காதல்கதைகள் 3 (1956) தொடர்ச்சி
>> Wednesday, December 14, 2011
செல்வம் பள்ளி முடிந்து வரும்போது... ஊருக்கு செல்லும் குறுக்கு வழியில் ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் உக்கார்ந்து கொண்டான்,மாது கடைசியாக மெதுவாக வந்து கொண்டு இருந்தாள், இவனை தூரமாகவே பார்த்து விட்டாள்....எதற்காக நிற்கிறான் நம்மை மேலும் அவமானப் படுத்துவானோ என்கிற ஐயமும் கொண்டாள்,திரும்பிச்சென்று விடலாமா? எனவும் சிந்தித்தாள்! சரி..! என்னதான் நடந்துவிடப்போகிறது பார்த்துவிடலாம் என ஒரு தைரியத்தில் மெதுவாக வந்தாள்.
பக்கத்தில் வந்ததும் இவனை கண்டுகொள்ளாமல் சென்றாள்,
ஏய்..புள்ள நில்லு என்றான்.., மாது நிறுத்தவில்லை அவள் சென்றுகொண்டுஇருந்தாள் சைக்கிளை எடுத்துகொண்டு வேகமாக மிதித்து முந்தி சென்று குறுக்கே நிறுத்தினான்..., ஏலே...மாது காது கேட்குமா இல்லையா?நீ...பாட்டுக்கு போய்ட்டே இருக்க.....என்றான் செல்வம்
சைக்கிளை காலை ஊன்றி நின்ற மாது,நீங்க... கூப்பிட்டா நிக்கனும்கிறது அவசியம் இல்லை....உங்களுக்கும்..எனக்கும் என்ன சம்மதம் நீங்க கூப்பிட்டா நிக்கிறதுக்கு என்றாள் காட்டமாக.
செல்வத்திற்க்கு கோபமும் ஆச்சர்யமாகவும் இருந்தது, மாது இவ்வளவு கோபத்தினை காட்டுகிறாளே...!ஊரே நம்மை கண்டுபயப்படும் போது இவள் இப்படியிருக்கிறாளே!
உன்னை கட்டிக்க "சம்மந்தமா" பேசப்போறேன்......பள்ளியில தண்ணீரை மேல ஊற்றிவிட்டேன் தெரியாமல் நடந்திருச்சு...மன்னிச்சிடு....என்றான் செல்வம்,
மன்னிப்பா?ஆச்சர்யந்தான்..! என்று மனதில் நினைத்தாலும் வார்த்தைகளில் வெளியிடவில்லை மாது! நான் அப்பவே மறந்துவிட்டேன் இனிமேல் என்னிடம் பேசாதிங்க! யாரவது தவறா நினைப்பாங்க! எங்கப்பன் காதுக்கு போனதுன்னா என்னை வெட்டி போட்டிரும் !என்று பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டாள் மாது.......!!
-----------------------------------------------------------------------------------------------------------
செல்வம் உக்கார்ந்து இருந்த இடத்தில் துளிர் விட்டிருந்த கிலுவை மரத்தின் பசும் இலையை பறித்து சிந்தனையில் இருந்த பொழுதில் ஒரு பீப்பி
செய்திருந்தான் வாயில் வைத்து மெதுவாக ஊதிப்பார்ததான் சத்தம் வந்தது கிலுவை பீப்பியை(இலையை வைத்து விசில்) ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு அருகில் கேட்ட கொலுசு சத்தம் கேட்டு நிமிர்நதான், மாது நின்று கொண்டு இருந்தாள்.
என்ன ஜயா செய்து கொண்டு இருக்கிங்க என்றவள் செல்வத்தின் கையை பார்த்தவள் பீப்பி ஊதுகின்ற வயதோ....?உங்களுக்கு...என்றாள் கேலியாக
நமக்கு குழந்தை பிறந்தா ஊதுவதற்கு வேண்டாமா அம்மணி என்றான்
ஆ...அது வேறா அப்படியொரு ஆசை உங்களுக்கு இருக்கா? என்றவள் யாராவது பார்த்துடுவாங்க வாங்க இருட்டுக்குள்ள போயிடலாம் என்றாள்,
சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இருட்டாக இருந்த தோட்டத்துக் கிணற்றின் மதில் சுவர்க்கு பின்னால் உக்கார்ந்து கொண்டார்கள்.
மாதுவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான் செல்வம் ஏ..பொண்டாட்டி இவ்வளவு நேரம் என்றான் செல்லமாக..!
இன்னிக்கு ஊர்ல மொம்மலாட்டம் நடக்குது, எல்லாம் பார்த்திட்டு இருக்காங்க....,யார் கண்ணிலையும் தட்டுபடாம வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது புருசா....!என்று அவன் தலையை கோதினாள்.
அப்படியே அவள் மடியில் தலைவைத்து படுத்தான் செல்வம்...,
ஒன்னு கொடுக்கிறது என்று கண்ணத்தை காட்டினான் தன் விரலால்....,
அதல்லாம் முடியாது! கண்ணத்துல முத்தம் கேட்பாய், பிறகு வேறு கேட்பாய்,என்னால் முடியாது சாமி ஆள விடு.....!
அட இவளைப் பாருய்யா! நான் உன்னை தொடும்போது வேண்டாம் என்று சொல்வதுதானே?
கோபம் வந்தது மாதுக்கு... !ஆம்பளை நீ.....ஆசைய அடக்கமுடியாது, நான் பொம்பளை கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாலும் ஆசையை அடக்கி வைக்கனும், இல்லையினா இவ அனுபவசாலின்னு முடிவு செய்திடுவிங்க....,உங்க ஆம்பிளைப் புத்தி! அப்படியென்றாள் மாது,
ஆமா....ஆமா நீ...அனுபவசாலிதான்.....என்றான்....
தன் பட்டு கைகளால் செல்வத்தின் மூக்கை பிடித்து ஆட்டியவள், என்னை இந்தமாதிரியாக்கியதே நீதானே......திருடா என்றாள்....,செல்வம் அவளை இருக
அனைத்து அவளின் அதரங்களை பற்றினான், தன் உயிர் முழுவதும் ஆவியாக அவள் உடலினுள் பாய்வதாக உணர்ந்தான்......
விடு...!விடு....!என்று திமிறி விடுபட்டு எழுந்தாள் மாது.
ஏன்? என்ன ஆச்சு என்றான் செல்வம்?
இன்றைக்கு முடியாது, நான் தூரமாக இருக்கிறேன்.....!தொடாதே தீட்டு.....!சும்மா உன்னைப் பார்க்கனும் போல இருந்தது அதான் வந்தேன் என்றாள்...
சரி...!சரி...!விடு.. விடு..உன்னை வீட்டுகிட்ட விட்டுட்டு நான் போகிறேன் என்று ஒரு எட்டு வைத்திருப்பார்கள், அதிர்ந்து போனார்கள் இருவரும்,
சித்தப்பா "துரை" கண்கள் சிவக்க டபுள் பேரல் துப்பாக்கியை நீட்டியபடி நின்றுகொண்டுருந்தார்..........
முந்தைய காதல் கதைகள் படிக்க
1956 இதன் முந்தைய பாகம்
--------------------------------------------------------------------------------
வெள்ளை புறா ஒன்று......ஏங்குது கையில் வராமலே...
தில்லாலங்கடி பொண்ணு ஏமாந்த பையன்
3 comments:
மொத ஆளா வீட்டுக்குள்ள காலெடுத்து வச்சுட்டேன்..கதை படிச்சேன் சித்தப்பவோட துப்பாக்கி வெடிச்சதா இல்லையா..காத்திருக்கிறேன்..அருமை..
திரட்டியில்களில் இணையுங்கள் வந்து ஓட்டு போடுறேன்..
என்னய்யா இது கதை ஒரு மாதிரியா போயிட்டு இருக்கு...இருந்தாலும் தொடருகிறேன் ஹிஹி!
Post a Comment