பில்லா அஜித் மட்டும் விளையாடும் ஒரு வீடியோ கேம்!
>> Monday, July 16, 2012
ஒரு இலங்கை அகதிகள் முகாமிலிருந்து ஒரு இந்திய டானாக உருவாகி இண்டர்நேசனல் டானாக மாறும் கதை. சாதாரணமாக ஹோட்டல் தொழில் நடத்திக் கொண்டே கள்ளக்கடத்தல், வைரக்கடத்தலில் ஈடுபடும் இளவரசுவின் கேரக்டரை செதுக்கிய இயக்குனர், பின்னர் வரும் அப்பாசி, டிவிட்ரி கேரக்டர்களை வழக்கமான வில்லன்கள், போல் இல்லாமல் நேர்த்தியாக செதுக்கியிருந்தால் ஒரு ஹாலிவுட் பட அளவில் பேசப்படும் சிறந்த படமாக பில்லா இருந்திருக்கும்.