செவ்வாய்கிழமை சிரிக்க....சிரிக்க....சிரிப்பு வரல நான் பொருப்பு இல்ல

>> Monday, November 14, 2011
ஏம்பா இந்த தலைவர் பண்ணினது ஓவர்தான்..!

என்ன சொல்ற...

ஆமாப்பா தெருவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பெயர் வைச்சிருக்காங்கன்னு
பெயர்த்து எடுத்து சென்னையில இருந்து திருச்சியில கொண்டு வைக்கசொல்லி உத்தரவுட்டிருக்காரு...
-------------------------------------------------------------------------------------------------------------

என்னப்பா இது மருத்துவமனைக்கு நடுவே தண்டவாளம் போகுது

உனக்கு தெரியாதா இது போன மாசம் வரைக்கும் இரயில் நிலையமா இருந்தது
இந்த மாசம் மருத்துவமனையாக்கிட்டாங்க....
--------------------------------------------------------------------------
ஏங்க நம்ம புள்ளைய பாருங்க கொலுபொம்மையை மாத்தி மாத்தி வைச்சிட்டு
இருக்குறா

விடுடி வருங்காலத்தில CM ஆயிடுவா....
---------------------------------------------------------------------------
நம்ம தலைவரோட பையன் அவருமாதிரியே இருக்கான்..!

எப்படிச் சொல்ற...

ஆசிரியர் மதிப்பென் குறைவுக்கு விளக்கம் கேட்டதுக்கு தமிழர்கள், தமிழறிஞர்களே, சொல்லட்டும் அப்படிங்கறான்...
----------------------------------------------------------------------------


சார் கல்யாணத்திக்கு வந்த உங்க பையன் விஜயகாந்த் ரசிகரா இருக்கலாம் அதுக்காக இப்படியா?

என்ன சார் என்ன ஆச்சு?

நடப்பது முதலிரவு அங்க வந்து எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க அப்படிங்கறான்
-------------------------------------------------------------------------------------------

9 comments:

Unknown 7:21:00 PM  

மாப்ள கடைசி விஷயம் ...கொன்னுட்டய்யா ஹிஹி!

rajamelaiyur 8:17:00 PM  

//நம்ம தலைவரோட பையன் அவருமாதிரியே இருக்கான்..!

எப்படிச் சொல்ற...

ஆசிரியர் மதிப்பென் குறைவுக்கு விளக்கம் கேட்டதுக்கு தமிழர்கள், தமிழறிஞர்களே, சொல்லட்டும் அப்படிங்கறான்...
//

வருங்கால C.M அவன்

நிரூபன் 11:08:00 PM  

இனிய மதிய வணக்கம் நண்பா,

கலக்கலான நகைச்சுவைகள்,
எனக்கு மீண்டும் மீண்டும் சிரிப்பை வர வைத்தது ரயில் நிலையத்தை மருத்துவமனையாக்கிய ஜோக்

Unknown 1:04:00 AM  

மாம்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ராஜபாட்டைக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நிரூபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ராஜி 8:22:00 AM  

ரயில்வே ஸ்டேஷன் ஜோக் சூப்பர். இனி வருங்காலத்தில் அப்படி நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை சகோ

Unknown 5:00:00 PM  

ராஜி அவர்களுக்கு மிக்க நன்றி...

g.viswanathan 1:30:00 AM  

ரயில்வே ஜோக் சூப்பர்ர இருக்குங்க...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP