காதல் கதைகள் 1954 இறுதி பாகம்

>> Thursday, December 15, 2011


‘‘டமார்..”
பெருத்த ஓசையாக துப்பாக்கி வெடித்தது..
ஆ...அம்மா..”என்று கத்தினாள் மாது!

துப்பாக்கியிருந்து பாய்ந்த அலுமினிய குண்டு அவர்களுக்கு பின்னால் மேய்ந்து கொண்டிருந்த ஒரு முயலின் உடலை துளைத்து சென்றது.

வீச்......என்று கத்திய அந்த சீவன் அங்கேயே உயிரை விட்டது.

துப்பாக்கியை கீழே தரையில் ஊன்றியபடி நடந்த துரை அவர்கள் பக்கத்தில் வந்தார்.
யேய்...நீ..ராசய்யன் மவ தானே?உங்கப்பன் உன்னை படிக்க வைத்தது இப்படி காட்டுக்குள்ள படுக்கறதுக்கா ஏலே...என்று பிடறியில் ஒன்று வைத்தார்.
ஒழுக்கமா வீட்டுக்கு ஓடிப்போயிறு என்று கர்ச்சித்தார் துரை. மௌனமாக வீட்டுக்கு போனாள் மாது.

ஏண்டா..!நாயே உனக்கு பொம்பளை கேட்குதா....என்று அடிக்க கையை ஓங்கினார்.செல்வம் துரையின் கையை பிடித்து கொண்டார்.
சித்தப்பா...வேண்டாம் சும்மாயிரு...என செல்வம் சீறினான்.
எதுவும் பேசாமல் சிறிது நேரம் முறைத்துக்கொண்டிருந்தார்கள் இருவரும்.
சரி...தோட்டத்துக்கு போகலாம் வா...என்ற துரை செல்வத்தின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார். சிறிது நேர சிந்தனைக்குப்பின் செத்து கிடந்த முயலை எடுத்துக்கொண்டு அவரின் பின்னே நடந்தான் செல்வம்.

தோட்டத்தில் இருவரும் எதிர்ரெதிராக அமர்ந்தனர் துப்பாக்கியை சுவற்றில் மாட்டிவிட்டு மன் பானைக்குள் இருந்த சாராய பாட்டிலை எடுத்து வந்து
முன் வைத்தார் கண்ணாடி ரோட்டாவில் ஊற்றி செல்வத்திடம் நீட்டினார் துரை.வேண்டாம் சித்தப்பா..”என்றான் செல்வம்.

நீ...என்ன நீனைக்கிறேன்னு எனக்கு தெரியும் செல்வம் உங்கப்பன் கிட்ட சொல்லுவன்தானே? உங்கப்பன் கிட்ட சொன்னா என்ன பன்னுவான் தெரியுமா?
மாதுவ பாவானி வாய்க்கால்ல பொணமாக போட்டிருவான்.

சித்தப்பா...நான் மாதுவ உயிருக்குஉயிரா நேசிக்கிறேன்.

உயிருக்குஉயிரா நேசிக்கிறவன் கிணற்றுக்கு பின்னாடி ஏண்டா பேறீங்க......உன்னைச் சொல்லி குற்றமில்லை வயசுக்கோளாறு..செல்வம் நீ..நினைக்கிறமாதிரியில்லைஇப்ப இந்த நாட்டை ஆளுறது வெள்ளைக்காரன் இல்லை!நியாயம் தர்மம் எல்லாம் பெரிய மனிதர்களின் கைளில் இருக்கு....

நான் அவளைத்தான் கல்யாணம் செய்துக்குவ...

போடா...முட்டாள் நீ...என்ன சாதி அவ என்ன சாதி...வீணா ஒரு பொம்பளைய கொன்ன பாவம் வேண்டான்டா செல்வம்.நம்ம குலத்தில ஏற்கணவே...ஒரு பெம்பளைய கொன்ன பாவத்திக்கு நம்ம பரம்பரைக்கே பெண் குழந்தைகள் பிறப்பது இல்லை.

இல்லை சித்தப்பா...என்னால அவ இல்லாம வாழமுடியாது என்று அழுதான் செல்வம்

சரி...சரி...அழுகாதே எதாவது செய்கின்றேன் நீ...சாராயத்தை குடி..ஆமா அவ நெருப்பு மாதிரியாச்சே...எப்படி உன் வலையில விழுந்தா..?

செங்கரட்டுக்கு சுள்ளி பொருக்கப்போன இடத்தில காட்டுநாய் அவளை சுத்திருச்சு.நான்தான் காப்பாற்றினேன் அதிலிருந்து பழக்கமாயிருச்சு.....பள்ளிகூடத்தில படிக்கும் போதே பின்னால சுத்திட்டு இருந்தேன்..அப்ப அவ கண்டுக்கல எட்டாவது வரைக்கும் அவ படிச்சா....நான் ஏழாவதோட மண்டையில ஏறல நின்னுட்டேன். ஆனா நல்லா படிச்ச அவள மேல அவிங்கப்பன் படிக்க வைக்கல......காட்டுல,மேட்டுல பார்க்கும் போது பழகி....இப்ப அவ இல்லாம என்னால வாழமுடியாது சித்தப்பா..

இந்தா குடி...அப்புறம் நான் சொல்லுறத கேளு...என்று சித்தப்பா துரை ஊற்றி கொடுக்க...சாராயத்தினை மாற்றி,மாற்றி குடித்து அப்படியே படுத்து தூங்கிபோயினர்.

காலையில் சூரியனின் வரவுக்கு முன் மக்கள் ஓரிடத்தில் கூடினார்கள்,ஏரிதண்ணீரின் வடிகாலின் ஓரத்தில் அரைநிர்வாணமாக மாதுவின் உடல் கிடந்தது.காலனி மக்கள்

அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஏரிக்கு விரைந்தார்கள்.தகவல் தெரிந்து சென்ற துரையும் செல்வமும் அதிர்ந்து போனார்கள் உடலெங்கும் முள் கீறிய தடங்கள்,இது திட்டமிடப்பட்ட ஒரு கொலை என்பது புரிந்தது,ஆனாலும் அவசரஅவசரமாய் காரியங்கள் செய்து பிணத்தை எரித்துவிட்டார்கள்.

செல்வம் அதன் பிறகு பித்துபிடித்தவன் போல் சுற்றித் திரிந்தான்...கிலுவை இலையில் பீப்பி செய்து ஊதிக்கொண்டு சாராயத்தை குடித்து விட்டு பெரும்பாலும் தோட்டத்தில் கிடந்தான் மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் அண்ணா தலைமையில் கொழுந்து விட்டு எரிந்தது,திமுக உறுப்பினர்களை கைது செய்து  சிறையில் அடைத்து கொண்டு இருந்தது மத்திய அரசு.

துரையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கோவை சிறையில் அடைத்துவிட்டனர்,ஒரு வாரங்களுக்கு மேல் சிறையில் இருந்த துரையை பார்க்க பண்ணையத்து ஆள் ‘‘சின்னையன்” வந்திருந்தான் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு கெஞ்சி கூத்தாடி சிறையில் சந்தித்தான் சின்னையன்,அவன் கொண்டு வந்த தகவலில் அதிர்ச்சியில் அப்படியே உக்கார்ந்து விட்டார் துரை,அவன் கூறியது
அய்யா.....நம்ம சின்னபண்ணாடி இப்படி பன்னிட்டாருங்கய்யா.....பெரிய பண்ணாடி வந்து அடிச்சு இழுத்திட்டு போயி,வீட்டுக்குகொண்டு போய் புத்தி சொல்லி வைத்திருந்தாங்கய்யா.....சினிமாகொட்டாயிக்காரரு புள்ளைய கல்யாணம் பன்னி வைக்க ஏற்பாடு பன்னினாருங்கய்யா...யாரும் இல்லாதப்ப..தோட்டக்கு வந்து அரளி விதையை சாப்பிட்டு செத்து பொயிட்டாருங்கய்யா....உங்களுக்கு தகவல் கூட தராம எரிச்சிட்டாங்கய்யா.....அழுதான்.

செல்வம்....செல்வம்.....அழுதார் கண்ணுல இருந்து கண்ணீரு ஆறாக கொட்டியது. திடீரென்று எழுந்தவர் முகத்தை துடைத்தார்,நான் அழமாட்டன்டா சின்னய்யா

நீ...தூக்கநாயக்கன்பாளையம் காங்கிரஸ் தலைவர் பெரியண்ணன் கிட்ட போய் சொல்லு, நான் வெளிய வரனும், சின்னயைன் சரிங்கய்யா நான் புறப்படுறனுங்க எனக்கு காலையில தானுங்க கோபால்டு காரு நான் ரோட்டு ஓரமா படுத்து தூங்கிட்டு காலையில கிளம்பி ரெண்டு நாள்ள தகவல்
சொல்றனுங்க என்று கிளம்பினான் சின்னனையன்.

சில நாட்களில் பெரியண்ணன் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியதும்,சிறையில் இருந்து உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெற்று துரையை விடுவித்தனர்,நேராக ஆத்திரத்தில் ஊர் வந்ததும் தோட்டத்திக்கு போனவுடன் தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேகமாக ஊருக்குள் இருந்த அண்ணணின் வீட்டிக்கு போனார்,இவர் போன வேகத்தை பார்ததவர்கள் கூட்டமாக பின் தொடர்ந்தனர் ஏதோ நடக்கப்போகுது என்று வேடிக்கை பார்க்க....சிலர் சமாதானமும் கூறிக்கொண்டே வந்தனர்...எதையும் காதில்
வாங்காமல் வீட்டுக்கு முன் நின்றார் வானத்தைப்பார்த்து சுட்டார்,துரையின் அன்னி ஓடிவந்து காலைக்கட்டிகொண்டார்கள், வயதான இருவரின் ஆத்தா....எம் பேரனை கொன்னிட்டியே..கொலைகாரா நீ நாசமா..போவே என்று சாபம் விட்டது.மன்னை தூற்றியது! துப்பாக்கிய கீழே போட்ட துரை,

கிளவி மனசாட்சிய தொட்டு சொல்லு? உன் பேரனை கொன்னது நானா?நீ..என்னை வயத்தில இருக்கும் போதே கலைச்சிருக்கலாம் கிளவீ, பெரிய மகனைதாங்கிதாங்கியே இன்னும் எத்தனை பேர கொல்லப்போறான்னு தெரியலையே?என்று அழுதார் சொந்தம்பந்தம் எல்லாம் வந்து துரையை நன்றாக பிடித்துகொண்டனர்,

டேய் பொன்னம்பலம் உன்னை மன்னோடு மன்னா ஆக்குலை நான் ஒரு அப்பனுக்கு பிறக்கலை விடுங்கய்யா என்று உதறிவிட்டு தோட்டம் சென்று விட்டார்,


சில நாட்கள் கழித்து...

தமிழகம் 1957 ல் ஒரு சட்டமன்ற தேர்நதலை சந்தித்து,ஊர்தலைவராக இருந்த பொன்னம்பலம் அந்த தேர்ந்தலில் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் நிற்க மனு செய்திருந்தார்,இதை கேள்வி பட்ட துரை திமுக சார்பில் மனு கொடுத்தார் தீவிர பிரச்சாரமும் நலிந்த,தாழ்த்தப்பட்ட மக்கள்,துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர்

பெரும்பான்மையாக வெற்றி பெறவில்லையென்றாலும்,முதன் முதலில் அன்னபோஸ்ட்டாக இருந்த பொன்னம்பலத்தை, காங்கிரஸ் தலைவரை வீழ்த்தியது இந்த வெற்றி.

112 தொகுதியில் போட்டியிட்ட இடத்தில் திமுக பதினைந்து தொகுதியில் வெற்றி பெற்றது அதில் துரையும் ஒருவர்.பெரியாரே திமுகவிற்க்கு எதிராக பிரச்சாரம் செய்தும் வெற்றிபெற்றார்கள் திமுகவினர்,துரை அதற்க்கு பிறகு எம்.ஜி.ஆரின் தீவிரரசிகர் என்பதால் அவர் திமுகவை விட்டு பிரியும்பொழுது அதிமுகவில் ஐக்கியமானார் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டார்,
அவரின் மறைவுக்கு பின் பிளவு பட்ட அதிமுகவில் ஜானகி அம்மையாரின் அணியில் இருந்தார்,பிறகு ஒன்று பட்டபோது ஓரம் கட்டப்பட்டார்,கட்சியில் இருந்து முழுவதும் விலகினார்,பிறகு சமீபமாக என்பது வயதுக்கு மேல் மூச்சு குழாயில் ஏற்ப்பட்ட நோயினால் மரணமடைந்தார்,அவருக்கு மாலை மரியாதை செய்ய சென்றபோது அறிஞர் அண்ணாவின் உருவமும் அதிமுக கொடியும் வலது கையில் பச்சை குத்தியிருந்தது கண்டபோது மனது வலித்து,இவர்களை போன்றவர்களின் இரத்தத்தால்தானே இரு
கட்சிகளும் உருவாகியுள்ளது இவரை உதாசினப்படுத்தியவர்களுக்கு வாடையடிக்கவில்லையா? ஊழல் நாற்றத்தில் இந்த நாற்றம் தெரியவில்லையோ?பல கேள்விகள் மனதில் எழுகின்றன........டிஸ்கி : பொன்னம்பலம் இருபதுவருடம் பக்கவாதம் வந்து கட்டிலில் படுத்தபடுக்கையாக இருந்து மலம்,ஜலம் போகக்கூடமுடியாத நிலமையில் பெரும் துன்பத்தை அனுபவித்து நான் சிறியவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார்.

இந்தக் கதையில் உள்ள பெயர்கள் கற்பனையானது,சம்பவங்கள் 
உண்மையானது,

1954 முதல் பாகம்


1954 இரண்டாம் பாகம்

8 comments:

Admin 5:54:00 PM  

உண்மை சம்பவத்தில் கற்பனையை கலந்து கதையாக சொன்னது அருமை..துரையை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது..இவரை ஓரங்கட்டியது தவறுதான்..

Unknown 6:50:00 PM  

மாப்ள பொன்னம்பலத்துக்கு ஏற்ப்பட்ட நிலைமை தான் இப்போது பலருக்கும்!..முற்பகல் செய்யின்...!...பல கட்சிகள் இன்று சுவாசிக்க எத்தனை "துரைகள்" தங்கள் உயிரை விட்டு இருக்கிறார்களோ!

ராஜி 7:44:00 PM  

துரையை பற்றி அறிய முடிந்தது. நல்லதொரு தொடர். பகிர்வுக்கு நன்றி

கோகுல் 6:23:00 AM  

சில உண்மைச்சம்பவங்கள் ,மறக்க முடியா நிகழ்வாக அமைந்து விடும்.

ம.தி.சுதா 8:58:00 AM  

பெயரைப் பாவிக்காவிடினும் சம்பவம் முதலே ஓரளவு தெரிந்ததால் தெளிவு பெற்றேன்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

Anonymous,  10:06:00 PM  

உண்மை சம்பவம்.. படிக்கும் போதே மனம் கணக்கிறது... ஏறி வந்த ஏணியை ஏனோ ஏறிய பிறகு மறந்துவிடுகிறார்கள்........

Riyas 10:43:00 AM  

பகிர்வுக்கு நன்றி

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP