நீயும்....நானும்.....யாகுவும் யாராகியும்..!

>> Sunday, November 27, 2011

ஓடை ஒரு வழிப்பாதையில்
தனியாக நீ போகையிலே
தாவி முன் நின்று காதலுரைக்க
முடியவில்லை....

ஆள் யாருமற்ற வேளையில்
என் தேவி நீயென....
கூவி விளிக்க முடியவில்லை....

நீன்டு கிடக்கும் நெடுஞ்சாலையில்
ஆசை தீர நெடுநேரம்
பேசிச்செல்ல..இடமில்லை...

கூட்டத்தில் நான் வரும் பொழுது
என்னை மட்டும் நீ பார்க்கும் போதும்
உன்னிடம் பேச எனக்கு சக்தியில்லை...

தூது போக அன்னம் வேண்டாம்
ஒரு அனிமேசன் காகம் போதுமே
அதற்க்கும் கூட என் மொழி
புரியவில்லை....

என்னவள் வரும் போது
கனைக்கும் சிரிக்கும் பிராணிகளை
வாய்திறந்து திட்ட திரானியில்லை...

கடற்கரைக் காற்றில்
என் மடியில் நீயிருக்க...
உன் கற்றைக் கூந்தலை
கலைத்த காற்றினை
வசைபாடி கவிதையெழுத...
நீ விமர்சிக்க... எனக்கு
உரிமையில்லை....

குறைந்தது ஒரு முத்தம் தந்திட
எனக்கு வழியுமில்லை
இணையத்தில் பழகி
இதயத்தில் இடம் பிடித்த
என்னவளே...எப்போது
வருவாய்...என் ஆசை
நிறைவேற்றிட...(இந்த கவிதை முற்றிலும் கற்பனையானது இணையத்தில் காதலிக்கும் காதலர்கள் சில விசயங்களை இழக்கிறார்கள் என்று
சிந்தித்தபோது தோன்றியது நான் நல்லவனுங்க....)

3 comments:

Unknown 9:32:00 PM  

என்னய்யா இது ஏதோ மயக்கம் என்ன போல இருக்கு ஹிஹி!

Unknown 11:56:00 PM  

இந்த கவிதை முற்றிலும் கற்பனையானது இணையத்தில் காதலிக்கும் காதலர்கள் சில விசயங்களை இழக்கிறார்கள் என்று
சிந்தித்தபோது தோன்றியது


உண்மைதான் நண்பரே.... இணையத்தில் இணையும் இதயங்கள் நீங்க சொன்ன விசங்களை இழக்கிறார்கள் தான்....

நான் நல்லவனுங்க...

ஹி ஹி....

நிரூபன் 1:39:00 AM  

வணக்கம் பாஸ்,
இணையத்தில் இதயங்களைத் தொலைக்கும் உள்ளங்களின் உணர்வுகளை அழகுறப் படம் பிடித்து, சிறிய உவமைகள் தாங்கிச் சொல்லி நிற்கிறது இக் கவிதை!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP