பில்லா அஜித் மட்டும் விளையாடும் ஒரு வீடியோ கேம்!

>> Monday, July 16, 2012


ரு இலங்கை அகதிகள் முகாமிலிருந்து ஒரு இந்திய டானாக உருவாகி இண்டர்நேசனல் டானாக மாறும் கதை. சாதாரணமாக ஹோட்டல் தொழில் நடத்திக் கொண்டே கள்ளக்கடத்தல், வைரக்கடத்தலில் ஈடுபடும் இளவரசுவின் கேரக்டரை செதுக்கிய இயக்குனர், பின்னர் வரும் அப்பாசி, டிவிட்ரி கேரக்டர்களை வழக்கமான வில்லன்கள், போல் இல்லாமல் நேர்த்தியாக செதுக்கியிருந்தால் ஒரு ஹாலிவுட் பட அளவில் பேசப்படும் சிறந்த படமாக பில்லா இருந்திருக்கும்.

பில்லா திரைப்படம் ஹாலிவுட் திரைப்படம் Scarface திரைப்படத்தின் (ரீமேக்) காப்பி என்று சொல்லுகிறார்கள் ஆனால் அந்தப் படமே ஒரு வீடியோ கேம்மின் (காப்பி) உந்துதல் எனக் கூறலாம்.The Voice City Came யாராவது விளையாடி இருக்கிறீர்களா? அதில் வரும் ஹீரோ டோமி ஆரம்ப லெவலில் அடியாளாக இருந்து கடைசியில் இன்டர்நேசனல் தாதாவாக கேம் நிறைவு செய்வான், ஆயுத தொழிற்ச்சாலை, ரயில் ஹெலிகாப்டர் எல்லாம் இருக்கும் அருமையான கேம் அது லெவல் அதிகம் அந்த கேம் முடிய பல மாதங்கள் ஆகலாம் அப்படியெரு கேமில் இருந்து உருவாக்கபட்ட சுவடுகள் படத்தில் தெரிகின்றன...அந்த கேம் விளையாடியவர்களுக்கு பில்லா சுவாரஸ்யமான படம்! 

தி மெக்கானிக் திரைப்படத்தில் இதே கான்செப்ட் அந்த படத்தில் நாமும்  டாம்குருஸ்டன் சேர்ந்து ஓடுகிறோம், சுடுகின்றோம் அந்த படமே ஒரு வீடியோகேம் போல எடுத்திருப்பார் வேகம்...வேகம்....ஒரு நிமிடம் கூட நம்மை அயற்சியடைய வைக்காமல் படத்தோடு ஒன்ற வைத்திருப்பார் இயக்குனர் , ஆனால் பில்லாவில் அஜித்தின் ஸ்டைலிஸ் மட்டுமே நம்மை கவர்கின்றது மற்றபடி ஒரு பைட்! பைட் முடிந்தவுடன் ஒரு பெல்லி டேன்ஸ்! என ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பை மட்டுமே கொடுக்க  முடிந்திருக்கின்றது, நம் தமிழ் படமான ஆரண்ய காண்டத்தின் நேர்த்தியான இயக்கத்தின் ஒரு துளி கூட இந்த படத்தில் இல்லை, அஜித்தைச் சுற்றியே படம் கேமரா சுழல்கின்றது, அதனால் சிறிது அயற்சி தோன்றினாலும் ஒரு சர்வதேச யுத்தி படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது, இது ஹாலிவுட்டைத் தொடும் முயற்சி என்று கூடச் சொல்லலாம் ஆனால் சாதாரண ரசிகனை திருப்த்தி படுத்துமா என்றால் சந்தேகமே..!?ஆனால் பில்லாவின் நண்பராக வருபவர்களும், கோட்டி கேரக்டரில் வரும் மனோஜ் கே ஜெயனும் செம ஸ்மார்ட்! நடிப்பில் அப்படியே. வசனம் செம ஸார்ப் என்றாலும் மிக செதுக்கப்பட்ட வசனங்கள் மட்டுமே, அதிக வசனங்கள் பேசிக் கொல்லும் வழக்கமான திரைப்படமாக இல்லை. ரசிகர்ளை கட்டிப்பிடித்துக் கொண்டு “நீ எந்த ஊரு நான் எந்த ஊரு..” எனக் கொல்லும் எம்.ஜி.ஆர் காலத்திய பேர்ட்டனும் இல்லை.அதுவரை இயக்குனரை பாராட்டலாம்!

