ஜன்னலோரஇருக்கை…

>> Sunday, December 25, 2011


_________________________________________________________________

சிறுகதை K.S.சுரேஸ்குமார்

 


நான் வேகமாக சென்றும்....அந்த பேருந்து கிளம்பி விட்டது,நான் வேகமாக வருவதை பார்த்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார்.நான் ஏறினேன் உள்ளே இடம் இருக்குமா...? நோட்டம் விட்டதில் இருக்கை இருந்தது...இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

இருக்கையில் அமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்...ஜன்னலோரம் இருக்கை கிடைப்பது சில நேரங்களில் அறிது! கிடைத்தாலும் புதுபொண்டாட்டியை அழைத்துக் கொண்டு வருபவர்கள், சார் பிளீஸ்.......சீட் மாறி உக்காருங்க....என்று மானகெட்ட தனமாய் கெஞ்சுவார்கள்...உரசிகிட்டே...போகனுமா...! ஜன்னலோரம் இருக்கை கற்பனை குதிரையின் இருக்கை என்றே சொல்ல்லாம்...எனக்கு நிறைய கவிதையின் கரு ஜன்னலோர இருக்கையில் கிடைக்கிறது,வீட்டு பிரச்சனையை கூட ஜன்னலோர பயணத்தில் நன்றாக சாய்ந்து உக்கார்ந்து சிந்தித்த்தால் விடிவு கிடைத்தது உண்டு.

நடத்துனர் வந்தான் டிக்கெட்டை கொடுத்து விட்டு பின்னால் சென்று அவன் இருக்கையில் அமர்ந்து கொண்டான், அது தனியார் பேருந்து இளையராஜாவின் சோலை புஸ்பங்களே.....சோகம் சொல்லுங்களே.....கண்ணாளனை கண்டாலென்ன... பாடல் ஒலித்துக்கொண்டிருந்த்து.

ண்மூடி பாட்டில் லயித்திருந்தேன்.., இளையராஜாவின்.. பாடல்களில் உள்ள வரிகளும், இசையும் ஒரு தாயின் தாலாட்டு போல இருப்பதின் மர்மம் என்ன..? சில பாடல்களை பேருந்து பயணங்கள் ரசிப்பு தன்மையாக்கி விடுகிறது, ஜன்னலோரம் இருக்கை…,.இளையராஜாவின் பாடல் கூட்டம் குறைவு..,அமைதியான சூழ்நிலைஎல்லாம் இனைந்த சுகமான பயணம்.
இரண்டு,மூன்று நிறுத்தங்களைத் தாண்டி, ஓரிருவர் ஏறஎன் பக்கத்தில் மட்டும் காலியாக இருந்த்து...!அடுத்த நிறுத்தத்தில் வண்டி நின்றது ஒரு பெண் ஏறினாள்..! வயது இருபதை தாண்டி இருக்கும், மாநிறம்...மெல்லிய சேலையை தொப்புளுக்கு கீழே..மூன்று இஞ்ச்..இறக்கி கட்டியிருந்தாள், அவளின் நிறத்தினை ஒத்த உதட்டு சாயம் தீற்றியிருந்தாள், மெல்லிய சேலையின் ஊடே...நீலநிற ரவிக்கை, ரவிக்கையின் உள்ளேயுள்ள உள்ளாடை தெரிந்தது,உயரமான காலனி,கூந்தலை மடித்து நாகரிகமாக இருந்தாள், அவள் ஏறியதும் பேருந்தில் இருந்த அத்னை ஆண்களும் கண்களால் மேய்ந்தனர் நான் மட்டும் விதிவிலக்காயென்ன...மனிதன் மனம் குரங்கு...ஆணினத்தின் மனமோ! குரங்கை விட வேகமானது....
நேர்த்தியாய் வெட்டியிருந்த புருவத்தின் கீழேயிருந்த கண்களால் தேடினாள் இருக்கையுள்ளதா என...எந்தவித கூச்சமும் இன்றி என்னருகில் வந்து அமர்ந்தாள்.

அவள் போட்டிருந்த பவுடர், டியோரண்ட், கூந்தலில் வைத்து இருந்த மல்லிகை, ஒரு சேர பேருந்தே மணந்தது,என்னை பொறாமை பார்வை பார்த்த விடலையொருவன் அவளின் மறைவு பிரதேசத்தை...கண்டு கனவு கண்டு கொண்டிருந்தான்..ஒரு கிழடு நமுட்டு சிரிப்பு வேறு சிரித்தது,
எனக்கு ஒரு மாதிரியிருந்தது.! ஆனாலும் கிளுகிளுப்பாகவும் இருந்தது..! அதனால் ன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்தேன் என்றாலும் அவ்வப்போது அவளையும் ரசித்துக் கொண்டுருந்தேன்.
எக்ஸ்கியூஸ்மி....என்றாள் அவள் நான் மெதுவாகத் திரும்பி என்ன என்பதை போல் தலையசைத்தேன், என் கையில் இருந்த புத்தகத்தை காட்டி..கொடுங்க படிச்சிட்டு தருகிறேன் என்றாள், வரும் போது வாங்கியது படித்துவிட்டதால்..சும்மா வைத்திருந்தேன்..மறுப்பேதும் கூறாமல் அவளிடம் கொடுத்தேன்.

ஓட்டுனர் அதுவரை இளையராஜா பாட்டாக போட்டுகொண்டு வந்தவன்,இவள் ஏறியதும் பாட்டை மாற்றி விட்டான்...குத்துபாட்டு அதுவும் விரசமான பாடலாய் போட்டான் குஷி கட்டிபுடிடா....!?எப்படி..எப்படி…. சமைஞ்சது எப்படி என்று போட்டு ஒரு கிளுகிளுப்பை கூட்டிக்கொண்டு இருந்தான் விவஸ்தைகெட்டவன்.

நீங்க...எங்க இறங்கிறிங்க...என்று கேட்டாள் அந்த யுவதி...நான் கோவை காந்திபுரம்...என்றேன்.
அப்படியா? முன்னாடியின்னா ஜன்னலோரம் அமரலாமென்று நினைத்தேன்,நான் மேக்கப் போட்டிருக்கேன் வியர்த்தா ஒரு மாதிரியாயிரும் பிளீஸ் நான் ஜன்னலோரம் உக்கார்ந்துக்கலாமா...?என்று கேட்டாள் அவள்.
இல்லை முடியாது என்று கூற முடியுமா? சும்மா டப்பா பிகரு கேட்டாலே..இடம் கொடுப்போம் இவவேறு...! கவர்ச்சிக் கன்னியா இருக்கா...பலியாடு மாதிரி தலையாட்டிக் கொண்டு இடம் மாறினேன்.
ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தாள், இயற்கையை ரசித்தாள் சிரித்தாள்...,நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க....வினவினாள்...
நான் கம்பனியில் இருக்கிறேன் வேலை விசயமா..கோவை போயிட்டு இருக்கிறேன்.என்றேன்
ஓ...என்றவள் நான் கேட்காமலே...கூறினாள்...நான் சின்னதா பியூட்டி பார்லர் வைத்து இருக்கிறேன்.....கோவையில ஒரு திருமணம்... பொண்ணுக்கு மேக்கப் போட...போயிட்டு இருக்கிறேன்..!

ம்ம்....

உங்களுக்கு தேவைபட்டா சொல்லுங்க...நல்லா பன்னிக்கொடுப்போம் என்று ஒரு முகவரி ட்டையை எடுத்துக்கொடுத்தாள். நான் முகவரி அட்டையைப் பார்த்தேன் சுமி பியூட்டி பார்லர் என்று இருந்த்து உங்க பெயர் சுமியா?என்றேன்…

இல்லை அது என்னுடைய குழந்தை பெயர்…

ஓ…என்றேன் அவள் பெயரை கேட்க தோன்றியது, கழுத்தில் தாலியும் இல்லை,ஆள் வேறு எந்த அறிமுகமும் இல்லாமல் வாயாடுகிறாள்…வம்பு ஏன் நமக்கு?! ஒரு மாதிரியான பெண்ணாகக் கூட இருக்கலாம்!

அவளே சொன்னாள் என் பெயர் “சுமங்கலி” என்று வித்தியாசமாக இருக்கிறதே…அவளுடைய பெயர்.

நான் அவளுடன் அதற்கு மேல் பேச விரும்பவில்லை…தலையைத் திருப்பிக்கொண்டேன்,ஒரு மாதிரியான பெண்ணாக இருப்பாளோ…என்பதினால் உண்டான பயம் வேறு…

அவளும் அதை உணர்ந்து கொண்டவள் போல் நான் கொடுத்த புத்தகத்தை விரித்து படிக்க தொடங்கினாள்….

சிங்காநல்லூரில் இறங்கிக்கொண்டாள் தேங்ஸ் சார் என்று புத்தகத்தை கொடுத்து விட்டு இறங்கிக்கொண்டாள்…

இந்த சம்பவத்திக்கு பின்…. இரவு நண்பர்களை சந்தித்தபோது! இதைபற்றி கூறினேன், அவர்கள் கிண்டல் செய்தனர்…. போடா…. அருமையான சான்ஸ் என்று…என்னை ஏளனம் செய்தனர்,முகவரி அட்டையை ஒருவன் வாங்கி பார்த்தான் அட! போன் நெம்பர் இருக்கு! கூப்பிட்டு கேட்கலாமா? என்று வினவினான் நான் அட ஏண்டா…நீ வேறு .என்று பல விசயங்களை பேசியதில் சுமங்கலியை மறந்துபோனோம்.
அதற்க்கு பின்னாளில் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்த்து, ஆனால் அந்த சந்திப்புக்கு பின் அவளை நான் நினைத்ததுக்கு நேர்மாறாக இருந்தாள்.

இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து..” என்னுடைய நண்பனின் தங்கை திருமணத்திக்கு சென்றோம், அப்போது எதிர்பாராதவிதமாக பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்து கொண்டிருந்த பெண் விபத்தில் சிக்கி கொண்டார், பெண் வேறு மேக்கப் இல்லாமல் நான் வரமாட்டேன் என்று அழுதது,
பெண்ணின் அண்ணன் என் நண்பன் வந்து என்னிடம் டேய் உக்கு யாரையாவது தெரியுமா…?என்று வினவினான்…

ஏம்பா..என்னை கேட்கிற…!என்ற எனக்கு ஞாபகம் வந்தவனாய்.. என் சட்டைப் பாக்கெட்டைப் பார்த்தேன்! ஏகப்பட்ட முகவரி அட்டையில் அவள் கொடுத்த்து இருந்த்து, எடுத்து என் செல்பேசியை எடுத்து நம்பரை அழுத்தினேன்…!

அவள் வீட்டிலிருப்பதாகவும்…,வந்து என்னை கூட்டிச்செல்லுமாறும்,  கூறினாள். வீடு நகரத்தில் இருந்து தள்ளி இருப்பதால், ஆட்டோ கிடைக்காது! பேருந்தில்தான் வரமுடியும்…நேரமாகிவிடும் என்றாள்.

சரி... நான் போய் அழைத்துக்கொண்டு வருகிறேன்...என்று என்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் முகவரி தேடி அவள் வீட்டை கண்டுபிடித்தேன் அது பல குடித்தனங்கள் உள்ள வீடு.

அவள் பெயரை! சொல்லி கேட்டேன்.... கடைசி வீடு... என்றார்கள், கடைசி வீட்டில் சென்று கதவை தட்டினேன், கதவை திறந்தாள், நான் வருவதற்க்குள் தன் உபகரணங்களை எடுத்து தயாராக இருந்தாள்,
வந்திட்டிங்களா வாங்க சார்...தேனீர் சாப்பிடுங்கள் என்றாள்..

வேண்டாங்க..நேரம் ஆகின்றது போகலாம் என்றேன்.. ஒரு நிமிடம் என்று உள் அறையில் இருந்த தன்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் அதிர்ந்து விட்டேன்....! வாயில் நீர் ஒழுக.....அம்மா...அம்மா...என்று குழறிய மொழியில் பேசியபடி வந்த மனநலம் குன்றிய குழந்தை அது...!

நான் விக்கித்து நின்றதைப் பார்த்த அவள்...இந்த குழந்தையை கொடுத்துட்டு என் கணவர் குடிபோதையில் வாகணம் ஓட்டி சென்று இறந்து விட்டார்..இவளுக்கு மருத்துவ செலவு அதிகமா வேற ஆகுது..நானும் வாழனுமில்லையா..?அப்ப நான் படித்த காலத்தில் விளையாட்டாய் கற்றுக்கொண்ட அழகுகலை இப்ப சோறு மட்டுமல்ல என் மகளுக்கு நல்ல மருத்துவமும் பார்க்க முடியுது...அதனாலதான் நான் யாரைப்பார்த்தாலும் என் முகவரி அட்டையை கொடுப்பேன்..என்று கூறினாள்...

குழந்தையை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வந்த அவளை என் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றேன், இப்பொழுது அவள் எனக்கு கிளுகிளுப்பாய் இல்லை....!ஒரு நல்ல தாயாகத் தெரிந்தாள்......

18 comments:

கோகுல் 7:59:00 AM  

சுமங்கலி கண்ணீரை தனக்குள் மறைத்து,
புன்சிரிப்பை உலகுக்கு காட்டும் தன்னம்பிக்கையுள்ள தாயாக
கண் முன் நிற்கிறாள்.

♔ம.தி.சுதா♔ 9:19:00 AM  

கதையின் யதார்த்தத்துக்குள் இளையராஜாவை அருமையாகப் புகுத்தியுள்ளீர்கள்..

அருமை...

மதுமதி 2:13:00 PM  

கதை நன்றாகத்தான் இருக்கிறது..கொஞ்சம் சுவாரசியத்தை கூட்டியிருக்கலாம் என்று தோன்றியது..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள்..

விக்கியுலகம் 5:40:00 PM  

அட போட வைத்த கதை... நல்லா இருக்குய்யா மாப்ள!

நிரூபன் 12:10:00 AM  

வணக்கம் சகோ,
நல்லா இருக்கீங்களா?

//இளையராஜாவின் “சோலை புஸ்பங்களே.....சோகம் சொல்லுங்களே.....கண்ணாளனை கண்டாலென்ன...” //

தண்ணீருக்கும் மண்ணெண்ணெய்க்கும் கல்யாணமாம் என்றோர் வரி வருமே...சூப்பர் லிரிக்ஸ் பாஸ்..
எனக்கும் இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்.

நிரூபன் 12:11:00 AM  

வயது இருபதை தாண்டி இருக்கும், மாநிறம்...மெல்லிய சேலையை தொப்புளுக்கு கீழே..மூன்று இஞ்ச்..இறக்கி கட்டியிருந்தாள், அவளின் நிறத்தினை ஒத்த உதட்டு சாயம் தீற்றியிருந்தாள், மெல்லிய சேலையின் ஊடே...நீலநிற ரவிக்கை, ரவிக்கையின் உள்ளேயுள்ள உள்ளாடை தெரிந்தது,உயரமான காலனி,கூந்தலை மடித்து நாகரிகமாக .//

ஹே...ஹே..
சொன்னால் நம்ப மாட்டீங்க..எனக்கும் இப்படி ஓர் அனுபவம் கிடைச்சது.
அதுக்கு மேல நான் சொல்லலை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் 12:15:00 AM  

முடிவில மனசைத் தொட்டு விட்டீர்கள்.

அழகு வர்ணிப்பு, அவளைப் பற்றிய கற்பனை, அடுத்தது இது தான் என நான் நினைத்திருந்த முடிவு எல்லாம் இறுதியில் ஒரு குழந்தை மூலம் மாறி விட்டது.

திருப்பு முனை சூப்பர்.
கதை நகர்வு, வசன நடை அமைப்பு அனைத்துமே கலக்கலா இருக்கு! குறை சொல்லும் அளவிற்கு ஒன்றுமே இல்ல பாஸ்.

ராஜி 1:32:00 AM  

ஒரு பொண்ணு சகஜமா பேச ஆர்ம்பிச்சாலே தப்பா நினைக்க ஆரம்பிச்சுடுறீங்க. அதுவும் நாகரீகமா டிரெஸ் பண்ணிக்கிட்டு இருந்தாலோ கேட்கவே வேணாம்.

காட்டான் 1:45:00 AM  

வணக்கம் சுரேஸ்..!
நல்லதோர் சிறுகதை.. நான் கூட பார்த்திருக்கிறேன் இப்படியான பெண்களை.. 
குடிகார கணவன் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் அல்லது வேலை இல்லாது இருக்கும்போது இந்த குடும்ப தலைவிகள்தான் குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள்.. இப்படியானவர்களை  மற்றவர்கள் பார்க்கும் பார்வைதான் கொடுமை..!!

வே.சுப்ரமணியன். 6:35:00 PM  

//என் பெயர் "சுமங்கலி"// இந்த வார்த்தைகள் முழு கதையையும் தன்னுள் வைத்திருக்கிறது. அருமையான படைப்பு.

MANO நாஞ்சில் மனோ 3:46:00 AM  

அசத்தலா இருக்கு மக்கா கதை வாழ்த்துக்கள்..!

Anonymous,  3:59:00 AM  

கதை நல்லா இருந்தது.. ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு தேவைக்கே வெளியில் சென்று வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.. என்றும் சில ஆண்களின் பார்வையில் வேலைக்கு செல்லும் பெண்கள் தவறானவர்களாகவே தோன்றுகிறார்கள்........இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

சி.பி.செந்தில்குமார் 10:42:00 PM  

ஹாய் சுரேஷ், தமிழ்வாசி பிளாக் ல உங்க கை வண்ணன் கண்டேன் ,உங்களை பார்க்க ஒரு குரூப்பே வருது ஹி ஹி

!* வேடந்தாங்கல் - கருன் *! 2:23:00 AM  

லேட்டா வந்து படிக்கிறேன்,
கதை சுவாரச்யமாவே இருக்கு..
அசத்தல்..

கணேஷ் 3:45:00 AM  

நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன் போலருக்கு சுரேஷ். நல்லா கதை சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் மற்றும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP