கீ.வீரமணியின் தாலியறுப்பு ஒரு எதிர்வினை!

>> Monday, June 1, 2015

ப்ரேவ்பெல் ஏரி தடத்தில் தன்னுடைய டிவிஎஸ் பிப்டியில் வந்து கொண்டிருந்தார், ஒரு புறம் ஏரித் தண்ணீர் மறுபுறம் வயல். ஒரு மாடு மேக்கி உதாரணமாக வௌங்காதவன் மாட்டை அந்த தடத்தில் கட்டி வைத்து விட்டு ஒரு பின்நவீன நாவலை மும்மரமாக படித்துக் கொண்டிருந்தார்.
ப்ரேவ்பெல் வந்த சமயம் பார்த்து மாடு கயிறை இழுத்துக் கொண்டு தடத்தை மறித்து புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. ஹாரன் அடித்துப் பார்த்தார், நகர வில்லை முட்டாள் மாடு! கடும் கோவத்தில் வண்டியை நிறுத்தி விட்டு
”ஏ...மாடே நகர்ந்து விடு நான் ஒரு சமூக போராளி தாலியையே அறுத்தவன் உன் மூக்கணாங் கயிறை அறுப்பதற்கு சில நொடிகள் போதும்” என்று கர்ஜ்ஜித்தார்!
மாடு வாலை தூக்கியது சொத்தென்று சாணி போட்டது.
”அந்த பயம் இருக்கட்டும் உடனே விலகு நான் செல்ல வேண்டும்” என்றார்.
மாடு அது பாட்டுக்கு மறுபடியும் மொசுக் மொசுக்கென்று புல்லைக் கடித்தது!
கடுங் கோபத்தில்
”ஓ ஆரிய மாடே பிராமண வந்தேரியே...இந்துத்துவா விலங்கே விலகு...மனித நேயருடன் வந்து பிரியாணி போட்டு விடுவேன்” என்றார்.
சொர்ர்ர்ர்ர்....என்று மூத்திரம் பெய்தது!
கோபம் தலைக்கேற பக்கத்தில் இருந்த ஒரு கம்பை எடுத்து விளாசினார்!
அப்பொழுதும் நகரவில்லை..!
சோர்ந்து போய் அங்கேயே அமர்ந்திருந்தார்.
நீண்ட நேரத்திற்குப் பின் அந்த வழியே ராசு தன்னுடைய டிவிஎஸ் பிப்டியில் மணிக்கு 15மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்தார்...
ப்ரேவ்பெல் அமர்ந்திருப்பதைப் பார்த்து ”என்ன அய்யா ஆச்சு” என்றார்.
”இந்த ஆரிய மாடு நகர மறுக்கின்றது இது இந்துத்துவா சதி” என்றார்!
ராசு ”புர்ர்ர்ர்ர் ட்விட் ட்விட் ஹைஹை என்று சத்தமிட மாடு சமர்த்தாய் நகர்ந்து அந்தப்பக்கம் போனது!
தலைவரே மாட்ட முடுக்க ”டுர்ர்ர் ட்விட் ஹைஹை” அப்படிங்கற வார்த்த போதும் அதை அடிக்கக் கூட வேண்டியதில்ல அப்படித்தான் இந்து மதமும் அதில் உள்ள குறைகளைக் களைய சமூக மாற்றமும், கல்வியறிவும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு தடியால் அடித்தால் மாடு மூத்திரம்தான் பெய்யும் எ்னறார் தோழர் ராசு!

0 comments:

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP