சம்மதம் தருவாயா சகியே...

>> Wednesday, November 9, 2011

Thank you google


அன்பே..
மன்னின் விடியல்
கதிரவனின் உதயத்தில்
விதையின் வீரியம்
முளைவிடும் சமயத்தில்
நதியின் ஓட்டம்
மழையின் தயவில்
மழையின்பிரசவம்
வெயிலின் கடுமையில்
கனவுகளின் காரணம்
ஆசையின் ஆதிக்கத்தில்
கவிஞனின் உதயம்
காதலியின் பார்வையில்
என் காதல் உதயத்தின்
காரணத்தை கூறிவிட்டேன்
உன் சம்மதத்தில்தான்
இருக்கின்றது
என் வாழ்வின் உதயம்!

7 comments:

M.R 7:29:00 PM  

அழகிய காதல் கவிதை (சம்மதத்திற்காக ) அருமை

கோகுல் 10:34:00 PM  

உதயம் விரைவில் வர வாழ்த்துகள்

Unknown 10:39:00 PM  

உதயம் எல்லாம் வந்து 7 வருசமாச்சு கோகுல் ம்ம்....

சக்தி கல்வி மையம் 11:07:00 PM  

சீக்கிரம் சம்மதம் சொல்லிவிடு சகோ...

நீங்கள் சொல்லுகிற பதில்தான் நண்பரின் உதயம் இருக்கிறதாம்..

நல்ல காதல் கவிதை..

நன்றி..

Unknown 12:00:00 AM  

M.R. அவர்களுக்கு நன்றி

கருன் சார் வருகைக்கு நன்றி

ராஜா MVS 5:55:00 AM  

கவிதை அருமை... நண்பா...

Prem S 10:30:00 AM  

//மழையின்பிரசவம்
வெயிலின் கடுமையில்//எப்படில்லாம் எழுதுறாங்க அருமை

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP