கண்ணை விற்று சித்திரம்! மரங்களை வெட்டி நாகரிகம்!

>> Wednesday, May 30, 2012

இயற்கை காவலர் யோகநாதன் அவர்களின் உரை தொடர்ச்சி.....
யோகநாதன் அவர்களின் முந்தைய உரையை படிக்க :

Read more...

மண்ணுக்கு மரம் பாரமா? மனிதனுக்கு மரம் பாரமா?

>> Monday, May 28, 2012


முதல் பாகம்

இரண்டாம் பாகம்



கோவையை பற்றிய உங்கள் எண்ணத்தை மாற்றும் அந்த சம்பவம் சம்பத் எனும் நபர் வயது 52 ஆகுது, அவர் என்ன செய்தார் என்றால்..! ஒரு ஆறு மரத்தை வெட்டிவிட்டார், அவரைக் கைது செய்யறாங்க...அவரின் ஒரு ஜாதி அமைப்பு அவரைக் காக்கமுயற்சி செய்தது. எனக்கு கமிஷனர் சைலேந்திரபாபுவை ஒரு சில மேடையில் சந்தித்து இருக்கிறேன், அவரின் போன் எண்ணிற்கு நானும் என் நண்பர்களும் குறுந்தகவல் அனுப்பி விட்டு, நானும் அவரிடம் நீங்க இருக்கும் போது இப்படி நடந்தால் அசிங்கமா போயிரும் சார்! என்று கூறினேன்.

Read more...

மரம் வெட்டுவதும் ஒரு கொலைதான்....

>> Sunday, May 27, 2012

யோகநாதன் அவர்களின் உரை முதல் பாகம்! படிக்க கிளிக் செய்யவும்




முதல்பாகத்தின் தொடர்ச்சி........


ஜெயசந்திரன் என்கிற நண்பர் தமிழ்நாடு கிரீன் பவுன்டேஷன் செகரட்டரி அவர் வந்து ஆறுதலா ‘நான் உனக்கு பக்கபலமா இருக்கிறேன்' அப்படின்னு சொல்லுறாரு...அப்புறம் மரம் வெட்டிய இடத்தில வீதியில இருக்கிற விளம்பர பிளக்ஸ் போர்டை எடுத்து அதுல ஒரு பேப்பர ஒட்டி “இங்கு மரம் வெட்டப்பட்டது அரசு கண்டு கொள்ளுமா?” அப்படின்னு எழுதி வைத்து விடுவேன்.

Read more...

சென்னை யூத் பதிவர் சந்திப்பும்! பின்னே நாங்களும்!

>> Tuesday, May 22, 2012


13ம்தேதி! இல்ல...இல்ல....20ம்தேதி! என சிவக்குமார் அதிமுக அமைச்சரை அம்மா மாத்துகின்ற மாதிரி தேதிய மாற்ற, வேறு வழியில்லாம பிளைட்ல போகவேண்டியதா போச்சு! என்னங்க ஙே! என்று முழிக்கிறீங்க? பிரபல நிறுவனத்தின் ஆம்னி பஸ்தான் பிளைட் மாதிரி ஓட்றாங்க தரையில டயர் படுவதேயில்லை,பறக்குதுய்யா...பறக்குது எங்கயாவது டச் ஆச்சு! மர்கையாதான்...! யப்பா சாமீ! புள்ள குட்டிகாரங்க...இதுல போகாதிங்க....! 

Read more...

சென்னை யூத் பதிவர் சந்திப்பு.(2012)

>> Thursday, May 17, 2012


அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம்....
திருநெல்வேலி போய் வந்த இனிப்பு இன்னும் நாவில் தி்த்திப்பாய் இருக்க...அடுத்த நிகழ்ச்சி தலைநகரின் தன்னிகரில்லாத தலைவன் கே.ஆர்.பியார் (நன்றி பிலாசபி) அண்ணன் கேபிளார் இருவரின் அடிவிழுதுகள், வேர்கள், இலைகள் என இருக்கின்ற வடதமிழகத்தின் விடிவெள்ளி சிவக்குமார், சென்னை பட்டிணத்தின் இளைய தளபதி பிலாசபி பிரபாகரன், "களிறு"வின் காதை பிடித்து திருகி பாடம் நடத்தும் அஞ்சா சிங்கம், திருவாருரில் பிறந்து சென்னையில் கலக்கும் தானைத் தலைவன் ஆருர் மூனா செந்தில் என்கிற நண்பர்கள் முயற்சியில்

ஐயா சென்னைபித்தன், ஐயா புலவர் இராமாநுசம், அண்ணன் மின்னல் வரிகள் கணேஷ் ஆகிய யூத் பதிவர்களின் ஆசியில்.


யூத் பதிவர் சந்திப்பு 20-05-2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு மேல் டிஸ்கவரி புக் பேலஸ்ல் நடைபெறுகிறது.


கோவையை சேர்ந்த உயர்திரு யோகநாதன் அவர்கள் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரம் நட்டு இயற்கை அன்னையை வாழ வைத்த சாதனை தமிழர். இவர் இந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.


அடுத்து பதினோரு வயது நிரம்பிய நெல்லை தங்கை விசாலினி இவரின் ஐ.க்யூ லெவல் 225. இன்ஜினியரிங் மாணவர்களுக்கே பாடம் எடுக்கு புலமை, இவரும் கலந்து கொள்கிறார்.

புதுமாப்ளை கோகுல் திருமணப் பத்திரிக்கை கொடுக்கப் போவதாக உளவுத் துறைத் தகவல்! கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு "Double?!" வாழ்த்துகள்......

சென்னையை நோக்கிய எங்கள் பயணம் நாளை தொடங்குகிறது. தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமாரும், நானும் எங்களுடனே ஐயா யோகநாதனும் பயணிக்கிறார், உணவுஉலகம் ஆபிசர் அங்கிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் பல பதிவர்கள் சந்திக்கும் சங்கமாக இருக்கும், வாருங்கள் சந்திப்போம்.

டிஸ்கி : சிதம்பரத்தின் அப்புசாமி! நக்கீரரும் வருகிறார்...! கவலைப் படாதிர்கள் நண்பர்களே! போன் இல்லாமல்தான் வருகிறார். அதனால் பயப்படாமல் அனைவரும் கலந்து கொள்ளவும்.

தொடர்புடைய பதிவுகள்


சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள் .மெட்ராஸ்பவன்


Read more...

கலகலப்பு-சக்கரை பொங்கலுக்கு வடைகறி!

>> Sunday, May 13, 2012


அஞ்சலி குட்டி நடிச்ச படம் மட்டுமல்ல! கண்ணா! இரண்டு லட்டு திங்க ஆசையா? என சுந்தர்.சி களவாணி ஓவியாவையும் களமிறக்கி "சின்ன தலைவி அன்ட் பெரிய தலைவி" என அடடடடா! ஒரு பாடலில் காட்டு காட்டுவென காட்ட வைத்திருக்கிறார் தமிழ் மக்கள் மேன்மக்கள் மேன்மக்களே! சுந்தர்.சி நீவிர் வாழ்க....! குஸ்பு அக்கா நீவிரும் வாழ்க...!


Read more...

நாய்த் தொல்லை தாங்க முடியலைடா சாமி!

>> Wednesday, May 9, 2012


ட்டு வயசுல...எங்கயாவது கடைக்கு இல்லை பிரண்ட பார்க்க போகனும்னா' பைக் இல்லை கார்லதான் போவேன். என்னா சார் முழிக்கிறீங்க? அட கற்பனை குதிரை சார்...!கார் சாவிய போட்டு ஸ்டார்ட் பண்ணுவேன்' டுஸ்டுஸ்டுஸ்ஸ்ஸ்......என ஸ்டார்ட் ஆக மறுக்கும், ஒரு ஹாரன் அடித்து விட்டு (வாயிலதான்) மறுபடியும் ஸ்டார்ட் செய்வேன் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....இப்ப ஸ்டார்ட் ஆயிருச்சு, இடது கையில கியரை போட்டு வண்டிய கிளப்பி ஓட்ட வேண்டியதுதான், நம்ம கற்பனைக்கு தகுந்த மாதிரி காரோ, பைக்கோ பறக்கும்.

Read more...

வழக்கு எண் 18/9 திரைப்படம் விமர்சனம்!

>> Friday, May 4, 2012



காதல் திரைப்படத்தை, மற்றும் பல படங்களை இயக்கிய பாலாஜிசக்திவேல் இயக்கிய மற்றுமொரு படைப்பு வழக்கு எண் 18/9.பெரும்பாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இயக்கும் இயக்குனர் இதிலும் அதே முறையை பின்பற்றியுள்ளார்.

Read more...

மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்?

>> Thursday, May 3, 2012



நீ நடந்து செல்லும் போது
உன் தாவனி உரசிச் சென்ற காற்று
வேப்பமரத்தை உரசிய போது
உன்னை விட மகத்துவம்
அதிகம் என பகடி பேசியது...

மழைக்காலத்தில் தார்ச்சாலை
உருகுவதின் மர்மம் என்ன? - என
எனது ஊர் மாநகராட்சி கைபிசைய
எனக்கு மட்டும் தெரியும் ரகசியம்!
நீ வெறும் காலில் நடப்பதினால் என்று...

புல்லாங்குழல் வழியே செல்லும்
காற்று இசையாவது போல...
உன் நாசி வழியே செல்லும்
காற்று இதழ் வழியே
வார்த்தைகளாக
தமிழே இன்னும் அழகான
இசையாக வெளிவருகிறது...

உலகின் அனைத்து மொழிகளை
அலசி ஆராய்ந்தாலும்
உன் பெயருக்கு இணையான
அழகான வார்த்தை இது வரை
கிடைக்கவில்லை.....

நீ தினம் பூப் பறிக்கும்
பூச்செடியில் பூக்களுடன்
ஒட்டிக்கொண்டு செல்ல
இலைகள் சண்டையிட்டுக்
கொள்ளுகின்றன உன்னால்
நிராகரிக்கப்பட்ட இலைகள்
என்னைப் போலவே
தலை கவிழ்ந்து
சருகாய்....கீழே விழுந்து
கிடக்கின்றன....
மிதித்து விட்டாவது போ!

Read more...

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ? ஆனந்தவிகடன்! காரணமோ?

>> Wednesday, May 2, 2012

நேற்றைக்கு விடுமுறை என்பதால்... இன்றே ஆனந்தவிகடன் வந்து விட்டது அதை அறியாத எனக்கு போன் செய்து தகவல் சொன்னவர் ஒரு நண்பர்! எங்க ஊர்க்காரர் அவரின் பாராட்டு இப்படியிருந்தது...

உன்னைய ஆனந்தவிகடன்ல போட்டிருக்காங்க.....? நம்ம ஊரைப்பத்தி எழுதியிருக்க....பரவாயில்லடா? எத்தனை வருசம் ஆனாலும் எந்த தேசம் போனாலும் நம்ம ஊர் மாதிரி வருமா என்று உணர்ச்சி பொங்க பேசினார்!

அடுத்த அழைப்பு உறவினர் ஒருவரிடமிருந்து "கில்மா பட விமர்சனம்" படிச்சிட்டு சொன்னது

 நீ இன்னும் திருந்தலையா?”

இந்த இரண்டு வருட கிறுக்கல்களுக்கு கிடைத்த அங்கீகாரம்! ஆனந்த விகடன் இணைப்பான என் விகடனில் கிடைத்தது, மிக மகிழ்ச்சியான ஒரு தருனம். இந்த தருனத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்! 


என்னை அறிமுகப்படுத்திய விகடனுக்கும்....! என்னை ஊக்குவித்த வலைப்பூ நண்பர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.....
நன்றி!நன்றி!நன்றி!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP