காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள்

>> Tuesday, November 15, 2011
மகாராஜா ஏன் சிபி'யை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்?

கில்மா பட விமர்சனத்தில மாகாராணி படத்தை போட்டிருக்கின்றார் அதனால்தான்
------------------------------------------------------------------------------
மிஸ்டர் விக்கி நீங்கள் மன்னர் அந்தபுற படிக்கட்டில் தவறி விழுந்து தாவாகட்டை பெயர்ந்து விழுந்ததை கிச்சிளிக்காஸ் என்று வெளியிட்டதுக்கு தண்டனையாக ஆப்பிரிக்க வண்டை வாயில் போட்டு நீங்கள் நெளிவதை வீடியோ எடுத்து விக்கிளிக்காஸ் என்று மன்னரின் பதிவில் போட உத்தரவிடுகிறேன்...
----------------------------------------------------------------------------------------
அரசே எந்த தவறும் செய்யாத அப்பாவி வந்தேமாதரம் சசியை ஏன் இருட்டு கொட்டடியில் அடைத்துவிட்டீர்கள்

பின்ன என்னயா காப்பி பேஸ்ட் செய்யமுடியாதபடி HTML கோடு போட்டு பதிவு போட்டு என்னை பதிவு போடமுடியாம பண்ணிட்டார் அதான்
----------------------------------------------------------------------------------------
மன்னா எதற்காக கிடங்கில் இத்தனை HIT பூச்சி மருந்து

எந்த பதிவ பார்த்தாலும் HITS வேண்டும் HITS வேண்டுமென்று கூறுகிறார்கள் அதான்
-----------------------------------------------------------------------------------------
மன்னா ஏன் அரண்மனை வைத்தியர் நடுங்கிக்கொண்டு நிற்கிறார்

நம்ம கனினியில வைரஸ் வராமல் இருக்க ஆன்டிவைரஸ் போடனுமாம் போடுய்யாங்கற ஒரு மணி நேரமா முழிச்சிட்டு நிற்கின்றார்
------------------------------------------------------------------------------------------
இந்த நிரூபனை பார்த்தீர்களா அமைச்சரே என் வீரத்தைப்பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன் எழுத்து பிழை ஏதாவது உண்டா என பார்க்கக் கூறினேன் கட்டுரையின் முடிவில் யுடான்ஸ் என்று ஒரு லோகோவை வைத்து விட்டு சென்றுவிட்டார் என் வீரம் பொய் என்றல்லவா ஆகிறது...

அய்யோ மன்னா அது ஒரு திரட்டி
--------------------------------------------------------------------------------------------------------
அமைச்சரே சீக்கிரம் வாருமய்யா இங்க பாருங்கள் ராஜபாட்டை ராஜா ஒரு படத்தை பதிவில் போட்டு இருக்கிறார் பார்க்கவே கோரமாக பயமாக இருக்கின்றது

மன்னா மன்னிக்கவும் அது தாங்களுடைய புகைப்படம்தான்..
----------------------------------------------------------------------------------------------------------
மன்னா ஏன் கோபமாய் இருக்கின்றீர்

பின்ன என்ன ராணி நான் இந்த நாட்டுக்கே அரசன் என் பெயரை போடுவதுக்கு பதில் இனையத்துல எங்க பார்த்தாலும் கோகுல் மனதில்..கோகுல் பெயரையே போட்டிருக்கிறார்கள்

மன்னா..மன்னா அது கோகுல் அல்ல கூகுள்...
-------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே எத்தனை நாளைக்குத்தான் அரசியல்வாதிகளையும் சினிமா நட்சத்திரங்களையும் கலாய்ப்பது நாம என்ன குறைஞ்சா போயிட்டம் நம்ம நண்பர்களை நாமதான் கலாய்க்கனும் யாராவது நண்பர்களுக்கு இந்த பதிவு மன வருத்தத்தை அளிக்கும் என்றால் தெரிவிக்கவும் பதிவு நீக்கப்படும் மன்னிப்பும் கேட்கப்படும்

14 comments:

Unknown 5:57:00 PM  

ஹா ஹா ஹா நல்லா இருக்கு மாப்ள...யாரும் மனோ(!) வருத்தம் கொள்ள மாட்டார்கள்...இருந்தாலும் மனோவை விட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன் ஹிஹி!

Unknown 6:16:00 PM  

அமைச்சர் யார்ன்னு நெனச்சிட்டு இருந்திங்க மாம்ஸ் மனோ அண்ணாச்சிதான் உங்களை போட்டு கொடுத்ததும் அவர்தான்

பால கணேஷ் 8:07:00 PM  

நயமான நாகரீகமான நகைச்சுவைத் துணுக்குகள். எவரும் வருத்தம் கொள்ளாமல் ரசிக்கக் கூடியவையாக வெளியிட்டுள்ளீர்கள். சிரித்து ரசித்தேன். அருமை.

Unknown 9:58:00 PM  

நன்றி உயர்திரு கணேஷ் அவர்களுக்கு...

சி.பி.செந்தில்குமார் 3:30:00 AM  

லேப்டாப் மனோவை விட்டுட்டீங்களே, அதான் வருத்தம்

கோகுல் 4:27:00 AM  

நாம என்ன கொறைஞ்சா போய்ட்டோம் .அதானே? மன வருத்தமா அது கிலோ என்ன விலை?

rajamelaiyur 4:48:00 AM  

//அமைச்சரே சீக்கிரம் வாருமய்யா இங்க பாருங்கள் ராஜபாட்டை ராஜா ஒரு படத்தை பதிவில் போட்டு இருக்கிறார் பார்க்கவே கோரமாக பயமாக இருக்கின்றது

மன்னா மன்னிக்கவும் அது தாங்களுடைய புகைப்படம்தான்..
//
நல்ல வேலை என் படத்தை போடல ..என்னும் கொடூரமா இருக்கும்

rajamelaiyur 4:48:00 AM  

இன்று என் வலையில்

அஜித் : THE REAL HERO

விச்சு 3:28:00 PM  

பதிவர்கள் கலாய்ப்பு ரசிக்கும்படி உள்ளது.

MANO நாஞ்சில் மனோ 2:58:00 AM  

விக்கியுலகம் said...
ஹா ஹா ஹா நல்லா இருக்கு மாப்ள...யாரும் மனோ(!) வருத்தம் கொள்ள மாட்டார்கள்...இருந்தாலும் மனோவை விட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன் ஹிஹி!//

விட்றா விட்றா நமக்கு இது புதுசா என்ன ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ 2:59:00 AM  

veedu said...
அமைச்சர் யார்ன்னு நெனச்சிட்டு இருந்திங்க மாம்ஸ் மனோ அண்ணாச்சிதான் உங்களை போட்டு கொடுத்ததும் அவர்தான்//

நாசமாபூச்சு பூங்க....

MANO நாஞ்சில் மனோ 2:59:00 AM  

சி.பி.செந்தில்குமார் said...
லேப்டாப் மனோவை விட்டுட்டீங்களே, அதான் வருத்தம்//

டேய் அடங்குடா மூதேவி....

MANO நாஞ்சில் மனோ 3:00:00 AM  

ஆஹா செம கலக்கலா கலக்கிட்டீங்க மன்னா...!!!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP