ஆண்டை பாண்டேவும்...பகுத்தறிவு வீரமணியும்
>> Monday, June 1, 2015
வழக்கமாக பாண்டேயின் எரிச்சலான கேள்விகளும்....எதிர் தாக்குதல் தர திராணியின்றி உளறுவதும் அந் நிகழ்ச்சி அவ்வளவு ஈர்ப்பில்லாமல் இருந்தது ஆனால் நேற்று அப்படியல்ல..பாண்டேவின் கேள்விகள் இந்துத்துவாவின் கேள்வி போல் இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல வீரமணி தடுமாறியது...பகுத்தறிவும், கடவுள் மறுப்பும் சும்மா வெத்து வேட்டா என்று கேள்வி எழுகின்றது.
வைக்கம் வீரர் என தி.கவினாரால் புகழப்படும் பெரியார் ஏன் தமிழ்நாட்டு கோயில்களில் ஆலயப் பிரவேசம் நடத்தவில்லை என்ற கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் கூற முடியாமல் நழுவிக் கொண்டார்.
தாலியறுப்பு போராட்டம் மாதிரி பர்தா பற்றிய விவாதம் நடந்த போது ஏற்பட்ட வன்முறையை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை என்று கேட்ட போதும் நழுவிவிட்டார்.
திகவினரும் தாலி கட்டிக் கொள்கின்றார்கள், அது கூடாது என்று சொல்லியும் பெண் வீட்டார் விருப்பத்திற்காக என்று சொல்லுகின்றார்கள் என்று கூறியும் அதிர்ச்சியடைய வைத்தார்!
கீழ்வெண்மணி போராட்டத்தின் போது இடதுசாரிகள் வன்முறையை தூண்டியதால் உயிர் இழப்பு ஏற்பட்டது, புரட்சி என்று வன்முறையை தூண்டிவிடாமல் இருந்திருந்தால் உயிரிழப்பு ஏற்ப்பட்டிருக்காது என்று பெரியார் சொன்னதை பாண்டே சொன்னபோது தடுமாறினார். அன்றைய சூழ்நிலையில் மக்கள் அனைவரின் கருத்தும் இதுவாக இருந்தது. அது கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வி என விமர்சிக்கப்பட்டது என்பது உண்மை! அதை வீரமணி கூறவில்லை!
ராமன் இல்லை என்னும் நீங்கள் ஏன் அல்லா இல்லை, ஜீஸஸ் இல்லை எனக் கூறுவது இல்லை என்ற கேள்விக்கு கடவுள் இல்லை என்றாலே அனைத்து கடவுளும் இல்லை என்பதாகும் என்ற பதில் ஜால்ஜாப்புதான்.
கிருத்துவமும், இஸ்லாமும் என் சகோதரனை அரவணைத்துக் கொள்கின்றன, வர்ணாசிரம கொள்கை, மனுதர்மத்தின் படி தாழ்த்தப்பட்டவன், சூத்திரன், வேசிமகன், கீழ்மகன் என்று கூறுவதில்லை, சாதியில்லை அதனால் அவர்களை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை என்றார்.
கிருத்துவத்தில் சாதி பாகுபாடு உண்டு, அது தொடர்பாக கலவரங்களும் நடந்து உள்ளது, இஸ்லாமிலும் பிரிவு உண்டு என்ற போது
வீரமணி கூறியது அவர்கள் பிராமணர்களையும், வருணாசிரம கொள்கையை அந்த மதத்திலும் தொடர்கின்றார்கள் என்றார் இதற்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
பெரியார் 45வயது வரை நாயக்கர் என்று அழைக்கபட்டார் ஏன்?
நாயக்கர் என்பது அக்காலத்தில் மரியாதை நிமித்தம் அழைப்பது ராஜாஜியை ஆச்சாரி என்று அழைப்பதைப் போல என்று கூறி ஒரு குண்டைப் போட்டார்.
திருமாவளவன் ஆசிரியராக இருக்கும் பத்திரிக்கையில் வீரமணி ஒரு பேட்டியில் ஆமாம் தலித்துகளை திகவிலும் கீழ்நிலையில்தான் வைத்திருக்கின்றோம் என்று கூறியதாக உள்ள செய்தியை சுட்டிக் காட்டியதற்கு பதிலே கூறவில்லை!
அம்பேத்கர் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று வலியுறுத்தியவர், (அதற்கு காரணம் புத்தமதம் பால் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக என்பது உண்மை) அவருடைய பிறந்த நாள் அன்று மாட்டுக்கறி உண்ணும் சடங்கு வைப்பது நியாயமா..? என்ற கேள்விக்கும் சரியான பதில் இல்லை!
திகவிலும் வருணாசிரம முறைப்படிதான் பதவிகள் வழங்கப்படுகின்றது என்ற கேள்விக்கும் பதில் இல்லை! இஸ்லாம், கிருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு மிகக் கோபப்படுகின்றார், நீங்க விவாதத்தை திசைமாற்றி கொண்டு போகின்றீர்கள்....என்று பதறுகின்றார் வீரமணி அய்யா அவர்கள்! பார்க்கும் நமக்கு இந்து என்கின்ற மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மக்களை கடத்திச் செல்லும் வேலையை திக தீவிரமாக செய்கின்றதோ என்கின்ற ஐய்யம் ஏற்படுகின்றது அது உண்மையா? இல்லை நிகழ்ச்சி நடத்திய பாண்டேவின் திறமையா? என காலம் பதில் சொல்லும்.
0000
0 comments:
Post a Comment