ஹீரோயின்களும் "0" சைஸ் அழகிகள், தமிழனுக்கு இந்த சைஸ் ஈர்ப்பு தரவில்லை, கொஞ்சம் சதையுடன் இருப்பவர்களைப் போட்டால் ரசிகனைத் நிறைவுபடுத்தலாம்,ஆனால் ஒரு ஹாலிவுட் படம் போன்ற ஒரு தமிழ்படத்தில் கொழுக்மொழுக் நாயகிகள் வெள்ளைக்காரிக்கு சேலை கட்டியமாதிரி இருக்கும். 

இலங்கை அகதிகள் முகாம் காட்சிகள் நாம் நந்தா போன்ற படங்களில் பார்த்திருப்பதால் இதில் வித்தியாசமாக ஏதுவும் இல்லை. முகாமை விட்டு வெளியேறிய பின் மெல்ல மெல்ல கேம் நெக்ஸ்ட் லெவல் போல அடுத்த அடுத்த வில்லன்களை சந்திக்கின்றார் அஜித் vice city came விளையாடிய அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த படம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது எனப்புரியும் டான் கதைகளில் (விளையாட்டுகளில்) எப்பொழுதும் அடுத்த லெவல் செல்லும் போது நண்பனாக இருந்தவனும் வில்லனாக போகிறான். அவனை அழிப்பதுதான் நம்மை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும், இல்லையென்றால் Came Over  ஆட்டம் முதலில் இருந்து தொடங்கும். இதில் தேர்ந்த விளையாட்டுக் காரனைப் போல் அஜித் ஒவ்வொரு லெவலாக முன்னேறுகிறார்.

கடைசியில் கிளைமாக்ஸில் ஹெலிகாப்டர், ரயில், ஆயுதத்தொழிச்சாலையில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை, காதலியின் இறப்பு படம் முடியும் போது தனிவிமானத்தில் வந்து அமர்ந்து இன்னும் லெவல் முடியவில்லை என்கிறார் அஜித். இவையனைத்தும் Vice City Cameன் அச்சு பிசராத லெவல்கள் அந்த Cameல் ஹிரோ டோமி இதில் பில்லா, இணையத்தில் கிடைத்தால் டவுன்லோடு செய்து விளையாடிப்பாருங்கள் பில்லா புரியும்..பிடிக்கவும் செய்யலாம். இந்த கோட் சூட்டும் கண்ணாடியும் கூட ஒத்துப் போகின்றது.

கோவா காட்சிகளில் சிறப்பான ஒளிப்பதிவு கண்களை வியப்பில் ஆழ்த்துகின்றன, ஒலிப்பதிவு தோட்டா நம் காதை உரசிச் செல்கின்றது. இரண்டுமே பிரம்மிப்பின் உச்சம், பாடல்கள் புரியவில்லை என்று கூறுகின்றார்கள் இடுப்பு ஆட்டியபடி ஆடும் பெல்லி நடனத்தினை புகுத்தியதால் இசையும் வழக்கமான தமிழ் சினிமாவின் ஸ்டைல் இல்லை என்பதாலும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம், இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்பது என் கருத்து!

பார்வதி ஓமனக்குட்டன் செம உயரம், வசிகரமான சர்வதேச மாடல்! சில காட்சிகளில் வந்து போகிறார் கழுத்து அறுபட்டு இறந்து போகிறார். ப்ரூனே அப்துல்லா அம்மணிக்கு சதையென்பதேயில்லை வெறும் எலும்புக்கூடுப் போல ஜேம்ஸ்பாண்ட் பட நாயகி போல இருக்கிறார். மனதில் ஒட்டாத நாயகிகள் இருவரும்.மொத்தத்தில் பில்லா அஜித் மட்டும் விளையாடும் ஒரு வீடியோ கேம்!

35 comments:

முத்தரசு 8:26:00 PM  

வணக்க்கம்

என்னாது கேம்மா???

முத்தரசு 8:31:00 PM  

சொந்த மூளை இல்லையா எல்லாமே கமேம்மா - கொய்யாளா இதுவரைக்கும் ஆங்கில படத்தை சுட்டானுங்க ...இப்ப கேம்...நல்லா தான் யோசிக்கிரங்க...

முத்தரசு 8:31:00 PM  

இயக்குனர் இங்கு ஏமாந்தார், அவர் நினைப்பு சின்ன புள்ளைங்க தானே கேம் ஆடும்னு படத்தை சுட்டு புட்டார் - உங்களை மாதிரி ஆளுங்களும் கேம் ஆடுவீங்கன்னு எதிர் பாக்கல,

நாய் நக்ஸ் 8:42:00 PM  

பார்யா.....அட உனக்குள்ளேயும் ஏதோ இருக்குயா.....

இன்னும் எத்தனை பூதம் கிளம்பபோவுதோ.....??????????

தமிழ்வாசி பிரகாஷ் 8:58:00 PM  

யோவ்.... வூடு.....

பில்லாவை புது பாதையில விமர்சனம் செய்திருக்கிங்க....

நல்லா இருக்குயா புது பாணி.....

தமிழ்வாசி பிரகாஷ் 9:00:00 PM  

ஏன்யா, உமக்கு சத்தியராஜ் பிடிக்கும்னு சொன்னிங்க. ஆனா மனசாட்சி ப்ரோபைல்ல வச்சிருக்காரு.

என்ன டீலுயா?

வெளங்காதவன்™ 9:06:00 PM  

//தமிழ்வாசி பிரகாஷ் said...

ஏன்யா, உமக்கு சத்தியராஜ் பிடிக்கும்னு சொன்னிங்க. ஆனா மனசாட்சி ப்ரோபைல்ல வச்சிருக்காரு.

என்ன டீலுயா?///

சுரேசும் மனசாட்சியும் ஒரே ஆளுய்யா!!!

ஆங்...

வெளங்காதவன்™ 9:06:00 PM  

பகிர்வுக்கு நன்னி!!!

தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!

MARI The Great 10:42:00 PM  

எல்லோருடைய விமர்சனத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமாய் ....!

Unknown 12:05:00 AM  

விமர்சனம் எங்கே மாம்ஸ்? வீடியோ கேம் பத்தி மட்டும்தான் அதிகமாக எழுதி இருக்கீங்க?

Unknown 12:07:00 AM  

//மனதில் ஒட்டாத நாயகிகள் இருவரும்//

அவங்க என்ன பெவிகாலா மாம்ஸ்? மனசுல ஒட்டறதுக்கு?

Unknown 12:07:00 AM  

//இடுப்பு ஆட்டியபடி ஆடும் பெல்லி நடனத்தினை புகுத்தியதால் இசையும் வழக்கமான தமிழ் சினிமாவின் ஸ்டைல் இல்லை என்பதாலும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்,//

உங்களுக்கு பிடிச்சிருந்ததாலதான ஒன்ஸ்மோர் கேட்டீங்க? மறந்துட்டீங்களா மாம்ஸ்?

Unknown 12:08:00 AM  

//பில்லா அஜித் மட்டும் விளையாடும் ஒரு வீடியோ கேம்!//

வீடியோ கேம்னா யாராச்சும் ஒருத்தர் இல்லைன்னா ரெண்டு பேர்தான் விளையாடுவாங்க

வவ்வால் 1:24:00 AM  

//பில்லா திரைப்படம் ஹாலிவுட் திரைப்படம் Scarface திரைப்படத்தின் (ரீமேக்) காப்பி என்று சொல்லுகிறார்கள் ஆனால் அந்தப் படமே ஒரு வீடியோ கேம்மின் (காப்பி) உந்துதல் எனக் கூறலாம்.//

பில்லா-2 வேண்டுமானால் , கேம் இல் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம், அதற்கு என 1983 இல் வந்த ஸ்கார்ஃஃபேஸ் படமும் கேமில் இருந்து காப்பி என்றால் எப்படி?

அல்பாசினோ நடித்த 1983 ஸ்கார்ஃபேஸ் 1932 இல் வந்த ஸ்கார்ஃபேஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும், 19929 இல் எழுதப்பட்ட ஸ்கேர்ஃபேஸ் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஏன் எனில் ஸ்கேர்ஃபேஸ் என்ன்ற புனைப்பெயருடன் டான் நிஜமாகவே இருந்துள்ளார். 1983 இலோ, 1932 இலோ வீடியோ கேம் இருந்துச்சா?

படத்தில் அல்பாசினோ கேரக்டர் பெயர் டோனி, படத்தின் அடிப்படையில் தான் வீடியோ கேம் உருவாக்கப்பட்டது.ஹாலிவுட்டில் எல்லாப்படத்தின் அடிப்படையிலும் வீடியோ/கம்பியூட்டர் கேம் உருவாக்குவார்கள்.

ஹி..ஹி இதெல்லாம் எப்படி தெரியும்னு பார்க்கிறிங்களா, டான் ஹிஸ்டரினு ஒரு பதிவு தயார்ப்பண்ணிக்கிட்டு இருக்கேன் , அதை இன்னும் முடிக்கலை, அப்போ விலாவாரியா டான் கதைகளை எல்லாம் படிச்சது வச்சு சொல்றேன்.

உணவு உலகம் 2:09:00 AM  

வித்யாசமான பார்வையில் விமர்சனம் கலக்குதுங்கோ.

Unknown 2:45:00 AM  

@மனசாட்சி™
வணக்க்கம்

என்னாது கேம்மா???
//////////////////////
வணக்கம்
ஆமாம்..!
-------------------------------
சொந்த மூளை இல்லையா எல்லாமே கமேம்மா - கொய்யாளா இதுவரைக்கும் ஆங்கில படத்தை சுட்டானுங்க ...இப்ப கேம்...நல்லா தான் யோசிக்கிரங்க...
////////////////////////
ஆதிமூலம் எங்கியாவது இருக்கனும் இது நியதி மாம்!
-----------------------------------
இயக்குனர் இங்கு ஏமாந்தார், அவர் நினைப்பு சின்ன புள்ளைங்க தானே கேம் ஆடும்னு படத்தை சுட்டு புட்டார் - உங்களை மாதிரி ஆளுங்களும் கேம் ஆடுவீங்கன்னு எதிர் பாக்கல,
///////////////////////////////////////////////
நான் இன்னும் சின்னப்புள்ளதான் மாம்ஸ்!

Unknown 2:47:00 AM  

@NAAI-NAKKSபார்யா.....அட உனக்குள்ளேயும் ஏதோ இருக்குயா.....

இன்னும் எத்தனை பூதம் கிளம்பபோவுதோ.....??????????
//////////////////////////
எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் மச்சி!

Unknown 2:48:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்யோவ்.... வூடு.....

பில்லாவை புது பாதையில விமர்சனம் செய்திருக்கிங்க....

நல்லா இருக்குயா புது பாணி.....
///////////////////////////////
நன்றி பிரகாஸ்!
-----------------------------
ஏன்யா, உமக்கு சத்தியராஜ் பிடிக்கும்னு சொன்னிங்க. ஆனா மனசாட்சி ப்ரோபைல்ல வச்சிருக்காரு.

என்ன டீலுயா?
//////////////////////
அவரும் சத்தியராஜ் ரசிகர்தான் ஹஹா!

Unknown 2:51:00 AM  

@வெளங்காதவன்™//தமிழ்வாசி பிரகாஷ் said...

ஏன்யா, உமக்கு சத்தியராஜ் பிடிக்கும்னு சொன்னிங்க. ஆனா மனசாட்சி ப்ரோபைல்ல வச்சிருக்காரு.

என்ன டீலுயா?///

சுரேசும் மனசாட்சியும் ஒரே ஆளுய்யா!!!

ஆங்...
///////////////////////////
ஆமாய்யா....!வௌங்காதவனும் பட்டாபட்டியும் ஒன்னு...!அவ்வ்வ்

அனுஷ்யா 3:17:00 AM  

வீடியோ கேம் வெளையாடற பெடி பசங்களோட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாதான...

அனுஷ்யா 3:19:00 AM  

ப்ரூனாவுக்கு சதை இல்லையா? கொல பண்ற சீன இன்னொரு தபா நல்லா பாருங்க தல....

Unknown 3:47:00 AM  

@வரலாற்று சுவடுகள்எல்லோருடைய விமர்சனத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமாய் ....!
////////////////////////
தங்கள் வருகைக்கு நன்றி!

Unknown 3:51:00 AM  

@இரவு வானம்விமர்சனம் எங்கே மாம்ஸ்? வீடியோ கேம் பத்தி மட்டும்தான் அதிகமாக எழுதி இருக்கீங்க?////////
///////////////
விமர்சனம் அல்ல இது அந்த அளவுக்கு நான் ஒர்த் லேது..பாபு!
-----------------------------
//மனதில் ஒட்டாத நாயகிகள் இருவரும்//

அவங்க என்ன பெவிகாலா மாம்ஸ்? மனசுல ஒட்டறதுக்கு?
////////////////////////////////////
மனசுல பெவிக்கால் மாதிரி ஒட்டனும் மாப்ள...!
-----------------------------------------------
/இடுப்பு ஆட்டியபடி ஆடும் பெல்லி நடனத்தினை புகுத்தியதால் இசையும் வழக்கமான தமிழ் சினிமாவின் ஸ்டைல் இல்லை என்பதாலும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்,//

உங்களுக்கு பிடிச்சிருந்ததாலதான ஒன்ஸ்மோர் கேட்டீங்க? மறந்துட்டீங்களா மாம்ஸ்?
///////////////////////////////////////////////
உங்களுக்காகத்தான் கேட்டேன் நீங்க தானே கேட்க சொன்னீங்க.....
-------------------------------------------------------
//பில்லா அஜித் மட்டும் விளையாடும் ஒரு வீடியோ கேம்!//

வீடியோ கேம்னா யாராச்சும் ஒருத்தர் இல்லைன்னா ரெண்டு பேர்தான் விளையாடுவாங்க
//////////////////////////////////////////////////
இதுல அஜித் விளையாடுகிறார் நாம் பார்க்கின்றோம்

Unknown 3:56:00 AM  

@வவ்வால்
1932ல் வீடியோ கேம் வரக்கூடிய சாத்தியம் இல்லை ஆனால் இந்த கேமின் முதல் வர்சன் (Computer Came)1980ல் வந்து விட்டது...1982 ல் இந்தப்படம் வந்துள்ளது. நானும் ஒரு புத்தகத்தில் படித்ததுதான் கருத்துக்கு மிக்க நன்றி வவ்வால் சார்!

கோவை நேரம் 7:45:00 PM  

மாம்ஸ்...இது விமர்சனம் தானே...ஒரு டவுட்டு...? ௦ சைஸ் அப்படின்னா..என்ன மாம்ஸ்..?ஒரு டவுட்டு...

Gobinath 12:12:00 AM  

நான் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள். பில்லா 2 ஒரு ஹாலிவூட்டுக்கு இலக்குவைத்து குறி தவறிய திரைப்படம்.

Anonymous,  6:30:00 AM  

வித்தியாச விமர்சனம்...

Unknown 12:31:00 AM  

விமர்சன ஃபீலிங்க் நல்லா இருந்தது!

Unknown 12:51:00 AM  

@FOOD NELLAIவித்யாசமான பார்வையில் விமர்சனம் கலக்குதுங்கோ.
////////////////
நன்றி சார்...!

Unknown 12:53:00 AM  

@மயிலன்வீடியோ கேம் வெளையாடற பெடி பசங்களோட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாதான...
///////////////////////////
அண்ணே நான் சின்ன புள்ளதான்னே!
----------------------------------
ப்ரூனாவுக்கு சதை இல்லையா? கொல பண்ற சீன இன்னொரு தபா நல்லா பாருங்க தல....
////////////////////////////
இன்னோரு தடவையா...?முடியலை!

Unknown 12:54:00 AM  

@கோவை நேரம்மாம்ஸ்...இது விமர்சனம் தானே...ஒரு டவுட்டு...? ௦ சைஸ் அப்படின்னா..என்ன மாம்ஸ்..?ஒரு டவுட்டு...
//////////////////////////////
இருக்கு....ஆனா இல்லை...!
இரண்டுக்கும் ஒரே பதில்தான்..ஹஹா!

Unknown 12:55:00 AM  

@Gobinathநான் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள். பில்லா 2 ஒரு ஹாலிவூட்டுக்கு இலக்குவைத்து குறி தவறிய திரைப்படம்.
/////////////////////////
உண்மைதான்...நன்றி...

Unknown 12:55:00 AM  

@ரெவெரிவித்தியாச விமர்சனம்...
///////////////////////////
மிக்க நன்றி ரெவரி சார்!

Unknown 12:56:00 AM  

@விக்கியுலகம்விமர்சன ஃபீலிங்க் நல்லா இருந்தது!
////////////////////
நன்றி மாம்ஸ்!

Manimaran 9:33:00 AM  

வித்தியாசமான கோணத்தில் விமர்சனம் இருந்தது.இதிலிருந்து என்ன தெரியுது?...இனிமேல் பில்லா-3 னு கண்டிப்பா வராது.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP