தஸ்த்திலிருக்கும் ராம் ஒரு தொழிலதிபர், திருமணம் நின்று போனால் யாரும் மதிக்க மாட்டார்கள், கேவலமாக எதிரிகள் பேசுவார்களே என புலம்பினார்.... கவலை வேண்டாம் அதே தேதியில் பத்திரிக்கை கொடுத்ததுகொடுத்ததாக இருக்கட்டும் வேறுபெண்ணைப்பார்த்து திருமணம் முடித்து விடலாம் என நண்பர்கள் கூறினார்கள், அதன்படியே ஒரு புரோக்கரை பார்த்து நிலைமையை கூறி பத்தாயிரம் பணத்தைக் கொடுத்து கூடவே ஒரு காரும் அனுப்பி தேடகூறினோம், புரோக்கரும் ஒரு மணிநேரத்தில் நல்ல தகவலோடு வந்தார் 

ஒரு கிராமத்தில் மாப்பிளைக்கு வலிப்பு நோயிருப்பதையும், மறைத்து அதுவிமில்லாமல் உடல்உறவும் கொள்ளக் கூடாது என்கின்ற மருத்துவர் கூறியதையும் மறைத்து, பிறகு அந்த பெண்ணின் உறவினர் கூறியதால் திருமணம் நின்று போயிருந்த சுதா என்கின்ற பெண்ணை புரோக்கர் கூறினார், அதேதேதியில் திருமணம் நடந்தது வினிதாவைவிட சுதா படிப்பில்லை என்றாலும் குடும்பத்தை நிர்வாகிப்பதில் திறமை மிக்கவராகும் அன்பான ஒரு மனைவியாகவும் இருக்கின்றார் அவர்கள் பல்லாண்டு வாழ நாமும் வாழ்த்துவோம்

இந்த கதையில் வினிதாவின் நிலைப்பாடு என்ன? காதலனுடன் கை கோர்த்து இந்த கபடநாடகம் ஏன் நடத்தவேண்டும்? தன்னுடைய படிப்பும் முடியவேண்டும்! காதலனையும் கைப்பிடிக்கவேண்டும்! ராமுடன் கொண்ட உடல்உறவு அவளின் ஆசைக்கு தன்னையறியாமல் உதவியதுக்கு பரிசா?இதற்க்கு பெயர் காதலா வேறுபெயர் அதை செல்லவிரும்பவில்லை... மொத்தத்தில் "கற்பு" என்பது சிலருக்கு சும்மா...! சும்மாவுக்கு தமிழில் அர்த்தம் கிடையாது, அதுபோலவே....நேர்மையாக ராமிடம் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினால் அவனே திருமணம் முடித்துக்கொடுப்பானே
அது மாதிரியான கேரக்டர்தான் ராம், ஆனால் ஜாலியாக ராம் பணத்தில் காதலனுடன் போன் பேசமுடியாது வேண்டியஉடை கிடைக்காது உயர்தர உணவகங்களில் உண்ணமுடியாது இதற்க்கு உலகின் பழமையான தொழில்
செய்பவர்கள் மேல்.... டிஸ்கி : விதி யாரை எங்கு சேர்க்கவேண்டுமோ! அங்கு சேர்க்கும்!!

கதைகள் தொடரும்.....


1 comments:

Unknown 3:11:00 AM  

மாப்ள இதில் பெண்களை இன்றும் வலிய தங்கள் விருப்பத்தை ஏற்று கொள்ள சொல்லும் பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP