Showing posts with label காதல்கதைகள். Show all posts
Showing posts with label காதல்கதைகள். Show all posts

காதல் கதைகள் 1954 இறுதி பாகம்

>> Thursday, December 15, 2011


‘‘டமார்..”
பெருத்த ஓசையாக துப்பாக்கி வெடித்தது..
ஆ...அம்மா..”என்று கத்தினாள் மாது!

துப்பாக்கியிருந்து பாய்ந்த அலுமினிய குண்டு அவர்களுக்கு பின்னால் மேய்ந்து கொண்டிருந்த ஒரு முயலின் உடலை துளைத்து சென்றது.

வீச்......என்று கத்திய அந்த சீவன் அங்கேயே உயிரை விட்டது.

துப்பாக்கியை கீழே தரையில் ஊன்றியபடி நடந்த துரை அவர்கள் பக்கத்தில் வந்தார்.
யேய்...நீ..ராசய்யன் மவ தானே?உங்கப்பன் உன்னை படிக்க வைத்தது இப்படி காட்டுக்குள்ள படுக்கறதுக்கா ஏலே...என்று பிடறியில் ஒன்று வைத்தார்.
ஒழுக்கமா வீட்டுக்கு ஓடிப்போயிறு என்று கர்ச்சித்தார் துரை. மௌனமாக வீட்டுக்கு போனாள் மாது.

ஏண்டா..!நாயே உனக்கு பொம்பளை கேட்குதா....என்று அடிக்க கையை ஓங்கினார்.செல்வம் துரையின் கையை பிடித்து கொண்டார்.
சித்தப்பா...வேண்டாம் சும்மாயிரு...என செல்வம் சீறினான்.
எதுவும் பேசாமல் சிறிது நேரம் முறைத்துக்கொண்டிருந்தார்கள் இருவரும்.
சரி...தோட்டத்துக்கு போகலாம் வா...என்ற துரை செல்வத்தின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார். சிறிது நேர சிந்தனைக்குப்பின் செத்து கிடந்த முயலை எடுத்துக்கொண்டு அவரின் பின்னே நடந்தான் செல்வம்.

தோட்டத்தில் இருவரும் எதிர்ரெதிராக அமர்ந்தனர் துப்பாக்கியை சுவற்றில் மாட்டிவிட்டு மன் பானைக்குள் இருந்த சாராய பாட்டிலை எடுத்து வந்து
முன் வைத்தார் கண்ணாடி ரோட்டாவில் ஊற்றி செல்வத்திடம் நீட்டினார் துரை.வேண்டாம் சித்தப்பா..”என்றான் செல்வம்.

நீ...என்ன நீனைக்கிறேன்னு எனக்கு தெரியும் செல்வம் உங்கப்பன் கிட்ட சொல்லுவன்தானே? உங்கப்பன் கிட்ட சொன்னா என்ன பன்னுவான் தெரியுமா?
மாதுவ பாவானி வாய்க்கால்ல பொணமாக போட்டிருவான்.

சித்தப்பா...நான் மாதுவ உயிருக்குஉயிரா நேசிக்கிறேன்.

உயிருக்குஉயிரா நேசிக்கிறவன் கிணற்றுக்கு பின்னாடி ஏண்டா பேறீங்க......உன்னைச் சொல்லி குற்றமில்லை வயசுக்கோளாறு..செல்வம் நீ..நினைக்கிறமாதிரியில்லைஇப்ப இந்த நாட்டை ஆளுறது வெள்ளைக்காரன் இல்லை!நியாயம் தர்மம் எல்லாம் பெரிய மனிதர்களின் கைளில் இருக்கு....

நான் அவளைத்தான் கல்யாணம் செய்துக்குவ...

போடா...முட்டாள் நீ...என்ன சாதி அவ என்ன சாதி...வீணா ஒரு பொம்பளைய கொன்ன பாவம் வேண்டான்டா செல்வம்.நம்ம குலத்தில ஏற்கணவே...ஒரு பெம்பளைய கொன்ன பாவத்திக்கு நம்ம பரம்பரைக்கே பெண் குழந்தைகள் பிறப்பது இல்லை.

இல்லை சித்தப்பா...என்னால அவ இல்லாம வாழமுடியாது என்று அழுதான் செல்வம்

சரி...சரி...அழுகாதே எதாவது செய்கின்றேன் நீ...சாராயத்தை குடி..ஆமா அவ நெருப்பு மாதிரியாச்சே...எப்படி உன் வலையில விழுந்தா..?

செங்கரட்டுக்கு சுள்ளி பொருக்கப்போன இடத்தில காட்டுநாய் அவளை சுத்திருச்சு.நான்தான் காப்பாற்றினேன் அதிலிருந்து பழக்கமாயிருச்சு.....பள்ளிகூடத்தில படிக்கும் போதே பின்னால சுத்திட்டு இருந்தேன்..அப்ப அவ கண்டுக்கல எட்டாவது வரைக்கும் அவ படிச்சா....நான் ஏழாவதோட மண்டையில ஏறல நின்னுட்டேன். ஆனா நல்லா படிச்ச அவள மேல அவிங்கப்பன் படிக்க வைக்கல......காட்டுல,மேட்டுல பார்க்கும் போது பழகி....இப்ப அவ இல்லாம என்னால வாழமுடியாது சித்தப்பா..

இந்தா குடி...அப்புறம் நான் சொல்லுறத கேளு...என்று சித்தப்பா துரை ஊற்றி கொடுக்க...சாராயத்தினை மாற்றி,மாற்றி குடித்து அப்படியே படுத்து தூங்கிபோயினர்.

காலையில் சூரியனின் வரவுக்கு முன் மக்கள் ஓரிடத்தில் கூடினார்கள்,ஏரிதண்ணீரின் வடிகாலின் ஓரத்தில் அரைநிர்வாணமாக மாதுவின் உடல் கிடந்தது.காலனி மக்கள்

அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஏரிக்கு விரைந்தார்கள்.தகவல் தெரிந்து சென்ற துரையும் செல்வமும் அதிர்ந்து போனார்கள் உடலெங்கும் முள் கீறிய தடங்கள்,இது திட்டமிடப்பட்ட ஒரு கொலை என்பது புரிந்தது,ஆனாலும் அவசரஅவசரமாய் காரியங்கள் செய்து பிணத்தை எரித்துவிட்டார்கள்.

செல்வம் அதன் பிறகு பித்துபிடித்தவன் போல் சுற்றித் திரிந்தான்...கிலுவை இலையில் பீப்பி செய்து ஊதிக்கொண்டு சாராயத்தை குடித்து விட்டு பெரும்பாலும் தோட்டத்தில் கிடந்தான் மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் அண்ணா தலைமையில் கொழுந்து விட்டு எரிந்தது,திமுக உறுப்பினர்களை கைது செய்து  சிறையில் அடைத்து கொண்டு இருந்தது மத்திய அரசு.

துரையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கோவை சிறையில் அடைத்துவிட்டனர்,ஒரு வாரங்களுக்கு மேல் சிறையில் இருந்த துரையை பார்க்க பண்ணையத்து ஆள் ‘‘சின்னையன்” வந்திருந்தான் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு கெஞ்சி கூத்தாடி சிறையில் சந்தித்தான் சின்னையன்,அவன் கொண்டு வந்த தகவலில் அதிர்ச்சியில் அப்படியே உக்கார்ந்து விட்டார் துரை,அவன் கூறியது
அய்யா.....நம்ம சின்னபண்ணாடி இப்படி பன்னிட்டாருங்கய்யா.....பெரிய பண்ணாடி வந்து அடிச்சு இழுத்திட்டு போயி,வீட்டுக்குகொண்டு போய் புத்தி சொல்லி வைத்திருந்தாங்கய்யா.....சினிமாகொட்டாயிக்காரரு புள்ளைய கல்யாணம் பன்னி வைக்க ஏற்பாடு பன்னினாருங்கய்யா...யாரும் இல்லாதப்ப..தோட்டக்கு வந்து அரளி விதையை சாப்பிட்டு செத்து பொயிட்டாருங்கய்யா....உங்களுக்கு தகவல் கூட தராம எரிச்சிட்டாங்கய்யா.....அழுதான்.

செல்வம்....செல்வம்.....அழுதார் கண்ணுல இருந்து கண்ணீரு ஆறாக கொட்டியது. திடீரென்று எழுந்தவர் முகத்தை துடைத்தார்,நான் அழமாட்டன்டா சின்னய்யா

நீ...தூக்கநாயக்கன்பாளையம் காங்கிரஸ் தலைவர் பெரியண்ணன் கிட்ட போய் சொல்லு, நான் வெளிய வரனும், சின்னயைன் சரிங்கய்யா நான் புறப்படுறனுங்க எனக்கு காலையில தானுங்க கோபால்டு காரு நான் ரோட்டு ஓரமா படுத்து தூங்கிட்டு காலையில கிளம்பி ரெண்டு நாள்ள தகவல்
சொல்றனுங்க என்று கிளம்பினான் சின்னனையன்.

சில நாட்களில் பெரியண்ணன் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியதும்,சிறையில் இருந்து உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெற்று துரையை விடுவித்தனர்,நேராக ஆத்திரத்தில் ஊர் வந்ததும் தோட்டத்திக்கு போனவுடன் தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேகமாக ஊருக்குள் இருந்த அண்ணணின் வீட்டிக்கு போனார்,இவர் போன வேகத்தை பார்ததவர்கள் கூட்டமாக பின் தொடர்ந்தனர் ஏதோ நடக்கப்போகுது என்று வேடிக்கை பார்க்க....சிலர் சமாதானமும் கூறிக்கொண்டே வந்தனர்...எதையும் காதில்
வாங்காமல் வீட்டுக்கு முன் நின்றார் வானத்தைப்பார்த்து சுட்டார்,துரையின் அன்னி ஓடிவந்து காலைக்கட்டிகொண்டார்கள், வயதான இருவரின் ஆத்தா....எம் பேரனை கொன்னிட்டியே..கொலைகாரா நீ நாசமா..போவே என்று சாபம் விட்டது.மன்னை தூற்றியது! துப்பாக்கிய கீழே போட்ட துரை,

கிளவி மனசாட்சிய தொட்டு சொல்லு? உன் பேரனை கொன்னது நானா?நீ..என்னை வயத்தில இருக்கும் போதே கலைச்சிருக்கலாம் கிளவீ, பெரிய மகனைதாங்கிதாங்கியே இன்னும் எத்தனை பேர கொல்லப்போறான்னு தெரியலையே?என்று அழுதார் சொந்தம்பந்தம் எல்லாம் வந்து துரையை நன்றாக பிடித்துகொண்டனர்,

டேய் பொன்னம்பலம் உன்னை மன்னோடு மன்னா ஆக்குலை நான் ஒரு அப்பனுக்கு பிறக்கலை விடுங்கய்யா என்று உதறிவிட்டு தோட்டம் சென்று விட்டார்,


சில நாட்கள் கழித்து...

தமிழகம் 1957 ல் ஒரு சட்டமன்ற தேர்நதலை சந்தித்து,ஊர்தலைவராக இருந்த பொன்னம்பலம் அந்த தேர்ந்தலில் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் நிற்க மனு செய்திருந்தார்,இதை கேள்வி பட்ட துரை திமுக சார்பில் மனு கொடுத்தார் தீவிர பிரச்சாரமும் நலிந்த,தாழ்த்தப்பட்ட மக்கள்,துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர்

பெரும்பான்மையாக வெற்றி பெறவில்லையென்றாலும்,முதன் முதலில் அன்னபோஸ்ட்டாக இருந்த பொன்னம்பலத்தை, காங்கிரஸ் தலைவரை வீழ்த்தியது இந்த வெற்றி.

112 தொகுதியில் போட்டியிட்ட இடத்தில் திமுக பதினைந்து தொகுதியில் வெற்றி பெற்றது அதில் துரையும் ஒருவர்.பெரியாரே திமுகவிற்க்கு எதிராக பிரச்சாரம் செய்தும் வெற்றிபெற்றார்கள் திமுகவினர்,துரை அதற்க்கு பிறகு எம்.ஜி.ஆரின் தீவிரரசிகர் என்பதால் அவர் திமுகவை விட்டு பிரியும்பொழுது அதிமுகவில் ஐக்கியமானார் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டார்,
அவரின் மறைவுக்கு பின் பிளவு பட்ட அதிமுகவில் ஜானகி அம்மையாரின் அணியில் இருந்தார்,பிறகு ஒன்று பட்டபோது ஓரம் கட்டப்பட்டார்,கட்சியில் இருந்து முழுவதும் விலகினார்,பிறகு சமீபமாக என்பது வயதுக்கு மேல் மூச்சு குழாயில் ஏற்ப்பட்ட நோயினால் மரணமடைந்தார்,அவருக்கு மாலை மரியாதை செய்ய சென்றபோது அறிஞர் அண்ணாவின் உருவமும் அதிமுக கொடியும் வலது கையில் பச்சை குத்தியிருந்தது கண்டபோது மனது வலித்து,இவர்களை போன்றவர்களின் இரத்தத்தால்தானே இரு
கட்சிகளும் உருவாகியுள்ளது இவரை உதாசினப்படுத்தியவர்களுக்கு வாடையடிக்கவில்லையா? ஊழல் நாற்றத்தில் இந்த நாற்றம் தெரியவில்லையோ?பல கேள்விகள் மனதில் எழுகின்றன........



டிஸ்கி : பொன்னம்பலம் இருபதுவருடம் பக்கவாதம் வந்து கட்டிலில் படுத்தபடுக்கையாக இருந்து மலம்,ஜலம் போகக்கூடமுடியாத நிலமையில் பெரும் துன்பத்தை அனுபவித்து நான் சிறியவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார்.

இந்தக் கதையில் உள்ள பெயர்கள் கற்பனையானது,சம்பவங்கள் 
உண்மையானது,





1954 முதல் பாகம்


1954 இரண்டாம் பாகம்

Read more...

காதல்கதைகள் 3 (1956) தொடர்ச்சி

>> Wednesday, December 14, 2011




செல்வம் பள்ளி முடிந்து வரும்போது...  ஊருக்கு செல்லும் குறுக்கு வழியில் ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் உக்கார்ந்து கொண்டான்,மாது கடைசியாக மெதுவாக வந்து கொண்டு இருந்தாள், இவனை தூரமாகவே பார்த்து விட்டாள்....எதற்காக நிற்கிறான் நம்மை மேலும் அவமானப் படுத்துவானோ என்கிற ஐயமும் கொண்டாள்,திரும்பிச்சென்று விடலாமா? எனவும் சிந்தித்தாள்! சரி..! என்னதான் நடந்துவிடப்போகிறது பார்த்துவிடலாம் என ஒரு தைரியத்தில் மெதுவாக வந்தாள்.

பக்கத்தில் வந்ததும் இவனை கண்டுகொள்ளாமல் சென்றாள்,
ஏய்..புள்ள நில்லு என்றான்.., மாது நிறுத்தவில்லை அவள் சென்றுகொண்டுஇருந்தாள் சைக்கிளை எடுத்துகொண்டு வேகமாக மிதித்து முந்தி சென்று குறுக்கே நிறுத்தினான்..., ஏலே...மாது காது கேட்குமா இல்லையா?நீ...பாட்டுக்கு போய்ட்டே இருக்க.....என்றான் செல்வம்

சைக்கிளை காலை ஊன்றி நின்ற மாது,நீங்க... கூப்பிட்டா நிக்கனும்கிறது அவசியம் இல்லை....உங்களுக்கும்..எனக்கும் என்ன சம்மதம் நீங்க கூப்பிட்டா நிக்கிறதுக்கு என்றாள் காட்டமாக.

செல்வத்திற்க்கு கோபமும் ஆச்சர்யமாகவும் இருந்தது, மாது இவ்வளவு கோபத்தினை காட்டுகிறாளே...!ஊரே நம்மை கண்டுபயப்படும் போது இவள் இப்படியிருக்கிறாளே!

உன்னை கட்டிக்க "சம்மந்தமா" பேசப்போறேன்......பள்ளியில தண்ணீரை மேல ஊற்றிவிட்டேன் தெரியாமல் நடந்திருச்சு...மன்னிச்சிடு....என்றான் செல்வம்,

மன்னிப்பா?ஆச்சர்யந்தான்..! என்று மனதில் நினைத்தாலும் வார்த்தைகளில் வெளியிடவில்லை மாது! நான் அப்பவே மறந்துவிட்டேன் இனிமேல் என்னிடம் பேசாதிங்க! யாரவது தவறா நினைப்பாங்க! எங்கப்பன் காதுக்கு போனதுன்னா என்னை வெட்டி போட்டிரும் !என்று பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டாள் மாது.......!!
-----------------------------------------------------------------------------------------------------------

செல்வம் உக்கார்ந்து இருந்த இடத்தில் துளிர் விட்டிருந்த கிலுவை மரத்தின் பசும் இலையை பறித்து சிந்தனையில் இருந்த பொழுதில் ஒரு பீப்பி 
செய்திருந்தான் வாயில் வைத்து மெதுவாக ஊதிப்பார்ததான் சத்தம் வந்தது கிலுவை பீப்பியை(இலையை வைத்து விசில்) ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு அருகில் கேட்ட கொலுசு சத்தம் கேட்டு நிமிர்நதான், மாது நின்று கொண்டு இருந்தாள்.

என்ன ஜயா செய்து கொண்டு இருக்கிங்க என்றவள் செல்வத்தின் கையை பார்த்தவள் பீப்பி ஊதுகின்ற வயதோ....?உங்களுக்கு...என்றாள் கேலியாக

நமக்கு குழந்தை பிறந்தா ஊதுவதற்கு வேண்டாமா அம்மணி என்றான்

ஆ...அது வேறா அப்படியொரு ஆசை உங்களுக்கு இருக்கா? என்றவள் யாராவது பார்த்துடுவாங்க வாங்க இருட்டுக்குள்ள போயிடலாம் என்றாள்,
சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இருட்டாக இருந்த தோட்டத்துக் கிணற்றின் மதில் சுவர்க்கு பின்னால் உக்கார்ந்து கொண்டார்கள்.

மாதுவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான் செல்வம் ஏ..பொண்டாட்டி இவ்வளவு நேரம் என்றான் செல்லமாக..!

இன்னிக்கு ஊர்ல மொம்மலாட்டம் நடக்குது, எல்லாம் பார்த்திட்டு இருக்காங்க....,யார் கண்ணிலையும் தட்டுபடாம வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது புருசா....!என்று அவன் தலையை கோதினாள்.

அப்படியே அவள் மடியில் தலைவைத்து படுத்தான் செல்வம்...,
ஒன்னு கொடுக்கிறது என்று கண்ணத்தை காட்டினான் தன் விரலால்....,
அதல்லாம் முடியாது! கண்ணத்துல முத்தம் கேட்பாய், பிறகு வேறு கேட்பாய்,என்னால் முடியாது சாமி ஆள விடு.....!

அட இவளைப் பாருய்யா! நான் உன்னை தொடும்போது வேண்டாம் என்று சொல்வதுதானே?

கோபம் வந்தது மாதுக்கு... !ஆம்பளை நீ.....ஆசைய அடக்கமுடியாது, நான் பொம்பளை கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாலும் ஆசையை அடக்கி வைக்கனும், இல்லையினா இவ அனுபவசாலின்னு முடிவு செய்திடுவிங்க....,உங்க ஆம்பிளைப் புத்தி! அப்படியென்றாள் மாது,

ஆமா....ஆமா நீ...அனுபவசாலிதான்.....என்றான்....

தன் பட்டு கைகளால் செல்வத்தின் மூக்கை பிடித்து ஆட்டியவள், என்னை இந்தமாதிரியாக்கியதே நீதானே......திருடா என்றாள்....,செல்வம் அவளை இருக
அனைத்து அவளின் அதரங்களை பற்றினான், தன் உயிர் முழுவதும் ஆவியாக அவள் உடலினுள் பாய்வதாக உணர்ந்தான்......

விடு...!விடு....!என்று திமிறி விடுபட்டு எழுந்தாள் மாது.

ஏன்? என்ன ஆச்சு என்றான் செல்வம்?

இன்றைக்கு முடியாது, நான் தூரமாக இருக்கிறேன்.....!தொடாதே தீட்டு.....!சும்மா உன்னைப் பார்க்கனும் போல இருந்தது அதான் வந்தேன் என்றாள்...

சரி...!சரி...!விடு.. விடு..உன்னை வீட்டுகிட்ட விட்டுட்டு நான் போகிறேன் என்று ஒரு எட்டு வைத்திருப்பார்கள், அதிர்ந்து போனார்கள் இருவரும்,
சித்தப்பா "துரை" கண்கள் சிவக்க டபுள் பேரல் துப்பாக்கியை நீட்டியபடி நின்றுகொண்டுருந்தார்..........

முந்தைய காதல் கதைகள் படிக்க

1956 இதன் முந்தைய பாகம்

--------------------------------------------------------------------------------
வெள்ளை புறா ஒன்று......ஏங்குது கையில் வராமலே...


தில்லாலங்கடி பொண்ணு ஏமாந்த பையன்

Read more...

காதல்கதைகள் 3 (1956)

>> Sunday, December 11, 2011


காதல்கதைகள் 3

1956


(முதன் முதலில் திமுகவின் அரசியல் பிரவேசம் நடந்த ஆண்டுதான் கதையின் தலைப்பு, திருச்சியில் மாநாடு நடத்தி ஓட்டெடுப்பு நடத்தி அரசியலில் இறங்கி தேர்தலை சந்தித்தார் அறிஞர் அண்ணா இதையே இந்த கதையின் தலைப்பாக வைப்பதின் காரணம்? மறைக்கப்பட்ட சில உண்மைகள் இந்த கதையில் உள்ளது மட்டுமின்றி திமுக வின் அஸ்திவாரமாக இருந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை,உயிருடன் இருந்த போது இப்போதைய எச்சிலைவாதிகள்
யாரும் சீந்தவும் இல்லை!இறந்த பிறகும் இறுதிமரியாதையும் தரவில்லை அப்படிப்பட்ட ஒருவரின் மரன வாக்குமூலம்தான் இந்தகதை, அப்போதைய காலகட்டத்தில் நடந்தவை சில சம்பவங்கள் தனிக்கை செய்யப்பட்டு)

இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போகும் படகு போல, நிலா வானத்தில சென்று கொன்டு இருந்தது,செல்வம் தன் சைக்கிளை மிதித்தான், பழக்க பட்ட
சாலை என்பதால் அந்த இருட்டிலும் குண்டும்,குழியும்,பார்த்து ஓட்டினான்,அரசமரத்தின் அடியில் சைக்கிளை நிறுத்தினான், ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தான், சுவர்கோழி கத்திகொண்டிருந்தது காதை என்னவோ செய்தது.

மாதுவை எங்கே காணவில்லை!! இன்றைக்கு வரமாட்டாளா? இல்லையே வருகிறேன்! என்றல்லவா கூறினாள்! மாதுவை நினைக்கும் போது ஏனோ மனம் புது மின்சாரம் பாய்வது போல் அல்லவா இருக்கிறது! அவளுடைய அழகும்,உடல் கவர்ச்சியும் என்னை ஏன்?இவ்வளவு பைத்தியமாக செய்துவிட்டது,அப்படியென்றும் அழகியில்லையென்று.' விட்டு விடமுடியாது!நல்ல சிகப்பு நிறம்,சிகப்பு நிறமுடையவர்களுக்கு உடல் கட்டமைப்பாக இருக்காது,கருப்பான பெண்களுக்கு இருக்கும் உடலின் கட்டமைப்பு சிறப்பான ஓவியத்தை போல் இருக்கும், இது ஆண்களுக்கும் பொருந்தும்,ஆனால்! மாதுவுக்கு நிறமும்சிகப்பு! உடலும் கட்டுடல்!! சிலருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்,அதற்கேற்ற ரோஸ் நிற உதடுகளும், பெரிய கண்களும்,அனைத்து ஆண்களையும் சுன்டிஇழுக்கும்.

சின்னவயதிலிருந்து மாதுவைத் தெரியும் செல்வத்தின் அப்பாதான் அன்ன போஸ்ட்டு பிரசிடன்ட்,அன்னபோஸ்ட் என்பது சாதாரணவிசயம் கிடையாது
அனைத்து சாதியினரும் வாழும் கிராமத்தில் ஒற்றுமையாய் அனைவரும் பேசி தீர்த்து இவர்தான் பிரசிடன்ட் என முடிவு செய்து போட்டி வேட்பாளர் இல்லாமல் ஜெயிப்பது,பாரம்பரியமாய் ஊர் தலைவராய் இருந்த குடும்பம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும்போது கொடுத்த பூமிகளை ஆண்டு அனுபவித்து, ஊரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் குடும்பத்தின் வாரிசு செல்வம்.

அறிஞர் அண்ணாவின் திமுக கட்சி மெதுவாக கிராமத்தில் எட்டி பார்தத நேரம்,பெரிய பண்ணைகளும்,நிலசுவான்களும்,காங்கிரஸில் இருந்தனர்,
அவர்களை பிடிக்காதவர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் திமுகவை நம்பியிருந்தனர்,அண்ணாவின் பேச்சாற்றல் சமானியமக்களை சிந்திக்கவைத்துக்கொண்டு இருந்தது திமுகவில் இணைந்தவர்களுக்கு நீர்,வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது,அவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டது,பெரும்பான்மையோர் பெரும்புள்ளிகளான காங்கிரஸ்காரர்களை எதிர்க்க பயம் கொண்டு வாழ்ந்து வந்தனர்,செல்வத்தின் பாட்டனார் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர், தன்னுடைய ஆயிரம் ஏக்கர் நிலத்தை வினோபாஜி அவர்களின் தலைமையில் நிலம் இல்லா ஏழைகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தினால் பிடுங்குவதற்கு முன்னரே வழங்கினார்,ஆனால் படிக்காத ஏழை மக்களிடம் தாம் ஒரு "தர்மபிரபு" மாதிரி காட்டிக்கொள்வார், தாழ்ந்த இனத்தைசேர்ந்த மக்கள் தங்கள் குலசாமி போல் வேண்டுவது வேடிக்கையானது! ஒன்றுதான்,அப்படிப்பட்ட பாட்டனாருக்கு பிறந்த மகன் பொன்னம்பலம்தான் செல்வத்தின் அப்பா,அவரும் தன் சாதி வெறியை கைவிடாமல் அந்த கிராமத்தை ஆட்சி செய்து வந்தார்.

ஆனால் செல்வமோ மாறுபட்ட குணத்தை கொண்டிருந்தான் காரணம் அவனுடைய சித்தப்பா துரை,திருமணம் ஆகாதவர் திமுகவின் தீவிர விசுவாசி கொஞ்சம் படித்தவர்,அண்ணாவின் பேச்சோ!கலைஞரின் பேச்சோ கோபி,சத்தி,எங்கு நடந்தாலும் தன்னுடைய ஒற்றை குதிரை வண்டியில்,சில சமயம் தனியாக குதிரையில் செல்வார் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகர்,எங்கு எம்.ஜி.ஆர் படம் போட்டாலும் செல்வத்தை அழைத்துக்கொண்டு பொய்விடுவார்,வீட்டிலுள்ள பணத்தை திருடி திமுக கொடி கட்டவும்,மது வாங்கி தரவும் தாராளமாய் செலவு செய்வார்,

அதனால் வீட்டினுள் விடமாட்டார்கள் தறுதலை என்று திட்டுவார்கள்,சின்னசின்னதாய் சண்டை பெரிதாக,வீட்டை விட்டு தோட்டத்தில் போய் தங்கி கொண்டார், மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தோட்டம் என்பதால் அப்பொழுது அனைவரும் துப்பாக்கி வைத்து இருந்தனர்,டபுள்பேரல் துப்பாக்கி இவரிடம் மட்டும் உண்டு,மான்,மந்தி,கேழையாடு,எதுவாக இருந்தாலும் ஒரே அடிதான்,கறியை தின்றது போக உப்புகண்டம் வேறு போட்டுவைப்பார்கள்.

எதுவும் கிடைக்காத பொழுதில் சாராயத்திக்கு தொட்டுக்க பயன்படுத்துவார்கள்,குதிரைவண்டி ஓட்டுவதில் கோவை ஜில்லாவில் இவரை விட்டா ஆள் கிடையாது,சேலம்,ஈரோடு,பொள்ளாச்சி,எங்கு போனாலும் இவர்தான் வெற்றிபெறுவார்,ஆனால் வெற்றிப் பணம் வீடுவந்து சேராது அங்கேயே முடிந்துவிடும்,சாராயம்,பொம்பளை,என எல்லா முடிச்சிட்டுத்தான் வீடு வந்து சேருவார்,
-------------------------------------------------------------------------------------------------------------
''தங்கா ஏண்டா அழுவற என் பங்கு நிலத்த நீ குத்தகைக்கு ஓட்டு, குத்தகையா பணம் எதுவும் வேண்டாம், என்று தன் பங்கு நிலத்தை கொடுத்து உதவினார்"
-------------------------------------------------------------------------------------------------------------

"வண்ணார்" சமுதாயத்தை சேர்ந்த தங்கவேலன்,இவருடைய சின்ன வயது நண்பர்,இவர் என்ன சொன்னாலும் கேட்பார்,இவர் திமுகவில் சேர்ந்தபோது அவரும் சேர்ந்தார் ஊர் கட்டுபாடு போட்டு,துணி யாரும் கொடுக்கவில்லை, இவரிடம் வந்து அழுதார்,டேய் தங்கா ஏண்டா அழுவற என் பங்கு நிலத்த நீ குத்தகைக்கு ஓட்டு, குத்தகையா பணம் எதுவும் வேண்டாம்! என்று தன் பங்கு நிலத்தை கொடுத்து உதவினார்,அதனால் ஊர்ல உள்ள "உயர்ஜாதி"யினர் இவரை மதிக்க மாட்டார்கள்,ஆனால் "கலைஞரே" அந்தப்பகுதி பிரச்சாரத்திக்கு வரும் போது துரை எங்கப்பா? என்பார் அந்த அளவு கட்சியில் செல்வாக்கு பெற்றவர் செல்வம் துரையோடு சுற்றுவதாக தெரிந்த பொன்னம்பலம் ஆரம்பத்தில் கண்டித்துப்பார்ததார் பிறகு ஒருத்தன்தான் நம்ப குடும்பத்துல தறுதலையின்னு நினைச்சேன் இப்ப இரண்டு ஆயிடுச்சு என்று விட்டுவிட்டார்,
எதைஎதையோ நினைத்து,மாதுவை மறந்து விட்டோமே......என செல்வம் மனதிலேயே தன்னை கடிந்து கொண்டான், எட்டாவது படிக்கும் போது என்று நினைக்கின்றேன்...



சாப்பிட்டுவிட்டு தூக்கிலிருந்த தண்ணீரை சன்னலில் ஊற்ற சரியாக அந்தப்பக்கம் வந்த மாதுவின் மீது சாப்பாடும் தண்ணீருமாய் ஊற்ற அவமானத்தில் கூசி போனாள் மாது, தாழ்ந்தகுலத்தில் பிறந்த அவள் பள்ளியில் ஏற்கனவே சக மாணவர்களின் ஏளனத்திலும்,புறங்கணிப்பிலும் இருந்தவள்,மேலும் அவமானப்படுத்த பட்டதாக உணர்ந்து அழுதாள்,செல்வத்திக்கு மனம் ஏனோ வேதனைப்பட்டது ஒரு மன்னிப்பு கூட கேட்கமுடியாத சூழ்நிலை அப்பொழுது ஆண் மாணவர்கள் பெண் மாணவியிடம் பேசக் கூடாது!அதுவும் தாழ்ந்தகுல பெண்ணிடம் பேசினான் என்றால் ஆசிரியர்கள் முதுகுதோலை உரித்துவிடுவார்கள்,ஆனாலும் எப்பாடு பட்டாவது மாதுவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என தீர்மானமிட்டான் செல்வம், மன்னிப்பு கேட்டானா செல்வம்? அடுத்தபதிவில் பார்க்கலாம்...........

Read more...

வெள்ளை புறா ஒன்று......ஏங்குது கையில் வராமலே...

>> Tuesday, November 29, 2011




நான் செல்வியை பார்த்தது எப்போது நினைவுபடுத்திபார்த்தேன் திரும்பி பார்க்கின்றது, என் மனம் என் தங்கையின் திருமணத்தின் பொருட்டு மாப்பிள்ளை பார்க்க போன போது மாப்பிளையின் தங்கையாக அறிமுகமானவள் மாநிறம்தான்...!என்றாலும் அழகாக இருந்தாள்!  அவள் முகம் அடிக்கடி என் நினைவில் வந்தது, அவளைப்பற்றி யாரிடம் கேட்பது திருமணம் ஆகாதவள் என்றாள் யாரிடமாவது கேட்கலாம்! திருமணம் ஆனவள் போல் இருக்கிறாளே...எப்படி கேட்பது...தயக்கம்...

ஆனால்..! புரோக்கர் தானே அவளைப்பற்றி கூறியதும் அவள் மேல் பரிதாபம் வந்தது, சந்தோசமாகவும் இருந்தது,காரணம்! அவளுடைய கணவன் பெங்களூருவில் பைனான்ஸ் வைத்திருந்த போது அளவுக்கு அதிகமாக குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டான், சிறிய வயதிலேயே விதவையானாள் செல்வி, அவளுக்கு மூன்று வயதில் குழந்தையொன்றும் உள்ளது, என் மேல் எனக்கே கோபம் வந்தது மைத்துனரின் தங்கை நாம் ஏதாவது தவறாக நடக்க தன் தங்கையின் வாழ்வே பாதிக்குமே....

ஆனாலும் மனம் ஒரு குரங்கு எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கின்றோமோ..! அது நம் முன் நிழலாடுவது மனித இயல்பு, செல்வியின் நினைவு வந்து பலநாள் தூக்கத்தை கெடுத்தது.... திருமணத்தின் போது நிறைய பேச சந்தர்ப்பம் கிடைத்தது பல விசயங்களைப்பேசினோம் எங்களை யாரும் தவறாக நினைக்கவில்லை...

இரண்டு மூன்று நாள் பழக்கத்தில் செல்வியுடன் உரையாடியதில் அவள் தனிமையை வெறுக்கிறாள் உறவை நாடுகிறாள் என அறிந்தது கொண்டேன் என் ஆண் என்கின்ற மிருகம் விழித்துக்கொண்டது நான் ஆசையை என் தங்கையின் திருமணம் முடிவதற்க்குள் கூறிவிட்டேன் சுருக்கமாக... உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று. 

அவளும் எதிர் பார்த்திருப்பாள் போல் எதுவும் சொல்லவில்லை சிரித்துக்கொண்டே அதற்க்கென்ன செய்துட்டா போச்சு என்று சாதாரணமாக கூறிவிட்டாள்.. என்றாலும் பிடிகொடுக்கவில்லை.... ஒரு மாதம் ஓடியது தெரியவில்லை நான் அவ்வப்போது என் தங்கையைப் பார்க்க போகும் போது அவளைக் கேட்பேன் நான் சொன்னது என்ன ஆச்சு? என்று சிரித்துக்கொண்டே போய்விடுவாள்...

ஒரு நாள் வெளியூரில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்வீட்டார் அவள்வீட்டார் அனைவரும் சென்று விட்டனர், அவளை மட்டும் விட்டுவிட்டு ஏனெனில் மாடு,கறவை நிறைய இருப்பதால் தண்ணீர் கொடுக்கவேண்டும், கடலை செடி நல்லா புடுங்கற நிலையில இருக்கு மாடு,கன்னு நுளைந்தால் உழைப்பெல்லாம் வீணாகிவிடும் நானும் இதே காரணத்திற்காக இருந்து விட்டேன்...

செல்வி என் செல்பேசியில் அழைத்தாள், பையனுக்கு உடம்பு சுடுது மருத்துவமனைக்கு போகனும் வருகிறீர்களா? என்றாள் நானும் போனேன்... நெருப்பாக கொதித்துக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம், குழந்தைக்கு ஒரு ஊசியைப்போட்டு விட்டு ஒன்றும் பயப்படவேண்டாம் குளிர்ஜுரம்தான்... உங்கவீட்டுக்காரரைப்போய் மருந்து எழுதி தரேன் வாங்கிட்டு வரச்சொல்லுங்க என்றார் என்னைக் கைகாட்டி அந்த நேரத்திலும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்....

மருந்து,மாத்திரை எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம்... சரி! நான் கிளம்புகிறேன் என்றேன், இரவாயிருச்சு... இருந்துட்டு காலையில போங்க... என்றாள் பரவாயில்லை நான் போகின்றேன் என்றேன் இருங்க நிறைய பேசனும் உங்ககிட்ட... என்றாள் செல்வி

இரவு தோசை சுட்டுப்போட்டாள், ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக செய்யும் தொட்டுக்க தக்காளியும் கத்திரிக்காயை நன்றாக சுட்டு கடைந்து செய்வார்கள், அதைத்தான் அவளும் செய்திருந்தாள், தேங்காய் சட்னியும் அதுவும் தேவார்தமாய் இருக்கும் விரும்பி உண்ணும் நான் அன்று என்ன பேசப்போறாளோ என்றைய சிந்தனையில் உணவில் மனம் ஒட்டவில்லை.

நான் சாப்பிட்டு விட்டு கைகழுவி விட்டு கையை துடைத்துக் கொண்டு சமையறைக்குள் நுழைந்தேன், தோசை சுட்டுக்கொண்டு இருந்தாள், அவள் முதுகில் திட்டுதிட்டான வியர்வை படிந்திருந்தது அவளின் அழகு என்னை என்னவோ செய்தது, என்னையறியாமல் பின்னால் கட்டிபிடித்து விட்டேன், அவள் அதிர்ந்து போனாள் அப்படியே அவள் உதட்டில் முத்தமிட்டேன் சிறிது திமிரிய அவள் என் உறுதியான விவசாயம் செய்யும் உடலின் அனைப்பை விடுவிக்கமுடியவில்லை...

விடுவிடு இங்க வேண்டாம் என்றாள், நான் பிடியை விட்டேன் கருகிய தோசையை எடுத்து குப்பையில் போட்டாள், அடுப்பை அனைத்தாள் அவளின் படுக்கை அறைக்கு சென்றாள் அவள் உடையனைத்தும் களைந்தாள் சிற்பி செதுக்கிய நிர்வாண சிலையாக படுக்கையில் விழுந்தாள் வா....என்றாள் வானத்தில் உலவி வந்த சந்திரன் மேகங்களுக்கிடையில் மறைந்து கொண்டான்.. இரு உயிர்களின் சங்கமத்தினைப்பார்த்து வெக்கப்பட்டுக் கொண்டு,  தூரத்தில் நரி ஊளையிட்டது, கிணற்றின் ஓரம்...இரண்டு பாம்புகள் புனர்ந்து கொண்டுருந்தது கணவன் இறந்து இரண்டு வருடம் பொத்திவைத்திருந்த காமம் தலைவிரித்து சாமியாடியது இரவு முழுவதும்....

அதற்க்கு பின் என்னால் செல்வியை மறக்கமுடியவில்லை... ஊரே எதிர்த்து நின்றாலும் அவளைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், செல்வியின் மகன் என்னோடு நன்றாக ஒட்டிக்கொண்டான், அப்பா! என்று கூட அழைக்க ஆரம்பித்து விட்டான் மெதுவாக என் பெற்றோரிடம் நான் செல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறினேன் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பிறகு ஒரே மகன் ஆசைப்படுகிறான் நம்ம பொண்ணு அங்க வாழ்ந்திட்டு இருக்கு என சமாதானமாகினர்... என் பெற்றோர் உறவினர் ஒருவரை அழைத்து விசயத்தைக்கூறி, பொண்ணு கேட்க கூறினார்கள் அவரும் போனார்... 

செல்வியின் குடும்பம் இதைக் கேட்டதும் வானுக்கும்...பூமிக்கும்... குதித்தனர், என் தங்கையை அடித்து உதைத்து என் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள், எத்தனையோ பேர் எடுத்துக்கூறினார்கள்.. செல்வியின் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அவ.....அப்படி அவனை கல்யாணம் பண்றதா...இருந்தா பையனை விட்டுட்டு போகட்டும்.. என்றார் என்னடா இவன் முட்டாளா இருக்கிறானே பொண்ணின் வாழ்க்கை மீண்டும் தொடங்குவதை தடுக்கிறானே என்று குழம்பினார்கள், அதற்க்கான விடையை செல்வியின் உறவினர் கொண்டுவந்தார் இறந்து போன கணவன் வீட்டுக்கு ஒரே மகன், அவர்களுடைய ஏராளமான சொத்து செல்வி மணமுடித்தால் கிடைக்காது, கணவன் இறந்தபிறகு கணவன் வீட்டிலேயே இருந்த செல்வியை அவளுடைய அறுபது வயது மாமனார் தவறாக நடக்க முயற்சித்துள்ளார், அதனாலதான் செல்வி இங்கே வந்து இருக்கிறாள்...எங்கள் காதல் விவகாரம் அறிந்த, செல்வியின் மாமனார் செல்வியின் தந்தையிடம்.. உம் பொண்ணு வேற எவனாயாவது கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் எங்க சொந்தக்காரங்க யாருக்காவது எழுதிவைச்சிருவோம் என்று மிரட்டியிருக்கார்.. அதனால சொத்துக்கு ஆசை ப்பட்டு திருமணத்திற்கு மறுக்கிறார் என்று கூறிவிட்டு செல்வி ஒரு கடிதம் கொடுத்தாள் என்று கடிதத்தைக் கொடுத்தார்... அதை பிரித்து படித்தேன்...

அன்புள்ள
      ஜெ.....நான் இப்ப எங்க மாமனார் வீட்டுல இருக்கின்றேன், செத்துபோகலாம் என்று நினைக்கின்றேன், என்னால் அதுகூட  முடியவில்லை...,என் மகன் அனாதையாகிருவானே....என் புருசன் உயிரோடு இருந்தபோதும் நான் மகிழ்ச்சியா இருந்ததில்லை தினமும் குடிச்சிட்டு வந்து என் மேலேயே.... வாந்தி எடுப்பான், மது நாத்தம் குடலை புரட்டும் அவனோடு உறவை வைச்சிருக்கின்ற நிமிடம் நரகம், அவன் கூட உறவுக்கு மறுத்தா இரத்தம் வருகின்ற அளவுக்கு அடிப்பான்....செக்ஸ்ங்கரது நரகம்ன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு, உன் மழைச்சாரல் போன்ற தழுவல் என்னை மெய்மறக்க செய்தது வாழ்க்கையில் நான் சந்தேசமா இருந்தது நாம் உறவு கொண்ட நேரங்கள்தான் ஜெ...

அதைவிட கொடுமை ஒரு பெண்ணான நான் சொல்லக்கூடாது...சொல்லுகின்றேன் எங்க அப்பா என் மாமனாரிடம் கொண்டு வந்து விடும் போது, என் கிட்ட என்ன சொன்னார்.. தெரியுமா? உனக்கு உடம்பு சுகம் வேணுன்னா... உன் மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்துட்டு போங்கறான், அதுக்கு என்னை பஸ்ஸ்டேண்டுல நிறுத்தி விபச்சாரம் செய்யலாம்...

அப்பனே...எம் புள்ளைய அனுபவிச்சுக்கோன்னு சொன்னா...கிழவன் சும்மாயிருப்பானா.....வழுக்கட்டாயமா இரண்டுமுறை.....என்கொடுமை எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது நீ...நல்ல பெண்ணா பார்த்து திருமணம் முடிச்சிட்டு நல்லாயிரு சீக்கிரம் என்னை மறந்திரு அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது...

கடிதத்தைப் படித்தவுடன் எனக்கு ஆத்திரம் தலைக்கேற என் பைக்கை வேகமாக எடுத்து செல்வியின் வீட்டுக்கு போனேன் பதற்றத்திலும்,ஆத்திரத்திலும்... வேகமாக சென்ற எனக்கு வளைவு ஒன்றில் வந்த டிரேக்டரை கவனிக்க மறந்துவிட்டேன்...உறுதியான பம்பர் என தலையில் பட்டு தூக்கிஎறிந்தது என்னை நினைவு என்னை விட்டு மெல்ல மெல்ல மறந்தது.... 

நினைவு திரும்பியபோது, டெட்டால் வாசனையுடன் மருத்துவமனையில் இருந்தேன் தலைமேல் ஏதோ பாரத்தை வைத்தமாதிரி இருந்தது... சிகரெட் குடிக்கனும் போல இருக்குது, யாரும் தரமாட்டிங்கறாங்க... எங்க அம்மாகிட்ட கேட்டேன் அழுவுது எல்லா ஏன்? அழுவுறாங்க... நான் ஏன் அடிக்கடி ஜிங்கிடிஜிங்கான்னு... சொல்றேன் செல்வி நல்லாருக்கா... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க ஜிங்கிடிஜிங்கா....அண்ணே ஒரு பீடி இருந்தா கொடுங்கண்ணே....ஜிங்கிடுஜிங்கா.....வாத்தியார் பையன் சுரேசு எனக்கு பீடி வாங்கிக்கொடுத்தது... நாலு இட்லி சாப்பிட வாங்கிக் கொடுத்தது இரண்டுதான் சாப்பிட்டேன் இரண்டு செல்விக்கு வேணும்மல்ல செல்வி மகன்..இல்லை...இல்லை...என் மகன்.....சாக்லெட் வாங்கி கொடுக்கனும், இப்போதெல்லாம் இரண்டு பேரையும் பார்க்கவே முடியலை ஏன்? ஜிங்கிடிஜிங்கா....

..........................
என்னது என் கதையா? சொல்லறதா...கேட்டுக்க.... ஆனா..
சாயந்திரம் கோட்டர் வாங்கி கொடுப்பியா? 

...........................

வாங்கி கொடுக்கிறியா சரி அப்ப சொல்லுகிறேன் கேட்டுக்க....

அந்த சந்திரன்,கெட்டதும் பெண்ணால.....அந்த இந்திரன் கெட்டதும்....பெண்ணால......



(தலையில் அடிபட்டு காதில் இரத்தம் வந்ததால் மனநோயாளியாகப் போனார் ஜெ....அவரே சொன்ன கதை அவர் பார்வையில்... வாத்தியார் பையன் சுரேசு நான்தான்)


கதைகள் தொடரும்.....



Read more...

தில்லாலங்கடி பொண்ணு ஏமாந்த பையன்

>> Saturday, November 26, 2011


காதல் கதைகள்....





அன்புள்ள.. என் இனிய நண்பர்களே! இதில் வரும் கதைகள் கற்பனையல்ல நிஜம்!! நம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கலாம்! செய்திதாள்களில் படித்துஇருக்கலாம்! யாரோ கூறியதை கேட்டு இருக்கலாம்! இப்ப நாம பார்க்க போகின்ற கதை..' ஒரு சின்னபெண் உற்றார்,உறவினரை மட்டும் ஏமாற்றாமல்
மணமகனான தாய்மாமனை ஏமாற்றியது அவர் என் நண்பர்.

ராம் மிகவும் சிரமப்பட்டு சுயதொழில் மூலம் உழைத்து, வீட்டைகட்டி தங்கை திருமணத்தினை தனியொருவராக சிறப்பாக நடத்திமுடித்த பொறுப்பான எந்த கெட்டபழக்கம்இல்லாத ஒரு நல்ல பையன், அவருக்கு திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் ஏறாத கோவில் இல்லை, ஜோசியர் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை, எங்கேயும் பெண் அமையவில்லை, அதனால் அவர்கள் நெருங்கிய உறவினர், ராமின் அத்தையின் மகள் வினிதாவின் ஜாதகத்தினை பார்த்தபோது பொருந்திவர திருமண ஏற்பாடு நடந்தது.

வினிதா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார் திருமணம் உடனே வேண்டாம்! நான் கல்லூரியை முடித்துவிடுகிறேன் பிறகு வைத்துக்கொள்ளலாம் எனக்கூறவும், வீட்டாரும் சரியென்று ஏற்றுக் கொண்டார்கள்.

ராம் வினிதாவுக்கு மொபைல் ஒன்றைவாங்கிக்கொடுத்தார், இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினார்கள் போன் பில் ராம் வினிதாவுக்கு மட்டும் மூவாயிரம், நாலாயிரம், கட்டினார், சுடிதார் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேல்தான் வாங்கி கொடுத்தார், திருமணத்திற்க்காக மண்டபம் பார்த்தாகிவிட்டது பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்தாகிவிட்டது பட்டுபுடவை மட்டும் பதினைந்தாயிரத்திற்கு பொண்ணுக்காக ராம் தேடி தேடி ஒவ்வொன்றாய் காதலுடன் செய்தார்.

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தா பற்றிக்கொள்ளுமே அதுபோல எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சினிமா பார்த்துக்கொண்டு வருகையில் வண்டி பஞ்சராக ஒரு இரவு உறவினர் வீட்டில் தங்கியபோது உணர்ச்சி வசத்தில் இருவரும் உறவும்வைத்துக்கொண்டார்கள், இத்தனைக்கும் வலிய கட்டாயப்படுத்தி உறவுகொண்டது வினிதாதான், காதலுடன்,காமமும் கைகோர்த்துக்கொள்ள எப்படா திருமணம் நடக்கும் என ஏங்கினார் ராம்.

திருமணத்திற்கு ஆறு நாட்கள் இருக்கும் சூழ்நிலையில்... ராமின் செல்லுக்கு வினிதாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.. "ஸாரி ராம்" என்று எதற்க்காக இது என குழம்பிய ராம் வினிதாவின் செல்போனுக்கு போன் செய்தான் வினிதாவோ போனை எடுக்கவேயில்லை, என்ன பிரச்சனையோ? என்று வினிதாவின் வீட்டுக்கு சென்றான் அங்கு அனைவரும் அழுதுகொண்டு இருந்தனர்.

என்னாகியது? என்று தன்மாமாவிடம் வினவினான்

நம்மளையெல்லாம் ஏமாத்திட்டு போயிட்டாளுப்பா சண்டாளி என அழுதார்...
என்ன ஆச்சு விவரமா சொல்லுங்க....

மாப்பிளை அவ கல்லூரியில் ஒருவனை காதலித்து இருக்கிறாள், மூன்றாம் ஆண்டு முடிந்தவுடன் திருமணம் முடித்துக்கொள்ளலாம் என்று இருந்திருக்கின்றார்கள் அதற்க்குள் நிறைய வரன் தேடி வர எங்கே திருமணம்
முடித்துவிடுவார்கள்... என பயந்து உன்னை திருமணம் செய்வதாக சம்மதித்து படிப்பை முடித்து விடடாள், காவல் நிலையத்தில் இருந்து திருமணம் முடித்துக்கொண்டு எனக்கு போன் செய்கிறாள், நாங்க இப்பத்தான் சென்று தலைமுழுகிவிட்டு வருகிறொம் என்று அழுதார்.

ராம் நொந்து போனார் நம்மை ஒரு பெண் பகடைகாயாக பயன்படுத்திவிட்டாளே என அழுதார், அழுது என்ன பயன்? கவுரமான அந்தஸ்த்திலிருக்கும் ராம் ஒரு தொழிலதிபர், திருமணம் நின்று போனால் யாரும் மதிக்க மாட்டார்கள், கேவலமாக எதிரிகள் பேசுவார்களே என புலம்பினார்.... கவலை வேண்டாம் அதே தேதியில் பத்திரிக்கை கொடுத்ததுகொடுத்ததாக இருக்கட்டும் வேறுபெண்ணைப்பார்த்து திருமணம் முடித்து விடலாம் என நண்பர்கள் கூறினார்கள், அதன்படியே ஒரு புரோக்கரை பார்த்து நிலைமையை கூறி பத்தாயிரம் பணத்தைக் கொடுத்து கூடவே ஒரு காரும் அனுப்பி தேடகூறினோம், புரோக்கரும் ஒரு மணிநேரத்தில் நல்ல தகவலோடு வந்தார் 

ஒரு கிராமத்தில் மாப்பிளைக்கு வலிப்பு நோயிருப்பதையும், மறைத்து அதுவிமில்லாமல் உடல்உறவும் கொள்ளக் கூடாது என்கின்ற மருத்துவர் கூறியதையும் மறைத்து, பிறகு அந்த பெண்ணின் உறவினர் கூறியதால் திருமணம் நின்று போயிருந்த சுதா என்கின்ற பெண்ணை புரோக்கர் கூறினார், அதேதேதியில் திருமணம் நடந்தது வினிதாவைவிட சுதா படிப்பில்லை என்றாலும் குடும்பத்தை நிர்வாகிப்பதில் திறமை மிக்கவராகும் அன்பான ஒரு மனைவியாகவும் இருக்கின்றார் அவர்கள் பல்லாண்டு வாழ நாமும் வாழ்த்துவோம்

இந்த கதையில் வினிதாவின் நிலைப்பாடு என்ன? காதலனுடன் கை கோர்த்து இந்த கபடநாடகம் ஏன் நடத்தவேண்டும்? தன்னுடைய படிப்பும் முடியவேண்டும்! காதலனையும் கைப்பிடிக்கவேண்டும்! ராமுடன் கொண்ட உடல்உறவு அவளின் ஆசைக்கு தன்னையறியாமல் உதவியதுக்கு பரிசா?இதற்க்கு பெயர் காதலா வேறுபெயர் அதை செல்லவிரும்பவில்லை... மொத்தத்தில் "கற்பு" என்பது சிலருக்கு சும்மா...! சும்மாவுக்கு தமிழில் அர்த்தம் கிடையாது, அதுபோலவே....நேர்மையாக ராமிடம் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினால் அவனே திருமணம் முடித்துக்கொடுப்பானே
அது மாதிரியான கேரக்டர்தான் ராம், ஆனால் ஜாலியாக ராம் பணத்தில் காதலனுடன் போன் பேசமுடியாது வேண்டியஉடை கிடைக்காது உயர்தர உணவகங்களில் உண்ணமுடியாது இதற்க்கு உலகின் பழமையான தொழில்
செய்பவர்கள் மேல்.... 



டிஸ்கி : விதி யாரை எங்கு சேர்க்கவேண்டுமோ! அங்கு சேர்க்கும்!!

கதைகள் தொடரும்.....


Read more...

கள்ளக்காதலால் ஒருவன் ஞானியாக முடியுமா?

>> Sunday, November 13, 2011



இது என்ன கேள்வி? கள்ளக்காதல் வைத்திருந்த திருவண்ணாமலை சாமியார் தெரியும் கள்ளக்காதலால் ஞானியானது யார்? கதை கேளுங்கள்

"உஜ்ஜைனி" என்கிற நாட்டை ஒரு அரசன் மிகச்சிறப்பாக ஆண்டுகொண்டிருந்தான் யார் கண்பட்டதோ தெரியவில்லை நல்ல அரசனான அவன் அடங்காப்பிடாரியான ராணியைக் கொண்டிருந்தான் அவள் பேரழகி கண்டவுடன் காமம் கொள்ளவைக்கும் அதரங்களையும் பெரியகண்களையும் இடை சிறுத்து சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவள் புறத்தின் அழகால் வசீகரித்த இராணி அகத்தில் சிறந்தவள் அல்ல அழுக்கு நிறைந்தவள் அவளிடம் அடங்கியிருப்பவர்கள் வாழமுடியும் எதிர்ப்பவர்களின் தலை உடம்பில் இருக்காது அவள் இத்தனைக்கும் உயர்குடி பெண்ணும் அல்ல தாசிகுலத்தை சார்ந்தவள் காமத்தில் திளைக்க துணைதேடினான் அரசன்.." இல்லறத்தாளை தேடாமல் இழுத்தவுடன் படுக்கும் வேசியை இராணியாக்கியதின் விளைவு மக்களின் நிம்மதி போனது

மதியில்லாத மன்னனிடம் அறிவுரை கூறலாம்! மங்கையின் போதையில் இருப்பனிடம் எப்படி கூறுவது? அறிஞர்கள் தவித்தனர் அந்த சூழ்நிலையில்... 

தென்னகத்திலிருந்து வந்தார் ஒரு சாமியார் கோவணம் கையில் கரும்பு உடலெங்கும் திருமன் திருவாயில் எப்பொழுதும் உச்சரிக்கும் நமச்சிவாயம் நமச்சிவாயம் என்கின்ற மந்திரம்.

அரசர் வருகிறார் அரசர் வருகிறார் என்று கூவிக்கொண்டு ஓடினான் சேவகன் மக்கள் ஒதுங்கி நின்றனர் நமச்சிவாயத்தை உச்சரிக்கும் அடியவருக்கு நிலையில்லா வாழ்வை கொண்ட மனிதனை மன்னனான அவனின் வருகை சலனப்படுத்தவில்லை சஞ்சலப்படுத்தவில்லை நடுரோட்டில் நடந்து வந்தார்

காவலர் பிடித்து தள்ளினர் அசையவில்லை அஞ்சவுமில்லை அரசன் பரதேசியைப்பார்த்தான் யார் நீ? வினவினான்

நீ...மானிடன் நான்...மானிடன் உமக்கு தெரியாதா? கண்களில் கோளாறா?

ஆத்திரம் தலைக்கேற எங்கிருந்து வருகிறாய்?

தாயின் கருப்பையிலிருந்து!

எங்கே போகின்றாய்?

இறப்பதக்கு!

இங்கே என்ன வேலை போய் சாகவேண்டியதுதானெ!

ஹஹஹ நீ..மட்டும் சாகாமல் வாழப்போகிறாயா?

ஒழுங்காய் பதில் சொல் கேட்பது யாரென்று தொரியுமா?

ஈசனை தவிர யாரையும் எனக்குத்தெரியாது

கடும் கோபம் கொண்ட அரசன் அவரை சிறையில் அடைத்தான்

மாலையில் அரசன் பரதேசிக்கு இவ்வளவு திமிரா? என சிந்தித்தவாறு
சிறைச்சாலை கொட்டிலுக்கு வந்தான் நான் கேட்கின்ற கேள்விக்கு சரியாக பதில் கூறிவிட்டாள் உன்னை விடுவித்துவிடுகிறேன் !"என்றார் அரசன்..

காமத்தைவிட சிறந்த ஞானம் உண்டா?

காமத்தை துறந்தவன்தான் ஞானம் பெறமுடியும்

நான் காமத்தினை படித்தவன் ஆண்மையில்லாதவன்தான் காமத்தை வெறுப்பான்

முட்டாள் நீ...காமத்தில் சிறந்தவன் என்றால் உன் மனைவி கோரமான குதிரைக்காரனுடன் ஏன் உறவு வைத்துக்கொள்கிறாள்? 

அரசனின் ஆத்திரம் அதிகமானது எங்கிருந்தோ வந்தவன் தன் மனைவியைக்கேவலமாக பேசியதும் மனதை கோபம் கொள்ள வைத்தது இவனை கழுவிலேற்றுங்கள் என உத்தரவிட்டார் அப்போது பாடினார்


கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையெடுத்
தப்புறந்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன் சென்று துயனீத்துப் பின்வந்து உறங்குவாளை
எப்படி நானம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே

நீ இரவு அவள்தரும் எதையும் குடிக்காதே உறங்குவதைப்போல் நடி என்ன நடக்கின்றது என்று காலை சொல் என்றார் அவர்

"அந்த மூடனை இழுத்துச்செல்லுங்கள்" என்று உத்தரவிட்டு  வந்தவரின் மனம் அடியவரின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது இராணி பள்ளியறைக்கு வந்தாள் அவள் கொடுத்த மதுவை குடிக்காமல் உறங்குவதுபோல் நடித்தார் 

நள்ளிரவில் அவர் கூறியதுபோல் ராணிபக்கத்தில் இல்லை மெதுவாக எழுந்து குதிரை லாயம் பக்கம் போன அரசன் அதிர்ந்தான் முழுநிர்வாணமாய் அருவருப்பான குதிரைக்காரனுடன்  படுத்துக்கிடந்தாள் ராணி 

ஓடினார் சிறைச்சாலைக்கு அய்யா என்னை மன்னித்துவிடுங்கள் என்று கதறியழுதார் கண்ணீர் விட்டார் நாடு பதவி அனைத்தையும் துறந்து வெறும் கோவணத்துடன் அடியாரின் சீடராய்சென்றார் அவர்தான்
பத்ரகிரியார் அந்த அடியவர் பட்டிணத்தார் எனும் திருவெண்காடர்

நன்றி : அர்த்தமுள்ள இந்துமதம் ஞானம் பிறந்தகதை, செவிவழி கேட்டல்


Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP