புறம்போக்கு - எதிர்வினை

>> Monday, June 1, 2015

விமர்சனம்

இயற்கை திரைப்படம் மூலம் அறிமுகமான காம்ரேட் ஜனநாதன் தமிழ் சினிமாவில் கப்பல் தொழிலாளர்களைப் பற்றி தமிழ் சினிமாவில் முதன்முதலாக எடுத்தார், அது ஒரு அழகான காதல் கதை பருவகிளர்ச்சியில் தவிக்கும் ஒரு பெண்ணின் மனப்போராட்டமும் அவளைக் காதலிக்கும் கப்பல் தொழிலாளியான ஒரு இளைஞனும் என மிக அழகாக செதுக்கியிருப்பார். அடுத்ததாக எடுத்த ஈ திரைப்படம் பேசியது முதலாளித்துவ நாடுகள் ஏழை நாடுகள் மீது பிரயோகிக்கும் வன்முறையான கிருமியுத்தம் பற்றியதாகும்! முதல் இரண்டாம் யுத்தம் போல் ஆயுத தாக்குதல் அல்ல கத்தியின்றி ரத்தமின்றி ஒரு ஊசி மூலம் நோய் பரப்பி எதிரிநாடுகளை அழிக்கும் அல்லது நிலைகுலைய வைக்கும் ஒரு மனிதாபிமானமற்ற ஒரு போர் முறையாகும்.அது நமது இந்தியாவில் பணத்தாசை பிடித்த மனிதர்கள் மூலம் எப்படி நிகழ்த்தப்படுகின்றது என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்த மிகச்சிறந்த படம்.

அடுத்தாக புறம்போக்கு படத்திலும் இதே மாதிரியான ஒரு விசயம் அனுகப்பட்டிருக்கின்றது, ஆயுத குப்பையாகும் இந்தியா! இதைப் பற்றி பல இயற்கை ஆர்வலர்கள், போராளிகள் நிறைய எழுதி விட்டார்கள், சிலர் இதை தூக்குத் தண்டனை தேவையா இல்லையா? என்று அலசுகின்ற படமாகப் புரிந்து கொண்டார்கள். ஆனால் முக்கிய நோக்கம் அதுவல்ல ஆர்யா(தோழர் பாலு)என்னைப் போர்க் கைதியாக பாவித்து சுட்டுக் கொல்ல வேண்டும் எனக் கேட்கின்றார்.அவர் செய்த குற்றம் இந்தியா ஆயுத குப்பையாகிக் கொண்டிருக்கின்றது என்கின்ற விசயத்தை நாட்டு மக்களிடையே தெரியப்படுத்தவும் கவனம் பெற மனிதகுண்டாக மாறி ஆயுதம் வரும் இராணுவ வாகனங்களை அழிக்க முயல்கின்றார். உயிருக்கு பயப்படாத மனிதவெடிகுண்டு தூக்குத் தண்டனைக்கு எதிராக இல்லை என்பதும் விளக்கமாக தெரிகின்றது. ஆனாலும் தூக்குப் போடும் தொழிலாளிகளின் உளவியலை அலசுகின்றது.

சிங்கம் திரைப்படத்திற்கும் இதற்கும் என்ன சம்மதம் என்று ஒருவர் என்னைக் கேட்டார், பார்வைதான் ஷாம் பார்வையில் இந்த திரைப்படத்தை ஒரு இயக்குநர் பார்த்தால் இது பக்கா போலீஸ் படம், சிங்கம் படத்தில் போலீஸ் நிலையத்தை சூறையாடி கைதியை தப்ப வைப்பார்கள், இது ஆந்திராவில் நக்சலைட்டுகள், நக்சல்பாரிகள் அடிக்கடி நடத்தும் விசயம். நமது தமிழகத்தில் கூட வெள்ளித் திருப்பூரில் வீரப்பன் சில வருடங்களுக்கு முன் சூறையாடி ஆயுதங்களை கொள்ளையடித்தான் பிறகு விசாரனையில் அவனுடன் சில தமிழ் தீவிரவாத அமைப்புகள் இணைந்தது தெரிந்தது.அதை இயக்குநர் ஹரி பயன்படுத்தியிருப்பார்.அதை வைத்துதான் சொன்னேன்.
ஆனால் ஒன்று காம்ரேட்டுகள் முதலாளித்துவ நாடுகள் என எதைக் குறிப்பிடுகின்றார்கள் எனப் புரிவதில்லை...அமேரிக்காவையா..? பேரான்மை, ஈ,புறம்போக்கு படத்தின் மையக் கரு நமது நாட்டின் மீது நிழல் யுத்தம் நடத்தும் நாடுகளைப் பற்றிய சரடுதான்! அப்படி நடத்தும் நாடுகளில் முதன்மையானது சீனா. இந்தப் படம் கூட மாவோயிஸ்ட்டுகளைத்தான் ஞாபகப்படுத்துகின்றது. புரட்சி, போராட்டம், முதலாளித்துவம் என தீவிரவாதம் புரியும் இவர்கள் செயலில் நியாயம் இருப்பதைப் போல் தோன்றினாலும் அவர்களில் பின்னால் கட்டப்பட்டிருக்கும் நூலின் மறுமுனை சீனாவில் இருந்து இயங்குகின்றது. சீனா கூட ஆயுத குப்பையை திபெத்தில் கொட்டி வருகின்றது. இந்திய எல்லைப் பகுதியில் இரும்புச் சாலைபோடுவதின் அவசியம் இது போன்ற ஆயுத குப்பைகளை கழிவுகளை இந்திய பகுதியில் கொட்டுவதற்குத்தான் எனவும் ஒரு கருத்து நிலவுகின்றது. காம்ரேட்டுகள் இன்னமும் அமெரிக்காவை வையாமல் சீனா என்கின்ற ஏகாதிபத்திய, முதலாளித்துவ, ஆக்கிரமிப்புத்துவ நாட்டை கவனிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

எதிர்வினை


  • Rasu Rasu மாவோயிஸ்ட்டுகள் கூலிப்படை என்ற கருத்தை அழகாக முன்வைத்துள்ளீர்கள் . அதுபோக பொருளாதார ரீதியாக நமது அரசின் துணையுடன் நாட்டுக்குள் ஊடுருவி உறிஞ்சும் அமெரிக்க அரக்கனை விடுத்து ராணுவ ரீதியாக ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கும் சீனாவின் மீது தோழர்கள் தங்கள் பார்வையை திருப்ப வேண்டும் என்றும் யோசனை சொல்லியிருக்கிறீர்கள் . இன்னும் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஊடுருவல் போன்றவற்றையும் தோழர்கள் கவனத்தில் கொண்டால் நலம் . 

    ஜம்மு காஷ்மீரின் நிலப்பரப்புக்குள் மையம் கொண்டிருக்கும் ராணுவம் அதை காப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்த இது உதவக்கூடும் .
    Unlike · Reply · 7 · May 18 at 9:31pm · Edited
  • வீடு சுரேஸ் குமார் அமேரிக்கா என்கின்ற ஒட்டகம் கூடாரம் புகுந்த கதையும் உண்டு, இப்பொழுது ஒட்டகம் அமேரிக்கா மட்டும்தானா..? என்பது என்னுடைய கேள்வி தோழர் Rasu Rasu
    Like · Reply · 4 · May 18 at 7:54pm
  • Rasu Rasu சீனா இந்தியாவை நேரடியாக எதிர்க்கிறது . அதுவும் ராணுவ பலத்தின் மூலம் . இதை இந்திய அரசு தான் எதிர்கொள்ள வேண்டும் . ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பது நமது அரசின் ஒத்துழைப்புடனே நடைபெறுவது உங்களுக்கு தெரியும் . அதை இந்திய ராசாக்கள் எக்காலத்திலும் எதிர்க்கப் போவதில்லை . 

    இப்படியான எதிரிகளில் ஒரு சாமானிய போராளி யாரை எதிர்த்து போராடுவான் என்பது தான் என் கேள்வி ?
    Unlike · Reply · 6 · May 18 at 7:59pm · Edited
  • வீடு சுரேஸ் குமார் சீனா நம் மீது போர் நடத்தியிருக்கின்றது, அதை இந்திய காம்ரேட்டுகள் ஆதரித்தும் இருக்கின்றார்கள்...! ரஷ்யாவும் ஒதுங்கிக் கொள்ள நமக்கு அமேரிக்கா உதவியது சீனா பின்வாங்கியது, இது வரலாறு! அப்பொழுதே தெரியும் கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க மாட்டார்கள்... கியூபா கூட சற்று நெகிழ்ந்திருக்கின்றது...! தோழர்! அமேரிக்கா வரவுக்கு..!
    Like · Reply · 1 · May 18 at 8:05pm
  • Rasu Rasu அமெரிக்கா உதவியிருக்கிறது //

    அமெரிக்காவின் உதவிகள் பற்றி உங்களுக்கு தெரியாததல்ல . ஒசாமாவுக்கு உதவியது கூட அமெரிக்கா தான் . 


    நான் கேட்க வந்ததின் சுருக்கம் இதுதான் . பழங்கதைகளை தவிர்த்து விடுவோம் . 

    எதிரிகள் இரண்டு பேர் . ஒருவன் எல்லையில் ஆயுதங்களுடன் சண்டைக்கு நிற்கிறான் . இன்னொருவன் ஆயுதங்களுடன் முழு சுதந்திரத்துடன் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு விட்டான் . இந்த நிலையில் மக்களுக்காக போராடுபவன் யாரை எதிர்ப்பான் . 

    த�விர இவ்வளவு காலம் அந்த ஒட்டகத்தை எதிர்த்து வந்தவனை இன்று அவன் இரும்பு சாலை போடுகிறான் அவனை எதிர்த்து� போராடுங்கள் என்று சொல்வது எவ்வகை நியாயம் ?

    முகநூல் போராளிகள் மனக்கண்ணில் வந்து போகிறார்கள் . உத்தமவில்லன் போதும் இனி புறம்போக்கை ஒரு கை பார்ப்போம் என்று ஆயுதத்தை விநாடியில் திசை மாற்றுபவர்கள் . 
    • வீடு சுரேஸ் குமார் தோழர் சீனா பொருளாதாரரீதியாகவும் உள்ளே நுழைந்தாகிவிட்டது, அதுவும் விஷத் தன்மையுடன் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக், சிலிகான், பொம்மை...செல்பேசி என...
      Like · Reply · 2 · May 18 at 8:24pm
    • Rasu Rasu அதன் மேலான தடைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன . சீன பட்டாசுகள் கூட தடை செய்யப்பட்டாகி விட்டது . 

      ஆனால் ஒரு அமெரிக்க பல்பொருள் அங்காடியை தடை செய்ய ஒரு மத்திய அரசின் அங்கீகாரத்தை மீறி ஒரு மாநில அரசு தான் தன் மாநிலத்தில் தடை பிறப்பித்தது உங்களுக்கு தெரியும் .
      Unlike · Reply · 4 · May 18 at 8:27pm
    • Rasu Rasu நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை . தடம் மாறுகிறது . 

      சீனா காரன் நல்லவன்னு சொல்ல வர்ல . ஒரு எதிரிய எதிர்த்து சிறிய குழு ஒன்னு போராடிட்டு இருக்கும் போது இதோ புதுசா ஒருத்தன் வந்திருக்கான் அவன எதிர்த்து போராடுனு சொல்றது எவ்வகை நியாயம் ?:-P
      Like · Reply · 4 · May 18 at 8:32pm
    • Murugesan Puliyur விவாதத்தில் பகத்சிங் பற்றியும் பேசலாமே தோழர் வீடு, தோழர் ராசு.
      Unlike · Reply · 1 · May 18 at 9:34pm
    • வீடு சுரேஸ் குமார் நான் சொல்லவந்ததை நீங்க புரிஞ்சுக்கல...வீதி நாடகம் முதல் செல்லுலாய்ட்டு வரை அமேரிக்க ஏகாதிபத்தியம் என பேசும் காம்ரேட்டுகள் ஏன் சீனாவைப் பற்றி பேசுவதில்லை, இறைச்சிக் கழிவுகளை கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆளும் போது தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டினார்கள்...உள்ளூர் பிரச்சனையில் குரல் எழுப்பிய காம்ரேட்டுகள் அதில் மௌனம் சாதிப்பது ஏன்..? முல்லைப் பெரியாறு, மற்றும் கோவை எல்லையில் அணை கட்டியதை எதிர்த்து அறவழியில் போராடிய விவசாயிகளை மாட்டை அடிப்பது போல் அடித்த கேரள அரசை ஒரு முக்கல் முனகலில் கூட விமர்சனம் செய்யாதது ஏன்..? சீனா கடை விரிப்பதை துளி கூட கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? சீனாவை எதிர்த்த போராட்டங்கள் அனைத்தும் சிவகாசி பட்டாசு உட்பட வியாபாரிகள், தொழிலாளர்கள், மற்றும் தனிப்பட்ட மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பு மூலமே விரட்டியடிக்கபட்டது ஒழிய காம்ரேட்டுகளால் அல்ல...! புதுசா வருபவன் கம்யூனிச நாடு என்பதால் நீங்கள் எதிர்ப்பதில்லை அதுதான் உண்மை!
    smile emotic

0 comments:

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP