சம்மதம் தருவாயா சகியே...
>> Wednesday, November 9, 2011
![]() |
| Thank you google |
அன்பே..
மன்னின் விடியல்
கதிரவனின் உதயத்தில்
விதையின் வீரியம்
முளைவிடும் சமயத்தில்
நதியின் ஓட்டம்
மழையின் தயவில்
மழையின்பிரசவம்
வெயிலின் கடுமையில்
கனவுகளின் காரணம்
ஆசையின் ஆதிக்கத்தில்
கவிஞனின் உதயம்
காதலியின் பார்வையில்
என் காதல் உதயத்தின்
காரணத்தை கூறிவிட்டேன்
உன் சம்மதத்தில்தான்
இருக்கின்றது
என் வாழ்வின் உதயம்!
